ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்கு தயாரிக்கும் வண்ணம், கடந்த ஊழிய ஆண்டில் நடைபெற்ற வட்டார மாநாட்டு நிகழ்ச்சிகளில் தாங்கள் எடுத்த குறிப்புகளை மறுபார்வை செய்து வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் செப்டம்பர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) செப்டம்பர் 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு தத்ரூபமான நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். ஒரு நடிப்பு, மாணவரோ பெற்றோரோ பள்ளி ஆசிரியரிடம் சாட்சி கொடுப்பதைப் போல இருக்கட்டும்.
10 நிமி: கிளை அலுவலகத்திடமிருந்து வந்த கடிதம். நீண்ட கால பிரஸ்தாபி ஒருவருக்கும்—மூப்பராக இருந்தால் நல்லது—ஒரு இளம் பிரஸ்தாபிக்கும் இடையே கலந்தாலோசிப்பு. கிளை அலுவலகத்திடமிருந்து வந்த கடிதம் நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டிருப்பதை பார்த்தாரா என அந்த இளம் பிரஸ்தாபி அனுபவமுள்ள பிரஸ்தாபியிடம் கேட்கிறார். அதற்கு, கிளை அலுவலகத்திடமிருந்து வரும் கடிதம் 1960-களிலும் 1970-களிலும் நம் ராஜ்ய ஊழியத்தில் ஒரு அம்சமாக இருந்ததென அனுபவமுள்ள பிரஸ்தாபி சொல்கிறார். பிறகு அவர்கள் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள கடிதத்தை கலந்தாலோசித்து, அதன் முக்கிய குறிப்புகளை சிறப்பித்துக் காட்டுகிறார்கள்.
25 நிமி: “இளைஞரே—எதிர்காலத்திற்காக அருமையான அஸ்திவாரத்தைப் போடுங்கள்.”a கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை உபயோகித்து ஒரு மூப்பர் நடத்த வேண்டும். பாரா 5-ஐ சிந்திக்கையில் முழுநேர ஊழியத்தில் பெறும் சந்தோஷங்களையும் ஆசீர்வாதங்களையும் சிறப்பித்துக் காண்பியுங்கள்.
பாட்டு 170, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
10 நிமி: “கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை படித்தல்.” ஒரு புத்தகப் படிப்பு கண்காணி கொடுக்கும் பேச்சு. படிப்பிற்கான அட்டவணைக்கு கவனம் செலுத்துங்கள். பாரா 4-ஐ சிந்திக்கையில், ஊழியப் பள்ளி புத்தகம், பக்கம் 28, பாரா 1-லும் பக்கம் 70-லும் உள்ள குறிப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
25 நிமி: “யெகோவாவை நம்பி நன்மை செய்.” (சங். 37:3, NW) பின்வரும் கேள்விகள் அடிப்படையில் சபையார் கலந்தாலோசிப்பு. கடந்த ஊழிய ஆண்டில் நடைபெற்ற வட்டார மாநாட்டின் முக்கிய குறிப்புகளை இப்பகுதி வலியுறுத்தும். முக்கிய குறிப்புகளை தனி நபர்களாக அல்லது குடும்பங்களாக எவ்வாறு கடைப்பிடிக்க முடிந்தது என்பதை சபையாரிடம் கேளுங்கள். பின்வரும் தலைப்பில் கொடுக்கப்பட்ட பேச்சுகளை சிந்தியுங்கள்: (1) “யெகோவாவில் நம்பிக்கையை வெளிக்காட்டுதல்.” நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் யெகோவாவில் நம்பிக்கையை வெளிக்காட்டுவது ஏன் அவசியம்? (it-2 பக். 521) உவாட்ச் டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் நமக்கு எவ்வாறு உதவும்? (2) “வாழ்க்கையின் மாயைகளுக்கு எதிராக காத்துக்கொள்ளுங்கள்.” (பிர. 2:4-8, 11) வீணான எந்தக் காரியங்களைக் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும், அதை எப்படி செய்யலாம்? (3) “தீமையை வெறுத்து, நன்மை செய்யுங்கள்.” யெகோவாவின் தராதரங்களை கடைப்பிடிப்பது ஏன் முக்கியம்? (ஏசா. 5:20) என்ன நற்செயல்களில் சுறுசுறுப்பாக ஈடுபட வேண்டும்? (4) “யெகோவாவில் நம் நம்பிக்கையை காத்துக்கொள்ளுதல்.” துன்பங்களையும் சோதனைகளையும் சந்திக்கையில் உறுதியாய் நிலைத்திருக்க எது நமக்கு உதவும்? சில காரியங்களை யெகோவாவின் கைகளில் விட்டுவிடுவது ஏன் அவசியமாய் இருக்கலாம்? (5) “கடவுளுடைய ராஜ்யத்திற்கு தகுதியானவராக கருதப்படுவீர்களா?” (கொலோ. 1:10) யெகோவா நம்மை தகுதியானவர்களாக கருதும் விதத்தில் தொடர்ந்து நடக்க என்ன பைபிள் உதாரணங்கள் நம்மை தூண்டுவிக்கும்? (6) “யெகோவாவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வையுங்கள்.” இதை செய்வது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்?
பாட்டு 58, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் செப்டம்பர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) அக்டோபர் 1 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவை ஒரு மூப்பரும் உடல்நலம் குன்றிய ஒரு பிரஸ்தாபியும் தொலைபேசியில் சாட்சி கொடுப்பது போல் இருக்கட்டும்.
15 நிமி: கடந்த வருடம் எதை சாதித்தோம்? 2003-ம் ஊழிய ஆண்டிற்கான சபை அறிக்கையின் முக்கிய குறிப்புகளை ஊழிய கண்காணி மறுபார்வை செய்கிறார். சாதித்த நற்காரியங்களுக்காக சபையாரை பாராட்டுங்கள். வட்டாரக் கண்காணியின் கடைசி அறிக்கையிலிருந்து பொருத்தமான குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள். வரவிருக்கும் வருடத்தில் எட்ட முடிந்த ஓரிரண்டு இலக்குகளை குறிப்பிடுங்கள்.
20 நிமி: கடவுளுக்கு எம்மதமும் சம்மதமா? நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. இந்த விஷயத்தைப் பற்றி ஒருவரிடம் எவ்வாறு நியாயங்காட்டி பேசலாம் என்பதை கலந்தாலோசியுங்கள். (rs-TL பக். 322-3) உண்மை வணக்கத்தை அடையாளம் கண்டுகொள்ள உதவும் வழிகளை வலியுறுத்திக் காண்பியுங்கள். (rs-TL பக். 328-30) கடவுளுக்கு பிரியமான வணக்கத்தை தேர்ந்தெடுக்க நம் ஊழியம் மற்றவர்களுக்கு உதவுகிறது.—கொலோ. 1:9, 10.
பாட்டு 39, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். செப்டம்பர் மாத வெளி ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். அக்டோபர் மாதத்திற்கான பிரசுர அளிப்பை குறிப்பிடுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை பயன்படுத்தி எவ்வாறு பைபிள் படிப்பு ஆரம்பிக்கலாம் என்பதை சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
35 நிமி: “தோள்கொடுக்க நீங்கள் தயாரா?” உற்சாகமூட்டும் பேச்சும் இடையிடையே 13, 18-24 ஆகிய பாராக்களுக்காக தயாரிக்கப்பட்ட கேள்விகளுக்கு சபையாரின் பதில்களும். பெத்தேல் சேவையை தங்கள் வாழ்க்கையாக ஏற்க பிள்ளைகளுக்கு உதவும்படி பெற்றோரை உற்சாகப்படுத்துங்கள். இந்த உட்சேர்க்கையை குடும்ப படிப்பில் எல்லாரும் சேர்ந்து படிக்குமாறு சிபாரிசு செய்யுங்கள்.
பாட்டு 197, முடிவு ஜெபம்.
அக்டோபர் 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். இந்த மாதம், பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்கிறோம். மே 2002, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 1, பாரா 1-ஐ சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி: “முக்கியமானதற்கே முதலிடம்!” காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1998, பக்கங்கள் 19-21-லுள்ள கட்டுரையின் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். அடுத்த பல மாதங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கான தேதிகளை குறிப்பிடுங்கள். இந்தத் தேதிகளை தங்கள் காலண்டரில் குறித்து வைக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். ஆவிக்குரிய ஏற்பாடுகளை தவறவிடாமல் இருப்பதற்காக என்ன செய்கிறார்கள் என்று கூறும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “மனத்தாழ்மையை தரித்துக்கொள்ளுங்கள்.”b வேதவசனங்கள் எவ்வாறு பொருந்துகின்றன என்று சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 224, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.