ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மே 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 4-லுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு முறைகளைப் பயன்படுத்தியோ, மே 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் மே மாத விழித்தெழு!-வையும் அளிப்பது போன்ற நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அவற்றில் ஒரு நடிப்பு, பத்திரிகை மார்க்கத்தில் மே 1, மே 15 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகைகளையும் மே மாத விழித்தெழு!-வையும் அளிப்பது போல் இருக்கட்டும். அந்த நடிப்பு, மே 1 தேதியிட்ட காவற்கோபுரம் வீட்டுக்காரருக்கு கிடைக்காதது போலவும் இம்முறை அதையும் சேர்த்துக் கொடுப்பது போலவும் இருக்கட்டும். இந்த மூன்று பத்திரிகைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் சிறப்பித்துக் காட்டினால் போதுமானது. இப்படிப் பத்திரிகைகளைப் பெற்றுக்கொள்ளும் நபரை பிரஸ்தாபிகள் மாதம் ஒரு முறையோ இரு முறையோ சந்திக்கலாம்.
20 நிமி:“‘என்னை தொடர்ந்து பின்பற்றக்கடவன்.’”a எளிமையான வாழ்க்கை வாழும் முன்மாதிரியான பிரஸ்தாபியைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும் அதிக நேரம் செலவிடுவதற்காக இவர் சொந்த நாட்டங்களைக் குறைத்துக்கொள்பவராய் இருக்க வேண்டும். இதனால் இவர் பெறும் ஆசீர்வாதங்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி:சபை அனுபவங்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களின்போது ஊழியத்தில் மும்முரமாய் கலந்துகொண்டதால் கிடைத்த பயன்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பித்ததாலும், புதியவர்களை நினைவுநாள் ஆசரிப்புக்கு அழைத்ததாலும் கிடைத்த பலன்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள். குறிப்பிடத்தக்க அனுபவங்களில் ஓரிரண்டை நிஜ சம்பவ நடிப்பாக நடித்துக் காட்டலாம்.
பாட்டு 91, முடிவு ஜெபம்.
மே 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். மே 29-ல் துவங்கும் வார ஊழியக் கூட்டத்திற்குத் தயாரிக்கும் விதத்தில், நோவா—கடவுளோடு நடந்தார் என்ற வீடியோவை அனைவரும் பார்த்து வரும்படி சபையாரை ஊக்கப்படுத்துங்கள்.
10 நிமி:கிறிஸ்துவின் தலைமையில் ஒன்றுசேர்ந்து ஐக்கியமாக வேலை செய்தல். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 13-15-ல், “அவர் வகிக்கும் பாகத்தைப் புரிந்து ஏற்றுக்கொள்வதன் அர்த்தம்” என்ற உபதலைப்பின் அடிப்படையில் பேச்சு.
25 நிமி:“ராஜ்ய மன்ற கட்டுமானம்—பரிசுத்த சேவையின் ஒரு முக்கிய அம்சம்.”b பாரா 2-ஐக் கலந்தாலோசிக்கையில், ராஜ்ய மன்ற கட்டுமானத் திட்ட வாலண்டியர் விண்ணப்ப (A-25) படிவத்தைக் காண்பித்து அதை எப்படிப் பெற்றுக்கொள்ளலாமென சொல்லுங்கள். ராஜ்ய மன்றத்தைக் கட்டுகிற அல்லது புதுப்பிக்கிற பணியில் யாராவது ஈடுபட்டிருந்தால், அவரைப் பேட்டி காணுங்கள்.
பாட்டு 133, முடிவு ஜெபம்.
மே 22-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள மற்ற முறைகளைப் பயன்படுத்தியோ, ஜூன் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், ஜூன் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். இந்த நடிப்புகள், பத்திரிகைகளை அளிக்கும் விதத்தை ஒரு குடும்பத்தார் தங்கள் மத்தியில் பழகிப் பார்ப்பதைப் போன்று இருக்கட்டும்.
15 நிமி:“தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—கனிவுடனும் மரியாதையுடனும் நடந்துகொள்வதன் மூலம்.”c
18 நிமி:சிறந்த தோற்றம். ஊழியப் பள்ளி புத்தகத்தில், பக்கங்கள் 131-3-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. நம் உடை, தோற்றம் சம்பந்தமாகக் கொடுக்கப்பட்டுள்ள ஐந்து நியமங்களைக் கலந்தாலோசியுங்கள். சபை கூட்டங்களுக்கு வரும்போது பொருத்தமாக உடையணிந்து வருவதன் அவசியத்தை பைபிள் மாணாக்கர் புரிந்துகொள்வதற்கு இந்தத் தகவலைச் சாதுரியமாக எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் குறிப்பிடுங்கள்.
பாட்டு 215, முடிவு ஜெபம்.
மே 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். மே மாத ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி சபையாருக்கு ஞாபகப்படுத்துங்கள்.
10 நிமி:ஜூன் மாதத்தில் போதகர் புத்தகத்தை அளியுங்கள். ஜனவரி 2005 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழிய பிரதியில் பக்கங்கள் 3-4-ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு முறைகளைப் பயன்படுத்தியோ, பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளிக்கும் விதத்தை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நேரம் இருந்தால், இந்தப் புத்தகத்தை ஊழியத்திலோ, தங்கள் குடும்பத்தாரிடமோ பயன்படுத்திய அனுபவத்தைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
25 நிமி:“சிறியோர் பெரியோருக்கெல்லாம் ஒரு முன்மாதிரி.” ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்பிற்குப் பின்பு, நோவா வீடியோவுக்கான வினாடிவினாவைச் சபையாருடன் கலந்தாலோசியுங்கள். இரண்டாவது பாராவிலுள்ள கேள்விகள் அனைத்தையும் பயன்படுத்துங்கள். டிவிடி பதிப்பில் ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டுள்ள “கற்கும் முறைகள்” என்ற பகுதியைக் குடும்பமாகக் கலந்தாலோசித்ததிலிருந்து எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள் என்பதைச் சபையாரிடம் கேளுங்கள். பின்னர், மூன்றாவது பாராவிலுள்ள கேள்வியையும் வசனங்களையும் கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 9, முடிவு ஜெபம்.
ஜூன் 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள்.
15 நிமி:சபை தேவைகள்.
20 நிமி:மறுசந்திப்புகள் செய்வதில் எப்படி வெற்றி காணலாம். நவம்பர் 15, 2003 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில் பக்கம் 16-ல் உள்ள பெட்டியின் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஏழு ஆலோசனைகளையும் ஒவ்வொன்றாகக் கலந்தாலோசியுங்கள்; பிராந்தியத்தில் இவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதன் பேரில் குறிப்புகள் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். பிரசுரங்களைப் பெற்றவர்களையும் சரி, ஆர்வம் காட்டியவர்களையும் சரி, தவறாமல் மறுசந்திப்பு செய்யும்படி பிரஸ்தாபிகளுக்கு ஊக்கமூட்டுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் நோக்கத்துடனேயே மறுசந்திப்பு செய்யும்படி ஊக்கமூட்டுங்கள். ஜனவரி 2006 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 6-ல் காணப்படும் ஆலோசனைகளில் ஒன்றைப் பயன்படுத்தி, மறுசந்திப்பின்போது பைபிள் படிப்பைத் துவங்குவது எப்படியென்று நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
பாட்டு 57, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.