ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
குறிப்பு: வருடம் முழுவதும் ஒவ்வொரு வாரத்திற்குமுரிய ஊழியக் கூட்ட அட்டவணை நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்படும். “கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!” மாவட்ட மாநாட்டுக்குச் செல்வதற்கு வசதியாக சபைகள் தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ளலாம். பொருத்தமாயிருந்தால், இந்த மாத உட்சேர்க்கையிலிருந்து, சபைக்குப் பொருந்துகிற குறிப்பிட்ட ஆலோசனைகளையும் நினைப்பூட்டுதல்களையும் மாநாட்டுக்குச் செல்வதற்கு முந்தின வார ஊழியக் கூட்டத்தில் மறுபடியும் கலந்தாலோசிக்க 15 நிமிடத்தை ஒதுக்குங்கள். மாநாடு முடிந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, ஊழியத்திற்குப் பயனுள்ளதாய் இருப்பதாக பிரஸ்தாபிகள் கருதுகிற மாநாட்டு குறிப்புகளை மறுபார்வை செய்ய ஊழியக் கூட்டப் பகுதியில் (ஒருவேளை சபை தேவைகள் பகுதியில்) 15 முதல் 20 நிமிடங்களை ஒதுக்குங்கள். இந்த மறுபார்வையை ஊழியக் கண்காணி நடத்த வேண்டும். இந்தத் தகவலை ஊழியத்தில் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் அல்லது பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும்படி பிரஸ்தாபிகளிடம் கேளுங்கள்.
ஏப்ரல் 9-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி, ஏப்ரல் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் ஏப்ரல் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்ட செய்யுங்கள். மறுசந்திப்பின்போது பதில் அளிப்பதற்கு பிரஸ்தாபி ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு வருவதைப் போன்று ஒரு நடிப்பு இருக்கட்டும்.
15 நிமி: “புதிய சீஷர்களை உருவாக்குவதில் எல்லாருமே பங்குகொள்ளலாம்.”a பாரா 4-ஐச் சிந்திக்கும்போது, முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பு சபையிலுள்ளவர்கள் தங்களுக்கு எப்படி உற்சாகம் அளித்தார்கள் என்பதைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். பதில் சொல்வதற்கு ஓரிருவரை முன்னதாகவே ஏற்பாடு செய்யலாம்.
20 நிமி: “‘கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்!’ மாவட்ட மாநாட்டை முழுமூச்சுடன் உலகெங்கும் விளம்பரப்படுத்துதல்.”b பாரா 3-ஐ சிந்திக்கும்போது, கடந்த வருட மாவட்ட மாநாட்டின் அழைப்பிதழை வினியோகிக்கையில் கிடைத்த அருமையான அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள் அல்லது இயர்புக் 2007-ல் பக்கம் 7-லிலிருந்து பக்கம் 10-லுள்ள உபதலைப்புவரை உள்ள குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 43, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 16-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: ‘பயமில்லாமல் திருவசனத்தைப் பேசுங்கள்.’c நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து, வசன எண்கள் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின் பேரில் குறிப்புகள் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “முழுமையாய்ச் சாட்சி கொடுக்க பயிற்சி பெற்றிருத்தல்”—பகுதி 1. ஜனவரி 1, 2005, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 12-14-லுள்ள பாராக்கள் 1-10-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். அடுத்த வார கலந்தாலோசிப்புக்குத் தயாரிக்கும் விதத்தில் கட்டுரையின் மீதமுள்ள பகுதியை வாசித்து வரும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 207, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 23-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி, மே 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் மே மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்ட செய்யுங்கள்.
10 நிமி: “அற்புத ஒளியைப் பாருங்கள்!” 2007, மார்ச் 15, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 12-14-ன் அடிப்படையில் பேச்சு.
25 நிமி: “முழுமையாய்ச் சாட்சி கொடுக்க பயிற்சி பெற்றிருத்தல்”—பகுதி 2. ஜனவரி 1, 2005, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 14-17-லுள்ள பாராக்கள் 11-24-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
பாட்டு 126, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 30-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் மாத ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
30 நிமி: “கண்ணியத்தை வெளிக்காட்டுவதன்மூலம் கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்.”d சபை செயலர் நடத்த வேண்டும். எங்கு நடைபெறவிருக்கிற மாவட்ட மாநாட்டில் சபையார் கலந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெரிவியுங்கள். “மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” என்ற பெட்டியை மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 44, முடிவு ஜெபம்.
மே 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: வழிபாட்டு இடங்களுக்கான ஏற்பாடுகள். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில், அதிகாரம் 11-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
20 நிமி: “ஜனங்கள் வீட்டில் இல்லாதபோது.”e ஊழியக் கண்காணி நடத்த வேண்டும்.
பாட்டு 178, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.