ஏப்ரல் 20-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஏப்ரல் 20-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 86; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 44 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 23-25 (8 நிமி.)
எண் 1: 1 சாமுவேல் 23:13-23 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: நம்ம எதிர்காலம் எப்படி இருக்கும்னு பைபிள் சொல்லுது?—அறிமுகம் பக். 16 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: பாருக்—தலைப்பு: சுயநலத்துக்காக யெகோவாவை வணங்காதீங்க—எரே 32:9-16; 36:1-32; 43:4-7; 45:1-5 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்துக்கான வசனம்: ஞானமுள்ளவர்களாக நடந்துகொள்ளுங்கள், “நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.”—எபே. 5:15, 16.
15 நிமி: “வீல் ஸ்டாண்ட் ஊழியத்தை செய்வது எப்படி?” கலந்தாலோசிப்பு. இதை நடித்து காட்டுங்கள்: இரண்டு பிரஸ்தாபிகள் வீல் ஸ்டாண்ட் அல்லது மேஜை பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பிரஸ்தாபி, வழியில் போகிறவரை பார்த்து புன்னகை செய்வதோடு நிறுத்திக்கொள்கிறார். இன்னொரு பிரஸ்தாபி, வழியில் போகிற இன்னொருவரை பார்த்து புன்னகை செய்வதோடு, அவர் பக்கத்தில் வந்தவுடன் அவரிடம் ஒரு கேள்வி கேட்டு பேச ஆரம்பிக்கிறார். ஒருவேளை, நாம் வீல் ஸ்டாண்ட் ஊழியத்தை செய்யவில்லை என்றாலும் இரண்டாவது பிரஸ்தாபி நடந்துகொண்டதுபோல நாம் எப்படி நடந்துகொள்ளலாம்?
15 நிமி: நினைவுநாள் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மறுபடியும் போய் பாருங்கள். பேச்சு. நினைவுநாள் நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்பதையும் அதில் கிடைத்த அனுபவங்களையும் சொல்லுங்கள். அவர்களை மறுபடியும் போய் பார்த்து பைபிள் படிப்பு ஆரம்பிக்க எல்லாரையும் முயற்சி செய்ய சொல்லுங்கள். நினைவுநாள் நிகழ்ச்சிக்கு மட்டும் வந்துவிட்டு கூட்டங்களுக்கு வராமல் இருப்பவர்களுக்கு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து படிப்பு எடுக்க முயற்சி எடுக்க சொல்லுங்கள். இதை எப்படி செய்யலாம் என்று நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 75; ஜெபம்