ஜனவரி 7-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 7, 2013-ல் துவங்கும் வாரம்
பாட்டு 53; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 13 பாரா. 1-7, பெட்டிகள் பக். 100, 103 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: மத்தேயு 1-6 (10 நிமி.)
எண் 1: மத்தேயு 5:21-32 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: எது ஒருவரின் ஜெபங்களைக் கடவுள் அங்கீகரிக்கத் தகாததாக்கலாம்?—நியாயங்காட்டி பக். 293 பாரா 4-பக். 294 பாரா 2 (5 நிமி.)
எண் 3: யெகோவா நம்முடைய ‘பங்காக’ இருப்பதன் அர்த்தம் என்ன?—எண். 18:20 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஜனவரியில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. ஜனவரி-மார்ச் காவற்கோபுரம் மக்களை எப்படிக் கவரும் என்பதை 30-60 வினாடிகளுக்குள் விளக்குங்கள். பிறகு, அட்டைப்பட கட்டுரைகளை எடுத்துக்கொண்டு, வீட்டுக்காரரிடம் என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசித்துக் காட்டலாம் என்று சபையாரைக் கேளுங்கள். பத்திரிகையை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: சுத்தமான ராஜ்யமன்றம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறது. மூப்பர் கொடுக்கும் பேச்சு. யெகோவா பரிசுத்தமான கடவுள். எனவே, அவரை வழிபடும் மக்கள் சுத்தமாக இருக்க வேண்டும். (யாத். 30:17-21; 40:30-32) நம் வழிபாட்டு இடத்தைச் சுத்தமாக வைக்கும்போது நாம் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறோம். (1 பே. 2:12) சுத்தமான ராஜ்ய மன்றம் அந்தப் பகுதியில் நல்ல சாட்சியாக இருந்ததற்கு உள்ளூர் அனுபவங்களையோ பத்திரிகையில் வெளிவந்த அனுபவங்களையோ சொல்லுங்கள். ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்து பராமரிக்கும் வேலையை மேற்பார்வை செய்கிற சகோதரரிடம் அதற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பற்றிப் பேட்டி காணுங்கள். ராஜ்ய மன்றத்தை நன்கு பராமரிப்பதில் பங்குகொள்ளும்படி எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 127; ஜெபம்