வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜனவரி 3-9
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நியாயாதிபதிகள் 15-16
“நம்பிக்கைதுரோகம்—எவ்வளவு கேவலமானது!”
நம்பிக்கைதுரோகம்—கடைசி நாட்களுக்கான ஓர் அடையாளம்!
4 முதலாவதாக, வஞ்சக வலை விரித்த தெலீலாளைப் பற்றிப் பார்ப்போம். சிம்சோன் அவள்மீது கொள்ளை அன்பு வைத்திருந்தார். அதேசமயம், கடவுளுடைய மக்கள் சார்பாக பெலிஸ்தருக்கு எதிராகப் போரிட தீர்மானமாய் இருந்தார். சிம்சோன்மீது தெலீலாள் வைத்திருந்தது உண்மையான காதல் அல்ல என்பதை பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகள் ஒருவேளை அறிந்திருக்கலாம். அதனால்... தெலீலாள் மூலம் சிம்சோனின் பலத்திற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொண்டு அவரைத் தீர்த்துக்கட்ட நினைத்தார்கள். அதற்கு லஞ்சமாக தெலீலாளுக்கு ஒரு பெரிய தொகையைக் கொடுக்க முன்வந்தார்கள். பேராசைப்பிடித்த அந்தப் பாதகியும் அதற்குச் சம்மதித்தாள். சிம்சோனிடமிருந்து ‘அந்த’ ரகசியத்தைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்து மூன்று முறை தோற்றுப்போனாள். இருந்தாலும், “அவள் தன் வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் அவரை நச்சரித்துத் தொந்தரவு செய்தாள்.” பாவம் சிம்சோன் “உயிர் போகுமளவிற்கு வருத்தமுற்றார்.” கடைசியில் உண்மையைச் சொல்லிவிட்டார். தான் பிறந்ததுமுதல் தன் தலைமயிர் சிரைக்கப்படவில்லை என்றும், சிரைக்கப்பட்டால் தன் பலம் போய்விடும் என்றும் சொன்னார். அது போதுமே தெலீலாளுக்கு. சிம்சோன் தன் மடியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ஆளை வரவழைத்து அவர் தலைமுடியைச் சிரைக்கச் செய்தாள். பின்பு, எதிரிகள் அவரை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும் என்று அவர்கள் கைகளில் ஒப்படைத்தாள். (நியா. 16:4, 5, 15-21; பொது மொழிபெயர்ப்பு) எவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாள்!! இந்த நெஞ்சழுத்தக்காரி தன்னை உயிராய் நேசித்த ஒருவரையே காட்டிக்கொடுத்ததற்குக் காரணம்—பேராசை.
நியாயாதிபதிகள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
14:16, 17; 16:16. சதா அழுது, நச்சரித்து ஒருவரைப் போட்டு தொல்லைப்படுத்துவது அவரோடுள்ள உறவுக்கு ஊறு விளைவிக்கலாம்.—நீதிமொழிகள் 19:13; 21:19.
w12 4/15 பக். 11-12 பாரா. 15-16
நம்பிக்கைதுரோகம்—கடைசி நாட்களுக்கான ஓர் அடையாளம்!
15 திருமணமானவர்கள் எப்படித் தங்கள் துணைக்கு என்றும் உண்மையாய் இருக்கலாம்? “உன் இளவயதின் மனைவியோடே [அல்லது கணவனோடே] மகிழ்ந்திரு” என்றும் ‘நீ நேசிக்கிற மனைவியோடே [அல்லது கணவனோடே] இந்த ஜீவவாழ்வை அநுபவி’ என்றும் கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதி. 5:18; பிர. 9:9) தம்பதிகளுக்கு வயது ஆக ஆக, உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் தங்கள் உறவை வலுப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் அவர்கள் செய்ய வேண்டும். அப்படியென்றால்? அவர்கள் ஒருவருக்கொருவர் அக்கறையாய் இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் நேரம் செலவிட வேண்டும், ஒருவருக்கொருவர் நாளுக்கு நாள் அன்பில் பெருக வேண்டும். தம்பதிகள் தங்கள் பரஸ்பர பந்தத்தையும் யெகோவாவுடன் உள்ள பந்தத்தையும் கட்டிக்காக்க கடினமாய் உழைக்க வேண்டும். அதற்காக... அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பைபிளைப் படிக்க வேண்டும், ஒன்றாகச் சேர்ந்து ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும், யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்.
என்றும் யெகோவாவுக்கு உண்மையாய் இருங்கள்
16 சபையில் படுபயங்கரமான பாவங்களைச் செய்தவர்கள், ‘விசுவாசத்தில் ஆரோக்கியமானவர்களாக’ ஆவதற்கு ‘கடுமையாகக் கடிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.’ (தீத். 1:13) சில சந்தர்ப்பங்களில், தவறு செய்த சிலர் சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கண்டிப்பினால் ‘பயிற்றுவிக்கப்பட்டவர்கள்’ மீண்டும் கடவுளுடன் நல்லுறவுக்குள் வர முடிந்திருக்கிறது. (எபி. 12:11) நம்முடைய உறவினர் அல்லது நெருங்கிய நண்பர் சபைநீக்கம் செய்யப்பட்டிருந்தால் என்ன செய்வோம்? அவருக்கு உண்மையாய் இருப்போமா அல்லது யெகோவாவுக்கு உண்மையாய் இருப்போமா? நாம் யெகோவாவுக்குத்தான் உண்மையாய் இருக்க வேண்டும். சபைநீக்கம் செய்யப்பட்ட எந்த நபரோடும் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் சொல்லியிருக்கிறார். அந்தக் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிகிறோமா என்றும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.—1 கொரிந்தியர் 5:11-13-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவின் பலத்தில் சிம்சோன் வெற்றி சிறக்கிறார்!
பெலிஸ்தருக்கு எதிராகப் போர் செய்கையில் சிம்சோனின் மனம் ஒரே காரியத்தில் குறியாக இருந்தது. கடவுளுடைய விரோதிகளுடன் போரிட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் காசாவில் இருந்த ஒரு வேசியின் வீட்டில் அவர் தங்கினார். விரோதிகளின் பட்டணத்தில் இரவைக் கழிக்க அவருக்கு ஓர் இடம் தேவைப்பட்டது; அது அந்த வேசியின் வீட்டில் கிடைத்தது. ஒழுக்கநெறி தவறும் எண்ணம் அவருடைய மனதில் துளியும் இல்லாதிருந்தது. நடுராத்திரியில் அவர் எழுந்து அவளுடைய வீட்டை விட்டு புறப்பட்டு போய், பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பெயர்த்து எடுத்துக்கொண்டார்; சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த எபிரோனுக்கு அருகேயிருந்த மலை உச்சிக்கு அவற்றை சுமந்து சென்றார். இதைக் கடவுள் அங்கீகரித்தார், தேவையான பலத்தையும் தந்தருளினார்.—நியாயாதிபதிகள் 16:1-3.
ஜனவரி 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நியாயாதிபதிகள் 17-19
“கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் போனால் பிரச்சினைகள்தான் மிஞ்சும்”
it-2-E பக். 390-391
மீகா
1. இவன் எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்தவன். தன்னுடைய அம்மாவிடமிருந்து திருடிய பணத்தைத் திருப்பி அவளிடமே கொடுத்தான். அவனுடைய அம்மா, அந்தப் பணத்தில் 200 வெள்ளிக்காசுகளை எடுத்து ஒரு வெள்ளி ஆசாரியிடம் கொடுத்தாள். அவன், “ஒரு செதுக்கப்பட்ட சிலையையும் ஒரு உலோகச் சிலையையும்” செய்தான். அவற்றை மீகா தன்னுடைய வீட்டில் கொண்டுவந்து வைத்தான். மீகாவுக்குச் சொந்தமாக “ஒரு கோயில்” இருந்தது. அந்தக் கோயிலில் ஏபோத்தையும் குலதெய்வச் சிலைகளையும் செய்து, தன்னுடைய மகன்களில் ஒருவனை அவன் பூசாரியாக வைத்தான். யெகோவாவைப் புகழ்வதற்காகத்தான் இதையெல்லாம் செய்வதாக மீகாவும் அவனுடைய குடும்பத்தாரும் சொல்லிக்கொண்டார்கள். ஆனால் உண்மையில், சிலைகளை வணங்கக் கூடாது என்ற கட்டளையை மீறி நடந்தார்கள். (யாத் 20:4-6) அதுமட்டுமல்ல, வழிபாட்டுக் கூடாரத்துக்கும் குருத்துவ ஏற்பாட்டுக்கும் தர வேண்டிய மதிப்பை அவர்கள் தரவில்லை. (நியா 17:1-6; உபா 12:1-14) பிறகு, யோனத்தான் என்ற லேவியனை மீகா பூசாரியாக வைத்தான். “இப்போது யெகோவா எனக்கு நல்லது செய்வார்” என்றும் சொல்லிக்கொண்டான். (நியா 17:7-13; 18:4) ஆனால், அவனுடைய எண்ணம் தவறு. ஏனென்றால், அந்த லேவியன், ஆரோனின் வம்சத்தில் வந்தவன் கிடையாது, மோசேயின் மகனான கெர்சோமின் வம்சத்தில் வந்தவன். அதனால், குருவாக இருப்பதற்கான தகுதி அவனுக்கு இருக்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவனை பூசாரியாக வைத்ததன் மூலம் மீகா தவறுக்கு மேல் தவறு செய்தான்.—நியா 18:30; எண் 3:10.
it-2-E பக். 391 பாரா 2
மீகா
கொஞ்ச நாட்கள் கழித்து மீகாவும் அவனுடைய குடும்பத்தாரும் தாண் கோத்திரத்தாரைத் துரத்திக்கொண்டு போனார்கள். அவர்களை நெருங்கியபோது, “என்ன பிரச்சினை?” என்று தாண் கோத்திரத்தார் கேட்டார்கள். அதற்கு, “நான் உண்டாக்கிய தெய்வங்களை எடுத்துக்கொண்டீர்கள். என்னுடைய பூசாரியையும் கூட்டிக்கொண்டு போகிறீர்கள். எனக்கு வேறென்ன இருக்கிறது?” என்று மீகா சொன்னான். அப்போது, இப்படித் தங்களை விடாமல் துரத்திக்கொண்டு வந்து பிரச்சினை செய்தால், தீர்த்துக்கட்டிவிடுவதாக தாண் கோத்திரத்தார் சொன்னார்கள். அவர்கள் பலசாலிகளாக இருந்ததால், மீகா திரும்பி தன்னுடைய வீட்டுக்குப் போய்விட்டான்.—நியா 18:22-26.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மனதைத் தொடும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு
6 பைபிளில் கடவுளுடைய பெயரைப் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதற்கு இன்றும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. 2013-ல் வெளியிடப்பட்ட ஆங்கில பைபிளில் கடவுளுடைய பெயர் 7,216 தடவை இருக்கிறது. அதாவது, 1984-ல் வெளியிடப்பட்ட பைபிளில் இருந்த எண்ணிக்கையைவிட 6 தடவை அதிகமாக இருக்கிறது. சவக்கடல் சுருள்களில் கடவுளுடைய பெயர் இன்னும் 5 இடங்களில், அதாவது, 1 சாமுவேல் 2:25; 6:3; 10:26; 23:14, 16-ல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதனால், 2013-ல் வெளியிடப்பட்ட பைபிளில் கடவுளுடைய பெயர் இந்த 5 இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறது. பழைய கையெழுத்துப் பிரதிகளில் கடவுளுடைய பெயர் நியாயாதிபதிகள் 19:18-ல் இருந்ததால் அந்த வசனத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி 6 இடங்களில் கடவுளுடைய பெயர் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நியாயாதிபதிகள் 20-21
“யெகோவாவிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருங்கள்”
பினெகாஸ் போல சவால்களைச் சந்திப்பீர்களா?
பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கிபியாவின் ஆட்கள் லேவியன் ஒருவனுடைய மறுமனையாட்டியைக் கற்பழித்துக் கொலை செய்துவிட்டார்கள். அதனால், மற்ற கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரத்தாருக்கு எதிராகப் போர் செய்யக் கிளம்பினார்கள். (நியா. 20:1-11) உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தார்கள்; ஆனால், இரண்டு முறை தோல்வியடைந்து விட்டார்கள், அதனால் பெரும் இழப்பு உண்டானது. (நியா. 20:14-25) தாங்கள் செய்த ஜெபத்திற்கு எந்தப் பலனுமில்லை என முடிவு செய்தார்களா? நடந்த தவறுக்கு அவர்கள் பதிலடி கொடுப்பதை யெகோவா உண்மையில் விரும்பினாரா இல்லையா?
பினெகாஸ் போல சவால்களைச் சந்திப்பீர்களா?
இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? மூப்பர்கள் ஊக்கமாய் முயற்சிகள் எடுத்த பின்பும், உதவிக்காகப் பல முறை ஜெபம் செய்த பின்பும் சபையில் சில பிரச்சினைகள் தீராமல் இருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், “கேட்டுக்கொண்டே [அல்லது, ஜெபம் செய்துகொண்டே] இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டடைவீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்” என்று இயேசு சொன்னதை மூப்பர்கள் நினைவில் கொள்வது நல்லது. (லூக். 11:9) ஜெபத்திற்குப் பதில் கிடைப்பது தாமதமாவதுபோல் தோன்றினாலும்கூட, யெகோவா உரிய நேரத்தில் பதிலளிப்பார் என்பதில் கண்காணிகள் உறுதியுடன் இருக்கலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w14-E 5/1 பக். 11 பாரா. 4-6
உங்களுக்குத் தெரியுமா?
அந்தக் காலத்தில் நடந்த போர்களில் கவண்கல்லை எப்படிப் பயன்படுத்தினார்கள்?
கோலியாத்தைக் கொல்வதற்கு கவண்கல்லை தாவீது பயன்படுத்தினார். மேய்ப்பராக ஆடுகளை கவனித்துக்கொண்டிருந்த சமயத்தில், கவண்கல்லை நன்றாகப் பயன்படுத்துவதற்கு அவர் கற்றிருந்திருக்கலாம்.—1சா 17:40-50.
மத்திய கிழக்கில் இருக்கிற சரித்திர வல்லுநர்கள் சிலர், அந்தக் காலத்தில் நடந்த போர்களில் பயன்படுத்தப்பட்ட நிறைய கவண்கற்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கவண்கல்லை எறிபவர்கள், அதை ஒரு கயிற்றில் வைத்துத் தங்கள் தலைக்குமேல் நன்றாகச் சுத்துவார்கள். பிறகு, கயிற்றின் ஒரு முனையை விட்டுவிடுவார்கள். அப்போது, அந்தக் கவண்கல் மணிக்கு கிட்டத்தட்ட 160-லிருந்து 240 கி.மீ வேகத்தில் போய், எதிரியைத் துல்லியமாகத் தாக்கும். அம்பு போகிற வேகத்தில் கவண்கல் போகுமா என்பதைப் பற்றி சரித்திர வல்லுநர்களுக்கு அவ்வளவாக எதுவும் தெரியவில்லை. ஆனால், அம்புகள் எந்தளவு ஆபத்தானவையாக இருந்தனவோ, அந்தளவு கவண்கற்களும் ஆபத்தானவையாக இருந்தன.—நியா 20:16.
ஜனவரி 24-30
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரூத் 1-2
“மாறாத அன்பை எப்போதும் காட்டுங்கள்”
யெகோவாவின் நண்பர்களைப் போல் இருங்கள்
5 ரூத்தின் குடும்பத்தார் மோவாபில் இருந்தார்கள். அவள் மோவாபுக்குப் போனால் அவர்கள் ஒருவேளை அவளைக் கவனித்துக்கொள்வார்கள். அங்கிருக்கிற ஜனங்களை, அங்கு பேசுகிற மொழியை, அந்த ஊர் கலாச்சாரத்தைப் பற்றியெல்லாம் ரூத்துக்கு நன்றாகத் தெரியும். ரூத்துக்கு பெத்லகேமில் இப்படிப்பட்ட வாழ்க்கையைக் கொடுக்க முடியும் என்று நகோமியால் உறுதியாகச் சொல்ல முடியாது. அதோடு, ரூத்துக்கு ஒரு நல்ல கணவனையோ ஒரு குடும்பத்தையோ கொடுக்க முடியுமா என்று நினைத்தும் நகோமி கவலைப்பட்டார். அதனால் அவளைத் திரும்பவும் மோவாபுக்கே போகச் சொல்கிறார். அதுமட்டுமல்ல ஒர்பாள் ஏற்கெனவே ‘தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாள்.’ (ரூத் 1:9-15) ஆனால் ரூத் அப்படிச் செய்யவில்லை.
யெகோவாவின் நண்பர்களைப் போல் இருங்கள்
6 யெகோவாவைப் பற்றி ரூத் தன் கணவனிடமிருந்து அல்லது நகோமியிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கலாம். மோவாபில் இருந்த தெய்வங்களைப் போல் யெகோவா இல்லை என்பதை ரூத் புரிந்துகொண்டாள். ரூத் யெகோவாவை நேசித்தாள், அவரை மட்டும்தான் வணங்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டதால் ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுத்தாள். அதனால் நகோமியிடம், “உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என்று சொன்னாள். (ரூத் 1:16) நகோமியின்மீது ரூத்துக்கு இருந்த அன்பைப் பார்க்கும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது! ஆனால், யெகோவாமீது ரூத்துக்கு இருந்த அன்பைப் பார்க்கும்போது அதைவிட ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா! போவாஸுக்கும் அப்படித்தான் இருந்தது. அதனால்தான், “கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய்” வந்ததற்காக ரூத்தை அவர் புகழ்ந்தார். (ரூத் 2:12-ஐ வாசியுங்கள்.) ஒரு பறவை அதன் சிறகுகளின்கீழ் குஞ்சுகளை பாதுகாப்பதை இந்த வார்த்தைகள் நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. (சங். 36:7; 91:1-4) அந்த பறவையைப் போல் யெகோவாவும் ரூத்தைப் பாதுகாத்தார். அவள் காட்டிய விசுவாசத்திற்காக ஆசீர்வதித்தார். தான் எடுத்த தீர்மானத்தை நினைத்து ரூத் கொஞ்சம்கூட வருத்தப்பட்டிருக்க மாட்டாள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ரூத் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
1:13, 21—நகோமியின் வாழ்க்கையில் கசப்பும் துயரமும் ஏற்படுவதற்கு யெகோவா காரணராய் இருந்தாரா? இல்லை. நகோமி எந்த விதத்திலும் கடவுள் மீது பழிசுமத்தவில்லை. இருந்தாலும், அவளுக்குச் சம்பவித்த எல்லாவற்றையும் பார்க்கையில் யெகோவா தனக்கு விரோதமாக இருந்ததாக நினைத்தாள். அவள் மனக் கசப்பும் ஏமாற்றமும் அடைந்தாள். அதுமட்டுமல்ல அக்காலங்களில் பிள்ளைகள் இருப்பது ஆசீர்வாதமாகவும் பிள்ளைகள் இல்லாதிருப்பது சாபமாகவும் கருதப்பட்டது. இரண்டு மகன்களைப் பறிகொடுத்ததாலும் பேரப்பிள்ளைகள் இல்லாததாலும் யெகோவா தன்னைச் சிறுமைப்படுத்தியதாக நகோமி நினைத்திருக்கலாம்.
ஜனவரி 31–பிப்ரவரி 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரூத் 3-4
“நல்ல பெயர் எடுங்கள், கடைசிவரை அதைக் காப்பாற்றுங்கள்”
‘குணசாலியான பெண்’
18 போவாஸ் பேசுகையில் அவரது மென்மையான குரல், இதமான குரல் ரூத்தை ஆசுவாசப்படுத்துகிறது. “என் மகளே, யெகோவா உன்னை ஆசீர்வதிப்பாராக! நீ இதுவரை காட்டிய பற்றுமாறா அன்பைவிட இப்போது காட்டும் பற்றுமாறா அன்பு மேலானது; ஏனென்றால், ஏழையோ பணக்காரனோ, ஓர் இளைஞன் பின்னால் நீ போகவில்லை” என்கிறார். (ரூத் 3:10, NW) “இதுவரை” என்பது நகோமிக்கு ரூத் காட்டிவரும் பற்றுமாறா அன்பை, அதாவது நகோமியுடன் சேர்ந்து இஸ்ரவேலுக்கு வந்து அவளைக் கவனித்துவருவதை, குறிக்கிறது. “இப்போது” என்பது நகோமியின் குடும்பத்துக்கு ஒரு வாரிசை உருவாக்க போவாஸை மணந்துகொள்ள முன்வருவதைக் குறிக்கிறது. ரூத்தைப் போன்ற இளம் பெண்ணுக்கு, பணக்காரனோ ஏழையோ, ஒரு வாலிபப் பையன் கிடைப்பது கஷ்டமே இல்லை என போவாஸ் குறிப்பிடுகிறார். ஆனால் நகோமிக்கு மட்டுமல்ல, நகோமியின் கணவருக்கும்கூட ரூத் நன்மை செய்ய விரும்புகிறாள்; இறந்துபோன எலிமெலேக்கின் பெயர் அவரது தேசத்தில் அழியாமல் இருக்க விரும்புகிறாள். இந்த இளம் பெண்ணின் சுயநலமற்ற குணம் போவாஸின் இதயத்தைத் தொட்டதில் ஆச்சரியமே இல்லை.
‘குணசாலியான பெண்’
21 தன்னை எல்லோரும் ‘குணசாலியான பெண்’ எனப் புகழ்வதாக போவாஸ் சொன்னதை நினைத்து ரூத் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்! அவளுக்கு இவ்வளவு நல்ல பெயர் கிடைக்கக் காரணம் என்ன? யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அவருக்குச் சேவை செய்வதற்கும் அவள் ஆர்வம் காட்டியது முக்கியமான ஒரு காரணம். அதோடு, தனக்குக் கொஞ்சம்கூட பழக்கமில்லாத சம்பிரதாயங்களையும் வழக்கங்களையும் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டாள்; இவ்வாறு, நகோமிக்கும் அவளுடைய மக்களுக்கும் அளவற்ற அன்பு காட்டினாள், அவர்களுடைய உணர்ச்சிகளை மதித்து நடந்தாள். ரூத்தின் விசுவாசத்தை நாம் பின்பற்றினால், மற்றவர்களுக்கும் அவர்களுடைய சம்பிரதாயங்களுக்கும் வழக்கங்களுக்கும் மிகுந்த மதிப்புக் காட்டுவோம். அப்போது, நாமும் ரூத்தைப் போலவே நற்பெயர் சம்பாதிப்போம்.
‘குணசாலியான பெண்’
25 ரூத்தை போவாஸ் கரம்பிடிக்கிறார். அதன்பின், ‘ஒரு ஆண்பிள்ளையைப் பெற யெகோவா அநுக்கிரகம் பண்ணுகிறார்.’ பெத்லகேம் பெண்கள் நகோமியை வாழ்த்துகிறார்கள், ஏழு மகன்களைவிட நகோமிக்கு ரூத் அருமையானவள் என்று சொல்லி பாராட்டுகிறார்கள். ரூத்துக்குப் பிறந்த மகன் பிற்காலத்தில் மகாராஜா தாவீதுக்கு மூதாதையாக ஆகிறார். (ரூத் 4:11-22) தாவீதோ இயேசு கிறிஸ்துவின் மூதாதையாக ஆகிறார்.—மத். 1:1.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ரூத் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
4:6—ஒருவர் ஒன்றை மீட்டுக்கொள்கையில் தன் சுதந்தரத்தை எப்படி “கெடுக்க” முடியும்? முதலாவதாக, வறுமையின் காரணமாக விற்கப்பட்ட நிலத்தை ஒருவர் மீட்டுக்கொள்கையில், அடுத்த யூபிலி வரையுள்ள வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அந்த நிலத்திற்கான விலையைக் கணக்கிட்டு அதை வாங்குவார். (லேவியராகமம் 25:25-27) அவ்வாறு செய்வது அவருக்கு ஏற்கெனவே உள்ள சொத்தின் மதிப்பைக் குறைத்துவிடும். அதுமட்டுமல்ல, ரூத்துக்கு ஒரு மகன் பிறந்தால் அந்த நிலம் மீட்டுக்கொள்பவரின் நெருங்கிய உறவினருக்குப் பதிலாக அந்த மகனுக்கே போய் சேரும்.
பிப்ரவரி 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 1-2
“உங்கள் இதயத்தில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் சொல்லுங்கள்”
மனக்குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினாள்
12 இவ்வாறு, ஜெபம் செய்கிற விஷயத்தில், கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்கும் அன்னாள் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறாள். அன்பான பெற்றோரை நம்பி ஒரு பிள்ளை தன் மனதிலுள்ள கவலைகளையெல்லாம் தயக்கமின்றி சொல்வதுபோல், நம் மனபாரத்தைத் தம்மிடம் இறக்கி வைக்கும்படி யெகோவா நம்மைக் கனிவோடு அழைக்கிறார். (சங்கீதம் 62:8-ஐயும் 1 தெசலோனிக்கேயர் 5:17-ஐயும் வாசியுங்கள்.) யெகோவாவிடம் ஜெபம் செய்வது சம்பந்தமாக இந்த ஆறுதலான வார்த்தைகளை அப்போஸ்தலன் பேதுரு எழுதினார்: “அவர் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பே. 5:7.
அன்னாள் எவ்வாறு மன அமைதி பெற்றாள்?
இவை எல்லாவற்றிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நம் கவலைகளைக் குறித்து யெகோவாவிடம் ஜெபிக்கும்போது, நம் உணர்வுகளையெல்லாம் அவரிடம் கொட்டி, மனதுருகி மன்றாடலாம். பிரச்சினையை எந்த விதத்திலும் நம்மால் சரிசெய்ய முடியாவிட்டால், அதை அவருடைய கரங்களில் ஒப்படைத்துவிட வேண்டும். அதைவிட சிறந்த வழி வேறு எதுவுமில்லை.—நீதிமொழிகள் 3:5, 6.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஒன்று சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
2:10—இஸ்ரவேலை ஆள எந்த ராஜாவும் இல்லாதிருக்கையில் யெகோவா ‘தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு பெலன் அளிக்கும்படி’ அன்னாள் ஏன் ஜெபித்தாள்? இஸ்ரவேலரை ஒரு ராஜா ஆளுவார் என மோசேயின் நியாயப்பிரமாணத்தில் முன்னறிவிக்கப்பட்டிருந்தது. (உபாகமம் 17:14-18) ‘செங்கோல் [ராஜ அதிகாரத்திற்குரிய அடையாளம்] யூதாவைவிட்டு நீங்குவது இல்லை’ என்று யாக்கோபு தனது மரணப்படுக்கையில் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார். (ஆதியாகமம் 49:10) மேலும், இஸ்ரவேலரின் மூதாதையாகிய சாராளைக் குறித்து யெகோவா இவ்வாறு கூறியிருந்தார்: ‘அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாவார்கள்.’ (ஆதியாகமம் 17:16) அப்படியானால், எதிர்காலத்தில் வரவிருந்த ஒரு ராஜாவைக் குறித்தே அன்னாள் ஜெபித்தாள்.
பிப்ரவரி 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 3-5
“யெகோவா கரிசனையுள்ளவர்”
சர்வவல்லவர், இருந்தாலும் கரிசனையுள்ளவர்!
3 சிறுவனாக இருந்தபோதே சாமுவேல் வழிபாட்டுக் கூடாரத்தில் சேவை செய்ய ஆரம்பித்தான். (1 சா. 3:1) ஒருநாள் ராத்திரி சாமுவேல் படுக்கைக்குப் போன பிறகு, வழக்கத்துக்கு மாறான ஒரு சம்பவம் நடந்தது. (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (1 சாமுவேல் 3:2-10-ஐ வாசியுங்கள்.) யாரோ தன்னைக் கூப்பிடுவது சாமுவேலின் காதில் விழுந்தது. வயதான தலைமைக் குரு ஏலிதான் தன்னைக் கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அவரிடம் ஓடிப்போய், “என்னைக் கூப்பிட்டீர்களா?” என்று சாமுவேல் கேட்டான். “நான் உன்னைக் கூப்பிடவில்லையே” என்று ஏலி சொன்னார். இப்படியே இரண்டு தடவை நடந்தது. அப்போது, கடவுள்தான் சாமுவேலைக் கூப்பிடுகிறார் என்பதை ஏலி புரிந்துகொண்டார். அதனால், அடுத்த தடவை என்ன செய்ய வேண்டுமென்று சாமுவேலிடம் அவர் சொன்னார். அவர் சொன்னபடியே சாமுவேல் செய்தான். சாமுவேலை கூப்பிட்டது தான்தான் என்று யெகோவா ஏன் அவனிடம் ஆரம்பத்திலேயே சொல்லவில்லை? இதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், சாமுவேலின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டதால்தான் யெகோவா அப்படிச் செய்தார் என்று நாம் நம்பலாம்.
சர்வவல்லவர், இருந்தாலும் கரிசனையுள்ளவர்!
4 ஒன்று சாமுவேல் 3:11-18-ஐ வாசியுங்கள். பெரியவர்களுக்கு, அதுவும் முக்கியமான பொறுப்புகளிலிருந்த பெரியவர்களுக்கு, சிறு பிள்ளைகள் மரியாதை தர வேண்டுமென்று யெகோவாவின் சட்டம் சொல்லியிருந்தது. (யாத். 22:28; லேவி. 19:32) அப்படியிருக்கும்போது, சாமுவேலைப் போன்ற ஒரு சிறுவன், விடியற்காலையிலேயே எழுந்துபோய் யெகோவாவின் கடுமையான நியாயத்தீர்ப்புச் செய்தியை ஏலியிடம் சொல்வதைக் கற்பனை செய்து பாருங்கள்! அது எவ்வளவு கஷ்டமான ஒரு வேலையாக இருந்திருக்கும்! அதனால்தான், ‘அந்தத் தரிசனத்தைப் பற்றி ஏலியிடம் சொல்வதற்கு சாமுவேல் பயந்தான்’ என்று பைபிள் சொல்கிறது. சாமுவேலைக் கூப்பிட்டது தான்தான் என்பதை ஏலி உணரும்படி யெகோவா செய்தார். அதனால், கடவுளின் செய்தியை மறைக்காமல் தன்னிடம் சொல்லும்படி சாமுவேலிடம் ஏலி சொன்னார். ஏலியின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து “எல்லாவற்றையும்” சாமுவேல் சொன்னான்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஒன்று சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
3:3—சாமுவேல் உண்மையிலேயே மகா பரிசுத்த ஸ்தலத்தில்தான் தூங்கினாரா? இல்லை. சாமுவேல், ஆசாரியரல்லாத கோகாத் வம்சத்தைச் சேர்ந்த லேவியனாக இருந்தார். (1 நாளாகமம் 6:33-38) ஆகவே, ‘பரிசுத்தமானவைகளைப் பார்க்கிறதற்காக உட்பிரவேசிக்க’ அவர் அனுமதிக்கப்படவில்லை. (எண்ணாகமம் 4:17-20) ஆசரிப்புக்கூடாரத்தின் பிரகாரத்திற்குள் செல்வதற்கு மட்டுமே அவருக்கு உரிமை இருந்தது. அதனால், அங்குதான் அவர் தூங்கியிருக்க வேண்டும். ஏலியும்கூட அங்கு எங்காவதுதான் தூங்கியிருக்க வேண்டும். அப்படியானால், “தேவனுடைய பெட்டி இருக்கிற” இடம் என்பது ஆசரிப்புக்கூடாரப் பகுதியையே குறிக்கிறது.
பிப்ரவரி 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 6-8
“உங்கள் ராஜா யார்?”
it-2-E பக். 163 பாரா 1
கடவுளுடைய அரசாங்கம்
மனித ராஜா வேண்டுமென்று கேட்டார்கள். மற்ற தேசத்தாருக்கு இருப்பதைப் போலவே தங்களுக்கும் ஒரு ராஜா வேண்டுமென்று இஸ்ரவேலர்கள் கேட்டார்கள். இப்படிக் கேட்டதன் மூலம், அவர்களுக்கு ராஜாவாக இருந்த யெகோவாவை ஒதுக்கித்தள்ளினார்கள். (1சா 8:4-8) ஆனால், ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தப்போவதாக யெகோவா ஏற்கெனவே வாக்குக் கொடுத்திருந்தார். எப்போதெல்லாம் கொடுத்திருந்தார்? ஆபிரகாமிடமும் யாக்கோபிடமும் கொடுத்திருந்தார். பிறகு, யாக்கோபு மரணப்படுக்கையில் இருந்தபோது யூதாவைப் பற்றி சொன்ன தீர்க்கதரிசனத்திலும் சொல்லியிருந்தார். (ஆதி 49:8-10) இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்த கொஞ்ச நாட்கள் கழித்தும், (யாத் 19:3-6) திருச்சட்டத்திலும், (உபா 17:14, 15) ராஜ்யத்தைப் பற்றி வாக்குக் கொடுத்திருந்தார். பிலேயாம் தீர்க்கதரிசி மூலமும் வாக்குக் கொடுத்திருந்தார். (எண் 24:2-7, 17) சாமுவேலின் அம்மா அன்னாள், தான் செய்த ஜெபத்தில், யெகோவா ஒரு ராஜாவை ஏற்படுத்துவார் என்று சொன்னார். (1சா 2:7-10) ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்தது என்னவோ உண்மைதான். ஆனால், அந்த ‘பரிசுத்த ரகசியத்தை’ பற்றிய எல்லா விஷயங்களையும் அந்த சமயத்தில் அவர் சொல்லவில்லை. உதாரணத்துக்கு, அந்த ராஜ்யம் எப்போது ஏற்படுத்தப்படும்... எப்படி ஏற்படுத்தப்படும்... யாரெல்லாம் அதில் இருப்பார்கள்... அது பரலோகத்தில் இருக்குமா அல்லது பூமியில் இருக்குமா... என்றெல்லாம் சொல்லவில்லை. இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று இஸ்ரவேலர்கள் அகங்காரத்தோடு, வரம்பு மீறி கேட்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது.
பல ஏமாற்றங்களைத் தாங்கிக்கொண்டவர்
இது குறித்து சாமுவேல் ஜெபித்தபோது யெகோவா என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: “ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.” இது சாமுவேலுக்கு ஆறுதல் அளித்தது; ஆனாலும், சர்வவல்லவரை அந்த மக்கள் எந்தளவு அவமதித்திருந்தார்கள்! ஒரு ராஜா அவர்களை ஆட்சி செய்தால் அவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதைக் குறித்து எச்சரிக்கும்படி சாமுவேலிடம் யெகோவா சொன்னார். அதன்படி சாமுவேல் எச்சரித்த பிறகும் அவர்கள், “அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தார்கள். சாமுவேல் எப்போதும்போல் இப்போதும் யெகோவாவுக்குக் கீழ்ப்பட்டு, அவர் தேர்ந்தெடுத்த ஒருவரை ராஜாவாக நியமித்தார்.—1 சாமுவேல் 8:7-19.
யெகோவாவின் ஆட்சியே சரியானது!
9 யெகோவா எச்சரித்தபடியே நடந்தது; இதை இஸ்ரவேலரின் சரித்திரம் காட்டுகிறது. இஸ்ரவேலரை ராஜாக்கள் ஆட்சி செய்யத் தொடங்கியபோது, அதுவும் அந்த ராஜாக்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாக ஆனபோது, பெரிய பெரிய பிரச்சினைகள் வெடித்தன. யெகோவாவை அறிந்த இஸ்ரவேல் ராஜாக்களுடைய ஆட்சியே அப்படி இருந்ததென்றால், யெகோவாவை அறியாத மனிதர்கள் காலங்காலமாகச் செலுத்திவந்திருக்கிற ஆட்சி மனிதகுலத்திற்கு நிரந்தர பலனைத் தராததில் ஆச்சரியமே இல்லை. உண்மைதான், சமாதானத்தையும் பாதுகாப்பையும் அளிப்பதற்கான தங்கள் முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி சில அரசியல்வாதிகள் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறார்கள்; ஆனால், அவருடைய ஆட்சிக்குக் கீழ்ப்படியாத அந்த அரசியல்வாதிகளைக் கடவுள் எப்படி ஆசீர்வதிப்பார்?—சங். 2:10-12.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஏன் முழுக்காட்டப்பட வேண்டும்?
13 யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெறுவதற்கு முன்பு குணப்படுவது அவசியம். குணப்படுவது என்பது கிறிஸ்து இயேசுவைப் பின்பற்ற மனதார தீர்மானித்திருக்கும் ஒருவர் அதற்கேற்ப தானாகவே மனமுவந்து செயல்படுவதைக் குறிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய தவறான முந்தைய வாழ்க்கைப் போக்கிற்கு முழுக்குப் போட்டுவிட்டு கடவுளுடைய பார்வையில் சரியானதை செய்ய தீர்மானிக்கிறார்கள். பைபிளில் குணப்படுதல் என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய, கிரேக்க வினைச் சொற்கள், விட்டு விலகுவதை, முற்றிலும் திரும்பி வருவதைக் குறிக்கின்றன. இந்தச் செயல், தவறான பாதையை விட்டு விலகி கடவுளிடம் திரும்பி வருவதைக் குறிக்கிறது. (1 இராஜாக்கள் 8:33, 34) குணப்படுவதற்கு “மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச்” செய்ய வேண்டும். (அப்போஸ்தலர் 26:20) இது, நாம் பொய் வணக்கத்தை விட்டு முற்றிலும் விலகி, கடவுளுடைய கட்டளைகளுக்கு இசைய நடந்து, யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை செலுத்தும்படி அவசியப்படுத்துகிறது. (உபாகமம் 30:2, 8-10; 1 சாமுவேல் 7:3) குணப்படுவது, நம் எண்ணத்தில், நோக்கங்களில், குணத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. (எசேக்கியேல் 18:31) கடவுளுக்குப் பிரியமில்லாத பண்புகளை புதிய ஆள்தன்மையால் மாற்றீடு செய்கையில் நாம் ‘குணமடைகிறோம்.’—அப்போஸ்தலர் 3:20; எபேசியர் 4:20-24; கொலோசெயர் 3:5-14.
பிப்ரவரி 28–மார்ச் 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 9-11
“பணிவாகவும் அடக்கமாகவும் இருந்த சவுல்”
கடவுளுக்கு முன்னால் மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் நடந்துகொள்ளுங்கள்
11 சவுல் ராஜாவுடைய வாழ்க்கையில் என்ன நடந்ததென்று யோசித்துப்பாருங்கள். இளம் வயதில் அவர் அடக்கமானவராக இருந்தார். அவருடைய வரம்புகளைப் பற்றித் தெரிந்துவைத்திருந்தார். சொல்லப்போனால், கூடுதல் பொறுப்பை எடுத்துச் செய்வதற்குத் தயங்கினார். (1 சா. 9:21; 10:20-22) ஆனாலும், காலப்போக்கில் சவுல் அகங்காரம் பிடித்தவராக மாறிவிட்டார். ராஜாவான கொஞ்சக் காலத்திலேயே இந்தக் கெட்ட புத்தியைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஒருசமயம், சாமுவேல் தீர்க்கதரிசிக்காக காத்திருந்தபோது சவுல் பொறுமையை இழந்துவிட்டார். யெகோவா தன்னுடைய மக்களின் சார்பாக ஏதாவது செய்வார் என்று நம்புவதற்குப் பதிலாக, தனக்கு அதிகாரம் இல்லாதபோதும் தகன பலியைச் செலுத்தினார். அதனால், யெகோவாவுடைய தயவை இழந்துவிட்டார்; காலப்போக்கில் அவருடைய ராஜ பதவியும் பறிபோனது. (1 சா. 13:8-14) நாம் அகங்காரமாக நடந்துகொள்ளக் கூடாது என்ற பாடத்தை சவுலிடமிருந்து கற்றுக்கொள்கிறோம். இந்தப் பாடத்தை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொண்டால், நாம் ஞானமுள்ளவர்களாக இருப்போம்.
சுயதியாக மனப்பான்மையைக் காத்துக்கொள்வது எப்படி?
8 சுயநலம், சுயதியாக மனப்பான்மையை அழித்துவிடும் என்பதை சவுல் ராஜாவின் உதாரணம் காட்டுகிறது. அவர் தன்னுடைய ஆட்சியின் ஆரம்பத்தில் பணிவாக, மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். (1 சா. 9:21) தன்னைப் பற்றி இஸ்ரவேலர்கள் கேவலமாகப் பேசியபோது, கடவுள் கொடுத்த அதிகாரத்தால் அவர்களைத் தண்டித்திருக்கலாம்; ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. (1 சா. 10:27) கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலால் அவர் அம்மோனியர்களுக்கு எதிராகப் போரிட்டு இஸ்ரவேலர்களுக்கு வெற்றி தேடித் தந்தார். வெற்றிக்கான புகழை மனத்தாழ்மையோடு யெகோவாவுக்கே சேர்த்தார்.—1 சா. 11:6, 11-13.
w95 12/15 பக். 10 பாரா 1
அம்மோனியர்—தயவுக்குக் கைம்மாறாக பகைமை காட்டிய ஒரு ஜனம்
மறுபடியுமாக இந்த அம்மோனியர் யெகோவாவின் தயவுக்குக் கைம்மாறாகப் பகைமையைச் செலுத்தினர். இந்தக் கொடிய பயமுறுத்தலை யெகோவா கவனியாமல் விடவில்லை. “சவுல் [நாகாஸின்] இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனா”னான். கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலின்கீழ், சவுல் 3,30,000 போர்வீரரைக் கொண்ட ஒரு சேனையைத் திரட்டினார். இவர்கள் அம்மோனியரை அவ்வளவு முழுமையாக முறியடித்ததனால், “தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி”யாயிற்று.—1 சாமுவேல் 11:6, 11.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஒன்று சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
9:9—“இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிஷ்டிக்காரன் என்னப்படுவான்” என்பது எதை அர்த்தப்படுத்துகிறது? சாமுவேலின் காலத்திலும் ராஜாக்களின் காலத்திலும் தீர்க்கதரிசிகள் பிரபலமானவர்களாக ஆனபோது “ஞானதிஷ்டிக்காரன்” என்ற பெயருக்குப் பதிலாக “தீர்க்கதரிசி” என்ற பெயர் புழக்கத்திற்கு வந்திருக்கலாம் என்பதையே அது அர்த்தப்படுத்துகிறது. தீர்க்கதரிசிகளின் வரிசையில் சாமுவேல்தான் முதலானவர் என்று கருதப்படுகிறார்.—அப்போஸ்தலர் 3:24.