மே 20-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 8; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 18 பாரா. 19-24 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோவான் 8-11 (10 நிமி.)
எண் 1: யோவான் 8:12-30 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: போலிப் போதகர்களிடமிருந்து நம்மை பாதுகாக்க என்ன படிகளை நாம் எடுக்கலாம்?—ரோ. 16:17; 2 யோ. 9-11 (5 நிமி.)
எண் 3: கடவுளுக்குக் கீழ்ப்படியும் சந்ததியார் யாவரும் என்றென்றும் வாழலாமென கடவுள் ஏன் வெறுமென கட்டளையிடவில்லை?—நியாயங்காட்டி பக். 307 பாரா 3-பக். 308 பாரா 1 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஊழியத்தை விரிவாக்க வழிகள்—பகுதி 3. ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 116 பாரா 1 முதல் பக்கம் 117 பாரா 1 வரையுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஒரு பிரஸ்தாபியைப் பேட்டி காணுங்கள்.
10 நிமி: உரையாடலைத் துவக்க துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள். செப்டம்பர் 2000 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-ல் உள்ள கட்டுரையின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஊழியத்தில் வெவ்வேறு துண்டுப்பிரதிகளை ஒன்றாகச் சேர்த்து அளிக்கும்படி பிரஸ்தாபிகளை ஊக்கப்படுத்துங்கள். துண்டுப்பிரதிகளுள்ள ஒரு ‘ஃபோல்டரை’ எப்போதும் கைவசம் வைத்துக்கொண்டால், கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சாட்சி கொடுக்கலாம். (நம் ராஜ்ய ஊழியம் 8/10 பக்கம் 5) பைபிள் மாணாக்கர்கள் படிப்பதற்காகவும் அவர்கள் மற்றவர்களுக்குச் சாட்சி கொடுக்கும்போது பயன்படுத்துவதற்காகவும் வெவ்வேறு துண்டுப்பிரதிகளை அவர்களிடம் கொடுக்கலாம்.
10 நிமி: “இது யாருக்கு ஆர்வமூட்டுவதாக இருக்கும்?” கேள்வி-பதில். நம் பத்திரிகைகளில் வரும் ஏதாவது கட்டுரை நம் பிராந்தியத்திலுள்ள வியாபார அல்லது உள்ளூர் அரசு நிறுவனங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கலாம். அப்படிப்பட்ட நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடும்படி சபையாரைக் கேளுங்கள்.
பாட்டு 92; ஜெபம்