உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/08 பக். 2-3
  • ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
  • நம் ராஜ்ய ஊழியம்—2008
  • துணை தலைப்புகள்
  • டிசம்பர் 8-⁠ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 15-⁠ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 22-⁠ல் துவங்கும் வாரம்
  • டிசம்பர் 29-⁠ல் துவங்கும் வாரம்
  • ஜனவரி 5-⁠ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—2008
km 12/08 பக். 2-3

ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை

டிசம்பர் 8-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 19

10 நிமி: சபை அறிவிப்புகள். அக்டோபர்-டிசம்பர் காவற்கோபுரம் மற்றும் அக்டோபர்-டிசம்பர் விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்பதற்காகப் பக்கம் 4-⁠ல் மாதிரியாய்க் கொடுக்கப்பட்டுள்ள அணுகுமுறைகளைச் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள். சபையார் இந்த இதழ்களை ஏற்கெனவே அளித்திருந்தால், அவர்கள் எப்படி அளித்தார்கள் எனக் கேளுங்கள். அவர்கள் எந்தக் கட்டுரையை, எந்தக் கேள்வியை, எந்த வசனத்தைப் பயன்படுத்தினார்கள்?

15 நிமி: 2009-⁠க்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி. பள்ளிக் கண்காணி கொடுக்கும் பேச்சு. அக்டோபர் 2008 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலிருந்து முக்கியக் குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். துணை ஆலோசகரின் பங்கைப் பற்றிச் சொல்லுங்கள். தங்களது நியமிப்பைச் சிரத்தையுடன் செய்யவும், பைபிள் சிறப்புக் குறிப்புகளில் உற்சாகத்துடன் கலந்துகொள்ளவும், தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்திலிருந்து வாராவாரம் அளிக்கப்படுகிற ஆலோசனைகளை அப்படியே கடைப்பிடிக்கவும் எல்லாரையும் ஊக்கப்படுத்துங்கள்.

20 நிமி: “நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பயன்படுத்துகிறீர்களா?” a பாரா 4-ஐச் சிந்திக்கும்போது, வீட்டுக்கு வீடு ஊழியத்தில், ‘யெகோவாவின் சாட்சிகள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை’ என்ற கேள்விக்குப் பதிலளிக்க நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை ஒரு பயனியரோ தகுதிவாய்ந்த பிரஸ்தாபியோ நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.

பாட்டு 6

டிசம்பர் 15-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 178

10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள அறிவிப்புகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள்.

10 நிமி: ஊழியம் செய்யும்போது, விஷயத்தை வலியுறுத்துவதற்காகத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 207-⁠ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். அங்குள்ள ஒன்று அல்லது இரண்டு ஆலோசனைகளைச் சுருக்கமாக நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.

25 நிமி: இளைஞர்களே​—⁠கடவுளைக் கனப்படுத்துகிற இலக்குகளை நாடுங்கள். மே 1, 2007 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 26-28, பாராக்கள் 9-19-⁠ன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு. இளம் வயதிலிருந்தே முழுநேர சேவை செய்துவரும் ஒருவரை அல்லது இருவரைப் பேட்டி காணுங்கள். அவர்கள் ஏன் முழுநேர சேவையைத் தேர்ந்தெடுத்தார்கள்? என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறார்கள்?

பாட்டு 221

டிசம்பர் 22-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 75

10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்குச் சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். ஜனவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள்; அதை ஒரு மூப்பர் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.

15 நிமி: ஜனவரி-மார்ச் காவற்கோபுரம் மற்றும் ஜனவரி-மார்ச் விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்பதற்குத் தயாரியுங்கள். சபையாருடன் கலந்தாலோசிப்பு. பத்திரிகைகளில் உள்ள முக்கிய விஷயங்களைச் சுருக்கமாகச் சொன்ன பிறகு, எந்தக் கட்டுரைகள் பிராந்தியத்திலுள்ள மக்களைக் கவரும் என்றும், ஏன் என்றும் சபையாரைக் கேளுங்கள். இவற்றில் ஓரிரு கட்டுரைகளைச் சபையாரிடம் குறிப்பிட்டுக் காட்டி, உரையாடலை ஆரம்பிக்க அவர்கள் என்ன கேள்வியைக் கேட்பார்கள் எனவும், கட்டுரையிலுள்ள எந்த வசனத்தை வாசித்துப் பத்திரிகையை அளிப்பார்கள் எனவும் அவர்களிடம் கேளுங்கள். பக்கம் 4-⁠ல் மாதிரியாகக் கொடுக்கப்பட்டுள்ள அணுகு​முறைகளை அல்லது உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறை​களைப் பயன்படுத்தி இந்தப் பத்திரிகைகள் ஒவ்வொன்றையும் அளிப்பதுபோல் காட்டுகிற நடிப்புகளோடு பேச்சை நிறைவு செய்யுங்கள்.

20 நிமி: “பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கென்றே ஒரு தினம்.” b ஜனவரியில், எந்த நாளில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க சபை கவனம் செலுத்துமென அறிவியுங்கள். 3-வது பாராவிலுள்ள ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள்; இவற்றில் ஒன்றோ இரண்டோ விதங்களை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள். பகுத்துணர்வோடும் ஜாக்கிரதையோடும் நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துங்கள்.

பாட்டு 133

டிசம்பர் 29-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 60

❑ சபை பைபிள் படிப்பு:

my-TL கதை 47

❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:

பைபிள் வாசிப்பு: வெளிப்படுத்துதல் 15-​22

தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை

❑ ஊழியக் கூட்டம்:

பாட்டு 153

5 நிமி: சபை அறிவிப்புகள்.

10 நிமி: சபைத் தேவைகள்.

20 நிமி: இரத்தத்திற்கு விலகியிருக்கும்படியான கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிதல். மூப்பர் கொடுக்கும் பேச்சு. நிரந்தர அதிகாரப் பத்திர (DPA) அட்டைக்குப் பதிலாக உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டை (Advance Health Care Directive) இனி ஏன் பயன்படுத்தப்படும் என்பதைப் பேச்சின் ஆரம்பத்தில் குறிப்பிடுங்கள். இந்தப் புதிய கோரிக்கை அட்டைகளை உடனே பூர்த்தி செய்யக் கூடாது. ஞானஸ்நானம் பெற்ற எல்லாப் பிரஸ்தாபிகளுக்கும் இந்தக் கோரிக்கை அட்டையைச் செயலர் கொடுக்க வேண்டும். இந்தப் பகுதி கையாளப்படுகையில் சபையார் கவனிப்பதற்கு இது உதவியாக இருக்கும். நவம்பர் 2006, நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையைக் கலந்தாலோசியுங்கள். ரோமர் 14:​12-ஐயும், கலாத்தியர் 6:​5-ஐயும் வாசியுங்கள். பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி அவரவர் செய்கிற தீர்மானங்களுக்காக அவரவரே யெகோவாவுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள். இந்தக் கோரிக்கை அட்டையை ஜெப சிந்தையோடு வீட்டில் கவனமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். முறைப்படி கையெழுத்திட்டுத் தேதியைக் குறிப்பிடுவதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். ஒவ்வொரு வருடமும் இதைப் புதுப்பிக்க வேண்டியிருக்கும். புதிய அட்டையைப் பூர்த்தி செய்ய யாருக்காவது உதவி தேவையா என்பதைத் தொகுதிக் கண்காணிகள் அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டும். யெகோவாவின் சாட்சிகளது ஞானஸ்நானம் பெறாத பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காக அடையாள அட்டைகள் தேவையான அளவு இருக்கின்றனவா என்பதைச் செயலர் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆங்கிலம் வாசிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாதவர்கள், திருத்தப்பட்ட அட்டையை (dpa-E In 11/04-1) பூர்த்தி செய்திருக்கிறார்களா என்பதை உறுதிசெய்யுங்கள்.

பாட்டு 214

ஜனவரி 5-⁠ல் துவங்கும் வாரம்

பாட்டு 35

❑ சபை பைபிள் படிப்பு:

my-TL கதை 48

❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:

பைபிள் வாசிப்பு: ஆதியாகமம் 1-5

எண் 1: ஆதியாகமம் 3:​1-​15

எண் 2: இயேசு எந்த விதத்தில் பெரிய போதகர்? (lr-TL அதி. 1 )

எண் 3: எது விருதா அல்ல? (1 கொ. 15:58 )

❑ ஊழியக் கூட்டம்:

பாட்டு 98

5 நிமி: சபை அறிவிப்புகள்.

10 நிமி: ஊழியத்தைக் குறித்து இயேசுவுக்கு இருந்த மனப்பான்மையைக் காட்டுங்கள். பிப்ரவரி 15, 2008 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 15-16, பாராக்கள் 17-20-⁠ன் அடிப்படையிலான பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.

20 நிமி: “ஊழியத்தில் சகிப்புத்தன்மை தேவை.” c நேரம் இருப்பதைப் பொறுத்து, கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின் பேரில் குறிப்புகள் சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.

பாட்டு 155

[அடிக்குறிப்புகள்]

a ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.

b ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.

c ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்