ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மார்ச் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அறிவிப்புகள். அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்கு ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ என்ற புதிய சிற்றேட்டை எடுத்து வரும்படி அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி மார்ச் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) மார்ச் 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்ட செய்யுங்கள்.
15 நிமி: துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தி உரையாடல்களைத் துவங்குதல். சபையாருடன் கலந்தாலோசிப்பு. சாட்சி கொடுக்கையில் உரையாடலைத் துவங்குவது பெரும்பாலும் அதிக சிரமமாக உள்ளது. எனவே வீட்டுக்கு வீடு ஊழியத்தில், வியாபார பிராந்தியத்தில், பொதுவிடங்களில் உரையாடலைத் துவங்குவதற்கு துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தலாம். உங்கள் பிராந்தியத்திலுள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய இரண்டு அல்லது மூன்று துண்டுப்பிரதிகளை சுருக்கமாக கலந்தாலோசியுங்கள். இந்தத் துண்டுப்பிரதிகளை அளிக்கையில் என்ன ஆரம்ப வார்த்தைகளை உபயோகிக்கலாம்? அவற்றிலுள்ள படங்களை எப்படி பயன்படுத்தலாம்? சாதுரியமாக என்ன கேள்விகளைக் கேட்கலாம்? வீட்டுக்காரர் ஆர்வம் காட்டுகையில் ஒவ்வொரு துண்டுப்பிரதியிலும் எந்தப் பாராவை கலந்தாலோசிக்கலாம் என்பதை சிறப்பித்துக் காட்டுங்கள். ஒரு துண்டுப்பிரதியை உபயோகித்து உரையாடலை எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை நடித்துக் காட்ட செய்யுங்கள். பிரஸ்தாபி துண்டுப்பிரதியிலிருந்து ஒரு பாராவை சுருக்கமாக கலந்தாலோசித்துவிட்டு அறிவு புத்தகத்தை அளிப்பதுடன் முடித்துக் கொள்வது போல் அது இருக்கட்டும்.
20 நிமி: “உத்தமர்களே, நீங்களெல்லாரும் யெகோவாவில் அன்புகூருங்கள்.”a பாரா 3-ஐக் கலந்தாலோசிக்கையில் நினைவு ஆசரிப்புக்கு வரும்படி ஜனங்களை அழைப்பதற்கு என்ன செய்திருக்கிறார்களென சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 131, முடிவு ஜெபம்.
மார்ச் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். “நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” பகுதியிலிருந்து முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். நினைவு ஆசரிப்பு வாரத்தில் காவற்கோபுர படிப்பு எப்போது நடைபெறும் என்பதை அறிவியுங்கள்.
15 நிமி: நினைவு ஆசரிப்பு காலத்தில் நடைபெறும் விசேஷ ஊழியத்தைப் பற்றிய விவரம். சபையாருடன் கலந்தாலோசிப்பை ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். விசேஷ ஏற்பாடுகளைப் பற்றி சொல்லவும். உற்சாகமூட்டும் சில அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும். ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடிந்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தைக் கொடுக்கும்படி உற்சாகப்படுத்தவும். பிப்ரவரி மாத நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையிலிருந்து சில குறிப்புகளை சுருக்கமாக மறுபார்வை செய்யவும்.
20 நிமி: ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ சிற்றேட்டிலிருந்து பயனடையுங்கள். இந்தப் புதிய சிற்றேடு கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதையும் ஆழ்ந்து படிப்பதையும் அதிக அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. அதற்கு அதிலுள்ள இன்டெக்ஸை பயன்படுத்துவது அதிக உதவியாக இருக்கும். போஸ்றாவிலிருந்து யெகோவா வருவதாக விவரிக்கும் ஏசாயா 63:1-ஐ வாசியுங்கள். பிறகு, ‘நல்ல தேசம்’ சிற்றேட்டிலுள்ள இன்டெக்ஸில் போஸ்றா எங்குள்ளது என கண்டுபிடிக்கும்படி எல்லாரிடமும் சொல்லுங்கள். பக்கம் 34-லுள்ள பெட்டியைப் பயன்படுத்தி, “போஸ்றா 11 G11” எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை விளக்குங்கள், குறிப்பிடப்பட்டுள்ள வரைபடத்தில் போஸ்றாவையும் ஏதோமையும் கண்டுபிடியுங்கள். அதே இன்டெக்ஸைப் பயன்படுத்தி எருசலேமிலிருந்து சீகாருக்கு இயேசு சென்ற வழியைக் கண்டுபிடியுங்கள். (யோவா. 4:3-5) அதே போல் பெதஸ்தா குளம் எங்குள்ளது என்பதையும் கண்டுபிடியுங்கள். (யோவா. 5:1-3) தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியிலிருந்து ஓரிரு உதாரணங்களைத் தேர்ந்தெடுங்கள். சிற்றேட்டில் அந்த இடங்களை எங்கே காணலாம் என்பதையும் வரைபடங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எப்படி பயனடையலாம் என்பதையும் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள். அந்த சிற்றேட்டிலுள்ள சில வரைபடங்களையும் அவை எந்தக் காலப்பகுதிக்கு உரியவை என்பதையும் சுருக்கமாக சிறப்பித்துக் காட்டுங்கள். பக்கங்கள் 18-19-லுள்ள வரைபடத்தில் பெருமளவு பைபிள் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ சிற்றேட்டை நன்கு பயன்படுத்தி பயனடையும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 63, முடிவு ஜெபம்.
மார்ச் 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. 2004 காலண்டர், தினந்தோறும் வேதவசனங்களை ஆராய்தல்—2004 ஆகியவற்றில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 4 வரை அட்டவணையிடப்பட்டுள்ள நினைவு ஆசரிப்பு பைபிள் வாசிப்பு பகுதியை வாசிக்கும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள்.
15 நிமி: “தெய்வீக ஞானத்தின் அபார மதிப்பு.”b நேரம் அனுமதிப்பதைப் பொருத்து கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின் பேரில் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “குதிரைச் சேனையின் தாக்குதல்—அதில் உங்களுக்கும் பங்குண்டு.”c நேரம் அனுமதிப்பதைப் பொருத்து கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்து கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 181, முடிவு ஜெபம்.
மார்ச் 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாத வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டவும். ஏப்ரல் மாத பிரசுர அளிப்பைக் குறிப்பிடவும். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி மார்ச் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) ஏப்ரல் 1 காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யவும்.
15 நிமி: இயர்புக் 2004-லிருந்து பயனடையுங்கள். பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். “ஆளும் குழுவிடமிருந்து வந்துள்ள கடிதம்” என்பதிலிருந்து சிறப்புக் குறிப்புகளையும், உலகளாவிய அறிக்கையிலிருந்து முக்கிய எண்ணிக்கைகளையும், விசுவாசத்தைப் பலப்படுத்தும் சில அனுபவங்களையும் சொல்லவும். இந்த வருடத்தில் முழு புத்தகத்தையும் வாசித்து முடிக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்தவும்.
20 நிமி: சத்தியம் குடும்பங்களை ஒன்றுபடுத்துகிறது. பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். குடும்பத்தாரின் எதிர்ப்பினால் சில சமயங்களில் ஆர்வம் காட்டுபவர்கள் யெகோவாவை சேவிப்பதிலிருந்து பின்வாங்கிவிடுகிறார்கள். பின்வரும் சில அனுபவங்களை சொல்லுங்கள்: ஜனவரி 1, 2002, காவற்கோபுரம், பக்கங்கள் 14-15; டிசம்பர் 1, 2000, காவற்கோபுரம், பக்கம் 8; செப்டம்பர் 1, 1999, காவற்கோபுரம், பக்கம் 32; ஜனவரி 1, 1999, காவற்கோபுரம், பக்கம் 4; பிப்ரவரி 22, 1998, விழித்தெழு!, பக்கம் 31. பைபிள் நியமங்களை வீட்டில் ஒருவர் பின்பற்றினால்கூட குடும்ப வாழ்க்கையில் பெரும்பாலும் முன்னேற்றம் ஏற்படும் என்பதை வலியுறுத்துங்கள்.
பாட்டு 130, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: உடல் சுத்தம் நம்மை சிபாரிசு செய்கிறது. ஜூன் 1, 2002, காவற்கோபுரம், பக்கங்கள் 19-21-ஐ அடிப்படையாக கொண்ட பேச்சு. தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் பாடம் 9, பாரா 5-ஐ உபயோகித்து, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை பைபிள் மாணாக்கர் புரிந்துகொள்வதற்கு ஒரு பயனியர் எப்படி சாதுரியமாக உதவலாம் என்பதை மூப்பர் விளக்குவதைப் போன்ற ஒரு நடிப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: நினைவு ஆசரிப்பு காலத்திலும், மார்ச் மாத ஊழியத்தில் அதிகளவு ஈடுபட்ட சமயத்திலும் கிடைத்த அனுபவங்களைப் பற்றி சொல்லுங்கள்.
பாட்டு எண் 25, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.