செப்டம்பர் 19-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 17; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 8 பாரா. 10-17 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 135-141 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 137:1–138:8 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ரோமர் 14:7-9-ல் உள்ள பவுலின் வார்த்தைகள் நமக்கு ஏன் ஆறுதலளிக்கின்றன (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய அரசாங்கம் பூமியைப் பரதீஸாக்கும்—rs பக். 231 பாரா 6-பக். 232 பாரா 1 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: கடந்த வருடத்தில் நாம் எப்படி ஊழியம் செய்தோம்? ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. கடந்த ஊழிய ஆண்டில் சபையார் எந்தளவு ஊழியத்தில் ஈடுபட்டார்கள் என்பதைச் சிந்திக்கும்போது அவர்கள் சாதித்த காரியங்களைப் பற்றி முக்கியமாய்ச் சொல்லுங்கள். பொருத்தமான விஷயங்களுக்குப் பாராட்டைத் தெரிவியுங்கள். குறிப்பிடத்தக்க அனுபவங்களைப் பெற்ற ஒன்று அல்லது இரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். இந்த ஊழிய ஆண்டில் சபையாக எதில் முன்னேற்றம் செய்யலாம் என்பதைப் பற்றி ஓரிரு குறிப்புகள் சொல்லுங்கள். அதோடு, அதற்கு உதவும் நடைமுறையான ஆலோசனைகளையும் அளியுங்கள்.
10 நிமி: உங்களால் விளக்க முடியுமா? ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 198, கேள்விகள் 12-13-ன் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.
10 நிமி: “யெகோவா நமக்குப் பயிற்சி அளிக்கிறார்” கேள்வி-பதில்.
பாட்டு 20; ஜெபம்