ஒரு நோக்கத்தைத் தேடுவதில் என் பயணம்
இலங்கையின் மீன் பிடிக்கும் கிராமத்தில் ஏறக்குறைய ஒரு மாதமாக இருந்தேன். அது அமைதலான, சமாதான நிலையுடைய, எளிய ஆனால் மகிழ்ச்சியான ஒரு சமயமாக இருந்தது. நான் ஒரு சிறிய குடிசையைக் கொண்டிருந்தேன். ஒரு நாளுக்கு 70 சென்டுகள் (U.S.) பணத்துக்கு அருகில் குடியிருக்கும் ஒருவர் அரிசி, காய்கறிகள், எப்போதாவது மீன் இவற்றை எனக்கு அளித்தார்.
ஒரு காலையில் எங்கிருந்தோ ஒருவர், சூரிய வெப்பத்தில் பாதிக்கப்பட்ட வெள்ளை நிறத்தவர் மணலைக்கடந்து என்னை நோக்கி வந்தார். அவர் நியுஜிலாந்தைச் சேர்ந்தவர் என்று முதலில் நினைத்தேன், ஆனால் அவர் எனக்கு வாழ்த்துதல் தெரிவித்த முறை, அவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் என்று நேரடியாகவே கூறியது.
கிழக்கத்திய உபசரிப்பு என்னிடம் ஏற்கெனவே இருக்கும் பெருமிதத்துடன், நான் கேட்டேன், “நீங்கள் தங்கும்படி எங்காவது இடத்தைக் கொண்டிருக்கிறீர்களா?”
அவர் என் வரவேற்பை ஏற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியாகத் தோன்றினார், ஆகவே அவர் தங்கும்படியாக தனது சில உடைமைகளைக் கட்டவிழ்க்க ஆரம்பித்தார். என் கண்கள் ஒரு பச்சை நிறமுடைய தடித்த அட்டையுடைய புத்தகத்தைப் பார்த்து விட்டது.
“அது என்ன?” நான் கேட்டேன்.
“ஒரு பைபிள்.”
இப்போது, நான் சர்ச்சுக்குச் செல்லும் பின்னணியைக் கொண்டிருந்தேன், “மேற்கத்திய மதம்” அளிக்கவிருந்த எல்லாக் காரியத்தையும் நான் ஏற்கெனவே தெரிந்திருப்பதாகவும் நான் நினைத்தேன். அது தவிர, அது முழுமையாக மாயமானதாயிருந்ததால் அதை நிராகரித்திருந்தேன்.
“பயணத்தின்போது ஒரு பாரமான மூட்டையைச் சுமந்து ஏன் உங்களை சிரமம்படுத்திக் கொள்கிறீர்கள்?” நான் ஏளனமாகக் கேட்டேன்.
“அது சில மிகச் சிறந்த பொருட்களைக் கொண்டிருக்கிறது,” என்று அட்ரியன் பதிலுரைத்தார். “நாம் தெரிந்திருக்கிறபடி, அது உலக முடிவைப் பற்றியும் பேசுகிறது!”
நான் நம்பிக்கையற்றிருந்தேன், “அதை நீங்கள் எனக்குக் காட்ட முடியுமா?”
அவர் காண்பித்தார். நானோ பிரமித்துப் போனேன்!
என் பிரயாணம் தொடங்குகிறது
ஒரு 21-வயதுடைய நியுஜிலாந்து நாட்டைச் சேர்ந்த நான், 1976 நவம்பர் மாதத்தில் என்ன செய்தேன்? நான் அறிவைத் தேடும் நோக்கத்தில் ஒரு பிரயாணத்தில் இருந்தேன், அது என்னைப் பல இடங்களுக்கு, இதமான நிலவொளியுடன் கூடிய இரவில் வெப்பமான ஆசிய கடற்கரையிலிருந்து பினாங்கிலுள்ள அழுக்கு நிறைந்த தோற்றமுடைய ஓபியம் நிறைந்த இடங்கள் வரையிலும்; ஆப்பிரிக்காவின் கடலோரத்திலிருந்து, சூடான் துறைமுகத்தின் கூட்டமான சந்தை வரையிலும் எடுத்துச் சென்றது.
1975-ல் என் பெற்றோருக்கும், என் வாழ்க்கைக்குரிய உத்தியோகத்திற்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டு, ஆஸ்திரேலியாவிற்கு விரைந்தேன். உலகம் முழுவதையும் சுற்றுப்பயணம் செய்வதற்குப் பொருள் சம்பாதிப்பதற்காக ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வேலை செய்வதாக என் திட்டம் இருந்தது. திட்டத்தின்படியே ஒவ்வொன்றும் நடந்தது. யுரேனியம் எடுக்கும் சுரங்கத்தில் நான் வேலை வாய்ப்பு பெற்றேன், பணமும் சேர்ந்து கொண்டிருந்தது. ஆனால் நான் என் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாகவே என் எண்ணங்கள் மாற ஆரம்பித்தன. வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய கேள்விகளால் நான் கவலைப்பட ஆரம்பித்தேன். ஆகவே பதில் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில், தத்துவங்களையும், மதத்தையும் பற்றிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன்.
இந்தோனேஷியாவில் முதல் நிறுத்தம்
சுரங்கத்தில் போதியளவு பணம் திரட்டியதாக நான் உணர்ந்தபோது, நான் இந்தோனேஷியா வரை செல்லப் பயணம் மேற்கொண்டேன். இங்கே, ஆசிய வாழ்க்கை வழிக்காக என்னுடைய பிரியத்தை அபிவிருத்தி செய்தேன். அதன் பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களுக்குக் குறைந்த முக்கியத்துவம் கொடுப்பதும், அழுத்தம் குறைந்த வாழ்க்கைப் பாணியும் என்னைக் கவர்ந்தன; மெய்தான், எனக்கு அது எளிதாக இருந்தது—உள்ளூர் மக்கள் போராட வேண்டியிருந்த ஊட்டச்சத்துக் குறைவினாலும், சுகாதாரக் குறைவினாலும் கடும் ஏழ்மையாலும் நான் பாதிக்கப்படவில்லை.
நான் பேருந்துவண்டி, இரயில்வண்டி, படகு, மாட்டுவண்டி மற்றும் கால்நடையாகவும் பிரயாணம் செய்து, பாலி, ஜாவா, சுமத்ரா ஆகியவை உட்பட இந்தோனேஷியாவின் தீவுகளின் வழியே சென்றேன். நான் எவ்வளவு அதிகமாக பிரயாணம் தொடர்ந்தேனோ அவ்வளவு அதிகமாக மேற்கத்திய வாழ்க்கை முறை வெறுமையாகவும், சாரமற்றதாகவும் எனக்குத் தோன்றியது. இருந்தபோதிலும் கிழக்கத்திய வழிமுறை—குறைந்த பொருளாசை உடையதாயிருந்தபோதிலும்—என் கேள்விகளுக்குப் பதிலளிப்பவையாக நான் காணமுடியவில்லை.
உடன் பிரயாணிகளிடமிருந்து நான் LSD-ஐ வாங்கினேன். அதைப் போதைக்காக நான் உட்கொள்ளவில்லை. புதிய காரியங்களைத் தெரிந்து கொள்ளவும், மறைக்கப்பட்டுள்ள அறிவைப் பெறவும் நான் தேடினேன். அதன் செல்வாக்கின் கீழ் சில கணப்பொழுதில், மெய்யாகவே வாழ்க்கையை பரிபூரணத் தெளிவோடும், புரிந்து கொள்ளுதலோடும் நான் கண்டேன். ஆனால் வாந்தி சம்பந்தப்பட்ட நோய்க்கான உணர்வு பின் தொடரவே, அது முடியவும், பதிலளிக்கும் வழியாக நிலையான எதையும் நான் காணவில்லை என உணர்ந்தேன்.
சுமத்ராவை விட்டுச் சென்று, சிநேகப்பான்மையான குடிகளைக் கொண்ட ஓர் அழகிய நாடாகிய மலேசியாவுக்குப் பிரயாணம் செய்தேன். மலே தீபகற்பத்தின் மையத்தில், சாலையோரத்தில் குளிர்ந்த ஈரக்காற்றில் வளரும் காட்டுத் தாவரங்களுடன் கூடிய மழைக்காட்டுப் பகுதியைக் கொண்ட உயர்ந்த பகுதியாகிய பஹாங் மாநிலம் இருக்கிறது. கெடுக்கப்படாத இயற்கையின் இத்தகைய அழகின் மத்தியில் நான் நடக்கையில் என் எண்ணங்கள் உச்சநிலையை அடையும்.
தாய்லாந்து, பர்மா, இந்தியா
மலேசியாவிலிருந்து தாய்லாந்திற்கும் அதன்பிறகு பர்மாவிற்கும் சென்றேன். இந்நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் சொந்த தனித்தன்மையாலும், உணவுகள் பழக்கவழக்கங்கள் இவற்றாலும், மக்களாலும் என்னை மகிழ்வூட்டி, வசீகரம் செய்தன. அவைகள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருந்தபோதிலும், என்னுடைய பலவிதமான கேள்விகளுக்கு நான் எந்த உண்மை பதிலையும் காணவில்லை. எனவே குறைந்த நேரம் மட்டுமே பர்மாவில் தங்கிவிட்டு, இந்தியாவிற்குக் கடந்து செல்லும்படி நான் தீர்மானித்தேன்.
ஆ! பழமையான, புதிரான, பக்தி நிறைந்த இந்தியா! ஒருவேளை நான் தேடிக்கொண்டிருந்தது இந்த இடமாக இருந்தது. நகரங்கள் நிறைந்திருந்தது என்னை மனத்தளர்ச்சியாக்குகிறது. எனவே நான் இந்தியாவின் நாட்டுப்புறத்திற்கு என்னால் முடிந்தவரை சீக்கிரமாய் புறப்பட்டேன். இங்கு வாழ்க்கை 20-ம் நூற்றாண்டால் பாதிக்கப்படாததாய்த் தோன்றியது; எங்கு பார்த்தாலும் உறுதியான மதச் செல்வாக்கு இருந்தது.
இந்து மத ஊர்வலம் கடந்து செல்கையில் நான் வசீகரத்துடன் அதை உற்று நோக்கினேன். ஒவ்வொருவரும் காவி நிற உடை அணிந்திருந்தனர், பூக்களை சுமந்து செல்பவர்கள் மல்லி மலர்களின் இதழ்களை, அவ்வூர்வலத்தின் முன்னால் பரப்பினர். மக்கள் தரையை முத்தமிட்டனர். அரைமட்டும் மாத்திரமே உடை அணிந்திருந்த ‘புனிதர்கள்’ மணம் நிறைந்த எண்ணெயால் உடல் பளபளக்க, தொடர்ந்து ஓதினர். ஆனால் மறுபடியும், நான் ஏமாற்றமாக உணர்ந்தேன். இந்திய மக்களின் பக்தியை ஆச்சரியத்துடன் பார்க்கையில் இன்னும் நான் தேடிக்கொண்டிருந்த பதிலைக் கண்டுபிடிக்கவில்லை.
அடுத்து இலங்கைக்கு
மாதக்கணக்கில் கரடுமுரடாகப் பயணம் செய்ததும், கொடுமையான வெப்பமும், மோசமான ஆகாரமும், என்னை உடல்நலமிழக்கச் செய்தது. நான் ஓய்வெடுக்க இடம் தேவைப்பட்டது. அதற்கு மேலாக, நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதற்குக் காரணம் தேவைப்பட்டது. மெய்யாகவே எதைச் செய்தாலும் அதற்கு ஒரு காரணம்—வாழ்வதற்கு ஒரு காரணம் தேவைப்பட்டது.
இலங்கையின் அழகைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பேரிக்காய் வடிவமான தீவாக அது இந்தியாவின் தென்முனை அருகில் அமைந்திருக்கிறது. மணல் நிறைந்த கடற்கரைகளைக் கொண்ட, பவள நாணல்களை, படிகம் போன்ற தெளிவான நீரில் கொண்டிருக்கும், தேயிலை வளரும் பீடபூமிகளைக் கொண்டிருக்கும், மற்றும் உயர்ந்த மலையுச்சிகளைக் கொண்டிருக்கும் ஒரு வெப்ப மண்டல தீவு என எனக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது. ஓய்வுவெடுப்பதற்கும், தொடர்ந்து தியானிப்பதற்கும் என்னே சிறந்த இடம் அது!
கிழக்குக் கரைப்பகுதி என் தேவைகளுக்குத் தகுந்த இடமாக சிபாரிசு செய்யப்பட்டிருந்தது, ஆகவே நான் மீன்பிடிக்கும் ஒரு சிறிய கிராமத்தில் தங்கினேன். இங்குதான், அட்ரியனைச் சந்திக்கும்படி நான் ஒரு சந்தர்ப்பத்தைக் கொண்டிருந்தேன். என் கேள்விக்குப் பதிலை பைபிளிலிருந்து அட்ரியன் வாசிக்கையில் நான் ஏன் பிரமித்துப் போனேன்? ஏனென்றால் அவர் எனக்குக் காட்டிய இரண்டு பகுதிகளும், மத்தேயு 24-ம் அதிகாரத்திலிருந்தும் 2 தீமோத்தேயு 3-வது அதிகாரத்திலிருந்தும் ஆகும். சர்ச்சில் இவை ஒருபோதும் நான் வாசிக்கக் கேட்டதில்லை. ஏன், இங்கு, “கடைசி நாட்கள்” என்பதற்கான முன்னறிவிப்புகளாகிய குற்றச்செயல் அதிகரித்தல், அன்பு தணிந்துபோதல், நாடுகளுக்கிடையே தொடர்ந்து நடக்கும் சிறுசிறு போர்கள், மக்கள் பயம் நிறைந்தவர்களாதல், மேலும் பல! நான் என் ஆச்சரியத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை.
அட்ரியன் சிரித்தார். “ஆ, இன்னும் அதிகம்,” அவர் கூறினார்.
நாங்கள் கடற்கரையில், நட்சத்திரங்கள் நிறைந்த வானின் கீழ் உட்கார்ந்து, ஆரஞ்சு நிறம் கொண்ட ஒரு பெரிய நிலா கடலிலிருந்து எழும்புவதைக் கவனித்தோம். நம் கிரகத்திற்காக சிருஷ்டிகர் கொண்டிருந்த பெரிய நோக்கத்தைப் பற்றி தான் அறிந்தவற்றையெல்லாம் அட்ரியன் விளக்கினார். அந்நோக்கம் வேறுபட்ட காரணங்களால் தாமதித்தாலும், அது சீக்கிரத்தில் நிகழப்போகும் ஒன்றாக இருந்தது.
அட்ரியன் சொன்ன எல்லாவற்றையும் நான் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் இச்சம்பாஷணை முழுவதிலும் ஏதோ ஒன்று, நான் இதுவரை அனுபவித்திராத ஒரு வழியில் என்னை அசைவித்தது. மறுநாள் நான் என் நாட்குறிப்பேட்டில் எழுதினேன்: “முதலாவதாக, கிறிஸ்தவத்தோடு நான் கொண்டிருந்த எல்லாத் தொடர்புகளிலும் நான் சத்தியத்தை உணருகிறேன். தீர்க்கதரிசனங்கள் வெளிப்படையாக இருக்கின்றன; காரிய ஒழுங்குமுறையின் முடிவு வெகு தொலைவில் இல்லை.”
சர்வவல்லமையுள்ள கடவுள் ஒரு நோக்கத்தைக் கொண்டிருந்தால், நாமும் அதற்கிசைய நடந்தால், நாமும் நம் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்ற உணர்வு எனக்கு உதிக்க ஆரம்பித்தது. ஒரு பரதீஸான பூமியில் என்றும் வாழும் எண்ணம்—தற்போது, சற்றுத் தொலைவில் இருப்பதாகத் தோன்றிய போதிலும்—நிச்சயமாகவே, ஒரு மகத்தான நோக்கமாயிருக்கும், அதற்குள் சென்று ஆழமாக அறிந்துகொள்ள நான் தீர்மானித்தேன்.
பிறகு, வேறொரு வேத வாக்கியம் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கிற்று. கடவுள் ஒரு தனிப்பட்ட பெயரைக் கொண்டிருக்கிறார் என்று அட்ரியன் என்னிடம் கூறினார், அதை அவர் சங்கீதம் 83:17-ல் காட்டினார்: “யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி.” சிருஷ்டிகர் வெறும் ஒரு சக்தியல்ல, ஆனால் ஒரு தனிப்பட்ட பெயரைக் கொண்ட ஒரு மெய்யான ஆள் என்று இப்போது பார்க்க ஆரம்பித்தேன்.
திட்டங்களில் மாற்றம்
என் உடல்நலம் முன்னேற்றமடைகையில் இந்தியாவிற்குத் திரும்பும்படி நான் திட்டமிட்டிருந்தேன், பிறகு இமயமலையையும், நேபாளத்தையும் பார்க்க எண்ணினேன். ஆனால் நானும் அட்ரியனும், ஓய்வுபெற்ற ஓர் அமெரிக்கத் தம்பதிகளிடம் உலகத்தைச் சுற்றி வருவதற்கு உதவுவதற்காக ஒத்துக்கொண்டோம். அவர்கள் தங்களுடைய 56-அடி உல்லாசப் படகை இயக்க உதவியை நாடினர். அவர்கள் தங்கள் கடற்பயணத்தில் அடுத்ததாக இந்து மகா சமுத்திரத்தின் வழியாக கென்யாவிற்குச் செல்ல இருந்தனர். நான் கடற்பயணம் செய்யும் அந்தச் சந்தர்ப்பத்திற்காக சந்தோஷப்பட்டேன், மேலும் அட்ரியனோடு பைபிள் கலந்தாலோசிப்புகளைக் கொள்வதனால் அதிகத்தைக் கற்றுக்கொள்வதிலும் சந்தோஷப்பட்டேன்.
ஆனால் ஆச்சரியமான இந்த எல்லா விஷயங்களையும் பைபிளிலிருந்து எனக்குக் காட்டிய அட்ரியன் எங்கிருந்து கற்றுக்கொண்டார்? ஆஸ்திரேலியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு தான் படித்திருந்ததாக அவர் விளக்கினார். அவர் ஒரு சாட்சியாகும் அளவுக்கு முன்னேறியிருக்கவில்லை, ஆனால் ஒரு நாளில் அவர் அவ்விதம் ஆவதாக நம்பினார். அவருடைய பைபிளின் பின்பகுதியில், தொடர்பு கொள்ளும்படியான யெகோவாவின் சாட்சிகளின் முகவரிகளின் பட்டியல் ஒன்று இருந்தது. நாங்கள் அப்பட்டியலை உள்ளாராய்ச்சி செய்தோம்.
“இதோ அங்கே,” நான் கூறினேன். “நைரோபி, கென்யா. நாம் ஆப்பிரிக்காவை அடைந்தவுடன் ஒரு சந்திப்பை நான் மேற்கொள்ளப் போகிறேன்.”
நிறைவேற்றத்திலிருந்த மற்றொரு தீர்க்கதரிசனம்
ஒரு நாள் காலையில் வழக்கத்தின்படியே நான் எழுந்து கப்பலின் மேல்தளத்திற்குச் சென்று, சமுத்திரத்தைப் பார்க்கும்படி சென்றேன். வழக்கமான அடர்ந்த நீல நிறத்திற்குப் பதிலாக, நீர் முழுவதும் ஓர் அடர்ந்த காபி-பழுப்பு நிறத்தைப் பார்த்து பயமுறுத்தப்பட்டேன். எங்கு பார்த்தாலும் பழுப்பு நிறங்கொண்ட சேறுகளின் மொத்தம் மட்டுமே காணப்பட்டது. என் கண் காணுமிடமெல்லாம், சமுத்திரத்தின் மேற்பரப்பை அழுக்கான எண்ணெய் பசையின் மெல்லிய படலமே மூடியிருந்தது. நாங்கள் ஓர் எண்ணெய் நிறைந்த வழுக்கும் தன்மை கொண்ட நீரில் பிரயாணம் செய்திருக்கிறோம்!
பழுப்பு நிறங்கொண்ட அழுக்கு, உல்லாசப்படகின் தண்ணீர் செல்லும் வழியுடன் ஒட்டிக்கொண்டது. ஒரு முழு நாளும், மறுநாளின் பாதிப் பகுதியிலும் அத்துடனேயே நாங்கள் பிரயாணம் செய்திருக்கிறோம். அது குறைந்த பட்சம் நூறு மைல்கள் தொலைதூரமாவது இருந்திருக்க வேண்டும். எண்ணெய் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல் பாரசீக வளைகுடாவின் வழியாகச் செல்கையில், நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வருகையில், வந்து சேர்வதற்கு முன் தங்களிடமுள்ள, கப்பல் சமநிலையிலிருக்கும்படி ஏற்றிக்கொண்டு வந்த பாரத்தைக் கடலில் ஊற்றி விடுவதாகக் கப்பற்தலைவர் விளக்கிக் கூறினார். வீணான இந்த எண்ணெயின் பெரும்பகுதி, தெற்குப் புறமாக இழுத்துச் செல்லப்பட்டு, அன்டார்ட்டிக் பகுதியிலுள்ள சமுத்திரத்தின் உணவுத் தொடர்பின் முதன்மை இணைப்பான கரிம நுண்ணுயிரிக் கூட்டத்தைச் சிதைவுறச் செய்கிறது.
அட்ரியன் இதை சாதகமாக்கிக் கொண்டு, கடைசி நாட்களில் “பூமியைக் கெடுத்தவர்களைப்” பற்றி பைபிள் சொல்லும் வாக்கியத்தைக் கூறி, ஆனால் கடவுள் “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்,” என்று கூறினார். (வெளிப்படுத்துதல் 11:18) ‘பைபிள் சொல்லாத காரியங்கள் தான் எவை?’ நான் எனக்குள் நினைத்தேன்.
சாட்சிகளோடு எனது முதல் தொடர்பு
மால தீவு மற்றும் சிசிலி தீவுகளில் நிறுத்தியதற்குப் பிறகு நாங்கள் பெரிய கடற்துறைமுகமாயிருந்த மாம்பஸா-வில் நங்கூரம் இறக்கினோம். அதற்குச் சில நாளுக்குப் பின்னர், கென்யாவிலுள்ள நைரோபியிலிருக்கும் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகத்திற்குச் சென்றோம். நாங்கள் அனலுடன் வரவேற்கப்பட்டோம். அக்கட்டடத்தின் சுற்றுப்புறத்தைப் பார்க்க ஒரு பிரயாண வாய்ப்பும் அளிக்கப்பட்டோம். ஒரு சுவரில் கிழக்கு ஆப்பிரிக்காவின் நிலப்படம் வெவ்வேறு இடங்களில் பல வர்ண ஊசிகளைக் கொண்ட பெரிய தாள் தொங்கவிடப்பட்டிருந்தது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்து வரும் சாட்சிகளால் அந்த முழு பரப்பும் ஒழுங்காக கவனிக்கப்பட்டு வருகிறது என்று கிளைக்காரியாலயக் குழுவின் ஒத்திசைவு அலுவலர் விளக்கிக் கூறினார்.
“ஆனால் எல்லாம், தூக்க-வியாதியைப் பரப்பும் ஈக்கள் நிறைந்த நாடு!” என்று நான் எதிர்த்தேன். “மேலும் இங்கு நாடோடி மாசாய் வகுப்பினர் மட்டுமே வாழ்வர்!”
“அது சரிதான்,” அவர் கூறினார், “அதையும் நாங்கள் கவனிக்கிறோம்.”
பிறகு அவர் மத்தேயு 24-ம் அதிகாரத்தை மேற்கோள் காட்டினார், அதன் முற்பகுதியை அட்ரியன் எனக்குக் காட்டியிருந்ததை நான் நினைவு கூர்ந்தேன். அவர் 14-ம் வசனத்தை நான் வாசிக்கும்படி செய்தார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும்.” ‘சரி,’ நான் எண்ணினேன், ‘இந்த ஜனங்கள் மெய்யாகவே அதைச் செய்து கொண்டு வருவதாகத் தெரிகிறது!’
அறிவு ஒரு பலனைக் கொண்டிருக்கிறது
நான் கற்றுக்கொண்டு வருவதுடன், பூமியைச் சுற்றி அலைவதைப் பற்றிய என் எண்ணம் தோல்வியுற்றது. இன்னும், நானும் அட்ரியனும் தொடர்ந்து சூடான், எகிப்து, மேலும் முடிவாக இஸ்ரேலைச் சென்றடைந்தோம். அது இப்போது 1977, மே மாதமாக இருந்தது. நாங்களும் உல்லாசக் கப்பல் கூட்டுறவை விட்டுப் பிரியத் தீர்மானித்தோம். நாங்கள் எடுத்த முடிவிற்காக மகிழ்ச்சியடைந்தோம், ஏனெனில், வெகு சில நாட்களுக்குப் பின் அது மூழ்கிவிட்டது.
யெகோவாவின் சாட்சிகளோடு இன்னும் அதிகத் தொடர்புகொள்ள எண்ணி அட்ரியன் ஆஸ்திரேலியாவிற்குத் திரும்பிவிடத் தீர்மானித்தார். அவர் இல்லாமல் ஏதோ ஒரே போன்ற சூழ்நிலை இல்லை. நான் எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாக அவரது நட்பை நான் இழந்தேன். நான் சைப்ரஸ், கிரீஸ், இத்தாலி மேலும் ஜெர்மனி இவற்றைப் பார்வையிட்டேன். இவ்விடங்கள் எல்லாம், ஆவலைத் தூண்டும் இடங்களாய் இருக்கையில், தொடர்ந்த பிரயாணம் எனக்குத் திருப்தியளிக்கவில்லை. இது எவ்விதத்திலும், வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டுபிடிக்க மெய்யான வழியாக இல்லை என்பதை நான் உணர்ந்தேன்.
செய்யப்படத் தகுந்த ஒரு காரியம் தான் இருந்தது. ஒரு நிலையான வாழ்க்கைப் பாணிக்குத் திரும்பி, ஓர் ஒழுங்கான வேதப்படிப்பின் மூலம் யெகோவா தேவனைப் பற்றி அதிகத்தை உருக்கமாகக் கற்றறியத் தொடங்குதல். நான் முடிவாக இங்கிலாந்தில், லண்டனை வந்தடைந்தேன், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமான டிக்கெட் வாங்கினேன். சீக்கிரத்தில் நான் மறுபடியும் யுரேனிய சுரங்கத்தில் வேலை பார்த்தேன்—ஆனால் படிக்கவும் செய்தேன். ஒரு சாட்சி வாரத்திற்கு ஒரு முறை 40 மைல்கள் தொலைவிலிருந்த அடுத்த நகரத்திலிருந்து வந்து என்னோடு வேதப்படிப்பு நடத்தினார்.
வாழ்க்கையில் நோக்கத்தைக் கண்டுபிடித்தல்
1979-ன் ஆரம்பத்தில், நியு செளத்வேல்ஸ்-ன் மத்தியக் கரைப் பகுதியிலுள்ள வோய்வோய் என்ற இடத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் ஒரு சபையில் இந்த முறை, அட்ரியனோடு மறுபடியும் சேர்ந்திருக்கும் சந்தோஷத்தை நான் கொண்டிருந்தேன். அதே வருடம் ஜூலை மாதத்தில் நாங்கள் இருவருமே ஒன்றாக முழுக்காட்டுதல் பெற்றோம். அதிலிருந்து நாங்கள் கிறிஸ்தவ வழியில் முன்னேற ஆரம்பித்திருக்கிறோம். நாங்கள் இருவருமே நல்ல கிறிஸ்தவப் பெண்களைத் திருமணம் செய்தோம். என் மனைவி ஜூலியும் நானும் அதன்பிறகு பயனியர்களாக, முழு நேரப் பிரசங்க வேலையில் பங்கு பெறத் தொடங்கினோம். அட்ரியனின் மனைவியும் பயனியர் ஊழியத்தில் சேர்ந்து விட்டார்.
எங்கள் முழுக்காட்டுதலைத் தொடர்ந்து ஆவிக்குரிய பலன் மிகுந்த எட்டு வருடங்களுக்கு மேல் கடந்திருக்கின்றன. மற்ற அநேகரும் தங்கள் வாழ்க்கையில் நோக்கத்தைக் கண்டுபிடிக்கும்படி நாங்கள் அவர்களுக்கு உதவியிருக்கிறோம். உதாரணமாக, ஒரு ராக் இசைக்குழு அங்கத்தினர்களோடும் அவர்களின் நண்பர்கள் சிலரோடும் ஒரு வேதப் படிப்பை ஆரம்பித்து அவர்களில் ஐந்து பேர் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு ஒரே சமயத்தில் முழுக்காட்டுதல் பெற்றனர்.
1986-ல் ஜூலியும் நானும், நியுசெளத் வேல்ஸில் யெகோவாவின் சாட்சிகள் வெகு சிலரே இருக்கும் ஒரு பகுதிக்குச் சென்றோம். அங்கு ஆதிவாசிகளுக்கும், பண்ணை முதலாளிகளுக்கும், சிறிய நாட்டுப்புறங்களில் வாழும் மக்களுக்கும் மெய்க் கடவுளைப் பற்றிய அறிவை பரப்பும் வாய்ப்பை நாங்கள் கொண்டிருந்தோம். ஜூலி தனது பெற்றோரையும் ஏழு சகோதர சகோதரிகளையும் பிரிந்து தொலைதூரத்தில் வசிக்க வேண்டியிருந்ததால் இது அவளுக்கு சற்று மாற்றங்கள் செய்து கொள்வதைத் தேவைப்படுத்தியது. என்றபோதிலும், அவளுடைய குடும்ப அங்கத்தினரில் ஐந்து பேர் முழு நேர ராஜ்ய வேலையில் பங்கு கொள்வதை அறிய வரும்போது சந்தோஷப்படுகிறாள். 1987-ல் நாங்கள் இங்கில்பர்ன்-லுள்ள ஆஸ்திரேலிய பெத்தேல் குடும்பத்திற்கு, அதன் கட்டுமான விஸ்தரிப்பிலும், அச்சுத் தொழிற்சாலையிலும், பெத்தேல் வீட்டிலும் வேலை செய்வதில் பங்குகொள்ள அழைக்கப்பட்டதற்காக மகிழ்ச்சியடைந்தோம்.
பிரயாணம் செய்வதன் விருப்பம் எனக்குள்ளும் ஜூலிக்குள்ளும் இன்னும் இருக்கிறது. ஆனால் பூமி ஓர் அழகிய தோட்ட வீடாக மாறும் நாட்களுக்காக நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்போது இன்று நாம் அனுபவிப்பதை விட அதிகளவு பலனுள்ளதாக பிரயாணம் இருக்கும் காலம் வரும். அதே சமயத்தில், நானும் ஜூலியும் தொடர்ந்து முன்னேறுகையில், யெகோவாவின் ஐசுவரியமான ஆசீர்வாதத்தை அனுபவிப்பதில் தொடர்ந்து இருக்கிறோம், எல்லாவற்றுக்கும் மேலாக அதிக பலன் தரும் நோக்கத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம்—நோக்கமுள்ள, அன்பான ஒரு கடவுளாகிய யெகோவாவைச் சேவித்துக் கொண்டிருக்கிறோம்.—டேவிட் மஃபட் என்பவரால் கூறப்பட்டது. (g88 8⁄22)
[பக்கம் 23-ன் படம்]
இலங்கையில் நான் அட்ரியனை சந்தித்த கிராமம்
[பக்கம் 24-ன் படம்]
நியு செளத் வேல்ஸில் மொரீயில் எங்கள் பயனியர் நியமிப்பில் என் மனைவியுடன்