செப்டம்பர் 20-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 20-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 19-22
எண் 1: 2 இராஜாக்கள் 20:1-11
எண் 2: ஏன் சாந்தகுணமுள்ளவர்களாய் இருக்க வேண்டும்? (மத். 5:5)
எண் 3: ஒருவன் யெகோவாவுக்குப் பயப்படவும் வேண்டுமென்றால் அவரை எவ்வாறு நேசிக்க முடியும்? (rs பக். 198 பாரா 5–பக். 199 பாரா 1)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: கடந்த வருடத்தில் நாம் எப்படி ஊழியம் செய்தோம்? ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. கடந்த ஊழிய ஆண்டில் சபையார் எந்தளவு ஊழியத்தில் ஈடுபட்டார்கள் என்பதைச் சிந்திக்கும்போது அவர்கள் சாதித்த காரியங்களைப் பற்றி முக்கியமாய்ச் சொல்லுங்கள்; பொருத்தமான விஷயங்களுக்குப் பாராட்டைத் தெரிவியுங்கள். குறிப்பிடத்தக்க அனுபவங்களைப் பெற்ற ஒன்று அல்லது இரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். இந்த ஊழிய ஆண்டில் சபையாக எதில் முன்னேற்றம் செய்யலாம் என்பதைப் பற்றி ஓரிரு குறிப்புகளைச் சொல்லுங்கள்; அதோடு, அதற்கு உதவும் நடைமுறையான ஆலோசனைகளையும் அளியுங்கள்.
10 நிமி: “ஊழியக் கூட்டத்தை நடத்துவோருக்கு...” மூப்பர் கொடுக்கும் பேச்சு.
10 நிமி: பிரஸ்தாபியாக ஆவதற்கு உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 82-ல் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாய் இருக்கிற ஓர் இளம் பிள்ளையை உடைய முன்மாதிரியான ஒரு பெற்றோரைப் பேட்டி காணுங்கள். தன் பிள்ளை முன்னேறுவதற்கும் பிரஸ்தாபியாகத் தகுதி பெறுவதற்கும் அந்தத் தகப்பனோ தாயோ எவ்வாறு உதவினார் எனக் கேளுங்கள்.