செப்டம்பர் 13-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 13-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 16-18
எண் 1: 2 இராஜாக்கள் 17:1-11
எண் 2: “பழைய ஏற்பாட்டில்” உள்ள யெகோவா “புதிய ஏற்பாட்டில்” இயேசு கிறிஸ்துவா? (rs பக். 198 பாரா. 1–4)
எண் 3: கடவுள் இருக்கிறாரென குருட்டுத்தனமாய் நம்பும்படி பைபிள் எதிர்பார்க்கிறதா?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: நற்செய்தியை அறிவிக்கும் ஊழியர்களாய் இருப்பது ஒரு பாக்கியம். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 77 முதல் பக்கம் 78, பாரா 2 வரை உள்ள தகவலின் அடிப்படையில் உற்சாகமூட்டும் பேச்சு.
20 நிமி: “பைபிள் படிப்பில் வசனங்களைத் திறம்படப் பயன்படுத்துங்கள்.” கேள்வி-பதில். பாரா 3-ஐக் கலந்தாலோசித்த பிறகு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் அதிகாரம் 1, பாரா 5-ல் உள்ள தகவலின் அடிப்படையில் பைபிள் படிப்பு நடத்துவது போன்ற ஒரு சுருக்கமான நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். பிரஸ்தாபியும் மாணாக்கரும் அந்தப் பாராவை ஏற்கெனவே வாசித்துவிட்டது போலவும், கேள்விக்குப் பதிலளித்துவிட்டது போலவும் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது, நீதிமொழிகள் 2:1-5-ஐ அவர்கள் வாசித்துக் கலந்தாலோசிக்கிறார்கள். சிந்தித்துக்கொண்டிருக்கிற குறிப்பை அந்த வசனம் எவ்வாறு ஆதரிக்கிறது என்பதை மாணாக்கர் விளக்கும் வகையில் பிரஸ்தாபி சிறுசிறு கேள்விகளை அவரிடம் கேட்கிறார்.