இயேசுவை பற்றிய உண்மைகளை மக்களிடம் ஆர்வமாக சொல்லுங்கள்
இயேசுவை பற்றிய உண்மைகளை மக்களிடம் எப்படி சொல்வது என்று நாம் தெரிந்துகொண்டால்தான் அதை ஆர்வமாக சொல்ல முடியும். நம்முடைய விசுவாசத்துக்கு இயேசுதான் “மூலைக்கல்லாக” இருக்கிறார். (எபே. 2:20) அவர் நமக்காக உயிரை கொடுக்கவில்லை என்றால் முடிவில்லா வாழ்க்கையை நாம் அனுபவிக்க முடியாது. (அப். 4:12) யெகோவா தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற, இயேசுவை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்று மக்கள் சரியாக புரிந்துகொள்வது ரொம்ப முக்கியம். ஏனென்றால், இயேசுவை பற்றி பைபிளில் இல்லாததை எல்லாம் மக்கள் நம்புகிறார்கள். அப்படி நம்புகிறவர்களுக்கு முடிவில்லா வாழ்க்கை கிடைக்காமல் போய்விடலாம். அதனால், இயேசு யார், அவருக்கும் கடவுளுக்கும் என்ன உறவு, கடவுள் அவரை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார் என்று மக்கள் தெரிந்துகொள்ள நாம் உதவ வேண்டும். நினைவுநாள் சமயத்தில் இயேசுவை பற்றிய உண்மைகளை மக்களிடம் ஆர்வமாக சொல்வீர்களா?