உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 2/8 பக். 13-14
  • ‘வழிக்கு ஒன்று’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘வழிக்கு ஒன்று’
  • விழித்தெழு!—1987
  • இதே தகவல்
  • மதுபானம் அருந்துவதும் வாகனம் ஓட்டுவதும்—என்ன செய்யப்படலாம்?
    விழித்தெழு!—1987
  • கவனமாக ஓட்டும் பழக்கங்களை வளர்த்துக்கொள்ளவும்
    விழித்தெழு!—1989
  • மதுபானமும் வாகனம் ஓட்டுவதும்
    விழித்தெழு!—1987
  • வாகன விபத்துக்கள்—நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?
    விழித்தெழு!—2002
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 2/8 பக். 13-14

‘வழிக்கு ஒன்று’

அபாய சங்கு முழங்குவது எங்கள் காதுகளில் ஒலித்தது. ஆனால் அது தீயணைப்பதற்காக தீவிரிக்கும் தீயணைப்பு வண்டியின் சங்கு ஒலி என்று நாங்கள் நினைத்தோம். எங்கள் தெருவிலே தீயணைப்புப்படையில் பணியாற்றும் ஒருவர் இருந்தார், அவரை விசாரித்தால் ‘என்ன‘ நடந்துகொண்டிருக்கிறது என்று அவருக்கு தெரியும்’ என்று நான் நினைத்தேன் ஆனால் தொலைப்பேசியில் அவருடன் தொடர்பு கொள்ளமுடியவில்லை. பின்பு என்ன மகள் ஜெஃப்-ஐ தொலைப்பேசியில் அழைத்து விசாரித்தால் ‘வீடு திரும்பும் வழியில் என்ன நடந்தது என்று அவனுக்கு தெரியுமா’ என்று நினைத்தேன். அங்கிருந்தும் பதில் இல்லை இப்பொழுது உண்மையில் எனக்கு நடுக்கம் ஆரம்பித்தது.

என்னுடைய 29-வயது ஜெஃப் அந்த ஞாயிறு இரவு நான் வீட்டுக்கு வந்து எங்களுடன் உணவு அருந்திவிட்டு அடுத்தநாள் விடுமுறைக்கு செல்வதாக எங்களிடம் விடைபெற்று சென்றான். அரைமணி நேரத்துக்கு முன்புதான் அவன் என்னையும் அவன் தந்தையையும் கட்டியணைத்து முத்தமிட்டு விடைபெற்றான். அவன் நாங்கள் வசித்த இடத்திலிருந்து ஒரு சில கட்டிடங்கள் தள்ளி குடியிருந்தான். அப்படியிருக்க அவன் ஏன் இன்னமும் வீடு போய் சேரவில்லை.

நான் மீண்டுமாக அருகில் வசித்த அந்த அயலகத்தாரிடம் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். இந்தமுறை அவருடைய மனைவி பதிலளித்தாள். அவள் என் கணவன் வந்ததும் உங்களிடம் பேச சொல்கிறேன் என்றாள்; ஏனெனில் என்ன நடந்தது என்பதை பார்க்க அவர் வெளியில் சென்றிருந்தார். நான் என் படுக்கை அறையிலிருந்து தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தபோது எங்கள் வீட்டிற்கு முன்னால் ஒரு காவல் துறையினர் கார் வந்து நின்றது.

அந்த காவல்துறை அதிகாரி வீட்டின் வாசலுக்கு வந்தார். என் கணவன் ஸ்டீவ் அவருடைய இருதயம் வேகமாக துடிக்க, கதவை திறந்தார். அதிக தடுமாற்றத்துடன் அந்த அதிகாரியே பேச துவங்கினார்: ‘இதை சொல்வதற்கு எனக்கு கஷ்டமாக இருக்கிறது, ஆனால் படுமோசமான ஒரு விபத்து நடந்து விட்டது உங்கள் மகன். . .உங்கள் மகன். . .செத்துவிட்டான்.”

உடனே ஸ்டீவ் கூச்சலிட்டதை நான் கேட்டேன், பின்பு என்ன நிகழ்ந்தது என்பதை காண நான் வெளியே சென்றேன். என்னால் நம்பமுடியாமல்: ‘அது உண்மையல்ல வேறொருவன்தான் செத்திருக்கவேண்டும் என்று நான் வற்புறுத்தினேன்.’

“இல்லை, இதை உங்களிடம் சொல்வதற்கு நான் விரும்பவில்லை, திருமதி ஃபெரேரா,” என்று விளக்கினார் அந்த அதிகாரி. “அது அவ்வளவு சீக்கிரம் நடந்து விட்டது. திடீரென்று நடந்துவிட்டது, ஆனால், ஆம் அவன் மரித்துவிட்டான்” அன்று மாலை நான் பேசின மற்றும் செய்த எந்த ஒரு காரியமும் எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை.

பிப்ரவரி 24, 1985 அன்று இரவு 9-50 மணிக்கு எங்கள் ஜெஃப் வெளியில் சென்ற சுருள் முடியுள்ள இளைஞன் அவன் காரை இன்னொரு கார் மோதியதால் உடனே மாண்டுபோனான். அந்த மற்ற காரை ஓட்டி வந்த ஓட்டுநரை பற்றியதென்ன? நான் வெட்டி வைத்திருக்கும் அந்த செய்தித்தாள் அறிக்கைபடி அவர் செயலாட்சித்துறை உதவியாளர் மாவட்ட வழக்கறிஞர் அநேக குற்றச்சாட்டுகளில் குடிப்போதையில் வண்டி ஓட்டினார் என்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். அவருக்கு குற்றத்தீர்ப்பு வழங்கப்படுமா என்பதை காலமே பதில் சொல்லும், என்றாலும் எங்கள் மகன் ஜெஃப் போய்விட்டான்.” ஷெர்லி ஃபெரேரா என்ற பெண் “விழித்தெழு!” நிருபரிடம் சொன்னது.

குடித்துவிட்டு ஓட்டுதல்—ஒரு கொடிய பிரச்னை. புள்ளிவிவரங்கள் துயர்தருவதாயிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் எங்காவது ஒரு இடத்தில் மேலே விவரிக்கப்பட்டதற்கு ஒப்பாக ஒரு சம்பவம் 20 நிமிடத்திற்கு ஒரு முறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பாதிக்கு மேற்பட்ட எல்லா சாலை உயிரிழப்புகளுக்கும் மதுபானமே காரணமாக இருக்கிறது. அமெரிக்க சாலைகளில் ஒவ்வொரு ஆண்டும் 23,000 முதல் 28,000 வரையான உயிரிகளை குடிக்கிறது. கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் கொல்லப்படும் 40 சதவிகிதமான ஓட்டுநர்களின் இரத்தத்தில் சாராயச்சத்து சட்டப்பூர்வமான வரம்பிற்கும் மேலாக இருப்பதாக மதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்னையில் ஜெர்மனியும் உட்பட்டிருக்கிறது-ஏறத்தாழ நான்கில் ஒரு சாலை மரணங்கள் குடித்துவிட்டு ஓட்டுவதால் ஏற்படுகின்றன.

மற்றும் ஜெஃப் சோக அனுபவம் காட்டுகிறபடி நீங்கள் தாமே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவராக இல்லாவிட்டாலும் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று ஒருபோதும் சொல்லமுடியாது. ஐக்கிய மாகாணத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையின் பயண பாதுகாப்பு நிர்வாகம் மதிப்பிடுவது என்னவெனில் வெள்ளிக்கிழமை இரவுகளில் மது உட்கொள்ளுதல் வெகு அதிகமாக இருக்கும் சமயத்தில் சில இடங்களில் பத்து வாகன ஓட்டுநர்களில் ஒருவர் சாலையில் குடிபோதையிலிருக்கிறார் என்பது உண்மையே! அடுத்த திருப்பத்தில் தன் காரை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகம் குடித்திருக்கிறாரென்றால் நீங்கள் எந்தளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறீர்கள்?

ஆனால் புள்ளிவிவரங்கள் முழு கதையையும் எடுத்துரைப்பது இல்லை. புள்ளிவிவரங்கள் மதுபானம் சம்பந்தப்பட்ட கார் விபத்தினால் கொல்லப்பட்ட மகன் அல்லது மகளுடைய -ஷெர்லி போன்ற தாய்மார்கள் படும்துயரத்தை எடுத்துரைக்க முடியாது. மதுபானம் தெளிந்து விழித்தபின்பு மற்றவனின் உயிரை நான் கொன்றுவிட்டேனே என்று உணரக்கூடிய ஓட்டுநரின் குற்ற உணர்வையும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்க முடியாது ஒரு இளைஞன் புலம்பினதாவது: “நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் என்னால் நான்குபேர் மாண்டுபோய்விட்டார்கள் என்ற அந்த உண்மையுடன் நான் வாழவேண்டியதாக இருக்கிறது. அது நிகழ்ந்தது முதற்கொண்டு நான் அதைப்பற்றி சிந்திக்காத கணமே இல்லை. அது எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கிறது காலையில் எழுந்திருக்கும்போது இரவில் படுக்கைக்கு செல்லும்போதும் இருந்துகொண்டிருக்கிறது.

என்றபோதிலும் மிதமாக குடிக்கவேண்டுமா அல்லது அறவே குடிக்கக்கூடாதா என்பது உங்களை பொருத்தது. ஆனால், மதுபான (அல்லது ஏதாவது போதை மருந்து) உட்கொண்ட நிலையில் வாகனத்தை ஓட்டுவது மற்றவர்களின் உயிரை அபாயத்துக்குட்படுத்துவதன் காரணமாக-ஒரு தனிப்பட்டவிவகாரமல்ல! என்றபோதிலும் யாராகிலும் ஒருவர் தன் வாகனத்தினுள் ஏறி அமர்ந்து அதை தன் வீட்டுக்கு ஓட்டி செல்லும் முன்பு ஆத்திர அவசரமாக மதுவை அருந்திவிட்டு “வழிக்கு ஒன்று” என்ற வழக்க சொல்லை பயன்படுத்துவதை நீங்கள் எத்தனைமுறை கேட்டிருக்கிறீர்கள்?

குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிசெல்வது ஒரு பிரச்னை, மரணத்தை விளைவிக்கும் ஒரு பிரச்னை, அதிகமாக குடித்துவிட்ட ஒரு வாகன ஓட்டுநரிடமிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம்? அதற்கு விடையளிக்கும் முன்பு மதுபானம் (சாராயச்சத்து) உங்களையும் மற்றும் வாகனம் ஓட்டும் உங்கள் திறமையையும் எப்படி பாதிக்கிறது என்பதை கலந்தாராய்வது உபயோகமாக இருக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்