அக்டோபர் 28-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 23; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 26 பாரா. 9-15, பெட்டி பக். 208 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 தீமோத்தேயு 1–2 தீமோத்தேயு 4 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
15 நிமி: நற்செய்தியின் நடைமுறைப் பயனை வலியுறுத்துங்கள். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கம் 159-லுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளித்து, உங்கள் பிராந்தியத்தில் மக்களுக்கு ஆர்வமூட்டும் விஷயத்தின் பேரில் பேசுவது போல ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: நீங்கள் காலந்தவறாதவரா? கலந்தாலோசிப்பு. (1) காலந்தவறாமல் இருப்பதில் யெகோவா எப்படிச் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்? (ஆப. 2:3) (2) கூட்டங்களுக்கும் ஊழியத்திற்கும் நேரத்தோடு வருவதன் மூலம் நாம் எப்படி யெகோவாவுக்கு மரியாதையையும் மற்றவர்கள் மீது கரிசனையையும் காட்டுகிறோம்? (3) வெளி ஊழியக் கூட்டத்திற்குத் தாமதமாக வருவதால் ஊழிய தொகுதியில் உள்ளவர்களும் நடத்துனரும் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள்? (4) ஆர்வம் காட்டிய நபரையோ அல்லது பைபிள் மாணாக்கரையோ குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பதாக சொல்லியிருந்தால், சொன்ன நேரத்திற்கு போவது ஏன் முக்கியம்? (மத். 5:37) (5) சபை கூட்டங்களுக்கும் ஊழியம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் குறித்த நேரத்தில் செல்வதற்கு என்ன நடைமுறையான ஆலோசனை நமக்கு உதவும்?
பாட்டு 69; ஜெபம்