அணுகுண்டும் மனிதனின் எதிர்காலமும்
அணுகுண்டு சகாப்தத்தில், நழுவிக்கொண்டிருக்கும் பாதுகாப்புக்காக தேடி அலைந்ததன் பலன், மொத்த அழிவைக் கொண்டு வரும் ஆயிரக்கணக்கான ஆயுதக் குவியலாகும்.
செயல்படத் தூண்டப்படுமேயானால், சேதங்கள் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த உண்மையில் உறுதியாக இருக்கின்றன என்பதை விவரமறிந்த ஆட்கள் அறிந்திருக்கிறார்கள். ஆம், அவைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கான விருப்பமே, பயமுறுத்தி தடை செய்வதன் கருப்பொருளாக இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களின் போர்திற நடவடிக்கை விமான படைத் துறையின் படைத்தலைவர் B.L. டேவிஸ் சமீபத்தில் பின்வருமாறு எழுதினார்: “ஆய்வின் முடிவாக, நம்பத்தக்க வகையில், பயத்தின் மூலமாக தடை செய்வதற்குரிய நம்முடைய திறமை இரண்டு வித்தியாசமான காரணிகளின் செயல்களாக இருக்கின்றன. முதலாவதாக சண்டையின் எந்தக் கட்டத்திலும் எதிராளியின் இலக்குகளை மறுப்பதற்கு நமக்குத் திறமையிருக்க வேண்டும். அது நமக்கு இருக்கிறது என்பதை எதிராளிகள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். இரண்டாவதாக, நம்முடைய தேசீய அக்கறைகளைப் பாதுகாப்பதற்காக ஒரு தேசமாக, அந்தத் திறமையை உபயோகிக்க நமக்குத் துணிவு இருக்க வேண்டும். அது நமக்கிருப்பதை எதிராளிகள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும்.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை)—விமானப்படை பத்திரிகை, ஜூலை 1985.
கோபாவேசத்தோடு அணு ஆயுதங்கள் 40 வருடங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கிறது. ஆனால் கடந்த காலத்தில் கட்டுப்பாடோடிருந்திருப்பது எதிர்காலத்துக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிப்பதில்லை. அண்மையில் செய்யப்பட்ட ஒரு தேசீய வாக்கெடுப்பில், படைபல போட்டி தொடருமேயானால், கடைசியாக அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க மக்களில் 68 சதவிகிதத்தினர் நம்புவது தெரியவந்தது.
இப்படிப்பட்ட கவலை உலகம் முழுவதிலுமுள்ளது. சியேரா லியோனிலுள்ள 18 வயது மாணவன் என்ன எழுதுகிறான் என்பதைக் கவனியுங்கள்: “ஒரு அணு யுத்தம் இந்த கிரகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கும். . . . இதன் காரணமாகவே, ஆப்பிரிக்காவிலுள்ள மக்கள் வல்லரசுகளின் தேசங்களிலிருந்து வெகு தொலைவில் இருந்த போதிலும் அதைக் குறித்துக் கவலைப்படுவது அவசியமாயிருக்கிறது. . . . மொத்தமாகப் பார்த்தால், ஒரு உலகளாவிய அழிவின் அச்சுறுத்தலை, ஜனங்கள் கையாளும் விதம், அதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கவே மறுப்பதன் மூலமாக இருக்கிறது. இதைத்தான் ஆராய்ச்சியாளர்கள் ‘மனதை மூடிக்கொள்வது’ என்பதாக அழைக்கிறார்கள். ஆனால் உலகின் பதட்ட நிலை அதிகரித்து வரும்போது, உணர்ச்சி சம்பந்தமாக இந்த விளையாட்டுச் செயல்களைப் புரிந்து அச்சுறுத்தலை வெறுமென புறக்கணிப்பது அதிக கடினமாகிவருகிறது.”
பாதுகாப்புக்கு மற்ற பயமுறுத்தல்கள்
ஆனால் வல்லரசுகளுக்கிடையே ஒரு போரின் தெளிவான அச்சுறுத்தலைத் தவிர, மனிதவர்க்கம் மற்ற விதங்களில் அச்சுறுத்தப்பட்டு வருகிறது. இன்னும் அதிகமான தேசங்கள் அணு ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் என்பது ஒரு அபாயமாக இருக்கிறது. ஏற்கெனவே அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக நன்கு அறியப்பட்டுள்ள ஐந்து தேசங்களோடுகூட, இன்னும் குறைந்த பட்சம் ஆறு தேசங்களாவது, அவற்றை வைத்திருக்கின்றன அல்லது சொந்தமாக அணு குண்டுகளைத் தயார் செய்யும் நிலையில் இருக்கின்றன. நூற்றாண்டின் முடிவில் அல்லது அதற்கும் அதிகமான தேசங்கள் அணுகுண்டை வைத்திருக்கும் என்பதாக நிபுணர்கள் நம்புகிறார்கள்.
இந்த ஆயுதங்களில் ஒன்றை பயங்கரவாத அமைப்பு ஒன்று பெற்றுக்கொள்வது மற்றொரு ஆபத்தாக இருக்கிறது. அணு குண்டு ஒன்றை வைத்து ஒரு பயங்கரவாதி என்ன செய்யக்கூடும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒரு முழு நகரத்தையே பணையம் வைத்துவிடக்கூடும்!
இவர்கள் எவ்விதமாக ஒரு அணுகுண்டை பெற்றுக்கொள்ள முடியும்? இரண்டு வழிகளில் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் ஒன்றை திருடிவிடலாம்—50,000-ல் ஒன்றை அவர்கள் தெரிந்துகொள்ள முடியும் என்பது நினைவிருக்கட்டும்! அவர்கள் ஒன்றை தயார் செய்யவும் முடியும், அணுகுண்டை தயார் செய்யும் தொழில் நுட்பம் இனிமேலும் இரகசியமாக இல்லை. இதன் அடிப்படை ஆக்கக்கூறான பொன்னாகம் (plutonium) ஏராளமாக கிடைக்கிறது. உண்மையில் 2000 வருடத்துக்குள், ஆண்டுக்கு 7,50,000 நாகசாகி அளவு குண்டுகளைத் தயாரிப்பதற்குப் போதுமான பொன்னாகம் படைத்துறை சாதாரண அணு ஆயுத திட்டங்களின் மூலமாகவே உற்பத்தி செய்யப்படும் என்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவைகளோடுகூட, விபத்துகள் ஏற்படுவதற்கும் தவறாக மதிப்பீடு செய்வதற்கு அல்லது அமைப்புகள் நொடித்துப் போவதற்குமான சாத்தியங்கள் இருக்கின்றன.
மனித பரிகாரம்
இந்தப் பொருளின் பேரில் விஞ்ஞானிகளும் அறிஞர்களும், படைப் பெருந்தலைவர்களும் அரசியல் வாதிகளும் விளக்கமாக எழுதியிருக்கிறார்கள். அணு ஆயுதப் போட்டியை, பெருஞ் செலவு பிடிக்கின்ற, வீணான, மற்றும் மிகவும் ஆபத்தான ஒன்றாக அவர்கள் அதிகதிகமாக கருதுகிறார்கள். பல்வேறு பரிகாரங்களை அவர்கள் எடுத்துரைக்கிறார்கள். சிலர் முழுவதுமாக படை வலிமை குறைக்கப்பட வேண்டும் என்கிறார்கள். மற்றவர்கள் இனிமேலும் ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படக்கூடாது என்கிறார்கள். இன்னும் மற்றவர்கள் ‘விண்வெளி போர்’ தற்காப்புமுறையை சிபாரிசு செய்கிறார்கள். கடந்த ஜனவரியில் வல்லரசுகளின் இரு தலைவர்களும் நம்பிக்கைத் தரும் வகையில் பேசினார்கள். 2000 வருடத்துக்குள் பூமியிலிருந்து அணு ஆயுதங்களை ஒழித்துவிட, படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மைக்கேல் கோர்பச்சேவ் சொன்னார். ரோனால்ட் ரீகன் இதை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இது பொறுப்புணர்ச்சியுடன் செய்யப்பட்ட ஒரு சமாதானத் திட்டமா அல்லது பிரச்சார ஏற்பாடா? இந்தப் புதிய செயல் முறைகள் அனைத்திலும் ஒரு காரியம் பொதுவாக இருக்கிறது—அவை அனைத்தும் ஏதோ ஒரு மனித பரிகாரத்தைச் சுட்டிக் காண்பிக்கின்றன.
இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: முதலிடத்தில் மனிதர்கள் தாமே அணு ஆயுத யுத்தத்தின் ஆபத்தை உருவாக்கியிருப்பதன் காரணமாக, இந்த ஆபத்திலிருந்து விடுதலையைக் கொண்டுவருவதற்கு மனிதர்களை நாம் நம்புவது நடைமுறைக்கு ஒத்துவருவதாக இருக்கிறதா? மரணத்தையும் அழிவையும் கொண்டுவரும் ஆயுதங்களை உருவாக்குவதில் தேர்ச்சிப் பெற்ற மனிதர்கள் வியப்பூட்டும் வகையில் புத்திக்கூர்மையைக் காண்பித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த இயல்பான குணங்களைக் கற்றறிவதில் தேர்ச்சி பெற்றுவிட்டார்களா? இந்தச் சந்ததி இரண்டு கொடுமையான உலகப் போர்களைப் பார்த்துவிட்டது. இதன் செயல் பரப்பும் அழிவும் மனிதவர்க்க சரித்திரத்தில் எந்த முந்தைய போரையும் சிறியதாக தோன்றும்படி செய்துவிட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 40 வருடங்களில் சுமார் 150 சிறிய போர்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன; 300 லட்சம் ஆட்கள் இவைகளில் உயிரிழந்திருக்கிறார்கள்.
கடவுளுடைய பரிகாரம்
பைபிள் பின்வருமாறு சொல்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “பிரபுக்களையும் இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” அணு ஆயுத இரண்டக நிலைக்கு யெகோவா தம்முடைய சொந்த பரிகாரத்தை வைத்திருக்கிறார். மனிதனுடையதைப் போல் இல்லாமல், அவர் கொண்டுவரும் பரிகாரம் யுத்தத்தை முழுமையாகவும் என்றென்றுமாகவும் ஒழித்துவிடுவதாக இருக்கும்.—சங்கீதம் 46:9; 146:3.
எல்லா இடங்களிலுமுள்ள சமாதானப் பிரியர்களுக்கு நிலையான பாதுகாப்பைக் கொண்டுவரும் ஒரு உலக அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யத்தில் தானே பரிகாரம் இருக்கிறது. பூமியிலுள்ள 200-க்கும் மேற்பட்ட தேசங்களில் முப்பது லட்சம் ஆட்கள், இந்த ராஜ்யம் சீக்கிரத்தில் பூமியின்மீது தன்னுடைய அதிகாரத்தைச் செலுத்தி அணு ஆயுத பேரழிவின் வாய்ப்பை என்றுமாக முடிவுக்குக் கொண்டுவரும் என்பதை அறிந்திருக்கிறார்கள். இவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள்.
அந்த ராஜ்யத்தின் நீதியுள்ள சட்டங்களுக்குக் கீழ்ப்படிதலாக அவர்கள் மீகா 4:3-லுள்ள தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றி வருகிறார்கள்: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறு ஜாதி பட்டயம் எடுப்பதில்லை; அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” உலகிலுள்ள நான்கில் ஒரு பங்கு விஞ்ஞானிகள் தற்காப்பு சம்பந்தப்பட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் எவரும் யெகோவாவின் சாட்சிகள் இல்லை. சுமார் 700 லட்சம் ஆட்கள் இராணுவ சம்பந்தப்பட்ட வேலைகளில் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் ஒருவர்கூட யெகோவாவின் சாட்சி இல்லை.
அனால் அணு ஆயுத இடர்பாடான நிலையை வெறுமென பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக சாட்சிகள் நிலைமையை சரி செய்ய கடவுள் என்ன செய்வார் என்பதை ஜனங்களுக்கு அன்பாக கற்பித்து வருகிறார்கள். உண்மைகள் உங்களுடைய சொந்த பைபிளில் தானே இருக்கின்றன. இவைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவியைப் பெற உங்களுடைய சமுதாயத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி செய்ய அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். (g86 5/22)
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
வல்லரசுகள் ஒன்றையொன்று வெகுவாக சந்தேகித்து, பயப்படுவதே, பிரச்னையின் கருவாக இருக்கிறது
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
சுமார் 700 லட்சம் ஆட்கள் நேரடியாக இராணுவத்தோடு சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட யெகோவாவின் சாட்சி இல்லை