அக்டோபர் 1-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 39; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 8 பாரா. 1-7, பெட்டிகள் பக். 61-62 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: தானியேல் 4-6 (10 நிமி.)
எண் 1: தானியேல் 4:18-28 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: உண்மைக் கிறிஸ்தவர்கள் ஆவியுலகத் தொடர்பை ஏன் அறவே தவிர்க்கிறார்கள்? (5 நிமி.)
எண் 3: கடந்த காலங்களில் கடவுள் தம் ஊழியர்களுக்கு எவ்வாறு கட்டளைகளைத் தெரிவித்தார்?—நியாயங்காட்டி பக். 281 பாரா. 1-2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: கடந்த வருடத்தில் நாம் எப்படி ஊழியம் செய்தோம்? ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. கடந்த ஊழிய ஆண்டில் சபையார் எந்தளவு ஊழியத்தில் ஈடுபட்டார்கள் என்பதைச் சொல்லும்போது அவர்கள் சாதித்த காரியங்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள். பொருத்தமான விஷயங்களுக்குப் பாராட்டைத் தெரிவியுங்கள். குறிப்பிடத்தக்க அனுபவங்களைப் பெற்ற ஒன்று அல்லது இரண்டு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். இந்த ஊழிய ஆண்டில் சபையாக எதில் முன்னேற்றம் செய்யலாம் என்பதைப் பற்றி ஓரிரு குறிப்புகள் சொல்லுங்கள். அதோடு, அதற்கு உதவும் நடைமுறையான ஆலோசனைகளையும் அளியுங்கள்.
15 நிமி: அக்டோபர் மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. அக்டோபர்-டிசம்பர் காவற்கோபுரம் மக்களை எப்படிக் கவருகிறது என்பதை 30-லிருந்து 60 வினாடிகளுக்கு விளக்குங்கள். பிறகு அட்டைப்பட கட்டுரைகளை எடுத்துக்கொண்டு, என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள். பத்திரிகையை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 85; ஜெபம்