ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மார்ச் 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ மார்ச் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், மார்ச் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
15 நிமி: உங்கள் அன்புக்குரியவர் யெகோவாவை விட்டு விலகுகையில். செப்டம்பர் 1, 2006 காவற்கோபுரம், பக்கங்கள் 17-21 வரையுள்ள கட்டுரையின் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
20 நிமி: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” a பாரா 3-ஐ கலந்தாலோசிக்கையில், ஆர்வம் காட்டுபவரை நாம் அழைக்கும்போது நினைவு நாள் ஆசரிப்பைப்பற்றி விளக்குவதற்கு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதன்பேரில் மார்ச் 2006 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 1, பாரா 3-ல் உள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 168, முடிவு ஜெபம்.
மார்ச் 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 3-ல் உள்ள “நினைவுநாள் ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” பெட்டியிலிருந்து முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.
20 நிமி: உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் அதிகாரம் 10-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
15 நிமி: “எப்படி பதில் அளிப்பீர்கள்?” b ஒரு குடும்பப் படிப்பின்போது இந்த அம்சத்தை அவ்வப்போது எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைச் சுருக்கமாக நடித்துக்காட்டச் செய்யுங்கள்.
பாட்டு 216, முடிவு ஜெபம்.
மார்ச் 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாத ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். கணக்கு அறிக்கையையும் நன்கொடை பெற்றுக்கொண்டதற்குச் சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ நினைவுநாள் சிறப்பு அழைப்பிதழுடன் ஏப்ரல் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் ஏப்ரல் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன? ஜூலை 2006, விழித்தெழு! பக்கங்கள் 23-5 வரையுள்ள கட்டுரையின் அடிப்படையில் பேச்சு. உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்ததும் முழுநேர ஊழியத்தைச் செய்யத் தொடங்கிய ஒன்றிரண்டு பேருடைய பேட்டியும் இருக்கட்டும். ஏன் அவர்கள் முழுநேர ஊழியத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்? என்ன ஆசீர்வாதங்களை அனுபவித்தார்கள்?
பாட்டு 148, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 2-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் 1, 2007 காவற்கோபுரத்தின் பின்பக்க அட்டையில் உள்ள அழைப்பிதழை மறுபார்வை செய்யுங்கள்; ஆர்வம் காட்டுபவர்களை ஏப்ரல் 15-ஆம் தேதி கொடுக்கப்படும் சிறப்புப் பொதுப் பேச்சிற்கு அழைக்குமாறு பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களுக்குத் தொடர்ந்து உதவுங்கள். ஒரு மூப்பர் கொடுக்கும் பேச்சு. உள்ளூரில் நடந்த நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையை அறிவியுங்கள், அவர்களில் ஆர்வமுள்ளவர்களின் தோராயமான எண்ணிக்கையையும் தெரிவியுங்கள். நினைவுநாள் சிறப்பு அழைப்பிதழை ஏற்றுக்கொண்டவர்கள் சம்பந்தமான அல்லது நிகழ்ச்சி முடிந்தபிறகு பைபிள் படிப்புக்காக அட்டண்டன்ட்டுகளை அணுகிய மிகச் சிறந்த அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்கள். கலந்துகொண்டவர்களுக்கு மேலுமான ஆன்மீக உதவிகளை எவ்வாறு அளிக்கலாம் என்பதன்பேரில் ஆலோசனைகளை வழங்குங்கள். (பார்க்க: km-TL 3/06, பக்.1, பாரா. 5; km-TL 2/05, பக்.4, பாரா.9; km-TL 2/04, பக். 5, பாரா. 16.) தாமதிக்காமல் அவர்களைச் சந்திக்கும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: இயர்புக்—2007-ஐ நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். “ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்” என்பதிலுள்ள முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். “உலகளாவிய அறிக்கை”யில் உள்ள சிறப்புக் குறிப்புகளைச் சொல்லுங்கள். விசேஷமாக, தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திய, உற்சாகத்தை அளித்த அறிக்கைகளையும் அனுபவங்களையும் சொல்லும்படி ஒருசிலரை முன்னதாகவே ஏற்பாடு செய்யுங்கள். அந்த வருடத்தில் முழுப் புத்தகத்தையும் தொடர்ந்து படிப்பதற்குக் குடும்பங்களை உற்சாகப்படுத்துங்கள். புதியவர்களை யெகோவாவின் அமைப்பிடம் வழிநடத்தவும் கூட்டங்களில் கலந்துகொள்ள அவர்களை உற்சாகப்படுத்தவும் அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளைச் சொல்லுங்கள்.
பாட்டு 179, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.