தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 26, 2004-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மார்ச் 1 முதல் ஏப்ரல் 26, 2004 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. பேச்சு கொடுக்கும்போது, மான்யுஸ்க்ரிப்ட்டிலிருந்து வாசிப்பதற்கு பதிலாக குறிப்புத்தாளை வைத்து பேசுவது ஏன் சிறந்தது? [be-TL பக். 166 பாரா 3]
2. வெளி ஊழியத்திற்காக தயாரிக்கையில், குறிப்புகளை எப்படி மனதில் வரிசைப்படுத்திக் கொள்ளலாம்? [be-TL பக். 167 பாரா 3]
3. அப்போஸ்தலர் 13:16-41-ஐயும் அப்போஸ்தலர் 17:2, 3-ஐயும் உபயோகித்து, ‘இயேசுவே கிறிஸ்துவென்று’ பவுல் எவ்வாறு ‘தர்க்க ரீதியாக நிரூபித்தார்’ என்பதை விளக்குங்கள். (அப். 9:22, NW) [be-TL பக். 170 பாரா 2]
4. மனதிலிருந்து பேசுவதன் பயன்களில் சில யாவை? [be-TL பக். 175 பாரா. 2-5]
5. மனதிலிருந்து பேசும் முறையில் உள்ள படுகுழிகள் என்ன, அவற்றை தவிர்க்க எது நமக்கு உதவும்? [be-TL பக். 175 பாரா 6 – பக். 176 பாரா 3]
பேச்சு நியமிப்பு எண் 1
6. ஆதியாகமம் 32:24-32-ன்படி, யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற 97 வயது நிரம்பிய யாக்கோபு என்ன செய்தார், இதிலிருந்து நாம் கற்கும் பாடம் என்ன? [w-TL02 8/1 பக். 29-31]
7. “யோசிக்கும் திறன்” என்றால் என்ன, சமநிலை இழந்து, அநாவசியமாக புண்படுவதிலிருந்து அது நம்மை எப்படி தடுக்கலாம்? (நீதி. 1:4, NW) [w-TL02 8/15 பக். 21-2]
8. பொதுப் பேச்சாளர்கள் எவ்வாறு வேதவசனங்களை தங்கள் பேச்சிற்கு அஸ்திவாரமாக அமைக்கலாம்? [be-TL பக். 52 பாரா 6 – பக். 53 பாரா 5]
9. ஓர் எளிய குறிப்புத்தாளிலிருந்து, வசனங்களை கருத்தாழத்தோடு விளக்கும் பேச்சை தயாரிக்க பேச்சாளர் என்னென்ன தீர்மானங்களை செய்ய வேண்டும்? [be-TL பக். 54 பாரா. 2-4]
10. இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருக்கையில் யெகோவா ஏன் வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் மன்னாவை உணவாக கொடுத்தார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (உபா. 8:16, NW) [w-TL02 9/1 பக். 30, பாரா. 3-4]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. ஆதியாகமம் 37:12-17-ல் காட்டப்பட்டுள்ளபடி, யோசேப்பு செய்ததற்கும் இயேசு செய்ததற்கும் என்ன ஒப்புமை இருக்கிறது? [w-TL88 4/1 பக். 25 பாரா 12]
12. ஆதியாகமம் 42:25-35-ன்படி, இயேசு காண்பித்ததற்கு ஒப்பான இரக்கத்தை யோசேப்பு எவ்வாறு காண்பித்தார்? [w-TL88 8/1 பக். 10 பாரா 10; பக். 11, பாரா 17]
13. இன்று அடிமை வகுப்பார் செய்யும் ஏற்பாடுகள் எவ்வாறு யோசேப்பின் நாளில் நடந்த தானிய விநியோகத்திற்கு ஒத்திருக்கின்றன? (ஆதி. 47:21-25)
14. “நான் என்னவாக நிரூபிப்பேனோ அவ்வாறே நிரூபிப்பேன்” என்று சொன்னபோது யெகோவா தமது பெயரைப் பற்றி எதை வெளிப்படுத்தினார்? (யாத். 3:14, 15, NW)
15. யாத்திராகமம் 16:2, 3-ல் குறை சொல்வதில் உட்பட்டுள்ள என்ன இயல்பான இரண்டு ஆபத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன? [w93 3/15 பக். 20-1]