வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2024 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
ஜூலை 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 57-59
தன்னுடைய மக்களை எதிர்க்கிறவர்களை யெகோவா அடக்கிப்போடுவார்
“பூமியின் கடைமுனைவரையிலும்...”
14 எதிரிகளால் கொல்லப்படுவதற்குமுன் ஸ்தேவான் தைரியமாகச் சாட்சி கொடுத்தார். (அப். 6:5; 7:54-60) அச்சமயத்தில் “கடும் துன்புறுத்தல்” வந்தபோது, அப்போஸ்தலர்களைத் தவிர மற்ற சீடர்கள் யூதேயா, சமாரியா பகுதிகளெங்கும் சிதறிப்போனார்கள். ஆனால், ஊழிய வேலை நின்றுவிடவில்லை. பிலிப்பு என்பவர் சமாரியாவுக்குப் போய் “கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்,” அருமையான பலன்களையும் கண்டார். (அப். 8:1-8, 14, 15, 25) “ஸ்தேவானுடைய மரணத்தையொட்டி ஏற்பட்ட துன்புறுத்தலினால் பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா ஆகிய இடங்கள்வரை சிதறிப்போயிருந்த சீடர்கள், யூதர்களுக்கு மட்டுமே கடவுளுடைய வார்த்தையை அறிவித்தார்கள். ஆனாலும், அவர்களில் சீப்புரு, சிரேனே ஆகிய இடங்களைச் சேர்ந்த சிலர் அந்தியோகியாவுக்கு வந்து எஜமானராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியைக் கிரேக்க மொழி பேசிய மக்களுக்கு அறிவிக்க ஆரம்பித்தார்கள்.” (அப். 11:19, 20) ஆக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தி பரவுவதற்குத் துன்புறுத்தலே காரணமானது.
15 நம்முடைய காலத்திலும் அதுபோன்ற ஒன்று முன்னாள் சோவியத் யூனியனில் நடந்தது. குறிப்பாக, 1950-களில், ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் சைபீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதால் அந்தப் பெரிய பிராந்தியத்தில் நற்செய்தி பரவிக்கொண்டே இருந்தது. அவ்வளவு தூரத்திலிருந்த, கிட்டத்தட்ட 10,000 கிலோமீட்டர் தூரத்திலிருந்த, சைபீரியாவுக்குச் சாட்சிகளால் சொந்த செலவில் போயிருக்கவே முடியாது! ஆனால், அரசாங்கமே அவர்களை அங்கு அனுப்பி வைத்தது! “சைபீரியாவிலிருந்த நல்மனமுள்ள ஆட்களில் ஆயிரக்கணக்கானோர் சத்தியத்தைக் கேட்பதற்காக அரசாங்கமே வழிசெய்ததுபோல் இருந்தது” என ஒரு சகோதரர் சொன்னார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
“உறுதியானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும்” இருங்கள்
16 உள்ளத்தை உறுதியாக்குங்கள். தாவீது ராஜா யெகோவாமேல் நிறைய அன்பு வைத்திருந்தார். அது குறையவே குறையாது என்பதை அவர் இப்படிப் பாடினார்: “கடவுளே, நான் உள்ளத்தில் உறுதியோடு இருக்கிறேன்.” (சங். 57:7) அவரைப் போல நாமும் நம்முடைய உள்ளத்தை உறுதியாக்க முடியும்; யெகோவாமேல் நம்பிக்கை வைக்க முடியும். (சங்கீதம் 112:7-ஐ வாசியுங்கள்.) ஏற்கெனவே நாம் பார்த்த ராபர்ட்டும் உள்ளத்தை உறுதியாக வைத்திருந்தார். ராபர்ட்டிடம் டாக்டர்கள், ஒரு அவசரத்துக்கு இரத்தத்தை தயாராக வைத்துக்கொள்வதாக சொன்னபோது அவர் என்ன செய்தார்? ‘அப்படி நீங்கள் செய்வதாக இருந்தால் நான் இப்போதே ஆஸ்பத்திரியை விட்டுப் போகிறேன்’ என்று அவர் உடனடியாக சொல்லிவிட்டார். இந்தச் சம்பவத்தைப் பற்றி பின்பு ராபர்ட் இப்படிச் சொன்னார்: “அந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்ற சந்தேகமும் எனக்கு இருக்கவில்லை, என்ன ஆகிவிடுமோ என்ற பயமும் எனக்கு இருக்கவில்லை.” உள்ளத்தை உறுதியாக வைத்திருந்தது அவருக்கு எப்படி உதவியாக இருந்தது என்று பார்த்தீர்களா?
17 ராபர்ட் எப்படி உறுதியாக இருக்க முடிந்தது? ஆஸ்பத்திரிக்கு போவதற்கு ரொம்ப முன்னாடியே, உறுதியோடு இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்துவிட்டார். முதலில், அவர் யெகோவாவின் மனதை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார். இரண்டாவதாக, உயிர் மற்றும் இரத்தத்தின் புனிதத்தைப் பற்றி பைபிளும் பைபிள் அடிப்படையில் வந்த நம் பிரசுரங்களும் என்ன சொல்கிறது என்று ரொம்ப கவனமாகப் படித்தார். மூன்றாவதாக, யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் அவர் பலன் கொடுப்பார் என்பதில் ராபர்ட்டுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. எந்த மாதிரி பிரச்சினைகள் வந்தாலும், உள்ளத்தை உறுதியாக வைத்துக்கொள்ள நம்மாலும் முடியும்.
ஜூலை 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 60-62
யெகோவா நம்மை பாதுகாக்கிறார், கவனித்துக்கொள்கிறார்
it-2-E பக். 1118 பாரா 7
கோட்டை
அடையாள அர்த்தம். யெகோவாமேல் விசுவாசம் வைத்து அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குப் பலமான பாதுகாப்பு கிடைக்கும். தாவீது இப்படிப் பாடினார்: “நீங்கள்தான் [யெகோவாதான்] எனக்கு அடைக்கலம், எதிரியிடமிருந்து என்னைப் பாதுகாக்கிற பலமான கோட்டை.” (சங் 61:3) யெகோவாவின் பெயருடைய அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அதன்மேல் நம்பிக்கை வைத்து, அதற்கு ஆதரவாக உறுதியோடு நிற்பவர்கள் எதற்குமே பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், “யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை. நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதி 18:10; ஒப்பிடுங்கள்: 1சா 17:45-47.
it-2-E பக். 1084 பாரா 8
கூடாரம்
“கூடாரம்” என்ற வார்த்தை பைபிளில் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் ஒருவருடைய கூடாரம் ஓய்வெடுப்பதற்கான இடமாகவும், வெயில், மழை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் இடமாகவும் இருந்தது. (ஆதி 18:1) அன்றிருந்த மக்கள், விருந்தாளிகளைத் தங்கள் கூடாரத்துக்குக் கூப்பிட்டு நன்றாக உபசரிப்பதும், மதிப்பு மரியாதையோடு நடத்துவதும் வழக்கமாக இருந்தது. திரள் கூட்டமான மக்கள்மேல் கடவுள் “தன்னுடைய கூடாரத்தை விரிப்பார்” என்று வெளிப்படுத்துதல் 7:15 (அடிக்குறிப்பு) சொல்கிறது. அவர்களைக் கடவுள் நன்றாகப் பாதுகாப்பார் என்பதுதான் அதன் அர்த்தம். (சங் 61:3, 4) இனி பிறக்கப்போகும் பிள்ளைகளுக்காகத் தயாராகும்படி கடவுள் தன் மனைவி சீயோனிடம் சொன்னபோது, “உன் கூடாரத்தைப் பெரிதாக்கு” என்று சொன்னதாக ஏசாயா பதிவு செய்திருக்கிறார். (ஏசா 54:2) கடவுள் சொன்னபடியே சீயோன் தன்னுடைய பாதுகாப்பான இடத்தைப் பெரிதாக்குகிறாள்.
கடவுளுடைய சட்டங்கள் நம்முடைய நன்மைக்கே
14 தெய்வீக சட்டங்கள் மாறாதவை என்பது பல முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் வாழும் இந்தக் கொந்தளிப்பான காலங்களில், யெகோவா “அநாதியாய் என்றென்றைக்கும்” உறுதியான கன்மலையாக இருக்கிறார். (சங்கீதம் 90:2) அவர் தம்மைக் குறித்து, “நான் கர்த்தர் [யெகோவா], நான் மாறாதவர்” என கூறியுள்ளார். (மல்கியா 3:6) மாறிக்கொண்டே இருக்கும் மனித கருத்துக்கள் எனும் புதைமணலைப் போல் இல்லாமல் பைபிளில் காணப்படும் கடவுளுடைய தராதரங்கள் முற்றிலும் நம்பகமானவை. (யாக்கோபு 1:17) உதாரணமாக, பிள்ளைகளை கட்டுப்படுத்தாமல் அவர்கள் இஷ்டப்படி விட்டுவிட வேண்டும் என சில ஆண்டுகளாக மனோதத்துவ நிபுணர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால் பிறகு அவர்களில் சிலர் மனதை மாற்றி தங்களுடைய ஆலோசனை தவறு என்று ஒப்புக்கொண்டார்கள். இந்த விஷயத்தின் பேரில் உலக தராதரங்களும் அறிவுரைகளும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் யெகோவாவின் வார்த்தை மாறாதது. பிள்ளைகளை எப்படி அன்புடன் வளர்ப்பது என பல நூற்றாண்டுகளாக பைபிள் புத்திமதி கொடுத்து வந்திருக்கிறது. “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 6:4) யெகோவாவின் தராதரங்களை நாம் நம்பலாம், அது ஒருபோதும் மாறாது என்பதை அறிவது எவ்வளவு நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—இரண்டாம் பகுதி
62:11. சக்திக்காக வேறு எந்த ஊற்றுமூலத்தையும் கடவுள் சார்ந்திருக்க வேண்டியதில்லை. சக்தியின் ஊற்றுமூலமே அவர்தான். ‘வல்லமை அவருக்கு உரியது.’
ஜூலை 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 63-65
“உங்களுடைய மாறாத அன்பு உயிரைவிட மேலானது”
w01 10/15 பக். 15-16 பாரா. 17-18
கடவுளுடைய அன்பைவிட்டு யாரால் நம்மை பிரிக்க முடியும்?
17 கடவுள் காட்டும் அன்பு உங்களுக்கு எந்தளவுக்கு முக்கியம்? “ஜீவனைப் பார்க்கிலும் உமது கிருபை [“அன்புள்ள தயவு,” NW] நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன்” என எழுதிய தாவீதைப் போலவே நீங்களும் உணருகிறீர்களா? (சங்கீதம் 63:3, 4) உண்மையில், கடவுளுடைய அன்பையும் பற்றுமாறா நட்பையும்விட மேலான ஒன்றை இந்த உலகில் பெற முடியுமா? உதாரணமாக, கடவுளோடு உள்ள நெருக்கமான உறவு தரும் மனசமாதானத்தையும் சந்தோஷத்தையும்விட நல்ல வருமானத்தை வழங்கும் வேலை சிறந்ததா? (லூக்கா 12:15) கிறிஸ்தவர்களில் சிலர், யெகோவாவை மறுதலிப்பது அல்லது மரிப்பது என்ற இக்கட்டான நிலையை எதிர்ப்பட்டுள்ளனர். இரண்டாம் உலக யுத்தத்தின்போது நாசி சித்திரவதை முகாம்களில் இருந்த யெகோவாவின் சாட்சிகளில் அநேகருக்கு அதுவே சம்பவித்தது. சிலரைத் தவிர, நமது கிறிஸ்தவ சகோதரர்கள் மரணமே வந்தாலும் கடவுளுடைய அன்பில் நிலைத்திருக்கவே தீர்மானித்தனர். உத்தமத்தோடு கடவுளுடைய அன்பில் நிலைத்திருப்பவர்கள் நித்திய எதிர்கால வாழ்க்கையை அவர் தருவார் என்பதில் நிச்சயமாயிருக்கலாம்; அது இந்த உலகம் தர முடியாத ஒன்று. (மாற்கு 8:34-36) ஆனால், நித்திய ஜீவன் மட்டுமல்ல இன்னும் அதிகமுள்ளது.
18 யெகோவா இல்லாமல் நித்திய காலம் வாழ்வது சாத்தியமில்லை என்றாலும் சிருஷ்டிகர் இல்லாத நீண்டநாள் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அது வீணானதாக, உண்மையான நோக்கமற்றதாக இருக்கும். இந்த கடைசி நாட்களில்கூட யெகோவா தம் மக்களுக்கு திருப்தி அளிக்கும் வேலையை கொடுத்திருக்கிறார். ஆகவே, தம் நோக்கத்தை நிறைவேற்றுகிறவராகிய யெகோவா நித்திய ஜீவனை கொடுக்கையில் நாம் கற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் ஏராளமான வியப்பூட்டும், பிரயோஜனமான காரியங்கள் இருக்கும் என்பது அதிக நிச்சயமல்லவா? (பிரசங்கி 3:11, NW) பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் எவ்வளவு அதிகத்தை கற்றுக்கொண்டாலும் சரி, “தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழ”த்தை நம்மால் முழுமையாக அறிந்துகொள்ளவே முடியாது.—ரோமர் 11:33.
“எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லுங்கள்”
கடவுளுக்கு நன்றியோடு இருப்பது ரொம்பவே முக்கியம். தன்னோடு இருக்கும் பந்தத்தைக் காத்துக்கொள்ள அவர் நமக்கு எவ்வளவோ பரிசுகளைத் தருகிறார். நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவுகிற பரிசுகளையும் அள்ளித் தருகிறார். இப்படிப்பட்ட பரிசுகளை யெகோவா ஏற்கெனவே கொடுத்திருப்பார், இப்போதும் கொடுத்துக்கொண்டிருப்பார். இதைப் பற்றி அவ்வப்போது யோசித்தும் பார்த்திருப்பீர்கள். (உபா. 8:17, 18; அப். 14:17) கடவுள் எவ்வளவு நல்லவர் என்பதைப் பற்றிக் கொஞ்ச நேரம் மட்டுமே யோசிக்காமல், அதிக நேரம் எடுத்து மனதுக்குள் அசைபோட்டுப் பாருங்கள். உங்களுக்கும் நீங்கள் நெஞ்சார நேசிப்பவர்களுக்கும் அவர் பொழிந்திருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப்பாருங்கள். நம் படைப்பாளரின் தாராள குணத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, அவர்மீது அன்பும் மரியாதையும் அதிகமாகும். அவர் உங்கள்மீது பாசம் வைத்திருக்கிறார்... உங்களை உயர்வாக மதிக்கிறார்... என்ற உண்மை உங்கள் மனதில் ஆழமாகப் பதியும்.—1 யோ. 4:9.
படிக்கும் விஷயங்களை ஆழ்ந்து யோசியுங்கள்
7 நாம் படிக்கிற விஷயத்தில் கவனம் செலுத்தவும் அதைப் பற்றி ஆழ்ந்து யோசிக்கவும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் களைப்பாக இருக்கும்போது வாசித்தால் அது உங்களுக்கு பிரயோஜனமாக இருக்காது. அமைதியான ஒரு சூழ்நிலையில், படிப்பதும் ஆழ்ந்து யோசிப்பதும் நல்லது. அப்படிப் படிக்கும்போது கவனச்சிதறல்கள் இருக்காது. சங்கீதக்காரனாகிய தாவீது, இரவு நேரத்தில் படுத்திருக்கும்போது ஆழ்ந்து யோசித்தார். (சங். 63:6) எந்தத் தவறும் செய்யாத இயேசுகூட அமைதியான ஒரு இடத்தில்தான் ஜெபம் செய்தார், ஆழ்ந்து யோசித்தார்.—லூக். 6:12.
w09 7/15 பக். 16 பாரா 6
இயேசுவைப் போலவே அன்புடன் கற்பியுங்கள்
6 பொதுவாக, நாம் நேசிக்கிற விஷயங்களைப் பற்றி ஆசை ஆசையாகப் பேசுவோம். அப்போது நமக்குள் உற்சாகம் கொப்பளிக்கும், உணர்ச்சிகள் பொங்கும்; நம் வாய் மட்டுமல்ல, நம் உடலின் ஒவ்வொரு அங்கமும் உயிர்த்துடிப்போடு பேசும். அதிலும், நாம் நேசிக்கிற ஒரு நபரைப் பற்றிப் பேசும்போது சொல்லவே வேண்டாம்! அந்த நபரின் அருமை பெருமைகளையெல்லாம் சொல்லத் துடிப்போம். அவரைப் புகழ்ந்து பாராட்டுவோம், அவருக்கு ஆதரவாகப் பேசுவோம். எதற்காக இப்படியெல்லாம் செய்கிறோம்? மற்றவர்களுக்கும் அந்த நபரைப் பிடித்துப்போக வேண்டும் என்பதற்காகத்தான்!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நீங்கள் புத்துணர்ச்சியூட்டும் பனித்துளியா?
ஒரு கட்டடத்தைக் கட்டுவதைவிட அதைத் தரைமட்டமாக்குவது ரொம்பவே சுலபம். இந்தத் தத்துவம் பேச்சுக்கும் பொருந்தும். அபூரணர்களாய் இருப்பதால் நம் எல்லாரிடமும் குற்றங்குறைகள் உள்ளன. “ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை” என்று சாலொமோன் ராஜா சொன்னார். (பிரசங்கி 7:20) அடுத்தவருடைய குற்றங்குறைகளைக் கண்டுபிடித்து, குத்தலாய் பேசி அவருடைய மனதை நோகடிப்பது அதிக சுலபம். (சங்கீதம் 64:2-4) ஆனால், ஒருவரைத் தூக்கி நிறுத்தும் விதத்தில் பேசுவதற்கு, நன்கு யோசிப்பதும், முயற்சி செய்வதும் அவசியம்.
ஜூலை 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 66-68
ஒவ்வொரு நாளும் யெகோவா நம் பாரத்தை சுமக்கிறார்
யெகோவா நம் ஜெபங்களுக்கு எப்படிப் பதில் தருகிறார்?
15 நம் ஜெபங்களுக்கு எப்போதுமே அற்புதமான விதத்தில் பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க நமக்கு என்ன தேவையோ அது கண்டிப்பாகக் கிடைத்துவிடும். அதனால், உங்கள் ஜெபங்களுக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுக்கிறார் என்று பார்த்துக்கொண்டே இருங்கள். யோக்கோ என்ற சகோதரியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவருடைய ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுக்காததுபோல் அவருக்குத் தோன்றியது. அதன் பிறகு, யெகோவாவிடம் கேட்ட விஷயங்களையெல்லாம் அவர் எழுதிவைக்க ஆரம்பித்தார். கொஞ்ச நாள் கழித்து அதை எடுத்துப் பார்த்தபோது, அவர் செய்த முக்கால்வாசி ஜெபங்களுக்கு யெகோவா ஏற்கெனவே பதில் கொடுத்திருந்தார். அதில் சில ஜெபங்களை அவரே மறந்துவிட்டார், ஆனாலும் யெகோவா பதில் கொடுத்திருந்தார். நாமும் அவ்வப்போது, யெகோவா எப்படியெல்லாம் நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார் என்பதை நேரமெடுத்து யோசித்துப் பார்க்க வேண்டும்.—சங். 66:19, 20.
ஒற்றைப் பெற்றோருக்கு ஒத்தாசையாக இருங்கள்
வழிபாட்டு சமயங்களில் இஸ்ரவேலர் பாடுவதற்காக யெகோவா தம் சக்தியை அருளிப் புனிதப் பாடல்களை... அதாவது சங்கீதங்களை... இயற்றச் செய்தார். இஸ்ரவேலர் மத்தியில் இருந்த திக்கற்ற பிள்ளைகளுக்கும் விதவைகளுக்கும் யெகோவா ‘தகப்பனாகவும்,’ ‘நியாயம் விசாரிக்கிறவராகவும்’ இருந்து நிம்மதி அளிப்பார் என்பதை அந்தப் பாடல்கள் அவர்களுக்கு ஞாபகப்படுத்தின; அவற்றைப் பாடியபோதெல்லாம் அவர்கள் எந்தளவு ஆறுதல் அடைந்திருப்பார்கள்! (சங்கீதம் 68:5; 146:9) அவ்வாறே நாமும், ஒற்றைப் பெற்றோருக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளைச் சொல்லலாம்; அதை அவர்கள் காலங்காலமாய் நினைத்துப் பார்ப்பார்கள். ரூத் என்ற ஒற்றைத் தாயின் உதாரணத்தைக் கவனியுங்கள். அனுபவம் வாய்ந்த ஒரு தகப்பன் அவரிடம், “உங்கள் பையன்களை நன்றாக வளர்க்கிறீர்கள், பார்ப்பதற்குச் சந்தோஷமாய் இருக்கிறது!” என்று சொன்னார். 20 வருடங்களுக்கு முன் அவர் பாராட்டியதை நினைத்து ரூத் இன்றும் சந்தோஷப்படுகிறார். “அந்தச் சகோதரர் சொன்ன வார்த்தைகள் எனக்கு ரொம்பவே தெம்பளித்தது” என்கிறார். ஆம், ‘நல்வார்த்தை இருதயத்துக்கு மகிழ்ச்சி அளிக்கும்’; ஆகையால், ஒற்றைப் பெற்றோருக்கு ஆறுதலாக நாம் சொல்கிற வார்த்தைகள், நாம் நினைத்துப் பார்ப்பதைவிடப் பன்மடங்கு பலன் தரலாம். (நீதிமொழிகள் 12:25) அப்படியானால், குறிப்பாக என்ன சொல்லி ஓர் ஒற்றைப் பெற்றோரை நெஞ்சாரப் பாராட்டுவீர்கள்?
w09 10/1 பக். 18 பாரா 1
தகப்பனில்லாத பிள்ளைகளுக்குத் தகப்பன்
‘தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற [அதாவது, தகப்பனில்லாத] பிள்ளைகளுக்குத் தகப்பன்.’ (சங்கீதம் 68:5) யெகோவா தேவனுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள், அவரைப் பற்றிய மனதைத் தொடும் ஒரு விஷயத்தை நமக்குக் கற்பிக்கின்றன; அதாவது, ஆதரவற்றவர்களின் நலனில் அவர் அக்கறையுள்ளவர் என்பதை நமக்குக் கற்பிக்கின்றன. தாயையோ தகப்பனையோ மரணத்தில் பறிகொடுத்த பிள்ளைகள்மீது அவருக்கு இருக்கும் கரிசனையை, இஸ்ரவேலருக்கு அவர் கொடுத்த சட்டத்திலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம். பைபிளில் யாத்திராகமம் 22:22-24 வசனங்களில்தான் ‘தகப்பனில்லாத பிள்ளை’ என்ற வார்த்தைகள் முதன்முதலாகக் காணப்படுகின்றன; இந்த வசனங்களை இப்போது நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
யெகோவா உங்களுக்கு வெற்றி தருகிறார்
17 சங்கீதம் 40:5-ஐ வாசியுங்கள். மலை ஏறுகிற ஒருவருக்கு அதன் உச்சியைப் போய் எட்ட வேண்டும் என்பதுதான் குறிக்கோள். ஆனாலும், அவர் அவ்வப்போது நின்று சுற்றி இருப்பதையெல்லாம் ரசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்வார். அதே மாதிரி, ஒரு கஷ்டத்தோடு நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்போது சகித்திருக்க யெகோவா உங்களுக்கு எப்படி உதவி செய்கிறார், உங்களுக்கு எப்படி வெற்றி கொடுக்கிறார் என்று அவ்வப்போது நேரம் எடுத்து யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாள் முடியும்போதும், ‘இன்றைக்கு யெகோவா என்னை எப்படி ஆசீர்வதித்திருக்கிறார்? பிரச்சினை இன்னும் தீரவில்லை என்றாலும் சகித்திருப்பதற்கு அவர் எனக்கு எப்படி உதவி செய்திருக்கிறார்?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். யெகோவா நிச்சயம் உங்களுக்கு உதவி செய்திருப்பார். அதில் ஒன்றையாவது கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—இரண்டாம் பகுதி
68:18—“மனித வடிவிலான வரங்கள்” யாவர்? வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றியபோது கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் பாகமானவர்களே இவர்கள். பிற்பாடு லேவியருக்கு பணிவிடைக்காரராக இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.—எஸ்றா 8:20.
ஜூலை 29–ஆகஸ்ட் 4
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 69
சங்கீதம் 69-ல் சொல்லியிருக்கும் விஷயங்கள் இயேசுவின் வாழ்க்கையில் எப்படி நிறைவேறியது
மேசியாவுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்
17 மேசியா காரணமின்றி பகைக்கப்படுவார். (சங். 69:4) “வேறு யாருமே செய்யாத செயல்களை நான் அவர்கள் [மக்கள்] மத்தியில் செய்யாமல் இருந்திருந்தால், அவர்களுக்குப் பாவம் இருந்திருக்காது; ஆனால் இப்போது அவற்றைப் பார்த்தும்கூட என்னையும் என் தகப்பனையும் வெறுத்திருக்கிறார்கள். ‘காரணமில்லாமல் என்னை வெறுத்தார்கள்’ என்று அவர்களுடைய திருச்சட்டத்தில் எழுதப்பட்ட வார்த்தை நிறைவேறுவதற்காகவே இப்படி நடந்திருக்கிறது” என்று இயேசு சொன்னதாக அப்போஸ்தலன் யோவான் கூறினார். (யோவா. 15:24, 25) இங்கே ‘திருச்சட்டம்’ என குறிப்பிடப்பட்டிருப்பது அன்றிருந்த ‘வேதவசனங்கள்’ அனைத்தையும் குறிக்கிறது. (யோவா. 10:34; 12:34) சுவிசேஷங்களை வாசிக்கும்போது இயேசுவை அநேகர் வெறுத்தார்கள் என்பதை அறிகிறோம்; அதிலும் முக்கியமாக யூத மதத் தலைவர்கள் அவரை வெறுத்தார்கள். எனவேதான், “இந்த உலகம் எந்தக் காரணத்திற்காகவும் உங்களை வெறுப்பதில்லை; அதன் செயல்கள் பொல்லாதவை என்று நான் சாட்சி கொடுப்பதால் அது என்னைத்தான் வெறுக்கிறது” என்று இயேசு கூறினார்.—யோவா. 7:7.
உண்மை வழிபாட்டிற்காகப் பக்திவைராக்கியம் காட்டுங்கள்
7 இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் அவர் பக்திவைராக்கியமுள்ளவர் என்பதற்கு ஆணித்தரமான அத்தாட்சியை அளித்தது. அவர் ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில், அதாவது கி.பி. 30, பஸ்கா பண்டிகை காலத்தில், அது நிகழ்ந்தது. இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேம் ஆலயத்திற்கு வந்தபோது, “ஆடு, மாடு, புறா விற்பவர்களையும், இருக்கைகளில் உட்கார்ந்திருந்த காசுத் தரகர்களையும்” அங்கே கண்டார்கள். அப்போது இயேசு என்ன செய்தார், அது அவருடைய சீடர்களுக்கு எதை நினைப்பூட்டியது?—யோவான் 2:13-17-ஐ வாசியுங்கள்.
8 அந்தச் சமயத்தில் இயேசு செய்ததும் சொன்னதும், சங்கீதத்தில் தாவீது தீர்க்கதரிசனமாகச் சொன்ன பின்வரும் வார்த்தைகளைச் சீடர்களுக்கு நினைப்பூட்டின: “உமது வீட்டைக் குறித்த பக்திவைராக்கியம் எனக்குள் பற்றியெரிந்தது.” (சங். 69:9, NW) இந்த வார்த்தைகள் சீடர்களின் நினைவுக்கு வந்தது ஏன்? ஏனென்றால், இயேசு செய்தது ஆபத்துமிக்க ஒரு செயல். சொல்லப்போனால், ஆலயத்தின் அதிகாரிகள், அதாவது குருமார்களும் வேத அறிஞர்களும் மற்றவர்களும், கொள்ளை லாபம் சம்பாதிக்கும் அந்த மோசடியான வியாபாரத்திற்குப் பின்னால் இருந்தார்கள். அவர்களுடைய திட்டத்தை அம்பலப்படுத்தி, அதைத் தகர்த்தெறிந்ததால் மதத் தலைவர்களுக்கு இயேசு எதிரியானார். ஆனால், ‘கடவுளுடைய வீட்டைக் குறித்து உண்டான பக்திவைராக்கியம்’ அல்லது உண்மை வழிபாட்டிற்கான பக்திவைராக்கியம் அவருக்கு இருந்ததைச் சீடர்கள் தெளிவாகவே புரிந்துகொண்டார்கள். அப்படியென்றால், பக்திவைராக்கியம் என்பது என்ன? அவசர உணர்வுக்கும் இதற்கும் வித்தியாசம் இருக்கிறதா?
g95 10/22 பக். 31 பாரா 4
நொறுங்குண்ட இருதயத்தினால் நீங்கள் இறக்க முடியுமா?
நொறுங்குண்ட இருதயம் இயேசு கிறிஸ்துவின் மரணத்தில் ஒரு காரணமாக இருந்ததென்று சிலர் சொல்கின்றனர். அவரைக் குறித்து இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது: “நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது.” (சங்கீதம் 69:20) இந்த வார்த்தைகளைச் சொல்லர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டுமா? அவ்வாறும் இருக்கலாம், ஏனெனில் இயேசுவின் மரணத்துக்கு முந்தின மணிநேரங்கள்—சரீரப்பிரகாரமாக மட்டுமல்ல, உணர்ச்சி சம்பந்தமாகவும்—கடும் வேதனை தரும் அனுபவமாக இருந்தன. (மத்தேயு 27:46; லூக்கா 22:44; எபிரெயர் 5:7) மேலும், இயேசு இறந்தவுடன் ஈட்டியால் அவரைக் குத்தின காயத்திலிருந்து “இரத்தமும் தண்ணீரும்” ஏன் ஒழுகியதென்பதற்கும் நொறுங்குண்ட இருதயம் விளக்கம் அளிப்பதாக இருக்கலாம். இருதயத்தின் அல்லது பெரும் இரத்தக் குழாயின் வெடிப்பு, மார்பு குழிவுக்குள் அல்லது இதய உறைக்குள்—இருதயத்தைத் தளர்ச்சியாக மூடியிருக்கும் ஊறல்நீர் அடங்கிய சவ்வு—இரத்தம் கசியும்படி செய்யும். இந்த இரு இடங்களில் எதிலாவது துளை ஏற்பட்டால் “இரத்தமும் தண்ணீரும்” போன்று தோன்றுவது வடியும்படி செய்யக்கூடும்.—யோவான் 19:34.
it-2-E பக். 650
விஷச்செடி
உணவுக்குப் பதிலாக “விஷச்செடி” மேசியாவுக்குக் கொடுக்கப்படும் என்று தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருந்தது. (சங்கீதம் 69:21) இயேசு கழுமரத்தில் அறையப்படுவதற்கு முன்பு அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது. எப்படி? கசப்புப் பொருள் கலந்த திராட்சமது இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டது. அநேகமாக, அவருடைய வேதனையைக் குறைப்பதற்காக அது அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம். இருந்தாலும், வலியை மரத்துப்போக வைக்கும் அந்தப் பானத்தைக் குடிக்க அவர் மறுத்துவிட்டார். இயேசுவுக்கு “கசப்புப் பொருள்” கலந்த பானம் கொடுக்கப்பட்டதாக மத்தேயு சொல்லியிருக்கிறார். அவர் பயன்படுத்திய கிரேக்க வார்த்தை சங்கீதம் 69:21-ல் பயன்படுத்தப்பட்ட வார்த்தையோடு ஒத்துப்போகிறது. மாற்கு எழுதும்போது அதை ‘வெள்ளைப்போளம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படியென்றால், அந்த “விஷச்செடி” ஒருவேளை வெள்ளைப்போளமாக இருந்திருக்கலாம். (மத் 27:34; மாற் 15:23) ஒருவேளை, போதை தரும் அந்தப் பானத்தில் கசப்புப் பொருள், வெள்ளைப்போளம் ஆகிய இரண்டுமே இருந்திருக்கலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உத்தம கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்
11 பலர் தங்களுக்கு ஏதாகிலும் வேண்டுமென்றால் மாத்திரம் ஜெபம் செய்வார்கள். ஆனால் யெகோவா தேவன்மீது நாம் அன்பு வைத்திருப்பதால், நமது தனி ஜெபத்திலும், மற்றவர்கள் சார்பில் செய்யும் ஜெபத்திலும் அவருக்கு நன்றியையும், துதியையும் செலுத்துவோம். “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்” என்று எழுதினார் பவுல். (பிலிப்பியர் 4:6, 7) விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், யெகோவா நம்மை ஆவிக்குரிய ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஆசீர்வதித்திருப்பதால் கண்டிப்பாக அவருக்கு நன்றி சொல்வோமாக! (நீதிமொழிகள் 10:22) சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள், மகா உன்னதருக்கு உங்கள் நேர்த்தி கடனை செலுத்துங்கள்.” (சங்கீதம் 50:14, NW) தாவீது பாடிய ஒரு ஜெப கீர்த்தனையில் இருதயத்தை வருடும் பின்வரும் வார்த்தைகள் அடங்கியுள்ளன: “தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.” (சங்கீதம் 69:30) நாமும்கூட நமது தனி ஜெபத்திலும், மற்றவர்கள் சார்பில் செய்யும் ஜெபத்திலும் இதேபோல் செய்ய வேண்டாமா?
ஆகஸ்ட் 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 70-72
கடவுளுடைய வல்லமையைப் பற்றி ‘அடுத்த தலைமுறைக்குச் சொல்லுங்கள்’
இளைஞர்களே—பகுத்துணர்வைப் பயிற்றுவியுங்கள்!
17 சாத்தானின் கண்ணிகளைத் தவிர்ப்பதற்கு உங்கள் பாகத்தில் தொடர்ந்து விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்; சிலசமயங்களில் இதற்கு அதிக தைரியமும் தேவை. சில நேரங்களில் உங்கள் சகதோழர்களோடு மட்டுமல்ல, ஏன், முழு உலகத்தோடும் ஒத்துப் போகாதிருப்பதைக் காண்பீர்கள். “கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்” என சங்கீதக்காரனாகிய தாவீது ஜெபித்தார். (சங்கீதம் 71:5, 17) தாவீது தைரியத்திற்குப் பெயர்போனவர். ஆனால் அதை அவர் எப்போது வளர்த்துக் கொண்டார்? இளைஞராய் இருக்கையிலேயே! கோலியாத்தை எதிர்கொண்டு பெயரையும் புகழையும் தட்டிச் செல்வதற்கு முன்பாகவே ஒரு சிங்கத்தையும், ஒரு கரடியையும் கொன்று தன்னுடைய தகப்பனுடைய மந்தைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் தாவீது மிகுந்த தைரியத்தை வெளிக்காட்டியிருந்தார். (1 சாமுவேல் 17:34-37) எனினும், தான் வெளிக்காட்டிய தைரியத்திற்கான அந்தப் புகழ் யெகோவாவையே சேர வேண்டும் என விரும்பினார்; ‘என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையாய் இருக்கிறவர்’ என அவரைக் குறிப்பிட்டார். யெகோவாவைச் சார்ந்திருக்க தாவீது கற்றுக்கொண்டது எந்தச் சோதனையையும் எதிர்ப்பட அவருக்கு உதவியது. நீங்களும் யெகோவாவைச் சார்ந்திருப்பீர்களென்றால் ‘உலகத்தை ஜெயிக்க’ அவர் உங்களுக்குத் தைரியத்தையும் சக்தியையும் தருவதை உணருவீர்கள்.—1 யோவான் 5:4.
g04 11/8 பக். 17 பாரா 3
முதியவர்களை எவ்வாறு நடத்த வேண்டும்?
“முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளி விடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்” என்று சங்கீதக்காரன் தாவீது ஜெபித்தார். (சங்கீதம் 71:9) இனி வாழ்ந்து என்ன பயன் என்று கடவுளுடைய உண்மை ஊழியர்கள்கூட சில சமயங்களில் நினைக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களை யெகோவா ‘தள்ளிவிடுவதில்லை.’ சங்கீதக்காரன் தன்னை யெகோவா கைவிட்டுவிட்டதாக நினைக்கவில்லை. மாறாக, தனக்கு வயதாக ஆக யெகோவாவை அதிகமாய் சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தை அவர் உணர்ந்தார். அப்படி உத்தமராக இருப்பவர்களுக்கு யெகோவா காலம் பூராவும் உதவுவார். (சங்கீதம் 18:25) பெரும்பாலும் அது போன்ற உதவி நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் மூலமாகவே வருகிறது.
தீங்குநாட்கள் வரும்முன் யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
4 நீங்கள் பல வருட அனுபவம் பெற்றவரா? அப்படியென்றால், இந்த முக்கியமான கேள்வியை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கிருக்கும் ஓரளவு பலத்தையும் தெம்பையும் வைத்து இப்போது நான் என்ன செய்யலாம்?’ மற்றவர்களுக்குத் திறக்காத வாய்ப்பெனும் கதவு, அனுபவமிக்க கிறிஸ்தவரான உங்களுக்குத் திறக்கலாம். யெகோவாவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை இளைய தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுக்கலாம். அவருடைய சேவையில் பெற்ற சுவாரஸ்யமான அனுபவங்களைச் சொல்லி மற்றவர்களைப் பலப்படுத்தலாம். இது போன்ற வாய்ப்புகளுக்காக தாவீது ராஜா இவ்வாறு ஜெபித்தார்: “தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர் . . . இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.”—சங். 71:17, 18.
5 பல வருட அனுபவத்தில் பெற்ற ஞானத்தை நீங்கள் எப்படி மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்? இளம் சகோதர சகோதரிகள் உற்சாகமூட்டும் தோழமையை அனுபவிப்பதற்காக அவர்களை உங்கள் வீட்டுக்கு அழைக்கலாம். அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதன் மூலம் யெகோவாவின் சேவையில் நீங்கள் அனுபவிக்கும் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளலாம். பூர்வ காலத்தில் வாழ்ந்த எலிகூ, “முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும்” என்று எழுதினார். (யோபு 32:7) அனுபவம் வாய்ந்த கிறிஸ்தவ சகோதரிகள், சொல்லாலும் செயலாலும் மற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார். ‘முதிர்வயதான பெண்கள் . . . நல்லதைக் கற்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும்’ என்று அவர் எழுதினார்.—தீத். 2:3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E 768
யூப்ரடிஸ்
இஸ்ரேலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் எல்லை. ஆபிரகாமின் சந்ததிக்கு “எகிப்தில் இருக்கிற ஆற்றிலிருந்து பெரிய ஆறான யூப்ரடிஸ்வரை இருக்கிற” தேசத்தைக் கொடுப்பதாக அவரோடு கடவுள் ஒப்பந்தம் செய்தார். (ஆதி 15:18) இந்த வாக்குறுதியை இஸ்ரவேல் தேசத்துக்கு அவர் மறுபடியும் கொடுத்தார். (யாத் 23:31; உபா 1:7, 8; 11:24; யோசு 1:4) தாவீதின் ஆட்சிக்காலத்துக்கு முன்பு ரூபனின் வம்சத்தார் சிலர் “யூப்ரடிஸ் ஆற்றின் அருகே இருக்கிற வனாந்தரத்தின் எல்லைவரை குடியிருந்தார்கள்” என்று 1 நாளாகமம் 5:9 சொல்கிறது. ஆனால், ‘கீலேயாத்தின் கிழக்குப் பகுதியில்’ பயணம் செய்யும்போது யூப்ரடிஸ் ஆறு கீலேயாத்திலிருந்து கிட்டத்தட்ட 800 கி.மீ. தூரத்தில் இருந்தது. அதனால், ரூபன் கோத்திரத்தார் ஒருவேளை சீரிய பாலைவனத்தின் எல்லைவரை மட்டுமே தங்களுடைய பகுதியை விரிவாக்கியிருக்க வேண்டும். அந்தப் பாலைவனம்தான் யூப்ரடிஸ் ஆறுவரை பரந்து விரிந்திருந்தது. அப்படியென்றால், கடவுளுடைய வாக்குறுதி தாவீது மற்றும் சாலொமோனின் ஆட்சிக்காலத்தில்தான் முதன்முதலில் நிறைவேறியதாகத் தெரிகிறது. அந்தக் காலத்தில் சீரிய தேசமான சோபாவும் இஸ்ரவேலின் கட்டுப்பாட்டில் இருந்தது. அநேகமாக வட சீரியாவில் இருந்த சோபாவின் எல்லை, யூப்ரடிஸ் ஆற்றங்கரைவரை இருந்தது.—2சா 8:3; 1ரா 4:21; 1நா 18:3-8; 2நா 9:26.
ஆகஸ்ட் 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 73-74
கடவுளுக்கு சேவை செய்யாதவர்களைப் பார்த்து நமக்கு பொறாமை வந்தால் என்ன செய்வது?
சோர்ந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்
14 சங்கீதம் 73-ஐ எழுதியவர் ஒரு லேவியர். அதனால், யெகோவாவுடைய ஆலயத்தில் சேவை செய்கிற பாக்கியம் அவருக்கு இருந்தது. ஆனாலும், ஒரு கட்டத்தில் அவர் சோர்ந்துபோனார். ஏன்? அநியாய அக்கிரமம் செய்கிறவர்களைப் பார்த்து அவர் பொறாமைப்பட்டார். அவர்களைப் போல் தன்னால் இருக்க முடியவில்லையே என்று நினைத்து அல்ல, தன்னைவிட அவர்கள் நன்றாக இருக்கிறார்களே என்று நினைத்துதான் பொறாமைப்பட்டார். (சங். 73:2-9, 11-14) அவர்களிடம் சொத்துசுகம் நிறைய இருப்பதாகவும், எந்தக் கவலையும் இல்லாமல் அவர்கள் வாழ்க்கையை அனுபவிப்பதாகவும் நினைத்தார். இதனால் ரொம்பவே சோர்ந்துபோய் “நான் சுத்தமான இதயத்தோடும், கறைபடியாத கைகளோடும் வாழ்ந்தது வீணிலும் வீண்தான்” என்று சொன்னார். யெகோவாவுக்கு சேவை செய்வதையே நிறுத்திவிடும் அளவுக்கு அவர் சோர்ந்துபோயிருக்கலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது.
சோர்ந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார்
15 சங்கீதம் 73:16-19-யும், 22-25-யும் வாசியுங்கள். ‘கடவுளுடைய பரிசுத்த ஆலயத்துக்குள்’ லேவியர் நுழைகிறார். கடவுளை வணங்குவதற்காக அங்கே மற்றவர்களும் வந்திருக்கிறார்கள். ஆலயத்தில் நிதானமாகவும் தெளிவாகவும் அவரால் யோசிக்க முடிகிறது. தன்னுடைய நிலைமையைப் பற்றி ஜெபம் செய்யவும் முடிகிறது. இப்படியெல்லாம் செய்ததால், தான் நினைத்தது முட்டாள்தனம் என்பதை அவர் புரிந்துகொள்கிறார். யெகோவாவைவிட்டு தன்னை பிரிக்கும் ஆபத்தான ஒரு பாதையில் தான் காலடி எடுத்து வைக்க ஆரம்பித்திருந்ததையும் அவர் உணர்கிறார். கெட்டவர்கள் “சறுக்கலான தரையில்” நிற்பதையும், அவர்களுக்கு ‘கோரமான முடிவு’ காத்திருப்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். பொறாமையையும் சோர்வையும் சமாளிப்பதற்கு, எல்லாவற்றையும் யெகோவா பார்ப்பதுபோல் அவர் பார்க்க வேண்டியிருந்தது. அப்படி அவர் பார்த்ததால், இழந்துபோன சந்தோஷமும் மனசமாதானமும் அவருக்குத் திரும்பவும் கிடைத்தது. அதனால்தான், “இந்தப் பூமியில் [யெகோவாவை] தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று அவர் சொன்னார்.
16 பாடங்கள்: அக்கிரமம் செய்கிறவர்கள் சந்தோஷமாக இருப்பதாக நினைத்து அவர்கள்மேல் நாம் பொறாமைப்படக் கூடாது. அவர்களுடைய சந்தோஷம் நிரந்தரமானது கிடையாது. முடிவில்லாத வாழ்க்கை என்பதும் அவர்களுக்குக் கிடையவே கிடையாது. (பிர. 8:12, 13) ஒருவேளை, அவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டால் நாம் சோர்ந்துவிடுவோம். யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கிற பந்தத்திலும் விரிசல் ஏற்பட்டுவிடும். அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஒருவேளை உங்களுக்கு வந்தால், லேவியர் செய்ததை நீங்கள் செய்ய வேண்டும். கடவுளுடைய அறிவுரையைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும். கடவுளுக்குப் பிடித்ததைச் செய்பவர்களோடு நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். வேறு எதையும், வேறு யாரையும்விட யெகோவாவை அதிகமாக நேசிக்க வேண்டும். அப்போது, உங்களுக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கும். அதோடு, ‘உண்மையான வாழ்வுக்கான’ பாதையில் உங்களால் தொடர்ந்து பயணம் செய்ய முடியும்.—1 தீ. 6:19.
மோசேயின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
5 ‘பாவத்தினால் வரும் தற்காலிகச் சந்தோஷங்களில்’ மயங்கிவிடாதிருக்க நீங்கள் என்ன செய்யலாம்? இப்படிப்பட்ட சிற்றின்பங்கள் பனித்துளிபோல் சட்டென மறைந்துவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். ‘உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோவதை’ உங்களுடைய விசுவாசக் கண்களால் பாருங்கள். (1 யோ. 2:15-17) மனந்திரும்பாமல் தொடர்ந்து பாவத்தில் ஈடுபடுவோரின் கதியைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ‘சறுக்கலான இடங்களில் நிற்கிறவர்கள் . . . அழிந்து நிர்மூலமாவார்கள்.’ (சங். 73:18, 19) ஆகவே, ‘பாவம் செய்ய வேண்டுமென்ற ஆசைக்கு அடிபணிந்தால் என் கதி என்னவாகும்’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
நீங்கள் மகிமை அடைவதைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்
3 தன் வலதுகையைப் பிடித்து உண்மையான மகிமைக்கு யெகோவா தன்னை வழிநடத்திச் செல்வார் என்று சங்கீதக்காரன் முழுமையாக நம்பினார். (சங்கீதம் 73:23, 24-ஐ வாசியுங்கள்.) யெகோவா இதை எப்படிச் செய்கிறார்? மனத்தாழ்மையுள்ள தம் ஊழியர்களை அநேக வழிகளில் கௌரவிப்பதன் மூலம் மகிமைக்கு வழிநடத்திச் செல்கிறார். கடவுளுடைய சித்தத்தைப் புரிந்துகொள்ளும் ஞானத்தைக் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்கிறார். (1 கொ. 2:7) அவருடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, அதன்படி நடக்கிறவர்களுக்கு அவரோடு நெருங்கிய நண்பராகும் பாக்கியத்தைக் கொடுத்து கௌரவிக்கிறார்.—யாக். 4:8.
4 ஊழியம் என்னும் மகத்தான பொக்கிஷத்தை யெகோவா தம் மக்களுக்குக் கொடுத்திருக்கிறார். (2 கொ. 4:1, 7) இந்த ஊழியம் மகிமைக்கு வழிநடத்தும். ஆம், ஊழியத்தின் மூலம் யெகோவாவுக்கு மகிமை சேர்ப்பவர்களையும் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களையும் பற்றி யெகோவா இப்படிச் சொல்கிறார்: “என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன்.” (1 சா. 2:30) அப்படிப்பட்டவர்கள் யெகோவாவிடம் நல்ல பெயரைச் சம்பாதிக்கிறார்கள், அவரை வழிபடும் சக ஊழியர்களின் பாராட்டையும் பெறுகிறார்கள்.—நீதி. 11:16; 22:1.
5 அப்படியென்றால், ‘யெகோவாவுக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்கிறவர்களுக்கு’ எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கிறது? “நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் [யெகோவா] உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. (சங். 37:34) ஆம், புதிய பூமியில் முடிவில்லா வாழ்வு எனும் ஒப்பற்ற மகிமையைப் பெற அவர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.—சங். 37:29.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E 240
லிவியாதான்
கடவுள் தன் மக்களைக் காப்பாற்றுவதற்காகச் செய்த அற்புதங்களைப் பற்றி சங்கீதம் 74 சொல்கிறது. வசனங்கள் 13 மற்றும் 14, இஸ்ரவேலர்களைக் கடவுள் எகிப்திலிருந்து விடுதலை செய்ததைப் பற்றி அடையாள அர்த்தத்தில் சொல்கிறது. அந்த வசனங்களில், ‘கடலில் இருக்கிற ராட்சதப் பிராணிகளும்’ ‘லிவியாதானும்’ அடுத்தடுத்து சொல்லப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால், லிவியாதானின் தலை நொறுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டிருப்பது, இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி வந்துகொண்டிருந்த சமயத்தில் பார்வோனும் அவனுடைய படையும் வீழ்த்தப்பட்டதை ஒருவேளை குறிக்கலாம். மற்ற சில ஆங்கில மொழிபெயர்ப்பு பைபிள்களில், ‘லிவியாதானின் தலை’ என்பதற்குப் பதிலாக ‘பார்வோனின் பலசாலிகள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. (எசே 29:3-5; 32:2) ஏசாயா 27:1-ல் சொல்லப்பட்டிருக்கும் லிவியாதான், உலகம் முழுவதும் இருக்கும் ஒரு சாம்ராஜ்யத்துக்கு அல்லது அமைப்புக்கு அடையாளமாக இருக்கிறது; அது ‘ராட்சதப் பாம்பின்’ கட்டுப்பாட்டில் இருக்கிறது. (வெளி 12:9) இஸ்ரவேலர்களைக் கடவுள் பாபிலோனிலிருந்து விடுதலை செய்து அவர்களுடைய தாய்நாட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருவதைப் பற்றிய தீர்க்கதரிசனம்தான் ஏசாயா 27-ல் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், யெகோவா லிவியாதானை “தாக்குவார்” என்பது பாபிலோனை அவர் தண்டிப்பதைக் குறிக்க வேண்டும். ஆனால், வசனங்கள் 12 மற்றும் 13, அசீரியாவையும் எகிப்தையும் பற்றிக்கூடச் சொல்கின்றன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, லிவியாதான் என்பது யெகோவாவையும் அவருடைய மக்களையும் எதிர்க்கிற ஒரு உலகளாவிய சாம்ராஜ்யத்தை அல்லது அமைப்பை அநேகமாகக் குறிப்பதாகத் தெரிகிறது.
ஆகஸ்ட் 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 75-77
பெருமையடிக்காதீர்கள்—ஏன்?
மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள்
4 நிறையப் பேர் சுயநலக்காரர்களாகவும் பண ஆசைபிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்று பவுல் சொன்ன பிறகு, அவர்கள் ஆணவமுள்ளவர்களாகவும், கர்வமுள்ளவர்களாகவும், தலைக்கனம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்றும் சொன்னார். இப்படிப்பட்ட குணங்களைக் காட்டுகிறவர்கள், மற்றவர்களைவிட தங்களை உயர்ந்தவர்களாக நினைக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம் அல்லது அவர்களுக்கு சில திறமைகளோ நிறைய சொத்தோ பெரிய அந்தஸ்தோ இருக்கலாம். மற்றவர்களுடைய அபிமானத்தைப் பெற வேண்டுமென்று அவர்கள் துடிக்கிறார்கள். “அப்படிப்பட்ட ஒருவர் தன்னுடைய இதயத்தில் ஒரு பீடத்தைக் கட்டி, தன்னையே வணங்குகிறார்” என்று ஒரு அறிஞர் எழுதினார். தலைக்கனம் பிடித்தவர்களுக்குக்கூட, மற்றவர்கள் தலைக்கனத்தோடு நடப்பதைப் பார்க்கப் பிடிக்காது; தலைக்கனம் அந்தளவுக்கு அசிங்கமான ஒரு குணம்!
5 யெகோவா தலைக்கனத்தை அருவருக்கிறார். ‘ஆணவத்தோடு பார்க்கும் கண்களை’ அவர் நிச்சயமாகவே வெறுக்கிறார். (நீதி. 6:16, 17) ஒருவருக்குத் தலைக்கனம் இருந்தால் அவரால் கடவுளை நெருங்கவே முடியாது. (சங். 10:4) தலைக்கனம் பிசாசின் குணம். (1 தீ. 3:6) யெகோவாவின் உண்மை ஊழியர்கள் சிலரைக்கூட தலைக்கனம் தொற்றியிருப்பது வருத்தமான ஒரு விஷயம். உதாரணத்துக்கு, யூதாவை ஆட்சி செய்த உசியா ராஜா நிறைய வருஷங்களாகக் கடவுளுக்கு உண்மையோடு இருந்தார். ஆனால், “வலிமைமிக்கவராக ஆனதும், அவருக்கு ஆணவம் தலைக்கேறியது. அதுவே அவருடைய அழிவுக்குக் காரணமானது. . . . தன்னுடைய கடவுளான யெகோவாவின் கட்டளையை அவர் மீறினார்” என்று பைபிள் சொல்கிறது. தனக்கு அதிகாரம் இல்லாதபோதும் ஆலயத்துக்குள் போய் தூபம் காட்டினார். கடவுளுக்கு உண்மையோடு இருந்த எசேக்கியா ராஜாவும் கொஞ்சக் காலத்துக்குத் தலைக்கனத்தோடு நடந்துகொண்டார்.—2 நா. 26:16; 32:25, 26.
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—மூன்றாம், நான்காம் பகுதிகள்
75:4, 5, 10—“கொம்பு” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? ஒரு மிருகத்திற்கு அதன் கொம்புகள் வலிமைமிக்க ஆயுதமாக இருக்கின்றன. ஆகவே, “கொம்பு” என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் வலிமையை, அதாவது பலத்தை அர்த்தப்படுத்துகிறது. யெகோவா தமது மக்களின் கொம்புகளை உயர்த்தி, அவர்களை மேன்மைப்படுத்துகிறார்; அதேசமயத்தில், ‘துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுகிறார்.’ ‘நம் கொம்பை உயர்த்தாதிருக்கும்படி’ அதாவது பெருமை, கர்வம் ஆகியவற்றை தவிர்க்கும்படி நாம் எச்சரிக்கப்படுகிறோம். ஒருவருக்கு உயர்வு அளிப்பவர் யெகோவாவே; அதனால், சபையில் கொடுக்கப்படும் பொறுப்புகளை யெகோவாவிடமிருந்து வந்தவையாகக் கருத வேண்டும்.—சங்கீதம் 75:7.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—மூன்றாம், நான்காம் பகுதிகள்
76:10—“மனுஷனுடைய கோபம்” எவ்வாறு யெகோவாவை மகிமைப்படுத்தும்? நாம் கடவுளுடைய ஊழியர்களாக இருப்பதால், மற்ற மனிதர்கள் நம்மீது கோபத்தில் கொதித்தெழலாம், அதை யெகோவா அனுமதிக்கையில் நல்ல விளைவுகள் ஏற்படலாம். நாம் படுகிற எந்தக் கஷ்டமும் ஏதாவதொரு விதத்தில் நம்மைப் பயிற்றுவிக்கலாம். நாம் போதுமானளவு பயிற்றுவிப்பை பெறும்வரைதான் அந்தக் கஷ்டத்தை யெகோவா அனுமதிக்கிறார். (1 பேதுரு 5:10) ‘மனிதனுடைய மிஞ்சுங்கோபத்தை கடவுள் அடக்குகிறார்.’ ஒருவேளை, நம்முடைய உயிரே போகுமளவுக்கு நாம் துன்பப்பட்டால்? அதுவும்கூட யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறது; எப்படியெனில், நாம் உண்மையோடு சகித்திருப்பதை பார்க்கிறவர்களும் கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பிக்கலாம்.
ஆகஸ்ட் 26–செப்டம்பர் 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் சங்கீதம் 78
உண்மையில்லாமல் போன இஸ்ரவேலர்கள்—எச்சரிக்கும் உதாரணம்
w96 12/1 பக். 29-30
“முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்”—ஏன்?
துயரத்துக்கேதுவாக இஸ்ரவேலர், மறந்துவிடும் இந்தப் பாவத்திற்கு அடிக்கடி உட்பட்டார்கள். இதன் விளைவென்ன? “அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள் [“வேதனை உண்டாக்கினார்கள்,” NW] அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள்.” (சங்கீதம் 78:41, 42) யெகோவாவின் கட்டளைகளை அவர்கள் மறந்தது, கடைசியாக, அவர்கள் அவரால் தள்ளப்பட்டுப்போவதில் விளைவடைந்தது.—மத்தேயு 21:42, 43.
சங்கீதக்காரன் ஒரு நல்ல முன்மாதிரியை வைத்தார், அவர் எழுதினதாவது: “யெகோவாவின் செயல்களை நினைவுக்குக் கொண்டுவருவேன், பூர்வகாலத்தில் நீர் செய்த அதிசயங்களை நினைப்பேன். உமது கிரியைகளையெல்லாம் தியானிப்பேன், உமது செயல்களை யோசிப்பேன்.” (சங்கீதம் 77:11, 12, தி.மொ.) கடந்தகால உண்மைத்தவறாத சேவையையும், யெகோவாவின் அன்புள்ள செயல்களையும் நினைவுபடுத்தி தியானிப்பது, உள்ளத்தூண்டுதலையும், ஊக்கமூட்டுதலையும், மதித்துணர்வையும் நமக்கு அளிக்கும். மேலும், ‘முந்தின நாட்களை நினைத்துக்கொள்வது,’ சோர்வை அகற்றி, நம்மால் இயலும் எல்லாவற்றையும் செய்யவும், உண்மையுடன் சகித்துநிலைத்திருக்கவும் உதவிசெய்யும்.
‘முறுமுறுப்பதை’ தவிருங்கள்
16 முறுமுறுக்கும்போது, நம்மையும் நமக்கிருக்கும் பிரச்சினைகளையும் மட்டுமே நாம் கவனத்தில் கொள்கிறோம். யெகோவாவுக்கு சாட்சிகளாய் இருப்பதால் நாம் பெற்றிருக்கும் ஆசீர்வாதங்களை அது நம் கண்ணிலிருந்து மறைத்துவிடுகிறது. குறைகூறும் மனப்பான்மையை நாம் மேற்கொள்ள விரும்பினால் இந்த ஆசீர்வாதங்களை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். உதாரணமாக, யெகோவாவின் பெயரைத் தாங்கிய ஜனங்களாக இருக்கும் அருமையான பாக்கியம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. (ஏசாயா 43:10) அவருடன் ஒரு நெருக்கமான பந்தத்தை நாம் வளர்த்துக்கொள்ள முடிகிறது; அதன் மூலம் ‘ஜெபத்தைக் கேட்கிறவரிடம்’ எந்த நேரத்திலும் பேச முடிகிறது. (சங்கீதம் 65:2; யாக்கோபு 4:8) கடவுளுடைய பேரரசாட்சி பற்றிய விவாதத்தை நாம் புரிந்து வைத்திருக்கிறோம்; கடவுளுக்கு எப்போதும் உத்தமமாய் இருப்பது நமக்கு கிடைத்திருக்கும் சிலாக்கியம் என்பதை நினைவில் வைத்திருக்கிறோம்; இவை நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன. (நீதிமொழிகள் 27:11) ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிரசங்கிப்பதில் நம்மால் தொடர்ந்து ஈடுபட முடிகிறது. (மத்தேயு 24:14) இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைப்பது சுத்தமான மனசாட்சியைக் கொண்டிருக்க நமக்கு உதவுகிறது. (யோவான் 3:16) எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளை சகித்துக்கொண்டிருந்தாலும் இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை நாம் அனுபவிக்கிறோம்.
யெகோவாவுக்கு உணர்ச்சிகள் இருக்கின்றனவா?
“வனாந்தரத்தில் அவர்கள் எத்தனை தடவை அவருடைய பேச்சை மீறியிருப்பார்கள்!” என்று சங்கீதம் 78:40 சொல்கிறது. அடுத்த வசனம் இப்படிச் சொல்கிறது: “அவர்கள் திரும்பத் திரும்பக் கடவுளைச் சோதித்தார்கள்.” (சங் 78:41) கீழ்ப்படியாமல்போவது இஸ்ரவேலர்களுக்கு ஒரு வழக்கமாகவே இருந்ததாக சங்கீதக்காரன் எழுதியதைக் கவனியுங்கள். எகிப்திலிருந்து விடுதலையான கொஞ்சக் காலத்திலேயே, வனாந்தரத்தில் இருந்தபோதே, அவர்கள் இவ்வளவு மோசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அவர்கள் கடவுளுக்கு எதிராகவே முணுமுணுத்தார்கள். கடவுளால் தங்களைக் கவனித்துக்கொள்ள முடியுமா, அப்படிச் செய்ய அவருக்கு ஆசை இருக்கிறதா என்றெல்லாம் சந்தேகப்பட்டார்கள். (எண் 14:1-4) ‘அவருடைய பேச்சை மீறினார்கள்’ என்ற வார்த்தைகளைப் பற்றி பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: அந்த வார்த்தைகளை “‘கடவுளுக்கு எதிராகத் தங்கள் இதயங்களைக் கடினமாக்கிக்கொண்டார்கள்’ என்றோ, ‘கடவுளிடம் “முடியாது” என்று சொல்லிவிட்டார்கள்’ என்றோ அடையாள அர்த்தத்தில் மொழிபெயர்க்கலாம்.” ஆனாலும், தன் மக்கள் மனம் திருந்தியபோது யெகோவா இரக்கத்தோடு அவர்களை மன்னித்தார். இருந்தாலும், அவர்கள் மறுபடியும் கீழ்ப்படியாமல் போனார்கள். இப்படியே மாறி மாறி நடந்தது.—சங் 78:10-19, 38.
ஒவ்வொரு தடவை தன் மக்கள் கீழ்ப்படியாமல் போனபோதும் யெகோவாவுக்கு எப்படி இருந்தது? அவர்கள் ‘அவருடைய மனதைப் புண்படுத்தினார்கள்’ என்று வசனம் 40 சொல்கிறது. இன்னொரு ஆங்கில மொழிபெயர்ப்பில், ‘அவரைத் துக்கப்படுத்தினார்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி ஒரு பைபிள் ஆராய்ச்சிப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “ஒரு பிள்ளை கீழ்ப்படியாமலும் அடங்காமலும் இருக்கும்போது அவனுடைய அப்பா அம்மாவுக்கு எவ்வளவு வேதனையாக இருக்குமோ அதே போலத்தான் எபிரெயர்கள் நடந்துகொண்ட விதமும் கடவுளுக்கு வேதனையைக் கொடுத்திருக்கும்.” அடங்காத அந்த இஸ்ரவேலர்கள் உண்மையிலேயே “இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளை நோகடித்தார்கள்.”—வசனம் 41, அடிக்குறிப்பு.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—மூன்றாம், நான்காம் பகுதிகள்
78:24, 25—மன்னா, ‘வானத்தின் தானியம்’ என்றும் ‘தூதர்களின் அப்பம்’ என்றும் அழைக்கப்படுவது ஏன்? மன்னா, தேவதூதர்களின் உணவு என இந்த இரண்டு சொற்றொடர்களுமே அர்த்தப்படுத்துவதில்லை. அது வானத்திலிருந்து பொழிந்ததால்தான் ‘வானத்தின் தானியம்’ என சொல்லப்பட்டது. (சங்கீதம் 105:40) தேவதூதர்களின் இருப்பிடம் பரலோகம் என்பதால், ‘தூதர்களின் அப்பம்’ என்ற சொற்றொடர், பரலோகத்திலிருக்கிற கடவுள்தான் அதை அளித்தார் என்பதை அர்த்தப்படுத்தியிருக்கலாம். (சங்கீதம் 11:4) இஸ்ரவேலருக்கு மன்னாவை அளிக்க தேவதூதர்களைக்கூட யெகோவா பயன்படுத்தியிருக்கலாம்.