கருச்சிதைவு—யார் சரி?
உங்கள் குழந்தை உயிர்பிழைப்பதற்குரிய சாத்தியம் 0.1 சதவீதமே என்று இரு பெரிய மருத்துவ நிபுணர்கள் உங்களிடம் சொல்லுகிறார்கள். அது உயிரோடு பிறந்தாலும் பலவித ஊனங்களுடன் பிறந்து ஒருசில நாட்களில் மரித்துவிடும். நீங்கள் என்ன செய்வீர்கள்? நிகழ்வதை ஏற்றுக்கொள்வீர்களா? அல்லது கருச்சிதைவு செய்துகொள்வீர்களா?
இப்படிப்பட்ட நிலைமை ஏற்படாது என்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். ஆனால் அது ஏற்படலாம், ஏன், இங்கிலாந்தில் இலண்டன் மாநகரில் இது ஏற்பட்டிருக்கிறது. மகிழ்ச்சிக்குரியதென்னவெனில், கரு வளருவதற்கான பெற்றோரின் தீர்மானத்தை மருத்துவமனை ஆதரித்தது. “நாங்கள் கருச்சிதைவு செய்துகொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டத்திலும் எங்களிடம் சொல்லப்படவில்லை?” என்று தகப்பன் விளக்கினார். இப்பொழுது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறாது, எந்த ஒரு அசாதாரணமான உடல் ஊனமுமின்றி பிறந்திருக்கிறான்.
“நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் மருத்துவ நிபுணர் ஒருவர். அவர் தொடர்ந்து சொன்னதாவது: “உயிரியலில் எதுவுமே 100 சதவீதம் அறியப்பட்டதாக இல்லை என்பதுதானே கடினமானது.” உண்மைதான், ஆனால் ஒரு மருத்துவரின் (அல்லது ஒரு பெற்றோரின்) தவறான தீர்ப்பு இன்றைய கருச்சிதைவுக் குழப்ப நிலையின் ஒரு அம்சம் மட்டுமே.
முரண்படும் அம்சங்கள்
கருச்சிதைவுக்குச் சாதகமாகவும் பாதகமாகவும் இருக்கும் மருத்துவம் மற்றும் அறநெறிப் பிரச்னைகள் உணர்ச்சிப் பாங்குடையவை. இரு சாராரின் தொகுதிகளும் பிறர் செவி சாய்ப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் உண்மை மனதுடன் குரல் எழுப்புகிறார்கள், மற்றும் அவர்களுடைய விவாதம் அநேக சமயங்களில் கடுமையாகவே இருக்கிறது. யார் சரி?
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பெற்றோர் சரியான தீர்மானத்தை எடுத்தார்கள் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் தங்களுடைய நோய்க் கணிப்பில் மருத்துவர்கள் சரியாக இருந்திருந்தால், அப்பொழுது என்ன? அந்தச் சூழ்நிலைகளின் கீழ், தாய் கருச்சிதைவு செய்துகொள்வது சரியாக இருந்திருக்குமா?
அந்தக் கேள்வி விடையளிப்பதற்குக் கடினமாக இருப்பதாய் அல்லது விடையளிக்க முடியாததாக காண்பீர்களானால், நீங்கள் மட்டுமே இந்நிலையில் இல்லை. நாம் சிந்திக்கப்போகிறபடி, நமக்கு வழிகாட்டியாக அமையும் நியமங்கள் இருக்கின்றன. ஆனால், முதலில், இந்தக் கருச்சிதைவுப் பிரச்னை உலகளாவிய விதத்தில் எந்தளவுக்கு அதிகமாகக் காணப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். (g87 4/8)