ஜூலை 28-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
ஜூலை 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 123; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
சித்தம் பாடங்கள் 14-16 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 1-3 (10 நிமி.)
எண் 1: எண்ணாகமம் 3:21-38 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ‘எல்லா விதமான ஆட்களும்’ இரட்சிக்கப்படுவார்கள்—நியாயங்காட்டி பக். 357 பாரா 3 (5 நிமி.)
எண் 3: தைரியமுள்ள ஒருவர்—பைபிள் கதைகள் கதை 7 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஆகஸ்ட் மாதத்தில் துணை பயனியர் ஊழியம் செய்ய முடியுமா? பேச்சு. இந்த மாதத்தில், நிறைய வேலைகளின் மத்தியிலோ உடல்நலக் குறைபாடுகளின் மத்தியிலோ துணைப் பயனியர் ஊழியம் செய்ய நினைக்கும் இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள். துணை பயனியர் ஊழியம் செய்ய என்ன மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள் என்று கேளுங்கள். அந்த மாதத்தில் செய்யப்பட்டிருக்கும் வெளி ஊழியக் கூட்ட ஏற்பாடுகளைப் பற்றி ஊழியக் கண்காணி சொல்வார்.
10 நிமி: சபை செயலரை பேட்டி எடுங்கள். செயலராக நீங்கள் என்னென்ன வேலைகளைச் செய்கிறீர்கள்? சபையின் ஊழிய அறிக்கையைத் துல்லியமாகப் பதிவு செய்ய, அதைச் சரியான நேரத்திற்குள் கிளை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க, தொகுதி கண்காணிகளும் பிரஸ்தாபிகள் எப்படி உதவலாம்? நம் எல்லோருக்கும் உற்சாகத்தை அளிக்க, துல்லியமான ஊழிய அறிக்கை எப்படி மூப்பர்களுக்கு, வட்டார கண்காணிகளுக்கு, கிளை அலுவலகத்திற்கு உதவுகிறது?
10 நிமி: “தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—செப்பனியா.” கேள்வி-பதில்.
பாட்டு 70; ஜெபம்