செப்டம்பர் 16-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 131; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 24 பாரா. 10-15 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 கொரிந்தியர் 1-7 (10 நிமி.)
எண் 1: 2 கொரிந்தியர் 1:15–2:11 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: மறுபிறப்புக்கும் பைபிள் முன்வைக்கும் நம்பிக்கைக்கும் எவ்வளவு வேறுபாடு உண்டு?—நியாயங்காட்டி பக். 320 பாரா. 3-4 (5 நிமி.)
எண் 3: யெகோவாவின் பெயரில் அடைக்கலம் புக ஒருவர் என்ன செய்ய வேண்டும்?—செப். 3:12, NW. (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: இளைஞர்களே—வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன? — பாகம் 2. வாழ்க்கையின் இலட்சியம் துண்டுப்பிரதியில் பாரா 10 முதல் முடிவுவரை இருக்கும் தகவலின் அடிப்படையிலான பேச்சு. இளம் வயதிலிருந்தே முழுநேர சேவை செய்துவருகிற ஒருவரைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். ‘ஏன் இந்தத் தீர்மானத்தை எடுத்தீர்கள்? இதனால் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறீர்கள்?’ என்று அவரிடம் கேளுங்கள்.
10 நிமி: நீங்கள் தனியாக ஊழியம் செய்கையில்... கலந்தாலோசிப்பு. (1) தனியாக ஊழியம் செய்யும்போது நம் சந்தோஷத்தை இழக்காதிருக்க எது உதவும்? (2) தனியாக மறுசந்திப்புகள் செய்யும்போது எந்தெந்த விஷயங்களில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? (3) நாம் ஊழியத்திற்குப் போக நினைக்கும் நாட்களில் வெளி ஊழிய ஏற்பாடு இல்லையென்றால், நம்மோடு சேர்ந்துகொள்ளும்படி மற்ற சகோதர சகோதரிகளை எவ்வாறு உற்சாகப்படுத்தலாம்? (4) பாதுகாப்பான இடத்திலும் நேரத்திலும் தனியாக ஊழியம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
10 நிமி: “இளைஞர்களே உங்கள் ஆன்மீக இலக்குகள் என்ன?” கேள்வி-பதில். பாரா 3-ஐ கலந்தாலோசித்த பின், இளம் வயதிலிருந்தே முழுநேர சேவை செய்யும் ஒரு சகோதரரையோ சகோதரியையோ பேட்டி காணுங்கள்.
பாட்டு 107; ஜெபம்