ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜூலை-செப்டம்பர் காவற்கோபுரத்திலும் ஜூலை-செப்டம்பர் விழித்தெழு!-விலும், எந்தெந்த கட்டுரைகள் தங்களுடைய பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கின்றன என்பதைக் கேளுங்கள். எந்தக் கேள்விகளையும் வசனங்களையும் பயன்படுத்தி கட்டுரைகளை அறிமுகப்படுத்தினார்கள் என்பதைக் கேளுங்கள். ஆர்வம் இருப்பதைக் கண்டுபிடித்த பிறகு எப்படி இந்தப் பத்திரிகைகள் ஒவ்வொன்றையும் அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: பைபிள் மாணாக்கர்கள் போதகர்களாவதற்கு உதவுங்கள். ஜனவரி 15, 2007, காவற்கோபுரம், பக்கங்கள் 29-30, பாராக்கள் 14-20-ன் அடிப்படையில் பேச்சு. புதிதாக பைபிள் படிப்பவரிடம் பொதுப் பேச்சையும் காவற்கோபுர படிப்பையும் பற்றி ஒரு பிரஸ்தாபி விளக்கிவிட்டு, அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்ள வரும்படி அழைக்கிற சுருக்கமான ஒரு நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: நம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களை ஊழியத்தில் எதிர்ப்படுகையில் அவற்றை சமாளித்தல். தவறான அபிப்பிராயங்கள் ஊழியத்தை எப்படிப் பாதிக்கலாம் என நம்முடைய பிரசுரங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் மூப்பரின் பேச்சு. இவற்றை எப்படிச் சமாளிக்கலாம் என்பதை விளக்குங்கள். வெளி ஊழியத்தில் ஈடுபடும்போதும், வேறு காரியங்களைச் செய்கிறபோதும் மற்றவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள்; சில சமயங்களில் நாம் சாட்சிகொடுக்க பயன்படுத்தும் வார்த்தைகளும் நாம் நடந்துகொள்கிற விதமும் சத்தியத்திற்குச் செவிசாய்க்க அவர்களைத் தூண்டலாம். எனவே, எல்லா சமயத்திலும் நம் பேச்சிலும் நடத்தையிலும் கவனமாய் இருப்பது மிக முக்கியம். (1 பே. 2:12; 3:1, 2) தவறான அபிப்பிராயங்களை ஊழியத்தில் எதிர்ப்படுகையில் அவற்றை சமாளித்த உள்ளூர் அனுபவங்களோ பிரசுரங்களில் வெளிவந்த அனுபவங்களோ இருக்கலாம்; அவற்றிலிருந்து சில அனுபவங்களைத் தேர்ந்தெடுத்து சொல்லுங்கள்.
செப்டம்பர் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள அறிவிப்புகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள்.
20 நிமி: கடந்த வருடத்தில் நாம் எப்படி ஊழியம் செய்தோம்? ஊழியக் கண்காணியோ தகுதியான வேறு மூப்பரோ கொடுக்கும் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். கடந்த ஊழிய ஆண்டில் சபையார் எந்தளவு ஊழியத்தில் ஈடுபட்டார்கள் என்பதைச் சிந்திக்கும்போது அவர்கள் சாதித்த காரியங்களைப் பற்றி முக்கியமாய் சொல்லுங்கள். நியாயமான பாராட்டைத் தெரிவியுங்கள். சுவாரஸ்யமான அனுபவங்கள் ஏதாவது இருந்தால் அவற்றை ஓரிரு பிரஸ்தாபிகள் நடித்துக்காட்ட முன்னதாகவே ஏற்பாடு செய்யுங்கள். இந்த ஊழிய ஆண்டில் சபையாக எதில் முன்னேற்றம் செய்யலாம் என்பதைப் பற்றி ஓரிரு குறிப்புகளைச் சொல்லுங்கள்; அதோடு, அதற்கு உதவும் நடைமுறை வழிகளையும் சிந்தியுங்கள்.
15 நிமி: படைப்பில் எனக்கிருக்கும் நம்பிக்கையை எப்படி ஆதரித்துப் பேசுவது? பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையின் அடிப்படையில் பேச்சு. பள்ளியில், வேலை செய்யுமிடத்தில் அல்லது வேறு சமயத்தில் எப்படிப் படைப்பை ஆதரித்துப் பேசினார்களென சபையாரிடம் கேளுங்கள். இதற்குப் பதில் சொல்ல ஓரிருவரை முன்னதாகவே ஏற்பாடு செய்யுங்கள்.
செப்டம்பர் 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 1-ல் காணப்படும் கிளை அலுவலகக் கடிதத்தைச் சிந்தியுங்கள்.
20 நிமி: உங்கள் வேலைக்குப் பரிசு காத்திருக்கிறது. ஏப்ரல் 15, 2005, காவற்கோபுரம், பக்கம் 28, பாரா 5 முதல் பக்கம் 29-ன் முடிவுவரை உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு. ஊழியத்தில் ஊக்கமாய் பங்குகொள்ளும் ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள்; அப்போது, யெகோவா எப்படிப் பொருள் சம்பந்தமான தேவைகளைப் பூர்த்தி செய்து, உணர்ச்சி சம்பந்தமாக தங்களைத் தாங்குகிறார் என்பதை அவர்களிடம் கேளுங்கள்.
15 நிமி: அக்டோபர்-டிசம்பர் காவற்கோபுரத்தையும் அக்டோபர்-டிசம்பர் விழித்தெழு!-வையும் அளியுங்கள். பத்திரிகைகளைப் பற்றி சுருக்கமாக சொல்லிவிட்டு, எந்தெந்த கட்டுரைகள் தங்களுடைய பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கின்றன என்பதை சபையாரிடம் கேளுங்கள். எந்தக் கேள்விகளையும் வசனங்களையும் பயன்படுத்தி கட்டுரைகளை அறிமுகப்படுத்தலாம்? நாம் சொல்கிற செய்தியைக் கேட்க வீட்டுக்காரர் உண்மையிலேயே ஆர்வமுள்ளவராக இருக்கிறாரா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி அணுகுமுறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான ஒரு கட்டுரையைப் பயன்படுத்திப் பத்திரிகையை அளிப்பதைப் போன்ற சுருக்கமான மற்றொரு நடிப்பை மூப்பர் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
செப்டம்பர் 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். செப்டம்பர் மாத வெளி ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். மாநாடுகளின் போது சந்தர்ப்ப சாட்சி கொடுத்த அனுபவங்களோ கோடையில் விடுமுறையின் போதோ வேறு சமயங்களிலோ சாட்சி கொடுத்த சுவாரஸ்யமான அனுபவங்களோ இருந்தால் அதைச் சொல்வதற்கு ஓரிரு பிரஸ்தாபிகளை முன்னதாகவே ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “துண்டுப்பிரதியின் விசேஷ வினியோகிப்பு—நவம்பர் 10-டிசம்பர் 7!”a துண்டுப்பிரதிகள் இருந்தால் சபையார் எல்லாருக்கும் ஒரு பிரதியைக் கொடுங்கள். பாரா 2-ஐ சிந்திக்கும்போது, துண்டுப்பிரதியிலுள்ள விஷயங்களை சுருக்கமாகச் சொல்லுங்கள். பாரா 4-ஐ சிந்திக்கும்போது, சாதுரியத்தோடும் விவேகத்தோடும் அந்தத் துண்டுப்பிரதியை ஒரு பிரஸ்தாபி எப்படிக் கொடுக்கிறார் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள். பாரா 6-ஐ சிந்திக்கும்போது, மறுசந்திப்பின்போது பிரஸ்தாபி துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி பைபிள் படிப்பு ஒன்றை ஆரம்பிக்கும் நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
அக்டோபர் 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: கேள்விப் பெட்டி. சபையாருடன் கலந்தாலோசிப்பு. ஜூன் 15, 2005, காவற்கோபுரம், பக்கங்கள் 20-22, பாராக்கள் 10-16-லுள்ள குறிப்புகளையும் சொல்லுங்கள்.
20 நிமி: “யெகோவாவை நேசிக்க மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.”b நேரமிருப்பதைப் பொறுத்து, முடிந்தவரை கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின்பேரில் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.