அக்டோபர் 7-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 83; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
சாட்சி கொடுங்கள்’ அதி. 25 பாரா. 8-13, ‘பெட்டி பக். 201 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எபேசியர் 1-6 (10 நிமி.)
எண் 1: எபேசியர் 4:1-16 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: முதலாவது கடவுளுடைய நீதிநெறிகளை நாடிக்கொண்டே இருப்பது என்றால் என்ன?—மத். 6:33 (5 நிமி.)
எண் 3: எல்லா மதங்களிலும் நல்லது இருக்கிறதென்பது உண்மையா?—நியாயங்காட்டி பக். 323 பாரா 3–பக். 324 பாரா 1 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அக்டோபரில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. அக்டோபர்-டிசம்பர் காவற்கோபுரம் மக்களை எப்படிக் கவரும் என்பதை 30-60 வினாடிகளுக்கு விளக்குங்கள். அட்டைப்பட கட்டுரையைப் பற்றி ஆர்வமூட்டும் என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள். பத்திரிகைகளை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
10 நிமி: உங்களிடையே கடினமாக உழைப்பவர்கள். (1 தெ. 5:12, 13) இரண்டு மூப்பர்களைப் பேட்டி காணுங்கள். என்னென்ன நியமிப்புகளை அவர்கள் கையாளுகிறார்கள்? அவற்றோடு எப்படித் தங்கள் வேலையையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறார்கள்? ஊழியத்திற்கு எப்படி முதலிடம் கொடுக்கிறார்கள்? குடும்பத்தார் எப்படி அவர்களுக்கு ஒத்துழைப்புத் தருகிறார்கள்?
பாட்டு 123; ஜெபம்