ஜனவரி 19-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜனவரி 19-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 1; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 30, 31 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நியாயாதிபதிகள் 1-4 (8 நிமி.)
எண் 1: நியாயாதிபதிகள் 3:1-11 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளை பற்றி நாம் எப்படி தெரிந்துகொள்ளலாம்?—அறிமுகம் பக். 4 பாரா. 1-4 (5 நிமி.)
எண் 3: அகித்தோப்பேல்—தலைப்பு: நம்பிக்கை துரோகிகளின் திட்டம் பலிக்காது—2 சா. 15:12, 31-34; 16:15, 21, 23; 17:1-14, 23 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘மனத்தாழ்மையோடு எஜமானருக்கு ஊழியம் செய்யுங்கள்.’—அப். 20:19.
15 நிமி: பைபிளுக்கு ஆளையே மாற்றும் சக்தி இருக்கிறது. நவம்பர் 15, 2003 காவற்கோபுரத்தில் பக்கம் 11, பாராக்கள் 13-17-லிருந்து பேச்சு கொடுங்கள். பைபிளை பற்றி கற்றுக்கொண்டு, வாழ்க்கையில் மாற்றம் செய்தவர்களுடைய அனுபவங்களை சொல்லுங்கள். ஊழியத்தில், மறுசந்திப்பில், பைபிள் படிப்பில் பைபிளை சரியாக பயன்படுத்தும்படி சபையாரிடம் சொல்லுங்கள்.
15 நிமி: “ஊழியம் செய்வதில் தொடர்ந்து முன்னேறுங்கள்.” கேள்வி-பதில்.
பாட்டு 20; ஜெபம்