ஊழியத்தில் பத்திரிகைகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்
1 ‘ஆர்வத்தைத் தூண்டுபவை, காலத்திற்கேற்றவை, ஊக்கமூட்டுபவை.’ ‘நான் இதுவரை வாசித்த பத்திரிகைகளிலேயே, மிகுந்த புத்துணர்ச்சி அளித்த பத்திரிகைகள் இவை.’ காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைப் பற்றி உலகெங்குமுள்ள வாசகர்களின் உணர்வையே இந்தக் குறிப்புகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. ‘எல்லா வகை மக்களும்’ நற்செய்தியைக் கேட்பதற்கு உதவும் மதிப்புமிக்க கருவிகளாக இப்பத்திரிகைகள் நிரூபித்துள்ளன.—1 தீ. 2:4, NW.
2 ஒரு பிஸினஸ்மேன், அவருக்குப் பிடித்த விஷயத்தைக் கலந்தாலோசித்த விழித்தெழு! பத்திரிகையைப் பார்த்ததும் அதை வாங்கிக்கொண்டார். பின்னர் அதோடு வெளியிடப்படும் காவற்கோபுரம் பத்திரிகையை வாசித்தார்; அதில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரை, காலமெல்லாம் அவர் நம்பி வந்த திரித்துவப் போதனையைப் பற்றி கூர்ந்தாராய அவரைத் தூண்டியது. அவருக்குச் சத்தியத்தின் மீது ஆர்வம் பிறந்தது. ஆறே மாதங்களில் முழுக்காட்டுதல் பெற்றுவிட்டார். மற்றொருவர் இந்தப் பத்திரிகைகளுக்குச் சந்தா செய்திருந்தார், ஆனால் அவர் அவற்றை வாசிக்கவே இல்லை. அதே சமயத்தில் சாட்சிகளென்றாலே ஆகாதிருந்த அவருடைய மனைவியோ அவற்றை வாசித்தார். நீதிமான்கள் குடியிருக்கும் ஒரு பரதீஸாக இந்தப் பூமி மாற்றப்படும் என்ற பைபிளின் வாக்குறுதி அவரது உள்ளத்தைத் தொட்டது. காலப்போக்கில் அவரும் அவருடைய மகனும் அவருடைய தங்கையும் யெகோவாவின் ஊழியர் ஆனார்கள்.
3 இரண்டையும் சேர்த்துக் கொடுங்கள்: மேற்கூறப்பட்ட அனுபவங்கள் காட்டுகிறபடி, பத்திரிகையை யார் வாசிப்பார்கள், எந்தக் கட்டுரை அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டும் என்று நமக்குத் தெரியாது. (பிர. 11:6) ஆகவே, காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளில் ஒன்றை மட்டுமே நம் பிரசங்கத்தில் சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டையும் சேர்த்துக் கொடுப்பதே மிகுந்த பயனளிக்கும். குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில், பல்வேறு மாத பத்திரிகைகளைக் கொடுப்பது பொருத்தமாயிருக்கலாம்.
4 பத்திரிகை ஊழியத்திற்கென வாரத்தில் ஒரு நாளை ஒதுக்குவது பயனளிக்கும். யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2005-ல், ஒவ்வொரு சனிக்கிழமையும் “பத்திரிகை தினம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் பிராந்தியத்தின் நிலவரமும், நம் ஒவ்வொருவரின் சூழ்நிலைகளும் மாறுபடுகின்றன; எனவே சிலர் வேறொரு நாளை பத்திரிகை தினமாக ஒதுக்கலாம். வாராவாரம் இந்த ஊழியத்தில் கலந்துகொள்கிறீர்களா?
5 விசேஷ இலக்கு வையுங்கள்: மாதத்தில் இத்தனை பத்திரிகைகளை அளிக்க வேண்டும் என்று இலக்கு வைப்பது அதிக பத்திரிகைகளை விநியோகிப்பதற்கு கவனம் செலுத்த உதவும். உங்களுக்கென பத்திரிகை மார்க்கம் இருக்கிறதா? ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் பத்திரிகைகளை அளிக்கிறீர்களா? தெரு ஊழியத்தில், வியாபார பிராந்தியங்களில், பொதுவிடங்களில் என எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பத்திரிகைகளை அளிக்க முடியுமா? நீங்கள் பயணம் செய்யும்போது, ஷாப்பிங் போகும்போது, யாரையாவது சந்திக்க காத்திருக்கும்போது பத்திரிகைகள் உங்கள் கைவசம் இருக்கிறதா? காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலிருந்து மற்றவர்கள் நன்மையடைய, பொருத்தமான எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
6 நம்மிடம் உள்ள பழைய பத்திரிகைகளை அளிக்கவும் இலக்கு வைக்கலாம். அந்தந்த மாதத்திற்குள் பத்திரிகைகளை அளிக்காவிட்டாலும், அதிலுள்ள தகவலின் மதிப்பு குறைந்துவிடுவதில்லை. ஆர்வமுள்ளவர்களுக்கு அவற்றை அளியுங்கள். லட்சக்கணக்கானோருக்கு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள், ‘ஏற்ற சமயத்து வார்த்தையாகவே’ இருந்திருக்கின்றன. (நீதி. 25:11) இன்னும் லட்சக்கணக்கானோர் யெகோவாவை அறிந்து அவரைச் சேவிப்பதற்கு உதவும் வகையில் அவற்றைப் பயன்படுத்துவோமாக.
[கேள்விகள்]
1, 2. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் மக்களின் மனதை எவ்வாறு தொட்டிருக்கின்றன?
3. இரு பத்திரிகைகளையும் சேர்த்தே கொடுப்பதால் என்ன நன்மை?
4. பத்திரிகை ஊழியத்தை நாம் எப்படித் திட்டமிடலாம்?
5. பத்திரிகைகளை அளிக்க எந்தெந்த சந்தர்ப்பங்களில் கவனமாய் இருக்க வேண்டும், அதற்கு எது உதவும்?
6. பழைய பத்திரிகைகளை எப்படி நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்?