தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 29, 2005-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜூலை 4 முதல் ஆகஸ்ட் 29, 2005 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சுப் பண்புகள்
1. நம் நம்பிக்கையைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்லும்போது எவ்வாறு ‘நியாயத்தன்மையை எல்லா மனுஷருக்கும்’ காண்பிக்கலாம்? ஏன் அது முக்கியம்? (பிலி. 4:5; யாக். 3:17; NW) [be-TL பக். 251 பாரா. 1-3, பெட்டி]
2. எப்போது இணங்கிப்போவது என்பதை தெரிந்திருப்பது, பிரச்சினைகளின்றி மற்றவர்களோடு நன்கு பழக எப்படி உதவுகிறது? [be-TL பக். 253 பாரா. 1-2]
3. மற்றவர்களை நியாயமாகச் சிந்திக்க வைப்பதற்கு, கேள்விகளைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவது ஏன் முக்கியம்? [be-TL பக். 253 பாரா. 3-4]
4. நம்ப வைக்கும் விதத்தில் பேசுவதற்கு என்ன விஷயங்களை நாம் கவனத்தில் வைக்க வேண்டும்? [be-TL பக். 255 பாரா. 1-3, பெட்டி; பக். 256 பாரா. 1-2, பெட்டி]
5. பைபிளின் நம்பகத்தன்மையை ஜனங்களுக்குப் புரிய வைப்பதற்கு, பைபிள் சாராத வேறு சில நம்பகமான மூலங்களில் உள்ள அத்தாட்சிகளை நாம் பயன்படுத்த நினைக்கையில் எதை மனதில் வைக்க வேண்டும்? [be-TL பக். 256 பாரா. 4-6, பெட்டி]
பேச்சு நியமிப்பு எண் 1
6. இயேசு உண்மையிலேயே வாழ்ந்ததற்கு என்ன தெளிவான அத்தாட்சி இருக்கிறது? [w-TL03 6/15 பக். 4-7]
7. ‘உத்தமர்களுடைய வாய்’ அவர்களை ‘எவ்வாறு தப்புவிக்கிறது’? ‘நீதிமான்களுடைய வீடு’ எவ்வாறு ‘நிலைநிற்கிறது’? (நீதி. 12:6, 7) [w-TL03 1/15 பக். 30 பாரா. 1-3]
8. பைபிள், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என எல்லா விஷயங்களையும் நீண்ட பட்டியல் போட்டுக் காட்டும் புத்தகம் அல்ல. எனவே ‘கடவுளுடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்வது’ எப்படி? (எபே. 5:17) [w-TL03 12/1 பக். 21 பாரா 3–பக். 22 பாரா 3]
9. வறுமை அல்லது பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க பைபிளிலுள்ள எந்த நியமங்கள் உதவுகின்றன? [w-TL03 8/1 பக். 5 பாரா. 2-5]
10. இலவசமாகக் கொடுப்பதில் யெகோவா எடுத்துக்காட்டாகத் திகழ்வது, என்ன செய்யும்படி நம்மைத் தூண்ட வேண்டும்? (மத். 10:8) [w-TL03 8/1 பக். 20-2]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. சாலொமோன் கட்டிய ஆலயத்தின் நுழைவாயிலில் இருந்த யாகீன், போவாஸ் என்ற இரண்டு தூண்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன? (1 இரா. 7:15-22)
12. தீருவின் ராஜாவான ஈராமுக்கு, கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களை சாலொமோன் அன்பளிப்பாகக் கொடுத்தது நியாயப்பிரமாணத்தின்படி சரியா? (1 இரா. 9:10-13)
13. “தேவனுடைய மனுஷன்” கீழ்ப்படியாமற்போனது நமக்கு என்ன பாடத்தைக் கற்பிக்கிறது? (1 இரா. 13:1-25)
14. யூத அரசன் ஆசா எவ்விதத்தில் தைரியமாகச் செயல்பட்டார்? அது நமக்கு என்ன கற்பிக்கிறது? (1 இரா. 15:11-13, NW)
15. ஆகாப் ராஜா மற்றும் நாபோத்தின் விஷயத்தில், சுய பச்சாதாபம் என்ன ஆபத்தை விளைவித்தது? (1 இரா. 21:1-16)