பெருமகிழ்ச்சி தரும் வேலை
1. இன்று மக்களை ஆன்மீக ரீதியில் குணப்படுத்த என்ன வேலை செய்யப்பட்டு வருகிறது?
1 முதல் நூற்றாண்டில் மக்கள் உடல் ரீதியில் குணமாக்கப்பட்டதைக் கண்டவர்கள் ஆனந்தப் பரவசமடைந்தார்கள். (லூக். 5:24-26) இன்றோ... மக்கள் ஆன்மீக ரீதியில் குணமாக்கப்படுவதைப் பார்த்து நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். (வெளி. 22:1, 2, 17) பைபிளும் கடவுளுடைய சக்தியும் மக்களுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றிவருவதைப் பற்றிய அனுபவங்களை வாசிக்கையில் நாம் மெய்சிலிர்த்துப்போகிறோம்! அப்படியென்றால், இதுபோன்ற அனுபவங்களை நாமாகவே ருசிக்கும்போது... அளவில்லா ஆனந்தம் அடைவோம்!! அதற்கு, சீடராக்கும் வேலையில் நாம் ஈடுபட வேண்டும்; முன்னேறுகிற பைபிள் படிப்பை நடத்த வேண்டும்.
2. ஒருவருக்குச் சத்தியத்தைக் கற்றுக்கொடுக்கும்போது என்னென்ன காரணங்களால் சந்தோஷப்படுகிறோம்?
2 கடவுளுடைய பெயர் என்ன? அவர் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்? கடவுளுடைய அரசாங்கம் மக்களுக்கு என்னவெல்லாம் செய்யப்போகிறது? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை நம்முடைய பைபிள்-மாணவர்களுடன் கலந்தாலோசிக்கும்போதும் சரி, அதைக் கேட்டு அவர்களுடைய முகம் சந்தோஷத்தில் பிரகாசிப்பதைப் பார்க்கும்போதும் சரி, நாம் பூரித்துப்போகிறோம். (நீதி. 15:23; லூக். 24:32) நம்முடைய பைபிள்-மாணவர் முன்னேற்றம் செய்யச் செய்ய, யெகோவாவுடைய பெயரைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்; ஆடை அலங்காரத்தில் மாற்றங்கள் செய்யலாம்; கெட்ட பழக்கவழக்கங்களை விட்டொழிக்கலாம்; சாட்சிகொடுக்கவும் ஆரம்பிக்கலாம். காலப்போக்கில், கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து ஞானஸ்நானமும் பெறலாம்; அப்படிச் செய்யும்போது அவர் நம் சகோதரராகவும் சக வேலையாளாகவும் ஆகிவிடுகிறார். இந்த முன்னேற்றப் பாதையில் அவர் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் நாம் மனங்குளிர்ந்துபோகிறோம்.—1 தெ. 2:19, 20.
3. பைபிள் படிப்பை ஆரம்பிக்க நாம் என்னென்ன செய்ய வேண்டும்?
3 நீங்களும் ஈடுபட முடியுமா? பெருமகிழ்ச்சி தருகிற இந்த வேலையில் நீங்களும் ஈடுபட விரும்பினால்... ஒரு பைபிள் படிப்பை நடத்துகிற பாக்கியத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்; அதற்கிசைவாக உழையுங்கள். (1 யோ. 5:14) பொதுவாக மக்கள் இருக்கிற இடத்தில்... இருக்கிற நேரத்தில்... போய்ப் பிரசங்கியுங்கள். பொருத்தமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (பிர. 11:6) ஆர்வமுள்ளோரைக் கண்டுபிடித்து, சத்திய விதையை விதைத்தபின் அதற்கு நீர்பாய்ச்சுவதற்காக மறுபடியும் அவர்களைச் சந்தியுங்கள்.—1 கொ. 3:6-9.
4. பைபிள் படிப்பைப் பற்றி நாம் ஏன் அவசர உணர்வுடன் சொல்ல வேண்டும்?
4 நீதியின் மீது பசிதாகமுள்ள எண்ணற்ற மக்கள் இந்த உலகில் இன்னும் இருக்கிறார்கள். அவர்களோடு பைபிளைப் படிப்பதன் மூலம் அவர்களுடைய ஆன்மீகப் பசியை யார் தீர்ப்பார்கள்? (மத். 5:3, 6) அறுவடை முடிவுக்கு வருமுன் பிரசங்கித்துச் சீடராக்குகிற வேலையைக் கடவுள் நிறைவு செய்ய நம்மை நாமே மனமுவந்து அளிப்போமாக!—ஏசா. 6:8.