மே 8-14
எரேமியா 35–38
பாட்டு 33; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“எபெத்மெலேக்—தைரியமாகவும் அன்பாகவும் நடந்துகொண்டார்”: (10 நிமி.)
எரே 38:4-6—எரேமியாவைக் கொல்வதற்காக எதிரிகள் அவரைச் சேறுள்ள ஒரு கிணற்றில் போட்டார்கள். மனித பயத்தினால் சிதேக்கியா அதைத் தடுக்கவில்லை (it-2-E பக். 1228 பாரா 3)
எரே 38:7-10—எரேமியாவைக் காப்பாற்ற வேண்டும் என்ற மன உறுதியோடு எபெத்மெலேக் தைரியமாகச் செயல்பட்டார் (w12-E 5/1 பக். 31 பாரா. 2-3)
எரே 38:11-13—எபெத்மெலேக் அன்பாக நடந்துகொண்டார் (w12-E 5/1 பக். 31 பாரா 4)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
எரே 35:19—ரேகாபியர்களை யெகோவா ஏன் ஆசீர்வதித்தார், நாம் எப்படி அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றலாம்? (it-2-E பக். 759)
எரே 37:21—எரேமியாவை யெகோவா எப்படிக் கவனித்துக்கொண்டார், நமக்கு கஷ்டங்கள் வரும்போது எதைப் பற்றி நம்பிக்கையாக இருக்கலாம்? (w98 1/15 பக். 18 பாரா. 16-17; w95 8/1 பக். 5 பாரா. 5-6)
எரேமியா 35 முதல் 38 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களில் இருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) எரே 36:27-37:2
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) T-32—மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) T-32—ஊழியத்தில் சந்தித்த நபரை மறுசந்திப்பு செய்யுங்கள். அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) jl பாடம் 26
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“நம்முடைய ராஜ்ய மன்றங்களை நன்றாகப் பராமரிக்க வேண்டும்”: (15 நிமி.) மூப்பர் நடத்தும் கேள்வி-பதில் பகுதி. நம்முடைய ராஜ்ய மன்றங்களை நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்ற வீடியோவைக் காட்டுங்கள். கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளையும் கேளுங்கள். பிறகு, உங்கள் சபையின் ராஜ்ய மன்ற செயற்குழு பிரதிநிதியை சுருக்கமாகப் பேட்டி எடுங்கள். (உங்கள் சபைக்கு ஒரு பிரதிநிதி இல்லையென்றால் மூப்பர் குழு ஒருங்கிணைப்பாளரைப் பேட்டி எடுங்கள். ராஜ்ய மன்றத்தை உங்கள் சபை மட்டும் பயன்படுத்தினால், ராஜ்ய மன்ற பராமரிப்பு ஒருங்கிணைப்பாளரைப் பேட்டி எடுங்கள்.) ராஜ்ய மன்றத்தைப் பராமரிக்க சமீபத்தில் என்னென்ன வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன? எதிர்காலத்தில் என்ன செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது? ரிப்பேர் வேலைகள் செய்வதில் ஒருவருக்கு திறமை இருந்தால் சபை பராமரிப்பு வேலையில் உதவ அவர் என்ன செய்ய வேண்டும்? அல்லது, அப்படித் திறமை இருக்கும் ஒருவரோடு சேர்ந்து வேலை செய்வதன் மூலம் அந்த வேலையை ஒருவர் கற்றுக்கொள்ள விரும்பினால் அவர் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய சூழ்நிலைமை எப்படி இருந்தாலும் சரி, நாம் எல்லாரும் ராஜ்ய மன்றத்தை பராமரிப்பதில் எப்படி உதவலாம்?
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 2 பாரா. 1-11
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 83; ஜெபம்