அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க ஊக்கமாக முயலுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிக்கலாம். சபைக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்துகொள்ளாமல், நினைவு ஆசரிப்புக்கும் விசேஷ பொதுப் பேச்சுக்கும் மட்டுமே வந்திருந்த ஆர்வமுள்ள புதியவர்களை மீண்டும் சந்திப்பதற்கு விசேஷ முயற்சி எடுக்கப்படும். அவர்களில் யாருக்காவது பைபிள் படிப்பு நடத்தப்படவில்லை என்றால், ஒரு படிப்பை ஆரம்பிக்கும் நோக்கத்துடன் அவர்களைச் சந்திக்க வேண்டும். ஜூன்: கடவுளைத் தேடி அல்லது பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்) புத்தகத்தை அளியுங்கள். சபையில் இந்தப் புத்தகங்கள் இல்லையென்றால், ஒரே மெய்க் கடவுளை வணங்குங்கள் புத்தகத்தைக் கொடுக்கலாம்.
◼ புதிய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் கிடைத்த உடனே சபைகள் அவற்றைப் பிரஸ்தாபிகளுக்குக் கொடுத்துவிட வேண்டும். இது, வெளி ஊழியத்தில் கொடுக்கும் முன்பே அவற்றை நன்கு படித்துத் தெரிந்துகொள்ள பிரஸ்தாபிகளுக்கு உதவும்.
◼ நடத்தும் கண்காணியால் நியமிக்கப்படும் நபர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான சபை கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். அடுத்தடுத்து வரும் தணிக்கைகளை அவரே செய்யக்கூடாது. தணிக்கை முடிந்ததும், அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டபின் சபைக்கு அதை அறிவிக்க வேண்டும்.—சபை கணக்குகளுக்கான அறிவுரைகள் (S-27-TL) என்பதைக் காண்க.
◼ “தேவ ஆவியால் வழிநடத்தப்படுங்கள்” என்பதே 2008 மாவட்ட மாநாட்டின் பொருள். இந்த மூன்று நாள் மாநாட்டின் எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள நீங்கள் திட்டமிடுவதற்குத் வசதியாக, இது சம்பந்தமான விரிவான விவரங்கள் ஜூலை மாத நம் ராஜ்ய ஊழியத்தில் வெளிவரும். மூன்று நாட்களும் கலந்துகொள்வதற்கு, வேலை செய்யும் இடத்தில் நீங்கள் முன்னதாகவே விடுப்பு கேட்டு விண்ணப்பிக்க வேண்டியிருந்தால் அதைச் செய்யத் தயங்காதீர்கள்.
◼ ஆகஸ்ட் 4, 2008-ல் துவங்கும் வாரம் முதற்கொண்டு, ஆங்கில மொழி சபைகள் யெகோவாவின் நாளை மனதில் வைத்து வாழுங்கள் (ஆங்கிலம்) புத்தகத்தை சபை புத்தகப் படிப்பில் பயன்படுத்துவார்கள். கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, மராத்தி, வங்காளி மற்றும் ஹிந்தி சபைகள் என்னுடைய பைபிள் கதை புத்தகத்தைப் படிப்பார்கள். மிசோ மொழி சபைகளில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தைப் படிப்பார்கள்.
◼ ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்பத்தை (S-205-TL) மூப்பர்களிடம் கொடுப்பதற்கு முன்பு, அதை முழுமையாக பூர்த்தி செய்துவிட்டீர்களா, அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருக்கிறீர்களா என்பதைத் தயவுசெய்து உறுதிசெய்து கொள்ளுங்கள். ஊழிய குழு, அதிலும் முக்கியமாக சபையின் செயலர் ஒவ்வொரு பதிலும் திருத்தமாக, முழுமையாக இருக்கிறதா என்பதைச் சரிபார்த்த பிறகே கையெழுத்திட வேண்டும். இதனால் தகவலுக்காக மறுபடியும் தொடர்புகொள்ள வேண்டியிருக்காது, பயனியரை நியமிப்பதில் தாமதமும் ஏற்படாது.
◼ வெளிநாட்டிலிருந்து வரும் சகோதர சகோதரிகளை ஊழியத்திற்கு அழைத்துச் செல்லும் விஷயத்தில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கும் வியாபாரம் சம்பந்தமாக வருவோருக்கும் அளிக்கப்படும் விசா இதுபோன்ற மத நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை. (ரோ. 13:1, 5, தீத். 3:1) உள்ளூர் பிரஸ்தாபிகள் அவ்வப்போது ஊழியத்தில் கடுமையாக எதிர்க்கப்படுவதுபோல, இவர்களும் எதிர்க்கப்படலாம் என்பதையும் மனதில் வைக்க வேண்டும். மறுசந்திப்புகளுக்கு அவர்களை அழைத்துச் செல்வது பொருத்தமானதாக இருக்குமென்று நினைத்தாலும், விவேகமாகச் செயல்படுவது நல்லது. நாம் சந்திக்கப் போகும் நபர், அவர் வாழும் இடம், பிற சூழ்நிலைகள் ஆகியவற்றைக் குறித்து சிந்தித்துப் பார்த்து, வெளிநாட்டிலிருந்து வந்திருப்பவரை அங்கு அழைத்துச் செல்வது பொருத்தமானதா, ஞானமானதா என்று தீர்மானியுங்கள்.