வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
மே 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 36-37
“அக்கிரமக்காரர்களைப் பார்த்து எரிச்சலடையாதே”
கடவுளுடைய அரசாங்கம் வரும்போது எவையெல்லாம் ஒழிந்துவிடும்?
4 பொல்லாத ஜனங்களால் இன்று நாம் எப்படிப் பாதிக்கப்படுகிறோம்? இந்தக் கடைசி நாட்களில், “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். “பொல்லாதவர்களும் ஏமாற்றுக்காரர்களும் மேலும் மேலும் மோசமாவார்கள்” என்றும் அவர் சொன்னார். (2 தீ. 3:1-5, 13) இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறி வருவதை உங்களால் பார்க்க முடிகிறதா? பயங்கர ரவுடிகள், இன வெறியர்கள், கொடூரமான குற்றவாளிகள் போன்ற பொல்லாதவர்களால் நம்மில் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட ஆட்களில் சிலர், பகிரங்கமாகத் தவறுகள் செய்கிறார்கள். மற்றவர்கள், ஜனங்களுக்கு நல்லது செய்வது போல நடிக்கிறார்கள்; ஆனால், உண்மையில் அவர்களும் பொல்லாதவர்கள்தான்! ஒருவேளை, குற்றச் செயல்களால் நாம் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், அவை ஏதோவொரு விதத்தில் நம்மைப் பாதிக்கத்தான் செய்கின்றன. உதாரணத்துக்கு, குழந்தைகளையும் வயதானவர்களையும் அப்பாவிகளையும் இந்தப் பொல்லாதவர்கள் கொடுமைப்படுத்துவதைக் கேள்விப்படும்போது நாம் வேதனைப்படுகிறோம். இந்தப் பொல்லாதவர்கள், மிருகத்தனமாகவும் பேய்த்தனமாகவும் நடந்துகொள்கிறார்கள். (யாக். 3:15) நம்மைச் சுற்றி இது போன்ற கெட்ட செய்திகள் இருந்தாலும், யெகோவாவின் வார்த்தை நமக்கு நல்ல செய்தியைச் சொல்கிறது!
மன்னிக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
10 மனக்கசப்பு ஆபத்தானது. மனக்கசப்பு என்பது ஒரு பாறாங்கல் போல நம்முடைய மனதைப் பாரமாக்கும். அந்தப் பாரத்தை இறக்கி வைத்து நாம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார். (எபேசியர் 4:31, 32-ஐ வாசியுங்கள்.) நாம் ‘கோபத்தையும் ஆத்திரத்தையும் விட்டுவிட’ வேண்டும் என்று அவர் சொல்கிறார். (சங். 37:8) இந்த ஆலோசனையைக் கேட்டு நடப்பது நமக்குத்தான் நல்லது. ஏனென்றால், ஒருவர்மேல் கோபத்தையும் வெறுப்பையும் நாம் மனதில் வைத்துக்கொண்டிருந்தால், அது நம்முடைய உடலையும் பாதிக்கும், மனதையும் பாதிக்கும். (நீதி. 14:30) மனக்கசப்பை மனதில் வைத்திருப்பது, விஷத்தை நாம் குடித்துவிட்டு இன்னொருவர் சாக வேண்டுமென்று நினைப்பதுபோல் இருக்கிறது. அது நமக்குத்தான் ஆபத்து, மற்றவர்களுக்கு அல்ல. அதனால், நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது நமக்குநாமே நல்லது செய்துகொள்கிறோம். (நீதி. 11:17) நமக்கு மன நிம்மதி கிடைக்கும். நம்மால் யெகோவாவின் சேவையைத் தொடர்ந்து சந்தோஷமாகச் செய்யவும் முடியும்.
“யெகோவாவிடத்தில் மிகுந்த மன மகிழ்ச்சியாயிருங்கள்”
20 அதன் பின், ‘சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.’ (சங்கீதம் 37:11அ) ஆனால், இந்த சாந்தகுணமுள்ளவர்கள் யார்? ‘சாந்தம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள மூல வார்த்தை, “துன்புறுத்துதல், சிறுமைப்படுத்துதல், அவமானப்படுத்துதல்” என்ற வார்த்தைகளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆம், தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் எல்லா அநீதிகளையும் யெகோவா சரிசெய்வார் என்று மனத்தாழ்மையோடு காத்திருப்பவர்களே அந்த “சாந்தகுணமுள்ளவர்கள்.” அவர்கள் நிச்சயம் “மிகுந்த சமாதானத்தினால் மன மகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11ஆ) உண்மையான கிறிஸ்தவ சபையோடு சம்பந்தப்பட்டுள்ள ஆவிக்குரிய பரதீஸில் இன்றும்கூட மிகுந்த சமாதானம் நிலவுவதை நாம் காண்கிறோம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 445
மலை
உறுதியானது, அசைக்க முடியாதது. மலைகள் பொதுவாக உறுதியாகவும் அசைக்க முடியாததாகவும் இருக்கும். (ஏசா 54:10; ஆப 3:6; சங் 46:2-ஐ ஒப்பிடுங்கள்.) யெகோவாவுடைய நீதி, கடவுளின் “மலைகளை போல இருக்கிறது” என்று சங்கீதக்காரன் சொன்னபோது அது மாறாதது, அசைக்க முடியாதது என்று அவர் அர்த்தப்படுத்தியிருக்கலாம். (சங் 36:6) அல்லது கடவுளுடைய நீதி, மனிதர்களுடைய நீதியைவிட ரொம்ப ரொம்ப உயர்ந்தது என்ற அர்த்தத்தில் அப்படிச் சொல்லியிருக்கலாம். (ஏசா 55:8, 9-ஐ ஒப்பிடுங்கள்.) வெளிப்படுத்துதல் 16:20 சொல்கிறபடி, கடவுளுடைய கோபத்தின் ஏழாவது கிண்ணத்தை ஊற்றும்போது ‘மலைகளும் காணாமல்’ போய்விடும். அதாவது, உறுதியாக இருக்கிற மலைகள்கூட கடவுளுடைய கோபத்திலிருந்து தப்பிக்க முடியாது.—எரே 4:23-26-ஐ ஒப்பிடுங்கள்.
மே 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 38-39
அளவுக்கு அதிகமான குற்றவுணர்ச்சியைத் தூக்கியெறிந்துவிடுங்கள்
உங்களுடைய கண்கள் எதிர்காலத்தின் மீதே இருக்கட்டும்!
12 ஒன்று யோவான் 3:19, 20-ஐ வாசியுங்கள். நம் எல்லாரையுமே குற்ற உணர்வு சிலசமயங்களில் வாட்டலாம். நம்மில் சிலர், சத்தியத்துக்கு வருவதற்கு முன்பு தவறுகள் செய்திருக்கலாம். சிலர், சத்தியத்துக்கு வந்ததற்குப் பிறகு தவறுகள் செய்திருக்கலாம். இதையெல்லாம் நினைத்து குற்ற உணர்வில் வாடலாம். (ரோ. 3:23) நாம் சரியானதைச் செய்யத்தான் ஆசைப்படுகிறோம். ஆனால், “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.” (யாக். 3:2; ரோ. 7:21-23) குற்ற உணர்வோடு இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், நம்மைச் சரிசெய்துகொள்ளவும் செய்த தவறுகளைத் திரும்ப செய்யாமல் இருக்கவும் அது நமக்கு உதவும்.—எபி. 12:12, 13.
13 அதேசமயத்தில், அளவுக்கதிகமான குற்ற உணர்வில் புழுங்குவது நமக்கு ஆபத்து. நாம் கவனமாக இல்லையென்றால், நாம் மனம் திருந்தியதற்குப் பிறகும், யெகோவா நம்மை மன்னித்ததற்குப் பிறகும், நாம் குற்ற உணர்விலேயே புழுங்கிக்கொண்டிருப்போம். (சங். 31:10; 38:3, 4) ஒரு சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். முன்பு செய்த தவறை நினைத்து அவர் குற்ற உணர்வில் மூழ்கிவிட்டார். ‘என்னதான் நான் சுறுசுறுப்பா யெகோவாவுக்கு சேவை செஞ்சாலும் அதுல ஒரு பிரயோஜனமும் இல்ல. எப்படியும் நான் புது உலகத்துக்குள்ள போக போறது இல்ல’ என்று அந்தச் சகோதரி சொன்னார். நிறைய பேர் இவரைப் போலவே நினைக்கலாம். ஆனால், குற்ற உணர்வில் மூழ்கிவிடாமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். யெகோவா நம்மை மன்னித்த பிறகும் நம்மை நாம் மன்னிக்காமல் இருந்தால் சாத்தானுக்கு எவ்வளவு கொண்டாட்டமாக இருக்கும்!—2 கொரிந்தியர் 2:5-7, 11-ஐ ஒப்பிடுங்கள்.
யெகோவாவுக்கு முன்பாக நம் நாட்களை எப்படி எண்ணலாம்?
நம்முடைய ஆயுசு நாட்கள் வெகு சொற்பமாகவும் வேகமாய் கடந்து செல்வதாகவும் தோன்றுகிறது. குறுகிய வாழ்நாளைக் குறித்து ஆழ்ந்து யோசித்த சங்கீதக்காரன் தாவீது இவ்வாறு ஜெபம் செய்யும்படி தூண்டப்பட்டார்: “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது.” சொல்லிலும் செயலிலும் கடவுளுக்கு பிரியமாக வாழ வேண்டும் என்பதே தாவீதின் ஆவலாக இருந்தது. “நீரே என் நம்பிக்கை” என்று கூறி தான் கடவுளை சார்ந்திருப்பதை வெளிப்படுத்தினார். (சங்கீதம் 39:4, 5, 7) யெகோவா அந்த ஜெபத்தைக் கேட்டார். அவர் உண்மையில் தாவீதின் செயல்களை அளந்து அதற்கேற்ற பலனையும் அளித்தார்.
அவசரகதியில் பம்பரமாய் சுழலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் மும்முரமாய் மூழ்கிவிடுவது எளிது. முக்கியமாக செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் நிறைய இருக்கிறது, ஆனால் நேரமோ கொஞ்சம்; இது நம்மில் ஆதங்கத்தை ஏற்படுத்தலாம். கடவுளுடைய பிரியத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற தாவீதின் அதே ஆதங்கம்தான் நமக்கும் ஏற்படுகிறதா? யெகோவா நிச்சயமாகவே நம் ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்து ஆராய்கிறார். கடவுளுக்கு பயந்த மனிதனாகிய யோபு சுமார் 3,600 ஆண்டுகளுக்கு முன்பு, யெகோவா தன் வழிகளைப் பார்த்து தன் எல்லா செயல்களையும் ஆராய்ந்ததை ஒத்துக்கொண்டார். “அவர் விசாரிக்கும்போது நான் அவருக்கு என்ன மறு உத்தரவு சொல்லுவேன்” என யோபு கேட்டார். (யோபு 31:4-6, 14) ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுத்து கடவுளுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நம் நேரத்தை ஞானமாக பயன்படுத்துவதன் மூலம் நம் நாட்களை அவருக்கு முன்பாக மதிப்புள்ளவையாக்க முடியும். பின்வரும் விஷயங்களுக்கு மிகுந்த கவனம் செலுத்துவோமாக.
நட்பு என்ற வீட்டைத் திரும்பக் கட்ட யெகோவா உங்களுக்கு உதவுவார்
யெகோவாவிடம் அடிக்கடி பேசுங்கள். நீங்கள் குற்றவுணர்வில் புழுங்கிக்கொண்டிருந்தால், அவரிடம் பேசுவது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். (ரோ. 8:26) ஆனாலும், “விடாமல் ஜெபம் செய்யுங்கள்.” (ரோ. 12:12) யெகோவாவிடம் இருக்கிற நட்பை நீங்கள் எந்தளவுக்கு மதிக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள். “குற்ற உணர்வு என்னை வாட்டி எடுத்துச்சு. ரொம்ப அவமானமா இருந்துச்சு. ஆனா, ஒவ்வொரு தடவயும் ஜெபம் செஞ்சதுக்கு அப்புறம் அந்த எண்ணம் குறஞ்சுடுச்சு. என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருந்துச்சு” என்று அன்ட்ரேஜ் சொல்கிறார். என்ன சொல்லி ஜெபம் செய்வது என்றே உங்களுக்கு தெரியவில்லையா? கவலைப்படாதீர்கள். சங்கீதம் 51-லும் 65-லும் இருக்கிற தாவீது ராஜாவின் ஜெபத்தைப் படித்துப்பாருங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நீங்கள் நம்பகமானவர் என்பதைக் காட்டுங்கள்
16 மற்றவர்களுடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பதற்கு சுயக்கட்டுப்பாடு கண்டிப்பாகத் தேவை. அந்தக் குணம் இருந்தால்தான், ரகசியமாக வைக்க வேண்டிய விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வந்தாலும், நம்முடைய வாய்க்கு நாம் கடிவாளம் போடுவோம். (நீதிமொழிகள் 10:19-ஐ வாசியுங்கள்.) சோஷியல் மீடியாவைப் பயன்படுத்தும்போது சுயக்கட்டுப்பாடு காட்டுவது ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். ஜாக்கிரதையாக இல்லையென்றால், ரகசியமாக வைக்க வேண்டிய விஷயங்களைத் தெரியாத்தனமாக நிறைய பேருக்கு அனுப்பிவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி சோஷியல் மீடியாவில் நாம் அதைப் போட்டால், அந்த விஷயம் நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இருக்காது. அதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதனால் நிறைய ஆபத்துகளும் வரலாம். சுயக்கட்டுப்பாடு இருந்தால்தான், எதிரிகள் நம் வாயைக் கிளறினாலும் நம்முடைய சகோதர சகோதரிகளை ஆபத்தில் சிக்க வைக்கும் விஷயங்களைச் சொல்லிவிடாமல் இருப்போம். நம்முடைய வேலைக்கு கட்டுப்பாடுகளோ தடையோ போடப்பட்டிருக்கிற நாடுகளில் போலீஸ் இந்த மாதிரி விஷயங்களை நம்மிடம் கேட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதுபோன்ற சமயங்களிலும் மற்ற சமயங்களிலும் “என் வாய்க்குப் பூட்டுப்போட்டுக் காத்துக்கொள்வேன்” என்ற நியமத்தின்படி நாம் நடக்க வேண்டும். (சங். 39:1) நம்முடைய குடும்பத்தில் இருக்கிறவர்களிடம்... நண்பர்களிடம்... சகோதர சகோதரிகளிடம்... அல்லது வேறு யாரிடம் நாம் பழகினாலும், நாம் நம்பகமானவர்களாக நடந்துகொள்ள வேண்டும். அப்படி நம்பகமானவர்களாக நடந்துகொள்வதற்கு நமக்கு சுயக்கட்டுப்பாடு ரொம்பவே தேவை.
மே 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 40-41
ஏன் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்?
தாராளமாகக் கொடுப்பவர்கள் சந்தோஷமானவர்கள்
16 மனதாரக் கொடுப்பவர்கள், பதிலுக்கு ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள். “விருந்து கொடுக்கும்போது, ஏழைகளையும் உடல் ஊனமானவர்களையும் கால் ஊனமானவர்களையும் பார்வை இல்லாதவர்களையும் அழையுங்கள். அப்போது சந்தோஷப்படுவீர்கள். ஏனென்றால், உங்களுக்குக் கைமாறு செய்ய அவர்களிடம் ஒன்றும் இருக்காது” என்று இயேசு சொன்னார். (லூக். 14:13, 14) “தாராள குணமுள்ளவன் ஆசீர்வதிக்கப்படுவான்” என்றும், “ஏழைக்கு கரிசனையோடு உதவுகிறவன் சந்தோஷமானவன்” என்றும் பைபிள் சொல்கிறது. (நீதி. 22:9; சங். 41:1) மற்றவர்களுக்கு உதவ நாம் உண்மையிலேயே விரும்புவதால், நாம் தாராள குணத்தைக் காட்ட வேண்டும்.
17 இயேசு சொன்ன வார்த்தைகளை, அதாவது “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்ற வார்த்தைகளை, பவுல் குறிப்பிட்டபோது, பணம் பொருளை மற்றவர்களுக்குக் கொடுப்பதை பற்றி மட்டுமே சொல்லவில்லை. மற்றவர்களை உற்சாகப்படுத்துவது... பைபிளிலிருந்து அறிவுரைகளைச் சொல்வது... நடைமுறையான உதவிகளைச் செய்வது... ஆகியவற்றின் மூலமும் நாம் மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுக்கலாம். (அப். 20:31-35) நம்முடைய நேரத்தையும் சக்தியையும் கொடுப்பது மட்டுமல்ல, மற்றவர்களிடம் அன்பு காட்டுவதும் அவர்களைக் கவனித்துக்கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதைத் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் பவுல் காட்டினார்.
18 கொடுப்பது மனிதர்களுக்குச் சந்தோஷத்தைத் தருவதாக மனிதனுடைய நடத்தை சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளைச் செய்பவர்கள் கவனித்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு நல்லது செய்யும்போது தங்களுக்குச் சந்தோஷம் கிடைப்பதாக மக்கள் உணர்கிறார்கள் என்று ஒரு கட்டுரை சொல்கிறது. அதோடு, மற்றவர்களுக்கு உதவும்போது தங்களுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைப்பதாக மக்கள் உணர்கிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நல்ல ஆரோக்கியமும் சந்தோஷமும் வேண்டுமென்றால் பொது சேவை செய்யும்படி சில நிபுணர்கள் மக்களை உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்களுடைய ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு ஆச்சரியத்தைத் தருவதில்லை; ஏனென்றால், மற்றவர்களுக்குக் கொடுப்பது நமக்குச் சந்தோஷத்தைத் தருமென்று நம் அன்பான படைப்பாளரான யெகோவா ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.—2 தீ. 3:16, 17.
யெகோவா உங்களுக்கு பலம் கொடுப்பார்
7 அன்று வாழ்ந்த தம்முடைய ஊழியர்கள் சிலரை யெகோவா அற்புதமாகக் குணப்படுத்தவில்லை என்றாலும் அவர்களை பலப்படுத்தினார், ஆறுதல் தந்தார். அதேபோல் நம்மையும் பலப்படுத்துவார். “சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்” என்று தாவீது ராஜா எழுதினார். (சங். 41:1, 2) கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்பவர்கள் சாவே இல்லாமல் வாழ்வார்கள் என்று தாவீது சொல்லவில்லை. ஏனென்றால், தாவீது வாழ்ந்த காலத்தில் அப்படி இரக்கம் காட்டியவர்கள் நிரந்தரமாக வாழவில்லை. அப்படியென்றால், அவர்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்வார்? தாவீதே அதற்குப் பதில் சொல்கிறார்: “படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.” (சங். 41:3) யெகோவா அவருடைய மக்கள் படும் கஷ்டங்களை எல்லாம் நன்றாகத் தெரிந்துவைத்திருக்கிறார், அவர்களை மறக்கவே மாட்டார். அவர்களுக்குத் தைரியத்தையும் ஞானத்தையும் கொடுப்பார். அதுமட்டுமல்ல, வியாதி வந்தால் மனித உடல் தானாக சரியாகும் விதத்தில்தான் யெகோவா படைத்திருக்கிறார்.
யெகோவாவைப் போல் கரிசனை காட்டுங்கள்
17 கரிசனை காட்டுவதால் நாம் நன்மை அடைகிறோம் என்பது உண்மைதான். ஆனால், நாம் கரிசனை காட்டுவதற்கான முக்கியக் காரணம் அது கிடையாது. யெகோவாவைப் பின்பற்றவும் அவருக்கு மகிமையைக் கொண்டுவரவும் விரும்புவதால்தான் நாம் கரிசனை காட்டுகிறோம். அன்பு மற்றும் கரிசனையின் பிறப்பிடமே அவர்தான். (நீதி. 14:31) அவர்தான் நமக்குப் பரிபூரண முன்மாதிரி. அதனால், கரிசனை காட்டுவதன் மூலம் கடவுளைப் பின்பற்ற நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டும். அப்போது, நம்முடைய சகோதர சகோதரிகளிடம் இன்னும் நெருங்கிப் போகவும், நம்மைச் சுற்றியிருக்கும் மக்களோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ளவும் நம்மால் முடியும்.—கலா. 6:10; 1 யோ. 4:16.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 16
யெகோவா
யெகோவாவுடைய ஆட்சிதான் சரியானது என்பதைக் காட்டுவதுதான் பைபிளின் முக்கிய பொருள். அப்படியென்றால், தன்னுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும் என்பதுதான் கடவுளுடைய முக்கியமான ஆசை என்று இதிலிருந்து தெரிகிறது. இது நடக்கவேண்டும் என்றால் கடவுளுடைய பெயரில் இருக்கும் எல்லா களங்கமும் நீக்கப்பட வேண்டும். ஆனால் அதைவிட முக்கியமாக, பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற புத்திக்கூர்மையுள்ள எல்லா உயிரினங்களும் யெகோவாவுடைய உன்னத அதிகாரத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அவருக்கு மனப்பூர்வமாக சேவை செய்ய வேண்டும். அவர்மீது இருக்கும் அன்பினால் அவருக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும். இதைப் பற்றியும் யெகோவாவுடைய பெயர் உண்மையிலேயே பரிசுத்தப்பட வேண்டும் என்பதைப் பற்றியும்தான் சங்கீதம் 40:5-10-ல் தாவீது ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறார். (இந்த சங்கீதத்தில் சொல்லியிருக்கிற விஷயங்கள் எபி 10:5-10-ல் இயேசு கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லியிருக்கிற விஷயங்களோடு எப்படிப் பொருந்துகிறது என்று பாருங்கள்.)
மே 27–ஜூன் 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 42-44
யெகோவா கற்றுத்தரும் விஷயங்களிலிருந்து நன்மையடையுங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—இரண்டாம் பகுதி
42:4, 5, 11; 43:3-5. எதிர்பாராத ஏதோவொரு காரணத்தினால், கிறிஸ்தவ சபையிலிருந்து தற்காலிகமாக பிரிந்திருக்க வேண்டியிருந்தால், சபையுடன் முன்பு அனுபவித்த சந்தோஷத்தை அப்போது நினைத்துப் பார்ப்பது நம்மை பலப்படுத்துகிறது. ஆரம்பத்தில் தனிமையுணர்வு நம்மை வாட்டியெடுத்தாலும் கடவுள் நம் அடைக்கலம் என்பதையும் இரட்சிப்புக்காக அவரை நோக்கிக் காத்திருக்க வேண்டும் என்பதையும் அது நமக்கு நினைவுபடுத்தலாம்.
படிப்பை ரசிக்க... பலனை ருசிக்க...
1 ஜெபம் செய்யுங்கள்: எடுக்க வேண்டிய முதல் படி ஜெபம் செய்வதாகும். (சங். 42:8) ஏன்? கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதை நம் வழிபாட்டின் ஒரு பாகமாய்க் கருத வேண்டும். ஆகவே, சரியான மனநிலையும் கடவுளது சக்தியும் பெற அவரிடம் மன்றாட வேண்டும். (லூக். 11:13) நெடுங்காலமாய் மிஷனரி சேவை செய்யும் பார்பரா இவ்வாறு கூறுகிறார்: “பைபிளை வாசிப்பதற்கும் கருத்தூன்றிப் படிப்பதற்கும் முன்பு நான் எப்போதும் ஜெபம் செய்வேன். அதற்குப்பின், யெகோவா என்னோடு இருப்பது போலவும் அந்தப் படிப்பை ஆசீர்வதிப்பது போலவும் உணருகிறேன்.” படிப்பதற்கு முன்பு ஜெபம் செய்யும்போது நமக்குமுன் வைக்கப்பட்டுள்ள அபரிமிதமான ஆன்மீக உணவை முழுமையாக ஏற்றுக்கொள்ள நம்முடைய மனமும் இருதயமும் பக்குவமடைகின்றன.
‘உங்கள் கைகளைத் தளரவிடாதீர்கள்’
11 நம்முடைய கூட்டங்கள், மாநாடுகள், மற்றும் பைபிள் பள்ளிகளிலிருந்து கிடைக்கிற ஆலோசனைகள் மூலமாகவும் யெகோவா நம்மைப் பலப்படுத்துகிறார். சரியான உள்நோக்கத்தோடு கடவுளுக்குச் சேவை செய்ய இந்த ஆலோசனைகள் நமக்கு உதவுகின்றன. அதோடு, இலக்குகள் வைக்கவும், கடவுளுடைய சேவையில் நமக்கு இருக்கும் பொறுப்புகளைச் சரியாகச் செய்யவும் அவை உதவுகின்றன. (சங். 119:32) யெகோவா கொடுக்கிற ஆலோசனைகள் மூலம் பலம் பெறுவதற்கு நீங்கள் ஆர்வமாக முயற்சி செய்கிறீர்களா?
12 அமலேக்கியர்களையும் எத்தியோப்பியர்களையும் தோற்கடிக்க யெகோவா இஸ்ரவேலர்களுக்கு உதவி செய்தார். அதுமட்டுமல்ல, எருசலேமின் சுவரைத் திரும்பக் கட்டி முடிப்பதற்கு நெகேமியாவுக்கும் யூதர்களுக்கும் பலம் கொடுத்தார். அதே போல், எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும், எதிர்ப்புகள் வந்தாலும், நம் செய்தியை மற்றவர்கள் கேட்காமல் போனாலும் நாம் தொடர்ந்து ஊழியம் செய்ய அவர் நமக்குப் பலம் கொடுப்பார். (1 பே. 5:10) யெகோவா நம் பிரச்சினைகளை அற்புதமான விதத்தில் சரிசெய்ய மாட்டார். பிரச்சினைகளைச் சமாளிக்க, நம்முடைய பங்கில் நாம் தொடர்ந்து முயற்சி எடுப்பது அவசியம். அதற்கு, நாம் தினமும் பைபிளை வாசிக்க வேண்டும், கூட்டங்களுக்குத் தயாரிக்க வேண்டும், ஒவ்வொரு வாரமும் தவறாமல் கூட்டங்களுக்குப் போக வேண்டும். அதோடு, தனிப்பட்ட படிப்பையும் குடும்ப வழிபாட்டையும் தவறவிடக்கூடாது. விடாமல் ஜெபம் செய்ய வேண்டும், எப்போதும் யெகோவாவை நம்பியிருக்க வேண்டும். நம்மைப் பலப்படுத்தவும் உற்சாகப்படுத்தவும் யெகோவா செய்திருக்கிற ஏற்பாடுகளிலிருந்து நம் கவனத்தைத் திசை திருப்ப எதையும் அனுமதிக்கக்கூடாது. ஒருவேளை, இவற்றில் ஏதாவது ஒன்றை நீங்கள் சரியாகச் செய்யாதது போல் தெரிந்தால் உதவிக்காக யெகோவாவிடம் கேளுங்கள். அப்போது, செயல்படுவதற்கான ஆர்வத்தையும் வல்லமையையும் கடவுளுடைய சக்தி உங்களுக்குத் தரும். (பிலி. 2:13) உங்களால் மற்றவர்களுடைய கைகளைப் பலப்படுத்த முடியுமா, அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1242
நரி
பைபிளில், நரிகள் பொதுவாக அடையாள அர்த்தத்தில் அல்லது உதாரணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யோபு அவருடைய பரிதாபமான நிலையைப் பற்றிச் சொல்லும்போது, “நரிகளுக்குச் சகோதரன் ஆனேன்” என்று சொன்னார். (யோபு 30:29) கடவுளுடைய மக்களாக இருந்த இஸ்ரவேலர்கள், எதிரிகளிடம் அவமானப்பட்டு தோற்றுப்போனதைப் பற்றிச் சொன்னபோது, “நரிகள் வாழும் இடத்தில் நீங்கள் எங்களை நொறுக்கித்தள்ளினீர்கள்” என்று சங்கீதக்காரன் புலம்பினார். (சங் 44:19) ஒருவேளை போர்க்களத்தில் பிணங்களைச் சாப்பிட வரும் நரிகளை மனதில் வைத்து அவர் இப்படிச் சொல்லியிருக்கலாம். (சங் 68:23-ஐ ஒப்பிடுங்கள்.) கி.மு. 607-ல் எருசலேமை பாபிலோன் படை முற்றுகையிட்டது. அப்போது பஞ்சம் தலைவிரித்தாடியது. அம்மாக்கள் எல்லாரும் அவர்கள் பெற்ற பிள்ளைகளையே ரொம்ப கொடூரமாக நடத்தினார்கள். அவர்கள் எவ்வளவு கொடூரமாக நடந்துகொண்டார்கள் என்பதை எரேமியா விவரித்தார். நரிகள்கூட அதன் குட்டிகளைப் பாசமாகப் பார்த்துக்கொள்ளும், ஆனால் ‘என்னுடைய ஜனங்கள்’ அவர்களுடைய பிள்ளைகளையே மோசமாக நடத்துகிறார்கள் என்று அவர் சொன்னார்.—புல 4:3, 10.
ஜூன் 3-9
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 45-47
ஒரு ராஜாவின் திருமணத்தைப் பற்றிய பாடல்
ஆட்டுக்குட்டியானவரின் திருமணம்—மனமகிழுங்கள்
8 சங்கீதம் 45:13, 14அ-ஐ வாசியுங்கள். மணமகள், அரச மாளிகையில் நடக்கும் திருமணத்திற்கு ‘பூரண மகிமையுள்ளவளாக’ கொண்டுவரப்படுகிறாள். வெளிப்படுத்துதல் 21:2-ல் இந்த மணமகள் புதிய எருசலேமாகிய ஒரு நகரத்திற்கு ஒப்பிடப்படுகிறாள்; அவள் ‘மணமகனுக்காக அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள்.’ இந்தப் பரலோக நகரம் ‘கடவுளுடைய மகிமையைப் பெற்றிருக்கிறது’; ‘மிகவும் விலை உயர்ந்த மணிக்கல்லாகிய சூரியகாந்தக்கல்லைப் போல் பளபளவென ஒளிவீசுகிறது.’ (வெளி. 21:10, 11) இந்தப் புதிய எருசலேமின் மகிமையை வெளிப்படுத்துதல் புத்தகம் மிக அழகாக வர்ணிக்கிறது. (வெளி. 21:18-21) ஆகவே, இந்த மணமகளை, “பூரண மகிமையுள்ளவள்” என சங்கீதக்காரன் சித்தரிப்பதில் வியப்பேதும் இல்லை. அதுமட்டுமா, இந்த ராஜகுலத் திருமணம் பரலோகத்தில் நடைபெறுகிறதே!
9 அந்த மணமகள், மேசியானிய ராஜாவான மணமகனிடத்திற்கு அழைத்துவரப்படுகிறாள். அவர் அவளை, ‘கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரினால் சுத்தப்படுத்தி’ தயார்படுத்தியிருப்பதால், அவள் ‘பரிசுத்தமானவளாக, களங்கமில்லாதவளாக’ இருக்கிறாள். (எபே. 5:26, 27) மணமகனைப் போலவே, அவளும் திருமணத்திற்கு ஏற்ற உடையை அணிந்திருக்கிறாள். ஆம், அவளுடைய “உடை பொற்சரிகையாயிருக்கிறது. சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுகிறாள்.” ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்திற்காக, “பளபளப்பான, சுத்தமான நார்ப்பட்டு ஆடையை அணிந்துகொள்ளும் பாக்கியம் அவளுக்கு அருளப்பட்டது; அந்த நார்ப்பட்டு ஆடை பரிசுத்தவான்களுடைய நீதியான செயல்களைக் குறிக்கிறது.”—வெளி. 19:8.
வெளிப்படுத்துதல்—உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது?
10 கடவுளுடைய மக்களை எதிரி கொடூரமாகத் தாக்கும்போது யெகோவா என்ன செய்வார்? அவருடைய “கோபம் நெருப்பாகப் பற்றியெரியும்” என்று பைபிள் சொல்கிறது. (எசே. 38:18, 21-23) அடுத்ததாக என்ன நடக்கும் என்பதைப் பற்றி வெளிப்படுத்துதல் 19-வது அதிகாரம் சொல்கிறது. யெகோவா தன்னுடைய மகனை அனுப்பி தன்னுடைய மக்களைப் பாதுகாப்பார், எதிரிகளைத் தோற்கடிப்பார். உண்மையுள்ள தூதர்களும் 1,44,000 பேரும் சேர்ந்த “பரலோகப் படைவீரர்கள்” இயேசுவோடு ஒன்றுசேர்ந்து எதிரிகளைத் தாக்குவார்கள். (வெளி. 17:14; 19:11-15) இந்தப் போரின் முடிவில் என்ன நடக்கும்? யெகோவாவை எதிர்க்கிற எல்லா மக்களும் அமைப்புகளும் அடியோடு அழிக்கப்படுவார்கள்.—வெளிப்படுத்துதல் 19:19-21-ஐ வாசியுங்கள்.
11 கடவுளுடைய எதிரிகள் அடியோடு அழிக்கப்பட்டதற்குப் பிறகு, அவருக்கு உண்மையாக இருக்கிற மக்கள் எப்படி உணருவார்கள்? அவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! மகா பாபிலோன் அழிக்கப்படும்போது பரலோகத்தில் இருப்பவர்கள் ரொம்பச் சந்தோஷப்பட்டாலும், அவர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே போகும் அளவுக்கு இன்னொரு விஷயமும் நடக்கும். (வெளி. 19:1-3) அதுதான், “ஆட்டுக்குட்டியானவரின் திருமணம்.” சொல்லப்போனால், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற முக்கியமான ஒரு சம்பவம் இது.—வெளி. 19:6-9.
12 அந்தத் திருமணம் எப்போது நடக்கும்? அர்மகெதோன் போருக்குக் கொஞ்சம் முன்னால் 1,44,000 பேர் எல்லாருமே பரலோகத்தில் இருப்பார்கள். ஆனாலும், அந்தச் சமயத்தில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் நடக்காது. (வெளிப்படுத்துதல் 21:1, 2-ஐ வாசியுங்கள்.) அர்மகெதோன் போர் முடிந்து கடவுளுடைய எதிரிகள் எல்லாரும் அழிக்கப்பட்டதற்குப் பிறகுதான் அந்தத் திருமணம் நடக்கும்.—சங். 45:3, 4, 13-17.
it-2-E பக். 1169
போர்
அர்மகெதோன் போர் முடிந்த பிறகு, பூமியில் ஆயிரம் வருஷங்களுக்கு சமாதானம் இருக்கும். “[யெகோவா] பூமி முழுவதும் போர்களுக்கு முடிவு கட்டுகிறார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார். போர் ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்கிறார்” என்று சங்கீதக்காரன் சொன்னார். கடவுள், எதிரிகளுடைய போர் ஆயுதங்களை எல்லாம் ஒழித்து இஸ்ரவேல் மக்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவந்தபோது இந்தத் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றம் நடந்தது. அர்மகெதோன் போரைத் தூண்டிவிடுகிற எல்லா எதிரிகளையும் இயேசு அழித்த பிறகு, இந்தப் பூமி முழுவதும் சமாதானமும் சந்தோஷமும் இருக்கும். (சங் 46:8-10) அதன்பிறகு, மக்கள் என்றென்றும் வாழ்வார்கள். “அவர்கள் தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவார்கள். ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பார்கள்.” அதோடு, “போர் செய்ய இனி யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.” இந்தத் தீர்க்கதரிசனத்தை நாம் ஏன் நம்பலாம்? ஏனென்றால், “பரலோக படைகளின் யெகோவா இதைச் சொல்லியிருக்கிறார்.”—ஏசா 2:4; மீ 4:3, 4.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கடவுளுடைய அரசாங்கம் வரும்போது எவையெல்லாம் ஒழிந்துவிடும்?
9 ஊழல் நிறைந்த அரசாங்கங்களை எது மாற்றீடு செய்யும்? அர்மகெதோனுக்குப் பிறகு, எந்த அமைப்பாவது இந்தப் பூமியில் இருக்குமா? “நீதி குடியிருக்கிற புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்” என்று பைபிள் சொல்கிறது. (2 பே. 3:13) பழைய வானம் மற்றும் பூமி என்பது, ஊழல் நிறைந்த அரசாங்கங்களையும், அவற்றின் பிடியில் இருக்கிற மக்களையும் குறிக்கிறது. இவை ஒழிந்த பிறகு, “புதிய வானமும் புதிய பூமியும்” உண்டாகும். புதிய வானம் என்பது, புதிய அரசாங்கத்தைக் குறிக்கிறது. அந்த அரசாங்கத்தில், இயேசு கிறிஸ்துவும் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்யும் 1,44,000 பேரும் இருப்பார்கள். புதிய பூமி என்பது, கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களைக் குறிக்கிறது. இயேசு கிறிஸ்துவின் தலைமையின் கீழ் ஆளப்படும் அரசாங்கம், குழப்பத்தின் கடவுளாக இல்லாத யெகோவாவின் குணாதிசயங்களை அப்படியே வெளிக்காட்டும். (1 கொ. 14:33) அதனால், “புதிய பூமி” நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை! எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள நல்ல ஆண்கள் அங்கே இருப்பார்கள். (சங். 45:16) கிறிஸ்துவும் 1,44,000 பேரும் அவர்களை வழிநடத்துவார்கள். ஊழல் நிறைந்த எல்லா அமைப்புகளும் அழிக்கப்பட்ட பிறகு, ஒன்றிணைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் ஏற்படுத்தப்படும். அந்த அரசாங்கத்தை எதுவும் கறைப்படுத்த முடியாது. இவையெல்லாம் நிறைவேறப்போகிற அந்தக் காலத்தைப் பற்றி கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்!
ஜூன் 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 48-50
பெற்றோர்களே—அமைப்புமீது உங்கள் குடும்பத்துக்கு இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள்
யெகோவாவை வணங்கும்போது உங்கள் சந்தோஷம் அதிகமாகும்
11 யெகோவாவின் வார்த்தையை ஆழமாகப் படிக்கும்போதும், அவரைப் பற்றிப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்போதும் நாம் அவரை வணங்குகிறோம். ஓய்வுநாளில் இஸ்ரவேலர்கள் வேறெந்த வேலையும் செய்யவில்லை, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்காக அந்த நாளைப் பயன்படுத்தினார்கள். (யாத். 31:16, 17) யெகோவாவுக்கு உண்மையாக இருந்த நிறைய பேர் அவரைப் பற்றியும், அவர் செய்த நல்ல நல்ல விஷயங்களைப் பற்றியும், தங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தார்கள். இன்றைக்கு நாமும் பைபிளை வாசிப்பதற்கும் அதை ஆராய்ச்சி செய்து படிப்பதற்கும் மற்ற வேலைகளிலிருந்து கொஞ்ச நேரத்தை ஒதுக்க வேண்டும். ஏனென்றால், அது நம்முடைய வணக்கத்தின் ஒரு பாகம். யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு அது உதவும். (சங். 73:28) குடும்பமாக பைபிளை ஆராய்ச்சி செய்து படிக்கும்போது, யெகோவா அப்பாவோடு நல்ல நட்பை வைத்துக்கொள்ள வருங்கால தலைமுறைக்கு, அதாவது நம்முடைய பிள்ளைகளுக்கு, நம்மால் உதவ முடியும்.—சங்கீதம் 48:13-ஐ வாசியுங்கள்.
மகிழ்ச்சியில் திளைக்க...
“சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள். பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள்.” (சங். 48:12, 13) எருசலேமை அருகில் சென்று பார்க்கும்படி இந்தச் சங்கீதக்காரன் இஸ்ரவேலரை ஊக்கப்படுத்தினார். வருடாந்தர பண்டிகைகளுக்காக அந்தப் பரிசுத்த நகரத்திற்குச் சென்று, அதன் பிரமாண்டமான ஆலயத்தைப் பார்த்துவிட்டு வந்த இஸ்ரவேல குடும்பங்கள் அதைப் பற்றி ஆசை ஆசையாகப் பேசிக்கொள்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அதை ‘பின்வரும் சந்ததிக்கு விவரிக்க’ அவர்கள் தூண்டப்பட்டிருக்க வேண்டும்.
சேபா நாட்டு ராணியை எடுத்துக்கொள்ளுங்கள். சாலொமோனின் சீரும்சிறப்புமிக்க ஆட்சியையும் அவர் பெற்றிருந்த அளவற்ற ஞானத்தையும் பற்றிக் கேள்விப்பட்டவற்றை அவள் முதலில் நம்பவில்லை. தான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான் என எது அவளுக்கு உறுதிப்படுத்தியது? “நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை” என்று அவள் சொன்னாள். (2 நா. 9:6) உண்மைதான், நம்முடைய “கண்களால்” காண்பவை நம்மைச் செயல்படத் தூண்டும்.
யெகோவாவுடைய அமைப்பின் வியத்தகு செயல்களை உங்கள் பிள்ளைகளும் தங்கள் “கண்களால்” காண நீங்கள் எப்படி உதவலாம்? உங்கள் வீட்டுக்கு அருகில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் இருக்கிறதா? அப்படியென்றால் அதைப் போய்ப் பார்ப்பதற்கு முயற்சி எடுங்கள். மாண்டி, பெத்தனி என்பவர்களின் உதாரணத்தைக் கவனியுங்கள். தங்கள் நாட்டிலுள்ள பெத்தேலிலிருந்து அவர்கள் சுமார் 1,500 கிலோமீட்டர் (900 மைல்) தூரத்தில் வசித்து வந்தார்கள். இருந்தாலும், அவர்கள் வளர்ந்து வருகையில் அவர்களுடைய பெற்றோர் அடிக்கடி அவர்களை பெத்தேலுக்கு அழைத்துச் சென்று சுற்றிக்காட்டினார்கள். “பெத்தேலைச் சுற்றுப் பார்ப்பதற்கு முன்பு ‘இது கட்டுப்பாடுமிக்க இடம், வயதானவர்களுக்குத்தான் சரிப்பட்டுவரும்’ என்று நினைத்தோம். ஆனால், யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்து வருகிற இளைஞர்களைச் சந்தித்தோம். யெகோவாவின் அமைப்பு எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதைப் புரிந்துகொண்டோம்; ஒவ்வொரு முறையும் நாங்கள் பெத்தேலுக்குப் போய் வந்தபோது யெகோவாவுடன் உள்ள எங்கள் பந்தம் பலப்பட்டது, அவருக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆர்வம் பிறந்தது” என்று அவர்கள் சொல்கிறார்கள். மாண்டியும் பெத்தனியும் கடவுளுடைய அமைப்பை அருகே சென்று பார்த்ததால், பயனியர் சேவை செய்ய தூண்டப்பட்டார்கள்; தற்காலிக வாலண்டியர்களாக பெத்தேலில் சேவை செய்யும் வாய்ப்பையும் பெற்றார்கள்.
கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக நடந்துகொள்ளுங்கள்!
5 சரித்திரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாட்டின் குடிமகனாய் ஆக விரும்பும் ஒருவர் அந்நாட்டு அரசாங்கத்தின் சரித்திரத்தைப் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக ஆக விரும்புகிறவர்கள் அந்த அரசாங்கத்தைப் பற்றி முடிந்தவரை எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில், பூர்வ இஸ்ரவேலர் மத்தியில் சேவை செய்த கோராகுவின் மகன்கள் நமக்கு முன்மாதிரியாய் இருக்கிறார்கள். எருசலேம் நகரத்தையும் அதன் வழிபாட்டு ஸ்தலத்தையும் அவர்கள் மிகவும் நேசித்தார்கள். அந்த நகரத்தின் சரித்திரத்தைப் பற்றிப் பேசுவதில் பெருமைப்பட்டார்கள். எருசலேம் நகரமோ வழிபாட்டு ஸ்தலமோ அல்ல, அவை எதற்குப் படமாக இருந்தனவோ அதுவே அவர்களுடைய மனதைக் கவர்ந்தது. எருசலேம் ‘மகா ராஜாவின் நகரமாக’ ஆம், யெகோவாவின் நகரமாகத் திகழ்ந்தது. ஏனென்றால், அதுதான் உண்மை வழிபாட்டின் மையமாக இருந்தது. யெகோவா கொடுத்த திருச்சட்டம் அங்குதான் கற்பிக்கப்பட்டது. எருசலேம் ராஜா ஆட்சிசெய்த மக்களுக்குத்தான் யெகோவா அன்பும் கருணையும் காட்டினார். (சங்கீதம் 48:1, 2, 9, 12, 13-ஐ வாசியுங்கள்.) கோராகுவின் மகன்களைப் போல், பூமியில் யெகோவா பயன்படுத்தி வரும் அமைப்பின் சரித்திரத்தைத் தெரிந்துகொள்ளவும் அதைப் பற்றி மக்களிடம் பேசவும் நீங்கள் விரும்புகிறீர்களா? யெகோவாவின் அமைப்பைப் பற்றியும் தம்முடைய மக்களுக்கு அவர் பக்கபலமாக இருப்பதைப் பற்றியும் நீங்கள் எந்தளவு தெரிந்துகொள்கிறீர்களோ அந்தளவு அவருடைய அரசாங்கத்தை நிஜமான ஓர் அரசாங்கமாகக் கருதுவீர்கள். அந்த அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென்ற ஆசை நாளுக்கு நாள் உங்களுக்குள் பெருகும்.—எரே. 9:24; லூக். 4:43.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 805
சொத்துகள்
இஸ்ரவேலர்களுக்கு சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் நிறைய இருந்தது. அவர்கள் ஒரு செழிப்பான நாடாக இருந்தார்கள். (1ரா 4:20; பிர 5:18, 19) அவர்களிடம் சொத்துசுகம் இருந்ததால், வறுமையில் கஷ்டப்படுகிற அளவுக்கு யாரும் ஏழைகளாக இல்லை. (நீதி 10:15; பிர 7:12) அவர்களுடைய கடின உழைப்பினால் கிடைக்கும் பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் யெகோவாவுடைய ஆசையாக இருந்தது. (நீதி 6:6-11; 20:13; 24:33, 34-ஐ ஒப்பிடுங்கள்.) அதேசமயத்தில், அவர்களிடம் இருக்கும் சொத்துசுகங்களை அவர்கள் முழுமையாக நம்பிவிடக் கூடாது... அவர்களிடம் இருப்பது எல்லாமே யெகோவா கொடுத்ததுதான் என்பதை மறந்துவிடக் கூடாது... என்று யெகோவா அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (உபா 8:7-17; சங் 49:6-9; நீதி 11:4; 18:10, 11; எரே 9:23, 24) அவர்களிடம் இருக்கும் சொத்துசுகங்கள் எதுவுமே நிரந்தரம் கிடையாது. (நீதி 23:4, 5) அவையெல்லாம் அவர்களுடைய உயிருக்கு மீட்புவிலையாகவும் இருக்க முடியாது. (சங் 49:6, 7) செத்த பிறகு ஒருவருடைய சொத்துசுகம் எதுவுமே அவருக்கு உதவாது. (சங் 49:16, 17; பிர 5:15) இஸ்ரவேலர்களுக்கு ஒரு எச்சரிப்பும் கிடைத்தது. அவர்களிடம் இருக்கும் சொத்துசுகங்களைப் பெரிதாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றால், அவர்கள் கடவுளுக்கு உண்மையில்லாமல் போய்விடுவார்கள், கடவுளும் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவார். (நீதி 28:20; ஒப்பிடுங்கள்: எரே 5:26-28; 17:9-11) அதனால் இஸ்ரவேலர்கள் ‘தங்களிடம் இருந்த மதிப்புமிக்க பொருளை வைத்து யெகோவாவை மகிமைப்படுத்த’ வேண்டியிருந்தது.—நீதி 3:9.
ஜூன் 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 51-53
பெரிய பாவங்களைச் செய்யாமல் இருக்க உறுதியாக இருங்கள்
உங்கள் இதயத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
4 நீதிமொழிகள் 4:23-ல் இருக்கிற ‘இதயம்’ என்ற வார்த்தை உள்ளான மனிதனை அல்லது உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், ‘இதயம்’ என்ற வார்த்தை நம்முடைய யோசனைகளையும், உணர்வுகளையும், எண்ணங்களையும், ஆசைகளையும் குறிக்கிறது. முக்கியமாக, வெளித்தோற்றத்தில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அல்ல, உள்ளுக்குள் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது.
5 நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பது ரொம்பவே முக்கியம். இதைப் புரிந்துகொள்ள, உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். முதலாவதாக, உடலளவில் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், சத்தான உணவைச் சாப்பிட வேண்டும்; தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல், ஆன்மீக விதத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், சத்தான ஆன்மீக உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்; யெகோவாமேல் இருக்கும் விசுவாசத்தைத் தவறாமல் காட்ட வேண்டும். அதற்கு, நாம் கற்றுக்கொண்ட விஷயங்களின்படி செய்ய வேண்டும்; நம் விசுவாசத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேச வேண்டும். (ரோ. 10:8-10; யாக். 2:26) இரண்டாவதாக, நம்முடைய வெளித்தோற்றத்தை வைத்து நாம் ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், உள்ளுக்குள் நமக்கு ஏதோவொரு வியாதி இருக்கலாம். அதேபோல், ஆன்மீக விஷயங்களில் நாம் தினமும் சுறுசுறுப்பாக இருப்பதால், விசுவாசத்தில் பலமாக இருப்பதாக நினைத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால், கெட்ட ஆசைகள் நமக்குள் வேர்விட ஆரம்பித்திருக்கலாம். (1 கொ. 10:12; யாக். 1:14, 15) தன்னுடைய யோசனைகளின் மூலம் சாத்தான் நம்முடைய யோசனைகளைக் கறைபடுத்த முயற்சி செய்வான் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால், அதை அவன் எப்படிச் செய்வான்? நம்மைப் எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
நம்மால் ஒழுக்கமாக இருக்க முடியும்!
5 நாம் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட வேண்டுமென்றால் உதவிக்காக யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். அப்போது, யெகோவா அவருடைய சக்தியைக் கொடுத்து நமக்கு உதவுவார். ஜெபம் செய்யும்போது, நம் எண்ணங்கள் அவருக்கு ஏற்றதாக இருக்க உதவும்படி யெகோவாவிடம் கேட்கலாம். (சங். 19:14) பாவம் செய்ய தூண்டும் தவறான ஆசைகள் ஏதாவது நம் இருதயத்தில் இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கும்படியும் அவரிடம் சொல்லலாம். (சங். 139:23, 24) தவறு செய்யும் சூழ்நிலை வந்தால்கூட அவருக்கு உண்மையாக இருக்க உதவும்படி அவரிடம் தொடர்ந்து கேட்கலாம்.—மத். 6:13.
6 யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் அவருக்குப் பிடிக்காத விஷயங்களை நாம் செய்துகொண்டு இருந்திருக்கலாம். இப்போதும், அந்த விஷயங்களைத் தவிர்ப்பதற்கு நாம் போராடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், நம்மை மாற்றிக்கொள்வதற்கும் அவருக்குப் பிடித்ததை செய்வதற்கும் யெகோவா உதவி செய்வார். உதாரணத்திற்கு, தாவீது ராஜா பத்சேபாளோடு தவறான உறவு வைத்துக்கொண்டார். பிறகு, அதை நினைத்து மனம் வருந்தினார். ‘சுத்தமான இருதயத்தை’ கொடுக்கும்படியும் கீழ்ப்படிந்து நடக்க உதவி செய்யும்படியும் யெகோவாவிடம் கெஞ்சினார். (சங். 51:10, 12) தவறான ஆசைகள் நம் மனதில் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருந்தாலும் சரி, அதைக் கட்டுப்படுத்த யெகோவா நமக்கு உதவி செய்வார். அதோடு, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்... சரியானதை செய்ய வேண்டும்... என்ற நம் ஆசையை அதிகரிக்கவும் அவர் உதவி செய்வார்.—சங். 119:133.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 644
தோவேக்
தோவேக் ஒரு ஏதோமியன். சவுல் ராஜாவுடைய மேய்ப்பர்களுக்குத் தலைவன். (1சா 21:7; 22:9) அவன் யூத மதத்துக்கு மாறியவனாக இருந்திருக்கலாம். நோபுவில் இருந்த யெகோவாவுடைய வழிபாட்டுக் கூடாரத்துக்கு ஏதோவொரு கட்டாயத்தினால் அவன் வந்திருந்தான். ஒருவேளை நேர்த்திக்கடன் கொடுப்பதற்காகவோ, தீட்டுப்பட்டதாலோ, தொழுநோய் இருக்கும் என்று சந்தேகப்பட்டதாலோ அவன் அங்கு வந்திருக்கலாம். அந்த சமயத்தில் தலைமை குரு அகிமெலேக்கு தாவீதுக்குப் படையல் ரொட்டியையும் கோலியாத்துடைய வாளையும் கொடுப்பதை அவன் பார்த்தான். சவுல் தனக்கு எதிராக துரோகம் நடக்கிறதா என்று சந்தேகப்பட்டபோது தோவேக், தான் பார்த்ததைப் போய் அவரிடம் சொன்னான். அப்போது சவுல் ராஜா குருமார்களையெல்லாம் கொல்ல வேண்டும் என்று கட்டளையிட்டார். அதைச் செய்ய அவருடைய காவலாளிகள் எல்லாரும் தயங்கிக்கொண்டிருந்தபோது, தோவேக் எந்தத் தயக்கமும் இல்லாமல் சவுலுடைய பேச்சைக் கேட்டு 85 குருமார்களைக் கொன்றான். அதுமட்டுமல்ல, நோபுவையும் அதிலிருந்த சிறியவர்கள் பெரியவர்கள் என எல்லாரையும், ஏன், மிருகங்களையும்கூட கொன்றுபோட்டான்.—1சா 22:6-20.
சங்கீதம் 52-ன் மேற்குறிப்பில் சொல்லியிருப்பதுபோல், தாவீது தோவேக்கைப் பற்றி இப்படி எழுதினார்: “உன் நாவு கத்திபோல் கூர்மையாக இருக்கிறது. அது சதித்திட்டம் தீட்டுகிறது, பித்தலாட்டம் செய்கிறது. நல்லதைவிட கெட்டதைத்தான் நீ அதிகமாக விரும்புகிறாய். உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதைத்தான் விரும்புகிறாய். பொய் நாவு உள்ளவனே, தீமையான வார்த்தைகளையே நீ பேச விரும்புகிறாய்.”—சங் 52:2-4.
ஜூன் 24-30
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 54-56
கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார்
w06 8/1 பக். 22-23 பாரா. 10-11
கடவுளுக்குப் பயந்து—ஞானமுள்ளவர்களாய் இருங்கள்!
10 ஒரு சந்தர்ப்பத்தில், பெலிஸ்த பட்டணமாகிய காத்தின் ராஜாவான ஆகீசிடத்தில் தாவீது அடைக்கலம் தேடினார். அது கோலியாத்தின் ஊர். (1 சாமுவேல் 21:10-15) இந்த ராஜாவின் ஊழியக்காரர், தாவீதை தங்கள் தேசத்தின் எதிரி என எல்லார் முன்பாகவும் தெரிவித்துவிட்டார்கள். அந்த ஆபத்தான சூழ்நிலையில் தாவீது எப்படி நடந்துகொண்டார்? தன்னுடைய பாரத்தையெல்லாம் யெகோவாவிடம் ஜெபத்தில் கொட்டினார். (சங்கீதம் 56:1-4, 11-13) அங்கிருந்து தப்புவதற்கு பைத்தியம் பிடித்தவரைப்போல் அவர் பாசாங்கு செய்தார்; இருந்தாலும், தன்னுடைய முயற்சிகளுக்குப் பலன் அளித்ததும், தன்னைக் காப்பாற்றியதும் யெகோவாவே என்பதை தாவீது அறிந்திருந்தார். அவர் முழு இருதயத்தோடு யெகோவாவை சார்ந்திருந்ததும் அவர்மேல் நம்பிக்கையாய் இருந்ததும், அவர் உண்மையிலேயே தேவபயமுள்ளவர் என்பதைக் காட்டின.—சங்கீதம் 34:4-6, 9-11.
11 பிரச்சினைகளைச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கடவுள் கொடுத்த வாக்குறுதியை நம்புவதன் மூலம் தாவீதைப் போல நாமும் தேவபயத்தைக் காட்டலாம். “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்” என தாவீது சொன்னார். (சங்கீதம் 37:5) இது, நம் பிரச்சினைகளை யெகோவாவின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, அவர் சரிசெய்யட்டும் என்று நம் பங்கில் எந்த முயற்சியும் எடுக்காதிருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. உதவிக்காக தாவீது ஜெபம் செய்துவிட்டு, தன் பங்கில் முயற்சி எடுக்காமல் இருந்துவிடவில்லை. தனக்கு யெகோவா கொடுத்த திறமையையும் புத்தியையும் பயன்படுத்தி பிரச்சினைகளைச் சமாளித்தார். ஆனாலும், வெற்றிக்கு மனித முயற்சி மட்டும் போதாது என்பதை தாவீது அறிந்திருந்தார். நம்மைப் பொறுத்ததிலும் இது உண்மையாய் இருக்கிறது. நம்முடைய சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்த பிறகு, மற்றவற்றை யெகோவாவிடம் விட்டுவிட வேண்டும். சொல்லப்போனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் யெகோவாவைச் சார்ந்திருப்பதைத் தவிர வேறெதுவும் நம்மால் செய்ய முடியாது. இப்படிப்பட்ட சமயத்தில்தான், தனிப்பட்ட விதத்தில் தேவபயத்தை நாம் வெளிக்காட்ட வேண்டும். இதயப்பூர்வமாக தாவீது இவ்வாறு சொன்னதிலிருந்து நாம் ஆறுதல் அடையலாம்: “கர்த்தருடைய இரகசியம் [“யெகோவாவோடு அன்யோன்யம்,” NW] அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது.”—சங்கீதம் 25:14.
‘தேவனுடைய அன்பைவிட்டு நம்மை எதுவும் பிரிக்க முடியாது’
9 யெகோவா நமது சகிப்புத்தன்மையையும் உயர்வாக மதிக்கிறார். (மத்தேயு 24:13) நீங்கள் யெகோவாவை புறக்கணிக்க வேண்டும் என்றே சாத்தான் விரும்புகிறான் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். யெகோவாவுக்கு நீங்கள் உண்மைப் பற்றுறுதியோடு நிலைத்து நிற்கும் ஒவ்வொரு நாளும், சாத்தானுடைய நிந்தனைகளுக்கு பதிலடி கொடுப்பதற்கு உதவி செய்கிறீர்கள். (நீதிமொழிகள் 27:11) சிலசமயங்களில் சகிப்புத்தன்மையோடு இருப்பது எளிய காரியம் அல்ல. உடல்நலப் பிரச்சினைகள், பண நெருக்கடிகள், உணர்ச்சிப்பூர்வ வேதனை, பிற தடைகள் போன்றவை ஒவ்வொரு நாளையும் சோதனைமிக்க நாளாக்கலாம். நமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் தள்ளிக்கொண்டே போகையிலும் மனம் சோர்வடையலாம். (நீதிமொழிகள் 13:12) இப்படிப்பட்ட சவால்களின் மத்தியிலும் சகிப்புத்தன்மையோடு இருப்பது யெகோவாவுக்கு இன்னும் அதிக அருமையானது. அதனால்தான் தன்னுடைய கண்ணீரை “துருத்தியில்” பாதுகாத்து வைக்கும்படி யெகோவாவிடம் தாவீது ராஜா கேட்டார்; “அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?” என்றும் நம்பிக்கையோடு கூறினார். (சங்கீதம் 56:8) ஆம், நாம் யெகோவாவுக்கு எப்போதும் உண்மைப் பற்றுறுதியைக் காட்டும்போது நாம் சகிக்கும் எல்லா வேதனையையும் கண்ணீரையும் யெகோவா பொக்கிஷமாக கருதுகிறார், அவற்றை நினைவுகூருகிறார். இவையும் அவருடைய பார்வையில் அருமையானவையே.
யெகோவாவின் அன்பு பயத்தைச் சமாளிக்க நமக்கு உதவும்
16 நம் உயிரை நாம் முக்கியமாக நினைக்கிறோம் என்று சாத்தானுக்குத் தெரியும். ஆனால், நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாம் எதை வேண்டுமானாலும் இழக்கத் தயாராக இருப்போம் என்று அவன் சொல்கிறான். (யோபு 2:4, 5) சொல்லப்போனால், யெகோவாவுடன் இருக்கும் பந்தத்தைக்கூட நாம் இழக்கத் தயாராக இருப்போம் என்று சொல்கிறான். அவன் சொல்வது பொய். இருந்தாலும், சாத்தான்தான் ‘மரணத்துக்கு வழிவகுக்கிறவன்.’ (எபி. 2:14, 15) அதனால், நமக்கு இயல்பாக இருக்கிற மரண பயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிக்க அவன் முயற்சி செய்கிறான். சில சமயம், நம்முடைய நம்பிக்கையை விடவில்லை என்றால் நம்மைக் கொலை செய்யப்போவதாக சாத்தானுடைய ஆட்கள் நம்மை மிரட்டுகிறார்கள். மற்ற சமயங்களில், ஒருவேளை நம் உயிர் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, கடவுளுடைய பேச்சை மீறி நடக்க சாத்தான் நம்மைத் தூண்டலாம். உதாரணத்துக்கு, இரத்தம் ஏற்றச் சொல்லி டாக்டர்களோ சத்தியத்தில் இல்லாத குடும்பத்தாரோ நம்மை வற்புறுத்தலாம். இல்லையென்றால், பைபிளுக்கு எதிரான ஒரு மருத்துவ சிகிச்சையை எடுக்கச் சொல்லி யாராவது நம்மைத் தூண்டலாம்.
17 சாக வேண்டும் என்று நாம் யாருமே விரும்புவது இல்லைதான். ஒருவேளை நாம் இறந்துவிட்டாலும், யெகோவா நம்மேல் அன்பு காட்டுவதை நிறுத்த மாட்டார் என்று நமக்குத் தெரியும். (ரோமர் 8:37-39-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் நண்பர்கள் இறந்தாலும் அவருடைய நினைவில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். (லூக். 20:37, 38) மறுபடியும் அவர்களை உயிரோடு கொண்டுவர அவர் ஏங்கிக்கொண்டிருக்கிறார். (யோபு 14:15) நமக்கு ‘முடிவில்லாத வாழ்வு’ கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தன் மகனுடைய உயிரையே மீட்புவிலையாகக் கொடுத்திருக்கிறார். (யோவா. 3:16) அவர் நம்மேல் எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால், வியாதியின் காரணமாக அல்லது துன்புறுத்தல் காரணமாக உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் நாம் இருக்கும்போது யெகோவாவைவிட்டு விலகிப் போகவே கூடாது. அதற்குப் பதிலாக, ஆறுதலுக்காகவும் ஞானத்துக்காகவும் பலத்துக்காகவும் அவரையே நம்பியிருக்கலாம். அதைத்தான் வேலரியும் அவருடைய கணவரும் செய்தார்கள்.—சங். 41:3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 857-858
முன்னறிதல், முன்தீர்மானித்தல்
யூதாஸ் இஸ்காரியோத்து செய்த துரோகம் பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம். யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் சில விஷயங்களை முன்பே தெரிந்துகொள்ளும் திறன் இருக்கிறது என்பதற்கு இது அத்தாட்சியாகவும் இருக்கிறது. (சங் 41:9; 55:12, 13; 109:8; அப் 1:16-20) ஆனால் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் யூதாஸ்தான் இந்தத் துரோகத்தைச் செய்வான் என்று கடவுள் முன்பே தீர்மானிக்கவில்லை. இயேசுவுக்கு ரொம்ப நெருக்கமானவர்கள் இந்தத் துரோகத்தைச் செய்வார்கள் என்றுதான் தீர்க்கதரிசனம் சொன்னதே தவிர, அது குறிப்பாக யார் என்று சொல்லவில்லை. யூதாஸ் என்னவெல்லாம் செய்வான் என்று கடவுள் முன்பே தீர்மானித்து வைத்திருந்தால், அது பைபிள் நியமங்களுக்கு எதிராக இருந்திருக்கும். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “யாரையும் அவசரப்பட்டு நியமித்துவிடாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கு உடந்தையாக இருக்காதே; எப்போதும் ஒழுக்கமுள்ளவனாக நடந்துகொள்.” (1தீ 5:22; 3:6-ஐ ஒப்பிடுங்கள்.) கடவுளுடைய ஞானத்துக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் ஒரு ராத்திரி முழுக்க ஜெபம் செய்துதான் இயேசு அவருடைய 12 அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார். (லூ 6:12-16) ஒருவேளை யூதாஸ் இயேசுவுக்குத் துரோகம் செய்வான் என்று கடவுள் முன்பே தீர்மானித்திருந்தால், மற்றவர்களுடைய பாவத்துக்கு உடந்தையாக இருக்க கூடாதென்று பைபிளில் சொல்லியிருக்கிற நியமத்துக்கு எதிராக கடவுளே நடந்துகொண்ட மாதிரி இருந்திருக்கும். இந்த மாதிரி நடந்துகொள்வது கடவுளுடைய குணமே கிடையாது.
அப்படியென்றால், யூதாஸ் அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவனுடைய மனதில் தவறான எண்ணம் இருந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அவன் மனதுக்குள் ‘விஷத்தன்மையுள்ள வேர் முளைப்பதற்கும்’ அதனால் கெட்டுப்போவதற்கும் அவன் விட்டுவிட்டான். ஒரு திருடனாக, துரோகியாக மாறிவிட்டான். இதெல்லாம் சாத்தானுடைய வழிநடத்துதலினால் செய்தானே தவிர, கடவுளால் அல்ல. (எபி 12:14, 15; யோவா 13:2; அப் 1:24, 25; யாக் 1:14, 15) நாளுக்குநாள் யூதாஸ் நடந்துகொண்டது மோசமாகிக்கொண்டே போனதால் இயேசு அவனுடைய மனதிலிருந்ததைப் பார்த்தார். அவன்தான் தனக்கு விரோதமாகத் துரோகம் செய்வான் என்றும் சொன்னார்.—யோவா 13:10, 11.