அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால், அதோடு அவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற வேறு ஏதாவது பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ கொடுக்கலாம். ஜூலை, ஆகஸ்ட்: உங்கள் மொழியிலுள்ள 32 பக்க சிற்றேடு எதையாவது அளியுங்கள். அது உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே அந்தப் புத்தகம் இருந்தால், அதோடு அவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற வேறு ஏதாவது பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ கொடுக்கலாம்.
◼ ஜூலை மாத ஆரம்பத்திலிருந்து எல்லா சபைகளும் மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இந்த விஷயத்தில் பிரஸ்தாபிகளுக்கு உதவவே “பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்ற கட்டுரைகள் காவற்கோபுரத்தில் வெளியாகின்றன. ஒவ்வொரு நம் ராஜ்ய ஊழியத் தாளின் கடைசி பக்கத்தில், அடுத்த மாதத்திற்கு பயன்படுத்த சில அணுகுமுறைகள் கொடுக்கப்படும். அதில், மாதத்தின் முதல் சனிக்கிழமையில் பைபிள் படிப்பை ஆரம்பிக்க உதவும் ஒரு அணுகுமுறையும் இருக்கும்.