ஜூலை 7-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 7-ல் துவங்கும் வாரம்
பாட்டு 119; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
சித்தம் பாடங்கள் 5-7 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 17–20 (10 நிமி.)
எண் 1: லேவியராகமம் 19:19-32 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் அல்லது “பரிசுத்தவான்கள்” பாவமே செய்யாதவர்கள் என்று ஏன் சொல்ல முடியாது?—நியாயங்காட்டி பக். 355 பாரா 3 (5 நிமி.)
எண் 3: தங்கள் வீட்டை ஏன் இழந்தார்கள்—பைபிள் கதைகள் கதை 4 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஜூலை மாதத்தில் பத்திரிகைகளை அளித்திடுங்கள். கலந்தாலோசிப்பு. இதே பக்கத்திலுள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி ஜூலை-செப்டம்பர் காவற்கோபுரத்தை அளிப்பதுபோல் முதலில் நடித்துக்காட்டுங்கள். பிறகு அந்த அணுகுமுறையை ஆரம்பத்திலிருந்து முடிவுவரை கலந்தாலோசியுங்கள். கடைசியாக, நம் பத்திரிகைகளை நன்றாகப் படிக்கவும் அவற்றை ஊழியத்தில் உற்சாகமாக பயன்படுத்தவும் சொல்லுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: நாம் என்ன சாதித்தோம்? சபை செயலர் கலந்தாலோசிப்பார். நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் சபையாக என்ன சாதித்தோம் என்பதைச் சொல்லுங்கள். அதற்காகச் சபையாரைப் பாராட்டுங்கள். நினைவுநாள் அழைப்பிதழ்களைக் கொடுத்தபோது அல்லது துணை பயனியர் செய்தபோது கிடைத்த நல்ல அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள். ஆர்வம் காட்டிய ஒவ்வொருவரையும் தவறாமல் சென்று சந்திக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 123; ஜெபம்