வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
மார்ச் 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 12-13
“அகங்காரம் வந்தால் அவமானம் வரும்”
அகந்தைக்குப் பின் அவமானம்
17 மேலோட்டமாக பார்த்தால் சவுலின் செய்கைகள் நியாயமானவையாக தோன்றலாம். ஏனென்றால், கடவுளுடைய ஜனங்கள் ‘இக்கட்டில்’ மாட்டிக்கொண்டு, ‘நெருக்கத்தில்’ பயந்துகொண்டு இருந்தார்களே. (1 சாமுவேல் 13:6, 7) தேவைப்படும் சமயத்தில் முன்வந்து நடவடிக்கை எடுப்பது நிச்சயமாகவே தவறல்ல. எனினும், ஒருவரது இருதயத்திலுள்ள எண்ணங்களையும் உத்தேசங்களையும் யெகோவாவால் அறிய முடியும் என்பதை நினைவில் வையுங்கள். (1 சாமுவேல் 16:7) ஆகையால், சவுலைப் பற்றியும் யெகோவாவுக்கு நன்றாக தெரிந்திருக்கும்; ஆனால் எல்லா விஷயங்களும் பைபிளில் நேரடியாக குறிப்பிடப்பட்டிருக்காது. உதாரணமாக, சவுலின் அவசரத்துக்குப் பின்னால் அகந்தை என்ற குணம் பதுங்கி இருந்திருக்கலாம். இது நிச்சயமாக யெகோவாவுக்குத் தெரிந்திருக்கும். தானோ இஸ்ரவேல் முழுவதற்கும் அரசன்; அப்படியிருக்கையில், சும்மா காலம் கடத்திக்கொண்டிருந்த ஒரு கிழ தீர்க்கதரிசியாக தன் கண்ணுக்கு தோன்றிய சாமுவேலுக்காக காத்திருக்காவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்பதாக சவுல் தன் உள்ளத்தில் நினைத்து எரிச்சலடைந்திருக்கலாம். எவ்வாறாயினும், சாமுவேல் தாமதித்ததால் தனக்கு அதைச் செய்ய உரிமையுண்டு என சவுல் உணர்ந்தார்; தனக்குக் கொடுக்கப்பட்ட தெளிவான கட்டளைகளை மீறுவதில் தவறில்லை என்றும் நினைத்தார். இதன் விளைவு? சவுல் துணிந்து பலி செலுத்தியதற்காக சாமுவேல் அவரைப் போற்றவில்லை. அதற்கு மாறாக, சவுலை கடிந்துகொண்டு இவ்வாறு சொன்னார்: “உமது கடவுளாகிய யெகோவா உமக்கு விதித்தக் கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர் . . . உமது அரசாட்சி நிலைநிற்காது.” (1 சாமுவேல் 13:13, 14, தி.மொ.) இவரது விஷயத்திலும், அகந்தைக்குப் பின் அவமானமே வந்தது.
உங்கள் கீழ்ப்படிதலை யெகோவா உயர்வாய்க் கருதுகிறார்
8 சவுல் ராஜாவைப்பற்றிய பைபிள் பதிவு கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சவுல், ஆரம்பத்தில் அடக்கமும் மனத்தாழ்மையுமுள்ள ராஜாவாக, ‘தன்னுடைய பார்வைக்குச் சிறியவராக’ இருந்தார். என்றாலும், பிற்பாடு அவர் கர்வமான ராஜாவாக மாறினார்; தவறான சிந்தையுடன் தீர்மானங்களைச் செய்தார். (1 சாமுவேல் 10:21, 22; 15:17) ஒரு சந்தர்ப்பத்தில், பெலிஸ்தர்களுக்கு எதிராக அவர் போரிட வேண்டியிருந்தது. அப்போது, யெகோவாவுக்குப் பலிசெலுத்துவதற்கும் அடுத்து செய்யவேண்டியவற்றை அறிந்துகொள்வதற்கும் தான் வரும்வரை காத்திருக்கும்படி சவுலிடம் சாமுவேல் சொல்லியிருந்தார். ஆனால், ராஜா எதிர்பார்த்த சமயத்திற்குள்ளாக சாமுவேல் வந்துசேரவில்லை, ஜனங்களும் அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தார்கள். அதைப் பார்த்த சவுல், ‘சர்வாங்க தகனபலியைச் செலுத்தினார்.’ அது யெகோவாவுக்குப் பிடிக்காத செயலாக இருந்தது. கடைசியில் சாமுவேல் வந்துசேர்ந்தபோது, தான் கீழ்ப்படியாமற்போனதற்கு சவுல் சாக்குப்போக்கு சொன்னார்; சாமுவேல் காலந்தாழ்த்தி வந்ததாலேயே, சர்வாங்க தகனபலியைச் செலுத்தி யெகோவாவின் தயவைப் பெறத் ‘துணிந்ததாக’ சொன்னார். சவுலைப் பொறுத்தவரை, அந்தப் பலியைச் செலுத்த சாமுவேல் வரும்வரை காத்திருக்கும்படி கொடுக்கப்பட்ட அறிவுரைக்குக் கீழ்ப்படிவதைவிட பலி செலுத்துவதுதான் மிக முக்கியமானதாய் இருந்தது. ஆகவே, அவரிடம் சாமுவேல் இவ்வாறு கூறினார்: “புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்.” யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் சவுல் தன் அரச பதவியை இழந்தார்.—1 சாமுவேல் 10:8; 13:5-13.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவின் அன்பான வழிநடத்துதலைப் பின்பற்றுவீர்களா?
15 யெகோவாவைவிட ஒரு மனித ராஜாவை அதிகமாக நம்பலாமென இஸ்ரவேலர் நினைத்திருக்கலாம். அப்படியென்றால், அவர்கள் வீணானதைப் பின்பற்றினார்கள். சாத்தானுடைய இன்னுமதிக வீணான காரியங்களைப் பின்பற்றும் ஆபத்திலும் இருந்தார்கள். உதாரணத்திற்கு, மனித ராஜாக்கள் சிலை வழிபாடு செய்ய அவர்களைத் தூண்டலாம். சிலை வழிபாடு செய்கிறவர்கள், பார்க்க முடியாத படைப்பாளராகிய யெகோவாவைவிட கல்லாலும் மரத்தாலும் ஆன அந்தச் சிலைகளை அதிகமாக நம்பலாமெனத் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், சிலைகள் “ஒன்றுமில்லை” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 கொ. 8:4) சிலைகளால் பார்க்கவும், கேட்கவும், பேசவும் முடியாது; ஏன், எதையுமே செய்ய முடியாது. நம்மால் அந்தச் சிலைகளைப் பார்க்க முடியும், தொட முடியும் என்பதற்காக அவற்றை வழிபட்டால் வீணானதைப் பின்பற்றுவோம்; இந்த ‘கானல் நீரை’ நம்புவது உயிருக்கே உலை வைக்கலாம்!—சங். 115:4-8.
மார்ச் 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 14-15
“பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம்”
உங்கள் கீழ்ப்படிதலை யெகோவா உயர்வாய்க் கருதுகிறார்
4 யெகோவா படைப்பாளராக இருப்பதால் நம்மிடமுள்ள அனைத்துப் பொருட்களும் அவருக்குச் சொந்தமானவையே. அப்படியெனில், அவருக்கு நாம் எதையாவது கொடுக்க முடியுமா? நிச்சயம் கொடுக்க முடியும், பெருமதிப்புமிக்க ஒன்றை அவருக்கு நாம் கொடுக்க முடியும். அது என்ன? அதுதான் கீழ்ப்படிதல்; அதை நம்மால் கடவுளுக்குக் கொடுக்க முடியும். பின்வரும் அறிவுரையிலிருந்து இதை நாம் புரிந்துகொள்ளலாம்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) நம்முடைய சூழ்நிலைகளும் பின்னணிகளும் வித்தியாசப்பட்டவையாய் இருந்தாலும், கடவுளுக்குக் கீழ்ப்படிவதன்மூலம் நாம் ஒவ்வொருவருமே பிசாசாகிய சாத்தானின் சவாலுக்குப் பதிலடி கொடுக்க முடியும்; அதாவது, சோதனைகள் வருகையில் மனிதர்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்க மாட்டார்கள் என்ற சாத்தானின் பொய்யான சவாலுக்கு நாம் பதிலடி கொடுக்க முடியும். இது அரும்பெரும் பாக்கியம் அல்லவா?
it-2-E பக். 521 பாரா 2
கீழ்ப்படிதல்
ஏதாவது நல்லதைச் செய்து நம்முடைய குற்றத்தைச் சரிகட்டிவிடலாம் என்று நினைப்பது பெரிய தவறு. அப்படிப்பட்ட ஒருவரை யெகோவா ஏற்றுக்கொள்ளவே மாட்டார். “யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதைவிட தகன பலிகளும் காணிக்கைகளும் யெகோவாவுக்குப் பிரியமாக இருக்குமா? பலி செலுத்துவதைவிட கீழ்ப்படிவதுதான் முக்கியம், செம்மறியாட்டுக் கடாவின் கொழுப்பைச் செலுத்துவதைவிட அவர் பேச்சைக் கேட்பதுதான் முக்கியம்” என்று சவுல் ராஜாவிடம் சாமுவேல் சொன்னார். (1சா 15:22) யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போகும்போது, அவர் சொல்வதை நாம் உண்மையிலேயே நம்பவில்லை என்றும் அவர்மேல் துளியும் விசுவாசமே இல்லை என்றும் காட்டுகிறோம். அதனால்தான் கீழ்ப்படியாத ஒருவர் பில்லிசூனியத்தில் ஈடுபடுகிறவர் மாதிரியும், சிலைகளை வணங்குகிறவர் மாதிரியும் இருப்பதாக பைபிள் சொல்கிறது. (1சா 15:23; ரோ 6:16-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) ஒரு விஷயத்தை நாம் செய்வதாக ஒத்துக்கொண்டால் அதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இல்லையென்றால், அதைச் செய்ய சொன்னவர்மேல் நமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவரை நாம் மதிக்கவில்லை என்றும் ஆகிவிடும்.—மத் 21:28-32.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 493
கருணை
மற்றவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதற்காக, யாருக்குக் கருணை காட்டக் கூடாது என்று கடவுள் சொல்கிறாரோ அவர்களுக்குக் கருணை காட்டினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். சவுல் ராஜாவின் உதாரணத்திலிருந்து இதைக் கற்றுக்கொள்ளலாம். அமலேக்கியர்களுக்குக் கருணை காட்டக் கூடாது என்று சவுலுக்குக் கடவுள் கட்டளை கொடுத்திருந்தார். ஏனென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வந்த சமயத்தில் எந்தக் காரணமும் இல்லாமல் அவர்களை முதலில் தாக்கியது அமலேக்கியர்கள்தான். அவர்களை அழிக்கப் போவதாக அந்த சமயத்திலேயே யெகோவா வாக்குக் கொடுத்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான சமயம் வந்தபோதுதான் சவுல் யெகோவாவுக்கு முழுமையாகக் கீழ்ப்படியாமல் போனார். அதனால், அவரை ராஜாவாக இல்லாதபடி யெகோவா ஒதுக்கிவிட்டார். (1சா 15:2-24) சவுலைப் போல இருக்கக் கூடாது... யெகோவாவுடைய தயவை இழந்துவிடக் கூடாது... என்றெல்லாம் நினைப்பவர்கள் இரண்டு விஷயங்களை ஞாபகத்தில் வைக்க வேண்டும். (1) யெகோவா ஒரு விஷயத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கிறாரோ அதுதான் சரியானது என்பதை முழுமையாக நம்ப வேண்டும், அதை அப்படியே செய்ய வேண்டும். (2) யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதுதான் மற்ற எல்லாவற்றையும்விட ரொம்ப ரொம்ப முக்கியம் என்று நினைக்க வேண்டும்.
மார்ச் 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 16-17
“இந்தப் போர் யெகோவாவின் போர்”
wp16.4 பக்.11 பாரா. 2-3
‘யுத்தம் யெகோவாவுடையது’
ஒரு சிங்கத்தையும் கரடியையும் கொன்றதைப் பற்றி சவுலிடம் தாவீது சொன்னார். அப்படி சொன்னதால் அவர் பெருமையடித்துக் கொண்டிருந்தார் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. அந்த மிருகங்களை தன்னுடைய சொந்த பலத்தால் சாகடிக்கவில்லை என்று அவருக்கு நன்றாக தெரியும். அதனால் சவுலிடம், ‘என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த யெகோவா இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்’ என்று சொன்னார். அதற்கு சவுல், ‘போ, யெகோவா உன்னுடனேகூட இருப்பார்’ என்றார்.—1 சாமுவேல் 17:37.
தாவீதைப் போலவே உங்களுக்கும் கடவுள்மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? தாவீதுக்கு ஏதோ குருட்டு நம்பிக்கை இருக்கவில்லை. அவர் கற்றுக்கொண்ட விஷயங்களை வைத்தும் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்தும்தான் கடவுள்மீது நம்பிக்கை வைத்தார். யெகோவா தனக்குப் பாதுகாப்பு கொடுப்பார்... கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் காப்பாற்றுவார்... என்று தாவீதுக்கு நன்றாக தெரிந்திருந்தது. அவரைப் போலவே நமக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும் என்றால் நாமும்கூட பைபிளிலிருந்து கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். கற்றுக்கொள்ளும் விஷயங்களின்படி வாழ வேண்டும். அதனால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் கடவுள்மீது நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்தும்.—எபிரெயர் 11:1.
wp16.4 பக்.11- 12
‘யுத்தம் யெகோவாவுடையது’
தாவீது சொன்ன வார்த்தைகள் இன்று நம் நம்பிக்கையை பலப்படுத்துகின்றன. கோலியாத்தை பார்த்து, ‘நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய யெகோவாவின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்’ என்று தாவீது தைரியமாக சொல்வதை கற்பனை செய்து பாருங்கள். கோலியாத்தின் பலமோ அவனிடமிருந்த ஆயுதங்களோ யெகோவாவுக்கு முன்னால் ஒன்றுமே இல்லை என்று தாவீதுக்கு நன்றாக தெரிந்திருந்தது. கோலியாத் யெகோவாவுக்கு எதிராக பேசினான். அதனால், யெகோவா அவனுக்குப் பதிலடி கொடுப்பார் என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். அதனால்தான், ‘யுத்தம் யெகோவாவுடையது’ என்று சொன்னார்.—1 சாமுவேல் 17:45-47, NW.
கோலியாத்தின் உயரத்தையோ அவனுடைய ஆயுதங்களையோ தாவீது பார்க்காமல் இல்லை... இதையெல்லாம் பார்த்தார். ஆனால் அவை தன்னை பயப்படுத்துவதற்கு அவர் அனுமதிக்கவில்லை. சவுலும் அவருடைய படைவீரர்களும் செய்த தப்பை இவர் செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் தங்களை கோலியாத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள். தாவீதோ யெகோவாவோடு கோலியாத்தை ஒப்பிட்டு பார்த்தார். உண்மைதான், கோலியாத் மற்ற ஆட்களைவிட உயரமாக இருந்தான்... சுமார் ஒன்பதரை அடி (2.9 மீ) உயரமுள்ளவனாக இருந்தான். ஆனால், இந்த பிரபஞ்சத்தின் பேரரசரோடு ஒப்பிடும்போது கோலியாத் ஒன்றுமே இல்லை. அவனை ஒரு பூச்சியை நசுக்குவது போல் யெகோவா நசுக்கிப்போடுவார்!
wp16.4 பக். 12 பாரா 5
‘யுத்தம் யெகோவாவுடையது’
இன்று கடவுளுடைய ஊழியர்கள் போரில் ஈடுபடுவதில்லை. அந்தக் காலம் கடந்துவிட்டது. (மத்தேயு 26:52) இருந்தாலும், கடவுள்மீது தாவீது வைத்திருந்த நம்பிக்கையை நாம் பின்பற்ற வேண்டும். அவரை போலவே யெகோவாவை ஒரு நிஜமான நபராக பார்க்க வேண்டும். அவரை மட்டுமே வணங்க வேண்டும், அவருக்கு மட்டுமே பயப்பட வேண்டும். சில சமயம் நம்முடைய பிரச்சினைகள் நமக்கு முன்னால் பெரிய மலை போல் தெரியலாம்... நாமோ அவற்றின் முன்னால் சிறிய மடு போல் தோன்றலாம். ஆனால், யெகோவாவுக்கு இருக்கும் அளவில்லாத பலத்துக்கு முன்னால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை. தாவீதை போலவே நாம் யெகோவாவை மட்டுமே தெய்வமாக வணங்கினால்... அவரைப் போலவே யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தால்... யாரையும் பார்த்து எந்த பிரச்சினையையும் பார்த்து பயப்பட மாட்டோம். யெகோவா தேவனால் முடியாதது எதுவுமே இல்லை!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 871-872
சவுல்
யெகோவா தன்னுடைய சக்தியை சவுலிடமிருந்து எடுத்துவிட்டார். அந்தச் சமயத்திலிருந்து சவுலிடமிருந்த கெட்ட சிந்தை அவரை ஆட்டிப்படைக்க ஆரம்பித்தது. அதனால் அவருடைய மன நிம்மதி பறிபோய்விட்டது. அவர் யோசிக்கும் விதம்... அவர் எடுத்த தீர்மானம்... எல்லாமே தவறாக இருந்தது. யெகோவாவுக்கு சவுல் கீழ்ப்படியாமல் போனபோது அவருடைய மனதும் இதயமும் மோசமாகிவிட்டதையே இது காட்டுகிறது. அவருக்குத் தவறான எண்ணம் வந்தபோது கடவுளுடைய சக்தி அவரை அதிலிருந்து பாதுகாக்கவில்லை. அதற்கு எதிராகப் போராடுவதற்கும் உதவவில்லை.—1சா 16:14, 15.
மார்ச் 28–ஏப்ரல் 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 18-19
“வாழ்க்கையில் வெற்றிபெறும்போது பணிவோடு நடந்துகொள்ளுங்கள்”
வாழ்க்கையில் மாற்றங்களை சந்திக்கையில் கடவுளுடைய ஆவியின் மீது சார்ந்திருங்கள்
4 மேய்ப்பனாக வலம்வந்த இச்சிறுவனாகிய தாவீது விரைவில் தேசிய அளவில் புகழ்பெற்ற மனிதராக பரிணமிக்கவிருந்தார். அரசருடனிருந்து அவரைக் கவனித்துக் கொள்ளவும் அவருக்காக இன்னிசை இசைக்கவும் அவர் அழைக்கப்பட்டார். அனுபவமிக்க இஸ்ரவேல் வீரர்களே எதிர்கொள்ள அஞ்சிய போர்வீரனாகிய இராட்சத கோலியாத்தை வீழ்த்தினார். அதன்பின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்; பெலிஸ்தரை தோற்கடித்தார். ஜனங்கள் அவரை நேசித்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடினார்கள். உதாரணத்திற்கு, சவுல் அரசனுக்கு ஆலோசகராக இருந்த ஒருவர் இளம் தாவீதை “தேர்ந்த சுரமண்டலக்காரன்,” “பராக்கிரமசாலி, யுத்தவீரன், பேச்சில் சமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்” என்றெல்லாம் வர்ணித்தார்.—1 சாமுவேல் 16:18, தி.மொ.; 17:23, 24, 45-51; 18:5-7.
மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள்
6 சிலருக்கு அழகு, புகழ், இசைத் திறமை, பலம், அல்லது மற்றவர்களுடைய அபிமானம் இருப்பதால் அவர்களுக்குத் தலைக்கனம் வந்துவிடுகிறது. தாவீதுக்கு இவை எல்லாமே இருந்தும், வாழ்நாள் முழுக்க அவர் மனத்தாழ்மையோடு இருந்தார். ஒருமுறை, கோலியாத்தைக் கொன்ற பிறகு, சவுல் ராஜா தன்னுடைய மகளைக் கல்யாணம் செய்துதருவதாக தாவீதிடம் சொன்னார். அப்போது தாவீது, “ராஜாவின் மருமகனாவதற்கு எனக்கென்ன அருகதை இருக்கிறது? இஸ்ரவேலில் என் அப்பாவின் குடும்பம் சாதாரணக் குடும்பம்தானே?” என்று சொன்னார். (1 சா. 18:18) எப்போதும் மனத்தாழ்மையோடு இருக்க தாவீதுக்கு எது உதவியது? தனக்கு இருந்த குணங்களுக்கும் திறமைகளுக்கும் விசேஷப் பொறுப்புகளுக்கும் கடவுள்தான் காரணம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது; அதாவது, கடவுள் மனத்தாழ்மையோடு தன்னைக் கண்ணோக்கிப் பார்த்ததால்தான் அவையெல்லாம் தனக்கு இருந்ததை அவர் புரிந்துவைத்திருந்தார். (சங். 113:5-8) தன்னிடம் இருந்த நல்ல விஷயங்கள் எல்லாவற்றுக்கும் யெகோவாதான் காரணம் என்பதை தாவீது உணர்ந்திருந்தார்.—1 கொரிந்தியர் 4:7-ஐ ஒப்பிடுங்கள்.
7 தாவீதைப் போலவே மனத்தாழ்மையோடு இருக்க இன்று யெகோவாவின் மக்கள் முயற்சி செய்கிறார்கள். உன்னதமான கடவுளாகிய யெகோவாவே மனத்தாழ்மையோடு இருக்கிறார்! இந்த உண்மை நம் மனதைத் தொடுகிறது, இல்லையா? (சங். 18:35) “கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் பொறுமையையும் காட்டுங்கள்” என்ற அறிவுரையின்படி நடக்க நாம் விரும்புகிறோம். (கொலோ. 3:12) அன்பு “பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது” என்றும் நமக்குத் தெரியும். (1 கொ. 13:4) நாம் மனத்தாழ்மையோடு நடந்துகொள்வதைப் பார்க்கும்போது, மற்றவர்களும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பலாம். ஒரு கிறிஸ்தவ மனைவியின் நல்ல நடத்தையைப் பார்த்து அவருடைய கணவன் எப்படி யெகோவாவிடம் ஈர்க்கப்படுவாரோ அப்படித்தான் நம்முடைய மனத்தாழ்மையைப் பார்த்து மற்றவர்களும் யெகோவாவிடம் ஈர்க்கப்படுவார்கள்.—1 பே. 3:1.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 695-696
தீர்க்கதரிசி
தீர்க்கதரிசிகள் ‘கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்ட’ சமயங்களில் மட்டும்தான் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். (எசே 11:4, 5; மீ 3:8) இந்த சக்தியின் உதவியால் அவர்கள் அசாதாரணமான விஷயங்களைப் பேசினார்கள், செய்தார்கள். சிலசமயங்களில் வினோதமாகக்கூட நடந்துகொண்டார்கள். மக்கள் சிலர் ‘தீர்க்கதரிசிகளைப் போல் நடந்துகொண்டார்கள்’ என்று பைபிள் சொல்வதற்கு அதுதான் காரணம். (1சா 10:6-11; 19:20-24; எரே 29:24-32; ஒப்பிட்டுப் பாருங்கள்: அப் 2:4, 12-17; 6:15; 7:55) கடவுளுடைய சக்தியால் சவுல் ‘தீர்க்கதரிசியைப் போல் நடந்துகொண்டபோது’ அவர் தன்னுடைய உடைகளையெல்லாம் கழற்றிவிட்டு “பகல் முழுவதும் ராத்திரி முழுவதும் வெற்று உடம்போடு” படுத்துக்கிடந்தார். (1சா 19:18-20:1) அதற்காக, தீர்க்கதரிசிகள் பெரும்பாலும் வெற்று உடம்போடுதான் இருந்தார்கள் என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால், தீர்க்கதரிசிகள் அப்படி இருந்ததாக பைபிள் சொல்வதில்லை. ஆனால் சவுல் வெற்று உடம்போடு இருந்ததற்கு என்ன காரணம்? ஒருவேளை ராஜ உடையைக் கழற்றிவிட்டால் அவரும் மற்றவர்களைப் போல் ஒரு சாதாரண ஆள்தான் என்பதைக் காட்டுவதற்காக யெகோவா அப்படிச் செய்திருக்கலாம். அல்லது, யெகோவாவுடைய அதிகாரத்துக்கும் சக்திக்கும் முன்பாக சவுல் ஒன்றுமே இல்லை என்பதைக் காட்டுவதற்காக யெகோவா அப்படிச் செய்திருக்கலாம். சவுலை எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ள வைக்க தன்னால் முடியும் என்பதைக் காட்டுவதற்காக யெகோவா இப்படிச் செய்திருக்கலாம்.
ஏப்ரல் 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 20-22
“நல்ல நண்பராக இருப்பது எப்படி?”
நட்பெனும் பாலம்—முடிவு வருவதற்கு முன்பே அதைக் கட்டுங்கள்!
18 இன்று, நம் சகோதர சகோதரிகளுக்கு நிறைய கஷ்டங்கள் வருகின்றன. உதாரணத்துக்கு, இயற்கைப் பேரழிவுகளாலோ மனிதர்களால் ஏற்படுத்தப்படுகிற அழிவுகளாலோ நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். இப்படி நடக்கும்போது, பாதிக்கப்பட்ட நம் நண்பர்களை சிலரால் தங்களுடைய வீட்டில் தங்கவைக்க முடிகிறது. வேறு சிலரால் பண உதவி செய்ய முடிகிறது. ஆனால், நம் எல்லாராலும் செய்ய முடிந்த ஒரு உதவி இருக்கிறது. நம் சகோதர சகோதரிகளுக்கு உதவும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்வதுதான் அது! ஒருவேளை, யாராவது ஒரு சகோதரரோ சகோதரியோ உள்ளம் உடைந்துபோயிருக்கலாம். அப்போது, என்ன சொல்வது என்ன செய்வது என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனாலும், நம் எல்லாராலும் உதவிக் கரம் நீட்ட முடியும். எப்படி? அந்தச் சகோதரரோடு அல்லது சகோதரியோடு நேரம் செலவிடலாம். அவர் பேசும்போது, கரிசனையோடு காதுகொடுத்துக் கேட்கலாம். நம் மனதைத் தொட்ட ஆறுதலான வசனங்களை அவர்களுக்குக் காட்டலாம். (ஏசா. 50:4) உதவி தேவைப்படுகிற சமயத்தில் நீங்கள் அவர்களோடு இருப்பதே அவர்களுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும்!—நீதிமொழிகள் 17:17-ஐ வாசியுங்கள்.
யெகோவாவின் வழிகளில் நடவுங்கள்
7 நாம் நம்பகமான நண்பர்களாய் இருக்கும்படி கடவுள் எதிர்பார்க்கிறார். (நீதி. 17:17) சவுல் ராஜாவின் மகனான யோனத்தான், தாவீதின் நண்பரானார். கோலியாத்தை தாவீது கொன்றதைப்பற்றி யோனத்தான் கேள்விப்பட்டதும், ‘யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவரைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தார்.’ (1 சா. 18:1, 3) தாவீதைக் கொல்ல சவுல் தீர்மானித்தபோது அதைக் குறித்தும்கூட தாவீதை எச்சரித்தார். தாவீது தப்பியோடிய பிறகு, அவரைச் சந்தித்து அவருடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். தாவீதோடு பேசியதற்காக யோனத்தானை சவுல் கொல்லவும் துணிந்துவிட்டார். இருந்தாலும், இந்த நண்பர்கள் இருவரும் மீண்டும் சந்தித்து, தங்கள் நட்பைத் தொடர்ந்தார்கள். (1 சா. 20:24-41) கடைசியாக அவர்கள் சந்தித்துக்கொண்டபோது, “தேவனுக்குள்” தாவீதின் கரத்தை யோனத்தான் திடப்படுத்தினார்.—1 சா. 23:16-18.
w09 10/15 பக். 19 பாரா 11
அன்பற்ற உலகில் நட்பைக் காத்துக்கொள்ளுதல்
11 பற்றுமாறாமல் இருங்கள். “உண்மையான நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; துன்ப காலத்தில் உடன்பிறந்தவன்போல் உதவுவான்” என்று சாலொமோன் எழுதினார். (நீதி. 17:17, NW) இந்த வரிகளை எழுதியபோது, தன்னுடைய தகப்பனான தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே இருந்த இனிய நட்புதான் ஒருவேளை அவருடைய மனதிற்கு வந்திருக்கும். (1 சா. 18:1) இஸ்ரவேலின் ராஜாவான சவுல் தன் மகன் யோனத்தானையே தனக்குப்பின் ராஜாவாக்க வேண்டுமென விரும்பினார். ஆனால், தாவீதைத்தான் யெகோவா ராஜாவாகத் தேர்ந்தெடுத்திருந்தார் என்பதை அறிந்த யோனத்தான், அதை மனதார ஏற்றுக்கொண்டார். சவுலைப் போல் தாவீதுமேல் அவர் வயிற்றெரிச்சல் கொள்ளவில்லை. எல்லாரும் தாவீதைப் புகழ்ந்ததைக் கண்டு, பொறாமையில் வெந்துபோகவும் இல்லை; தாவீதைப் பற்றி சவுல் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லியபோது அதை உடனே நம்பிவிடவும் இல்லை. (1 சா. 20:24-34) நாம் யோனத்தானைப் போல் இருக்கிறோமா? நம்முடைய நண்பர்கள் சபையில் ஏதேனும் நியமிப்புகளைப் பெறும்போது, அதைக் கண்டு சந்தோஷப்படுகிறோமா? அவர்கள் கஷ்டப்படும்போது அவர்களுக்கு ஆறுதலாக, பக்கபலமாக இருக்கிறோமா? நம்முடைய நண்பரைப் பற்றி யாராவது மோசமான புரளியைக் கிளப்பிவிட்டால், அதை உடனே நம்பிவிடுகிறோமா? அல்லது யோனத்தானைப் போல் அவருக்காகப் பரிந்துபேசுகிறோமா?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஒன்று சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
21:12, 13. வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்கையில் நம்முடைய சிந்தனா சக்தியையும் திறமைகளையும் நாம் பயன்படுத்த வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். தம்முடைய ஏவப்பட்ட வார்த்தையை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார், இது விவேகத்தையும் அறிவையும் சிந்திக்கும் திறனையும் நமக்கு அளிக்கிறது. (நீதிமொழிகள் 1:4) கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியும் நமக்கு உள்ளது.
ஏப்ரல் 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 23-24
“யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருங்கள்”
வாழ்க்கையில் மாற்றங்களை சந்திக்கையில் கடவுளுடைய ஆவியின் மீது சார்ந்திருங்கள்
8 சவுலுக்குத் தீங்கு செய்ய தாவீது மறுத்தார். விசுவாசத்தையும் பொறுமையையும் காண்பித்து, காரியங்களை யெகோவாவின் கைகளில் விட்டுவிடுவதில் திருப்தி அடைந்தார். குகையை விட்டு அரசர் வெளியேறிய பின்பு தாவீது அவரிடம் இவ்வாறு சத்தமாக சொன்னார்: “யெகோவா எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரிப்பார்; யெகோவாவே எனக்காக உம்மிடம் பழிவாங்குவார்; நானோ உமது மேல் கைபோடுவதில்லை.” (1 சாமுவேல் 24:11, 12, தி.மொ.) சவுல் தன்னை அநியாயமாக நடத்துவதை தாவீது அறிந்திருந்தபோதிலும், அவர் பழிவாங்கவுமில்லை, சவுலினிடமோ அல்லது அவரைப் பற்றி பிறரிடமோ தூஷணமாக பேசவுமில்லை. வேறு பல சந்தர்ப்பங்களிலும், காரியங்களைத் தானே சரிசெய்ய தாவீது முற்படாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். யெகோவாவின் கரங்களில் அவற்றை விட்டுவிட்டு அவர் மீது சார்ந்திருந்தார்.—1 சாமுவேல் 25:32-34; 26:10, 11.
சூழ்நிலைமைகள் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றனவா?
மூன்றாவது பாடம் என்னவென்றால், நம்முடைய சூழ்நிலைமைகளை மாற்றுவதற்கு வேதப்பூர்வமற்ற வழிமுறைகளை கையாளுவதற்குப் பதிலாக, நாம் யெகோவாவுக்காக காத்திருக்க வேண்டும். சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது [“சகிப்புத்தன்மை,” NW] பூரண கிரியை செய்யக்கடவது.” (யாக்கோபு 1:4) நாம் அனுபவிக்கும் சோதனையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வேதப்பூர்வமற்ற எந்த வழிவகைகளையும் தேடாமல் அந்தச் சோதனையை முழுவதும் அதன் போக்கிலேயே செல்ல அனுமதிப்பதன் மூலம் சகிப்புத்தன்மை அதன் ‘கிரியையை பூரணமாக’ செய்ய விட்டுவிட வேண்டும். அப்பொழுது நம்முடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு புடமிடப்படும், அதன்பின்பு அது எந்தளவு தாங்கும் சக்தியுடையது என்பது வெளிப்படும். யோசேப்புக்கும் தாவீதுக்கும் இந்த மாதிரியான சகிப்புத்தன்மை இருந்தது. யெகோவாவின் வெறுப்பை சம்பாதிக்கும் எந்தவொரு தீர்வையும் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை. மாறாக, தங்களுடைய சூழ்நிலைமைகளுக்கேற்ப தங்களை நன்றாக மாற்றியமைத்துக் கொள்ள உழைத்தார்கள். அவர்கள் யெகோவாவுக்காக காத்திருந்தார்கள், அப்படி இருந்ததற்காக அவர்கள் எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள்! தமது ஜனங்களை விடுவிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் யெகோவா அவர்கள் இருவரையும் பயன்படுத்தினார்.—ஆதியாகமம் 41:39-41; 45:5; 2 சாமுவேல் 5:4, 5.
வேதப்பூர்வமற்ற தீர்வுகளைத் தேடும் சோதனைகளை நாமும் எதிர்ப்படலாம். உதாரணமாக, உங்களுக்கு இதுவரை தகுந்த மாப்பிள்ளையோ பெண்ணோ கிடைக்காததால் சோர்ந்திருக்கிறீர்களா? அப்படியானால், ‘கர்த்தருக்குட்பட்டவராயிருக்கிற ஒருவரையே’ மணமுடிக்க வேண்டுமென்ற யெகோவாவின் கட்டளையை மீறுவதற்கு உண்டாகும் எந்த ஆசையையும் தவிருங்கள். (1 கொரிந்தியர் 7:39) உங்களுடைய மண வாழ்க்கையில் பிரச்சினைகளா? பிரிந்துபோவதையும் மணவிலக்கையும் தூண்டுவிக்கிற இந்த உலகத்தின் மனப்பான்மைக்கு அடிபணிந்து விடாதீர்கள். மாறாக, பிரச்சினைகளை சேர்ந்தே சமாளிக்க முயலுங்கள். (மல்கியா 2:16; எபேசியர் 5:21-33) உங்களுடைய பொருளாதார சூழ்நிலைமையின் காரணமாக குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் அல்லாடுகிறீர்களா? யெகோவாவுக்காக காத்திருப்பது என்பது பணம் சம்பாதிப்பதற்காக கேள்விக்குரிய அல்லது சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதை உட்படுத்துகிறது. (சங்கீதம் 37:25; எபிரெயர் 13:18) ஆம், நாம் அனைவருமே நம்முடைய சூழ்நிலைமைகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ள கடினமாக உழைத்து, யெகோவா நமக்கு பலன்தரத்தக்க வகையில் நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். நாம் அப்படி செய்கையில், பூரண தீர்வு கிடைக்க யெகோவாவுக்காக காத்திருப்பதில் உறுதியுடன் இருப்போமாக.—மீகா 7:7.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
பரிசைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்!
11 உண்மையான அன்பையும் கருணையையும் காட்ட நாம் கடினமாக முயற்சி செய்தால், அவ்வளவு சீக்கிரத்தில் நாம் பொறாமைப்பட மாட்டோம். “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 13:4) பொறாமை நமக்குள் வேர்விடாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் யெகோவா பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும். நம் சகோதர சகோதரிகளை சபை என்ற ஒரே உடலின் பாகங்களாகப் பார்க்க வேண்டும். “ஓர் உறுப்புக்கு மதிப்புக் கிடைத்தால் மற்ற எல்லா உறுப்புகளும் அதனோடு சேர்ந்து சந்தோஷப்படும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 12:16-18, 26) அதனால், நம் சகோதரர்களில் யாருக்காவது நல்லது நடந்தால் நாமும் அவரோடு சேர்ந்து சந்தோஷப்பட வேண்டும்; அவரைப் பார்த்துப் பொறாமைப்படக் கூடாது. இந்த விஷயத்தில் சவுல் ராஜாவின் மகனான யோனத்தானுடைய அருமையான முன்மாதிரியை யோசித்துப் பாருங்கள். தனக்குப் பதிலாக தாவீதை ராஜாவாகக் கடவுள் தேர்ந்தெடுத்தபோது அவர் பொறாமைப்படவில்லை. சொல்லப்போனால், அவர் தாவீதை உற்சாகப்படுத்தினார்; அவருக்கு முழு ஆதரவு காட்டினார். (1 சா. 23:16-18) நம்மாலும் யோனத்தானைப் போலவே அன்பும் கருணையும் காட்ட முடியுமா?
ஏப்ரல் 25-மே 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 சாமுவேல் 25-26
“‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று எதையாவது செய்துவிடுகிறீர்களா?”
புத்திசாலியாக நடந்துகொண்டாள்
10 கடினமாய் உழைக்கிற தாவீதின் படைவீரர்கள் அந்த மேய்ப்பர்களை எப்படி நடத்தினார்கள்? அவர்கள் நினைத்திருந்தால், அவ்வப்போது நாபாலின் ஆடுகளை அபகரித்திருக்கலாம்; ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. நாபாலின் ஆடுகளையும் வேலைக்காரர்களையும் மதில்போல் காத்துவந்தார்கள். (1 சாமுவேல் 25:15, 16-ஐ வாசியுங்கள்.) ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் நிறைய ஆபத்துகள் வந்தன. கொடிய விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. ஆடுமேய்க்கும் இடங்கள் இஸ்ரவேலின் தெற்கு எல்லையருகே அமைந்திருந்ததால் பிற நாட்டு கொள்ளையரின் அட்டகாசம் வேறு இருந்தது.
11 வனாந்தரத்தில் தன்னுடன் இருந்த அத்தனை பேருக்கும் உணவளிப்பது தாவீதுக்குப் பெரும்பாடாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, ஒருநாள் நாபாலிடம் உதவி கேட்டு பத்து ஆட்களை அனுப்பினார். அது ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கும் காலம், ஒரு கொண்டாட்டமான காலம்; அப்போது, வாரி வழங்குவதும் விருந்தளிப்பதும் வழக்கம். தாவீது சரியான சந்தர்ப்பத்தில்தான் அவர்களை அனுப்பினார். பார்த்துப் பார்த்து வார்த்தைகளைக் கோர்த்து, மதிப்பும் மரியாதையும் குழைத்து செய்தி அனுப்பினார்; ‘உம்முடைய குமாரன் தாவீது’ என்றும்கூட தன்னைக் குறிப்பிட்டார்; நாபால் ஒருவேளை வயதில் மூத்தவன் என்பதால் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதற்கு நாபால் எப்படிப் பதிலளித்தான்?—1 சா. 25:5-8.
12 நாபால் கொதித்தெழுந்தான்! “காட்டுக்கத்தல் கத்தி அவர்களைக் கேவலமாகத் திட்டினான்.” கண்டவர்களுக்கெல்லாம் அப்பத்தையும் தண்ணீரையும் இறைச்சியையும் கொடுக்க முடியாதென அந்தக் கஞ்சன் கத்தினான். தாவீதை மட்டம்தட்டிப் பேசினான், கேலி செய்தான்; எஜமானருக்கு அடங்காமல் ஓடிப்போகிற வேலைக்காரரில் ஒருவன் என்பதுபோல் குறிப்பிட்டான். இதைத்தான் அபிகாயிலிடம் அந்த வேலைக்காரன் விவரித்தான். நாபாலின் மனப்பான்மையும் தாவீதை வெறுக்கிற சவுலின் மனப்பான்மையும் ஒன்றுபோலவே இருந்திருக்கலாம். இரண்டு பேருக்கும் யெகோவாவின் கண்ணோட்டம் இல்லை. தாவீதை யெகோவா நேசித்தார்; அடங்காத அடிமையாக அல்ல, இஸ்ரவேலின் அடுத்த அரசனாக அவரைப் பார்த்தார்.—1 சா. 25:10, 11, 14, NW.
புத்திசாலியாக நடந்துகொண்டாள்
18 நடந்த எல்லாவற்றுக்கும் அவள் பொறுப்பேற்றுக்கொண்டு, தன்னை மன்னிக்கும்படி தாவீதிடம் கேட்டாள். நாபால் அவனுடைய பெயருக்கு ஏற்ற மாதிரி ஒரு மூடன்தான் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டாள்; அப்படிப்பட்ட ஒருவனைத் தண்டிப்பது தாவீதுக்குத்தான் அவமானம் என்பதை மறைமுகமாகத் தெரிவித்திருக்கலாம். தாவீது யெகோவாவின் பிரதிநிதி... ‘யெகோவாவின் யுத்தங்களை நடத்துகிறவர்’... என்பதை ஒப்புக்கொண்டாள். ‘யெகோவா உங்களை இஸ்ரவேலுக்கு அதிபதியாக நியமிப்பார்’ என்று அவரிடம் சொன்னாள்; தாவீது மற்றும் அவருடைய அரசாட்சி சம்பந்தமாக யெகோவா தந்த வாக்குறுதி தனக்குத் தெரியும் என்பதை இதன் மூலம் சுட்டிக்காட்டினாள். இரத்தப்பழியைக் கொண்டுவரும் ஒரு காரியத்தை... பிற்பாடு ‘துக்கப்பட’ வைக்கும் ஒரு காரியத்தை... செய்ய வேண்டாம் என்று சொல்லி தாவீதை வருந்திக் கேட்டுக்கொண்டாள்; ‘துக்கப்பட’ என்ற வார்த்தை மனசாட்சி உறுத்தலால் பிற்பாடு மனம் வருந்துவதை அர்த்தப்படுத்தலாம். (1 சாமுவேல் 25:24-31-ஐ வாசியுங்கள்.) அவள் பேசிய வார்த்தைகள் மனதைத் தொடுகிற வார்த்தைகள்... அன்பான வார்த்தைகள்!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
புத்திசாலியாக நடந்துகொண்டாள்
16 அப்படியானால், கணவனின் தலைமை ஸ்தானத்தை அபிகாயில் தன் கையில் எடுத்துக்கொண்டாள் என்று அர்த்தமா? இல்லவே இல்லை. யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியரையே நாபால் எதிர்த்திருக்கிறான். அதனால், அவன் வீட்டு ஆட்கள் அநியாயமாய்க் கொலை செய்யப்பட்டிருப்பார்கள். அபிகாயில் மட்டும் விரைந்து செயல்படாமல் இருந்திருந்தால், கணவன் செய்த குற்றத்திற்கு அவளும் உடந்தையாகியிருக்க மாட்டாளா? இந்தச் சந்தர்ப்பத்தில், அவள் தன் கணவனுக்கு அல்ல கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டியிருக்கிறது.