ஜூலை 16-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 33; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 4 பாரா. 5-12 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 15-17 (10 நிமி.)
எண் 1: எசேக்கியேல் 16:14-27 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யோவான் 18:37-ல் சத்தியம் என்று இயேசு குறிப்பிட்டதன் அர்த்தம் என்ன? (5 நிமி.)
எண் 3: பூசையை (மாஸ்) இயேசு ஆரம்பித்து வைத்தாரா?—நியாயங்காட்டி பக். 264 பாரா 1–பக். 265 பாரா 5 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: ஓர் ஊழியனாய் முன்னேற தேவராஜ்ய ஊழியப் பள்ளியைப் பயன்படுத்துங்கள். ஊழியப் பள்ளி புத்தகம் பக்கம் 6 பாரா 1-லிருந்து பாரா 8 வரையுள்ள தகவலின் அடிப்படையில் ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. ஊழியத்தில் முன்னேற ஊழியப் பள்ளி எப்படி உதவுகிறது என்று ஓரிரண்டு பிரஸ்தாபிகளிடம் பேட்டி காணுங்கள்.
20 நிமி: “கடவுள் சொல்வதைக் கேட்க மக்களுக்கு உதவுங்கள்.” கேள்வி-பதில். பாரா 5-ஐச் சிந்திக்கையில் சிற்றேடுகளில் ஒன்றை எப்படி அளிப்பது என்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். பாரா 6-ஐக் கலந்தாலோசித்த பிறகு மூன்று நிமிட நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். அதில், கடவுள் சொல்வதைக் கேளுங்கள் சிற்றேட்டின் பக்கம் 4-ல் உள்ள படத்தைப் பயன்படுத்தி ஒரு பிரஸ்தாபி பைபிள் படிப்பு நடத்துவார்.
பாட்டு 120; ஜெபம்