ஜூலை 14-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஜூலை 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 20; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
சித்தம் பாடங்கள் 8-10 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 21-24 (10 நிமி.)
எண் 1: லேவியராகமம் 23:1-14 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: முழு மனிதகுலமும் காப்பாற்றப்படும் என்று பைபிள் சொல்வதில்லை—நியாயங்காட்டி பக். 357 பாரா 1 (5 நிமி.)
எண் 3: கஷ்டமான வாழ்க்கை தொடங்குகிறது—பைபிள் கதைகள் கதை 5 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: விசேஷ விநியோகிப்பிற்கு நீங்கள் தயாரா? வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்? என்ற துண்டுப்பிரதி யாரிடமாவது இல்லையென்றால் அவர்களுக்கு ஒன்றைக் கொடுங்கள். பக்கம் 8-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி மூன்று நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். முதல் நடிப்பில், இந்தத் துண்டுப்பிரதியை எப்படிச் சாதாரணமாகக் கொடுப்பது என்றும் இரண்டாவது நடிப்பில், ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு எப்படிக் கொடுக்கலாம் என்றும் மூன்றாவது நடிப்பில், இன்டர்நெட்டைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்களா? (T-35) துண்டுப்பிரதியை அல்லது வேறொரு பொருத்தமான துண்டுப்பிரதியை எப்படிக் கொடுக்கலாம் என்றும் நடித்துக் காட்டுங்கள். விநியோகிப்பில் முழுமையாக ஈடுபட எல்லோரையும் உற்சாகப்படுத்துங்கள்.
5 நிமி: தினந்தோறும் வேதவசனங்களை ஆராய்தல் என்ற சிறு புத்தகத்திலிருந்து பயனடையுங்கள். கலந்தாலோசிப்பு. ஒவ்வொரு நாளும் தினவசனத்தை எந்த சமயத்தில் படிக்கிறார்கள், அது எப்படி அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று சபையாரைக் கேளுங்கள்.
15 நிமி: “ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் நோக்கத்தோடு பேச்சை ஆரம்பியுங்கள்.” கலந்தாலோசிப்பு. ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 107; ஜெபம்