ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மே 14-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ மே 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், மே மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
20 நிமி: உள்ளூரிலும் உலகெங்கிலும் ராஜ்ய வேலைகளை ஆதரித்தல். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் அதிகாரம் 12-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
15 நிமி: ‘சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுக்கிறார்’a நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களின் பேரில் சபையாரைக் குறிப்பு சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 1, முடிவு ஜெபம்.
மே 21-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டியைக் கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: மற்றொரு மொழியைக் கற்க உங்களால் முடியும்! மார்ச் 2007, விழித்தெழு! பக்கங்கள் 10-12 வரையுள்ள கட்டுரையின் அடிப்படையில் பேச்சு. நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக வேறொரு மொழியை கற்பதன் மதிப்பை சிறப்பித்துக் காட்டுங்கள்.
20 நிமி: “கடவுளுடைய வார்த்தையை ஆதரித்துப் பேசுகிறீர்களா?”b ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 143-4-லுள்ள பெட்டிகளிலிருந்தும் குறிப்புகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 202, முடிவு ஜெபம்.
மே 28-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். மே மாத ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ ஜூன் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் ஜூன் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள்.
20 நிமி: ஜூன் மாதத்தில் குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தை அளியுங்கள். இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள காலத்திற்கேற்ற முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுங்கள். உங்கள் பிராந்தியத்திற்கு பொருத்தமாயுள்ள முறைகளை பயன்படுத்தி இந்த புத்தகத்தை அளிக்கும் விதத்தை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நேரம் இருந்தால், இந்தப் புத்தகத்தை தங்களுக்குத் தெரிந்தவர்களிடமோ தங்கள் குடும்பத்தாரிடமோ பயன்படுத்தியதால் கிடைத்த நல்ல பலன்களைச் சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.
15 நிமி: வெளி ஊழிய அனுபவங்கள். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெளி ஊழியத்தில் அதிகத்தைச் செய்வதற்கு கடினமாக பிரயாசப்பட்டதால் துணைப் பயனியர்களுக்கும் மற்ற பிரஸ்தாபிகளுக்கும் கிடைத்த அனுபவங்களைச் சொல்லுங்கள். பத்திரிகை அளிக்கப்பட்டவர்களை மறுபடியும் போய் சந்தித்தவர்களுக்கு கிடைத்த அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஓரிரு சிறந்த அனுபவங்களை நிஜசம்பவ நடிப்புகளாக நடித்துக்காட்டச் செய்யுங்கள்.
பாட்டு 21, முடிவு ஜெபம்.
ஜூன் 4-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “யெகோவாவைத் துதிக்க உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.”c பாரா 4-ஐக் கலந்தாலோசிக்கையில், ஜூலை 2005 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-ல் காணப்படும் குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 169, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகக் குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.