அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க ஊக்கமாய் முயற்சி எடுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் அனுசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளித்து ஒரு பைபிள் படிப்பைத் தொடங்க முயற்சி செய்யுங்கள். ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் பழுப்பேறிய, 192 பக்க புத்தகம் எதையாவது அளிக்கலாம்; அல்லது 1995-ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட புத்தகம் எதையாவது அளிக்கலாம்.