ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
அக்டோபர் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி, அக்டோபர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அக்டோபர் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். இவற்றில் ஒரு பத்திரிகையைக் காட்டிப் பேசினாலும்கூட, இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே அளிப்பதுபோல் இந்நடிப்புகள் இருக்க வேண்டும்.
20 நிமி: யெகோவாவின் அமைப்புடன் நெருங்கியிருங்கள். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில் 17-வது அதிகாரத்திலிருந்து பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
15 நிமி: உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஆகஸ்ட் 15, 2007 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கம் 19-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு.
அக்டோபர் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அறிவிப்புகள்.
20 நிமி: நீங்கள் கற்பிக்கிறவர்களிடம் சத்தியம் கனி தருகிறதா? பிப்ரவரி 1, 2005 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 28-30-ல் உள்ள விஷயங்களின் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலுள்ள கேள்விகள், மாணாக்கரின் இருதயத்தில் இருப்பதை நாம் பகுத்துணரும் விதத்தில் எவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுங்கள். உதாரணமாக, அதிகாரம் 1, பாரா 19; அதிகாரம் 2, பாரா 4; அதிகாரம் 3, பாரா 24; அதிகாரம் 4, பாரா 18 போன்றவற்றைக் குறிப்பிடலாம். இந்தப் புத்தகத்தின் வெவ்வேறு அம்சங்களை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு பிரஸ்தாபிகளை ஊக்கப்படுத்துங்கள்.
15 நிமி: “நவம்பர் மாதத்தில் விழித்தெழு! சிறப்பிதழை அளிப்போம்!”a அந்த விழித்தெழு!-வின் பொருளடக்கத்தைச் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள். பின்பு கேள்வி-பதில் முறையில் கட்டுரையைக் கலந்தாலோசியுங்கள். 3-வது பாராவைச் சிந்திக்கையில், பக்கம் 8-ல் உள்ள ஆலோசனையையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறையையோ பயன்படுத்தி, நவம்பர் மாத விழித்தெழு!-வை அளிக்கும் விதத்தை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். மறுசந்திப்புக்கு அடித்தளம் போடும் வகையில் அந்த நடிப்பின் முடிவு இருக்கட்டும்.
அக்டோபர் 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி, நவம்பர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் நவம்பர் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: தொடர்ந்து வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். பேச்சும் பேட்டிகளும். நாம் இவ்வுலகின் இருளிலிருந்து வெளியேறி, யெகோவாவின் ஒளியால் வழிநடத்தப்படத் தீர்மானித்திருக்கிறோம். (எபே. 5:8, 9) இந்த ஒளியால் நம் வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது, அர்த்தமுள்ளதாகியிருக்கிறது. (1 தீ. 4:8) இது நமக்குப் பிரகாசமான நம்பிக்கையை அளித்திருக்கிறது. (ரோ. 15:4) யெகோவாவோடு நல்லதொரு பந்தத்தை ஏற்படுத்துவதற்கும், அது முறிந்துவிடாமல் பார்த்துக்கொள்வதற்கும் முட்டுக்கட்டையாக இருந்த காரியங்களைச் சமாளித்திருக்கிற இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். சத்தியத்திற்கு வரும்போது அவர்கள் என்ன சவால்களைச் சந்தித்தார்கள்? அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? இப்போது அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு மேம்பட்டிருக்கிறது? சத்தியத்தில் நிலைத்திருக்க எது அவர்களுக்கு உதவுகிறது? தொடர்ந்து ஆன்மீக முன்னேற்றம் செய்யவும், யெகோவா வெளிப்படுத்தியிருக்கும் சத்தியத்திற்காக ஆழ்ந்த நன்றியைக் காட்டவும் சபையார் அனைவரையும் ஊக்கப்படுத்தி பேச்சை நிறைவு செய்யுங்கள்.—2 பே. 1:5-8.
அக்டோபர் 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். அக்டோபர் மாத ஊழிய அறிக்கையைக் கொடுக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். நவம்பர் மாத அளிப்பைக் குறிப்பிடுங்கள்; அவற்றில் ஒன்றை அளிக்கும் விதத்தை நடித்துக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: ஆன்மீக இலக்குகளால் உங்கள் படைப்பாளருக்கு மகிமை சேருங்கள். ஜூலை 15, 2004 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 21-3-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். தாங்கள் என்னென்ன ஆன்மீக இலக்குகளை வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவற்றை எட்டுவதற்கு என்ன செய்கிறார்கள் என்பதையும் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். இவர்களில் ஓரிருவரை முன்னதாகவே ஏற்பாடு செய்யலாம்.
20 நிமி: “ஏழைகளுக்கு நம்பிக்கை அளியுங்கள்.”b பாரா 2-ஐக் கலந்தாலோசிக்கையில், அக்டோபர் 8, 2003 தேதியிட்ட விழித்தெழு!-வில் பக்கங்கள் 26-7-ல் உள்ள கட்டுரையில் காணப்படும் குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நவம்பர் 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: தெய்வீக ஞானத்தால் உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்தல். ஜனவரி 1, 2005 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 23-7-ன் அடிப்படையில் பேச்சு.
20 நிமி: “ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம்!”c வட்டாரக் கண்காணி தங்கள் சபையைச் சந்திக்க வந்திருந்தபோது தாங்கள் எவ்வாறு ஊக்கம்பெற்றார்கள் என்பதைக் குறிப்பாகச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். இவர்களில் ஓரிருவரை முன்னதாகவே ஏற்பாடு செய்யலாம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.