ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
அக்டோபர் 11-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். (உங்கள் பிராந்தியத்துக்குப் பொருத்தமாயிருந்தால்), பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி அக்டோபர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) அக்டோபர் 15 காவற்கோபுரத்தையும் அளிக்கும் நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். தங்கள் பிரசங்கத்தில் ஒரு வசனத்தையும் சேர்த்துக் கொள்ளுமாறு பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள். வேறு பிரசங்கங்களை அளிப்பது நடைமுறையானதாக இருந்தால் அதையும் உபயோகிக்கலாம்.
20 நிமி: “உபத்திரவத்தின் மத்தியிலும் சந்தோஷப்படுதல்.” பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். கடந்த ஊழிய ஆண்டில் நடைபெற்ற வட்டார மாநாட்டில் தாங்கள் எடுத்த குறிப்புகளில் ஓரிரண்டையும் சேர்த்து சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள். முக்கிய குறிப்புகளை வாழ்க்கையில் தனிப்பட்ட விதமாகவோ குடும்பமாகவோ எப்படியெல்லாம் கடைப்பிடித்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லச் சொல்லுங்கள்.
15 நிமி: மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி காணுங்கள். (யோவா. 4:34) பேட்டிகள். ஒருவர் கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியங்களைக் கற்றுக்கொள்கையில் அவரது முகம் பிரகாசிப்பதைப் பார்ப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. (w-TL94 3/1 பக். 29 பாரா. 5-6) ஊழியத்தில் பைபிளை உபயோகிப்பதிலும் பைபிள் படிப்புகளை ஆரம்பித்து நடத்துவதிலும் திறம்பட்டவர்களாக திகழும் இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளையோ பயனியர்களையோ பேட்டி காணுங்கள். மக்களிடம் ஆர்வம் தென்படுகையில் அதை அவர்கள் எப்படி வளர்க்கிறார்கள்? அதில் அவர்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது? ஊழியத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களைச் சொல்வதற்கு அல்லது அவற்றை மறுபடியும் நடித்துக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 69, முடிவு ஜெபம்.
அக்டோபர் 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தி பைபிள் படிப்புகளைத் துவங்குதல். நவம்பர் 2001, நம் ராஜ்ய ஊழியம், பக்கங்கள் 3-4-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். பாரா 5-ன்படி, ஒவ்வொரு மாணாக்கரின் சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்துகொடுக்க மனமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை சிறப்பித்துக் காட்டுங்கள். பாராக்கள் 8-10-ன் அடிப்படையில் சுருக்கமான ஓரிரு நடிப்புகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தவிர, வேறு ஏதாவது அணுகுமுறை உள்ளூருக்குப் பொருந்துமானால் அதை விளக்கிய பின் நடித்துக் காட்டுங்கள். பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதியை அளித்தபோது கிடைத்த அனுபவங்களைச் சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: உங்கள் பிள்ளையின் மனதில் சத்தியத்தை ஆழப் பதிய வையுங்கள். குடும்ப மகிழ்ச்சி புத்தகம், பக்கங்கள் 55-9-ன் அடிப்படையில் கொடுக்கப்படும் பேச்சு. பிள்ளைகள் யெகோவா தேவனோடு நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள எந்த நான்கு வழிகளில் பெற்றோர் உதவலாம் என்பதை கலந்தாலோசியுங்கள்; அதிலுள்ள தகவலை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதையும் குறிப்பிடுங்கள்.
பாட்டு 165, முடிவு ஜெபம்.
அக்டோபர் 25-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. (உங்கள் பிராந்தியத்துக்குப் பொருத்தமாயிருந்தால்), பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி அக்டோபர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) நவம்பர் 1 காவற்கோபுரத்தையும் அளிக்கும் நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும், “யெகோவாவின் சாட்சிகளில் எனக்கு அக்கறையில்லை” என்று சொல்லி உரையாடலை நிறுத்த முயலுவோருடன் எப்படி வெவ்வேறு விதங்களில் பேசலாம் என்பதைக் காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 17-18-ஐக் காண்க.
20 நிமி: கடவுளுடைய வார்த்தையை ஆதரிப்பதற்கு அத்தாட்சி அளியுங்கள். ஊழியப் பள்ளி புத்தகம், பக்கங்கள் 256-7-ன் அடிப்படையில் சபையார் கலந்தாலோசிப்பு. வேதாகமத்தின் நியாயத்தன்மையை ஜனங்கள் புரிந்துகொள்வதற்கு பைபிள் சாராத வேறு தகவல் மூலங்களிலுள்ள அத்தாட்சியை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்? பின்வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்படி சபையாரிடம் கேளுங்கள்: படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக சடப்பொருளாகிய அண்டத்திலிருந்து என்ன உதாரணங்களை நாம் எடுத்துக் கூறலாம்? (rs-TL பக். 85-6) பைபிள் உண்மையில் கடவுளுடைய வார்த்தை என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள அறிஞர்கள் மற்றும் நிபுணர்களின் கூற்றுகளை நாம் எப்படி பயன்படுத்தலாம்? (rs-TL பக். 62-4) கடவுள் அக்கிரமத்தை ஏன் அனுமதிக்கிறார் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள என்ன உதாரணங்களை அல்லது ஒப்புமைகளை நாம் பயன்படுத்தலாம்? (rs-TL பக். 429) பைபிளின் ஆலோசனைகளைப் பின்பற்றுவது ஞானமானது என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்வதற்கு என்ன அனுபவங்களை அல்லது உதாரணங்களை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?
15 நிமி: “முழு இருதயத்தோடு யெகோவாவை சேவியுங்கள்.” சபையார் கலந்தாலோசிப்பு. கடந்த ஊழிய ஆண்டில் நடைபெற்ற விசேஷ மாநாட்டு தினத்தின் முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள். நிகழ்ச்சியின்போது தாங்கள் எடுத்த குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு சபையாரை உற்சாகமூட்டுங்கள். சொல்லப்படும் குறிப்புகள், கற்றுக்கொண்டவற்றைக் கடைப்பிடிப்பதால் வரும் நன்மைகளின் மீதே கவனத்தைத் திருப்ப வேண்டும்.
பாட்டு 62, முடிவு ஜெபம்.
நவம்பர் 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். வெளி ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அனைவருக்கும் ஞாபகப்படுத்துங்கள். நவம்பர் மாதத்தில் திருப்தியான வாழ்க்கைக்கு வழி சிற்றேட்டை அளிப்போம். இந்தச் சிற்றேட்டை எப்படியெல்லாம் அறிமுகப்படுத்தலாம் என்பதைச் சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். அவற்றில் உங்கள் பிராந்தியத்துக்குப் பொருத்தமான ஒரு பிரசங்கத்தை நடித்துக் காட்டுங்கள். நேரம் அனுமதித்தால், ஊழியத்தில் இந்தப் பிரசுரத்தை அளித்தது பற்றிய அனுபவத்தை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “பத்திரிகை ஊழியத்தில் கலந்துகொள்கிறீர்களா?” ஊழியக் கண்காணியால் நடத்தப்படும் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். பத்திரிகை ஊழியத்திற்கு சபை செய்திருக்கும் ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்; அந்த ஏற்பாட்டிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் அதில் தவறாமல் கலந்துகொள்ள ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்பதைக் கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 175, முடிவு ஜெபம்.