உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 1/8 பக். 28
  • இனவெறுப்பை மேற் கொள்ளுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இனவெறுப்பை மேற் கொள்ளுதல்
  • விழித்தெழு!—1989
  • இதே தகவல்
  • இனவேற்றுமை உணர்வுகள் சார்ந்த தப்பெண்ணங்களை நான் எவ்விதம் மேற்கொள்ளலாம்?
    விழித்தெழு!—1989
  • யெகோவா “சமாதானத்தை அருளும் கடவுள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • நாட்டுக் குழப்ப நிலைக்கு இடையில் சமாதானமும், ஒற்றுமையும், அன்பும்
    விழித்தெழு!—1987
  • சமாதானம் அதை எப்படி அடையலாம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
விழித்தெழு!—1989
g89 1/8 பக். 28

இனவெறுப்பை மேற் கொள்ளுதல்

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஐசக் லங்கா என்பவர் ஜோஹனஸ்பர்க்கில் கருப்பர்கள் வாழும் அலெக்சான்ரா நகரில் வளர்ந்து வந்தார். தீவிரமான இனப்பற்றுள்ளவராக இவர் வெள்ளையர்களை வெறுத்து, சூலு என்ற தென் ஆப்பிரிக்க ஜாதியினர் மற்ற கருப்பர்களைவிட உயர்ந்தவர்கள் என்பதாக கருதிவந்தார். ஆப்பிரிக்க தேசீய காங்கிரஸ் என்ற தடை செய்யப்பட்டிருந்த அரசாங்கத்துக்கு எதிரான, ஒரு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்கு போய்க் கொண்டிருந்த இவர், 1976-ல் தென் ஆப்பிரிக்க கலவரத்தில் ஈடுபடலானார். அவர் நினைவுப்படுத்திச் சொல்வதாவது: “அநேகர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சிலர் காலமெல்லாம் முடமாகிவிட்டார்கள். இதை எல்லாம் நான் பார்த்தபோது. பழித்தீர்த்துக் கொள்ளும் ஆவியை என்னில் வளர்த்துக் கொண்டேன். தன்னியக்க துப்பாக்கி ஒன்றை வாங்கி நான் கொல்லப்படுவதற்கு முன்பாக எத்தனைப் பேரை சுடமுடியுமோ அத்தனைப் பேரை சுட விரும்பினேன். இதனை கண்டுபிடிக்க இயலாமல், இராணுவப் பயிற்சியைப் பெற்றுக் கொள்வதற்காக அண்டை நாடுகளுக்குச் சென்ற மற்றவர்களைப் போலச் செய்ய தீர்மானித்தேன்.”

இந்த இக்கட்டான சமயத்தில் ஐசக்கை, யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு பிரசங்கத்தின் போது சந்தித்தார்கள். பைபிளின் செய்தியை விளக்கும் புத்தகங்களை அவர்கள் அவனுக்குக் கொடுத்தார்கள். குறிப்பாக, மெய் சமாதானமும் பாதுகாப்பும்—எந்த ஊற்றுமூலத்திலிருந்து? என்ற புத்தகம் அவனை வெகுவாக கவர்ந்தது. அவன் சொல்வதாவது: “நான் தேடிக் கொண்டிருந்த மெய் சமாதானம் எனக்கு கிடைத்துவிட்டது. ‘கோணலானதை நேராக்கக்கூடது; குறைவானதை எண்ணிமுடியாது’ என்றும் ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல’ என்றும் பைபிள் சொல்வதை நான் கற்றுக் கொண்டேன். (பிரசங்கி 1:15; எரேமியா 10:23) ஆகவே எங்களுடைய போரட்டம் வீணானது, ஏனென்றால் அது பூமியின் மீது சமாதானத்தைக் கொண்டுவரப் போவதில்லை எனக்கு தெளிவாக தெரியவந்தது. கடவுளுடைய ராஜ்யம் மாத்திரமே அதைக் கொண்டு வரும். (வெளிப்படுத்துதல் 11:17, 18) மற்ற இனங்களைப்பற்றிய என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளவும் பைபிள் எனக்கு உதவியிருக்கிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் பரதீஸில் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும் நம்பிக்கையோடு ஏற்கெனவே எல்லா இனங்களிலும் கோத்திரங்களிலுமிருந்து வரும் ஒரு ஜனம் வாழ்ந்து கொண்டிருப்பதை தெரிந்துகொள்வது இருதயத்துக்கு அனலூட்டுவதாக உள்ளது.”

ஐசக் இப்பொழுது ஒரு முழுநேர பிரயாண ஊழியராக, அநேக வித்தியாசமான தேசீய தொகுதிகளாலான யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளை பலப்படுத்தி வருகிறார். (g88 1⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்