உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g91 1/8 பக். 5-7
  • பிரச்னையை ஏற்படுத்துவது என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பிரச்னையை ஏற்படுத்துவது என்ன?
  • விழித்தெழு!—1991
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தீர்மானங்களை எடுப்பது யார்?
  • தனிமை விரும்பும் காரியம்
  • பிள்ளைகளைக் கையாளுதல்
  • பாசத்துக்கான ஏக்கம்
  • கவலைக்கிடமான ஒரு மாற்றம்
  • அன்பான ஒரு விவாக உறவினர் உறவில் மகிழ்ச்சி காணுதல்
    விழித்தெழு!—1991
  • முதிர்வயதினரைக் கவனித்தல் சவால்களும் பலன்களும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • முதியோரைக் கவனித்தல்—வளர்ந்துவரும் ஒரு பிரச்னை
    விழித்தெழு!—1992
  • பெற்றோராக நீங்கள் வகிக்கவேண்டிய பாகம்
    குடும்ப வாழ்க்கை
மேலும் பார்க்க
விழித்தெழு!—1991
g91 1/8 பக். 5-7

பிரச்னையை ஏற்படுத்துவது என்ன?

“அதிகமான உப்பு குடும்பத்துக்கு நல்லதல்ல!” என்று மாமியார் சொல்கிறாள். “ஆனால் சாப்பாடு உப்புசப்பு இல்லாமல் ருசியற்று இருக்கிறது!” என்று வற்புறுத்துகிறாள் மருமகள். மாமியார் சற்றுத் திரும்ப, மருமகள் ஒரு சிட்டிகை உப்பைப் போட்டுவிடுகிறாள்.

ஒவ்வொருவரும் தாங்கள் நினைத்ததைச் செய்ய முற்படும்போது, இருவருமே அனுபவித்து மகிழ முடியாத ஒரு பதார்த்தத்தையே உண்ண வேண்டியதாயிருக்கிறது. ஆனால் விளைவுகள் அதைவிட மோசமாக இருக்கக்கூடும். விவாக உறவினர்கள் தகராறுகள் அநேக ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் மனம் மற்றும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட போரட்டங்களுக்கு வழிநடத்தக்கூடும்.

அநேகருக்கு இப்படிப்பட்ட பிணக்கு தவிர்க்கமுடியாததாகத் தென்படக்கூடும். “ஒரு குடும்பம் எவ்வளவுதான் ஒருவருக்கொருவர் நல்ல உறவிலிருப்பதாகத் தென்பட்டாலும், மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே சச்சரவுகள் ஏற்படுவது உறுதி,” என்கிறார் ஜப்பான் மனநல மருத்துவமனைக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஷிகெட்டா சேய்ட்டோ. ஆனால் பிரச்னை கீழை நாடுகளுக்கு மட்டுமே உரியதாயில்லை.

இத்தாலியிலிருக்கும் விழித்தெழு! நிருபர் அறிக்கை செய்வதாவது: “விவாகம் செய்துகொண்டு மாப்பிள்ளை அல்லது பெண்ணின் பெற்றோர்களில் ஒருவரோடு வாழச் செல்வது அநேக குடும்பங்களில் பிரச்னைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மாமியாரின் தலையிடுதல் மற்றும் அதிகாரம் செலுத்தும் மனப்பான்மையால் பல இளம் மனைவிமார்கள் அவதியுறுகிறார்கள்.”

கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளிலே, தினசரிகளும் பத்திரிகைகளும் விவாக உறவினர் பிணக்குகளைக் கையாளுவதற்கான தனிப்பட்டவர்களின் ஆலோசனைகளை நிரம்பக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்க, பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடிய காரியங்கள் என்ன?

தீர்மானங்களை எடுப்பது யார்?

ஒரு சமையல் அறையில் இரண்டு பெண்கள் வேலை செய்யும்போது, “தீர்மானங்களை எடுப்பது யார்?” என்பதுதான் அடிக்கடி எழும் பிரச்னை. “எங்களுடைய சுவைகளும் செய்முறைகளும் வித்தியாசப்படுகின்றன, எனவே ஒரு கருத்துவேறுபாடு ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் என்னைக் குழப்பிவிடுகின்றன,” என்கிறாள் 12 வருடங்களுக்கு மேல் தன்னுடைய மாமியாருடன் வாழ்ந்துவந்த ஒரு பெண்.

“முதல் பத்து வருடங்களாக நாங்கள் மிகச் சாதாரண காரியங்களுக்கெல்லாம் வாதாடினோம்,” என்று மற்றொரு மருமகள் ஒப்புக்கொள்கிறாள். துவைத்த சட்டைகளைக் கொடியில் போடுவது எப்படி போன்ற முக்கியமற்ற காரியங்களிலும்கூட கருத்துவேறுபாடுகள் எழும்பக்கூடும். அந்தப் பெண்கள் ஒரே வீட்டில் வாழாவிட்டாலுங்கூட நிலைமை தொல்லையாக இருக்கக்கூடும். சந்திக்க வரும் மாமியாரின், “என்னுடைய மகனுக்கு அந்த மாதிரி சமைப்பது பிடிக்காது,” போன்ற கூற்றுகள் வாழ்நாள் முழுவதுமே கசப்பான உணர்வுகளை ஏற்படுத்திவிடும். எனவே இவையனைத்தும் யார், என்ன தீர்மானங்களை, யாருக்காகச் செய்ய வேண்டும் என்ற காரியத்திற்கே வழிநடத்துகின்றன.

இந்தப் பிரச்னையைக் குறிப்பிட்டு, ஒக்கேனோமிஸு மகளிர் பல்கலைக்கழகத்தில் இல்லமைப்புத்துறை துணைப் பேராசிரியர் டக்காக்கோ சோதய் கூறுகிறார்: “ஒருவர் மகன் மருமகளுடன் வாழ்ந்தாலும்சரி, அல்லது மகள் மருமகனுடன் வாழ்ந்தாலும்சரி, ஒரு குடும்பம் அதிகாரத்துக்காகப் போட்டிப்போடும் இரண்டு மனைவிமார்களை ஆதரிப்பது கூடாத காரியம். வாழ்வதற்குத் தனித்தனி இடங்கள் தேவை, அல்லது ஒருவர் இல்லாளாகவும் மற்றவர் துணை இல்லாளாகவும் இருப்பதற்கேற்ப நிலைமையை அமைத்திட வேண்டும்.” வயதில் முதிர்ந்த அனுபவமிகுந்தவரின், அல்லது அனுபவம் குறைந்த இளவயதினளின் உடல் மற்றும் மனநிலையின் அடிப்படையில் இரண்டு தலைமுறகளும் நியாயமான ஓர் ஒப்புதலுக்கு வரவேண்டும்.

தனிமை விரும்பும் காரியம்

இரண்டு அல்லது மூன்று தலைமுறையினர் ஒரே வீட்டில் அல்லது பகுதியில் வாழும்போது, குடும்ப அங்கத்தினர்கள் தனிமையின் விருப்பத்தை ஓரளவுக்குத் தியாகம் செய்யவேண்டும். என்றபோதிலும், இந்தக் காரியத்தில், ஒவ்வொருவரும் வித்தியாசமான ஓர் அளவுகோலைக் கொண்டிருக்கக்கூடும். இளம் தம்பதிகள் தனிமையை அதிகமாக விரும்பக்கூடும், மறுபட்சத்தில் வயோதிபரின் வேட்கை அதிக தோழமை நாட்டமாக இருக்கக்கூடும்.

உதாரணமாக, தன்னுடைய மாமியார் தங்களுடைய தனிமை விரும்பிய வாழ்க்கையில் தலையிட்டதாக டோக்கியோவுக்கு அண்மையில் வாழும் மருமகள் ஒருத்தி குறைபட்டுக்கொண்டாள். எப்படி? தன்னுடைய மற்றும் தன்னுடைய கணவரின் துணிகளை மடித்து தனியே எடுத்துவைத்தாள். தன்னுடைய மாமியார் இந்தத் தனிப்பட்ட காரியங்களைத் தங்களுக்காகச் செய்வதை அவள் சரியென கருதவில்லை. மறுபட்சத்தில் தன்னுடைய மருமகள் வீட்டைச் சுத்தம் செய்யும்போது, டொக்கிக்கோ பல வருடங்களாகப் போற்றிப் பத்திரப்படுத்திவந்த பொருட்களை அப்புறப்படுத்தியபோது அவளுடைய மாமியார் டொக்கிக்கோவுக்குக் கஷ்டமாயிருந்தது.

ஒருவருடைய தனிமையின் நேரத்தை முற்றுகையிடுவது மிக மோசமான கட்டத்திற்குச் சென்றுவிடக்கூடும். டாமும் அவருடைய மனைவியும் டாமின் வயதுசென்ற தாயைக் கவனித்துவந்தார்கள். நள்ளிரவில் இவர்களுடைய படுக்கையறைக்குள் உல்லாசப்பயணம் செய்த டாமின் தாயின் செயல் இவர்களுக்குக் கஷ்டமாயிருந்தது. அதற்கு மாமியார் கொடுத்த காரணம்? “டாம் சுகமாயிருக்கிறானா என்று பார்க்க வந்தேன்,” என்றாள் தாய். அவர்கள் இரண்டடுக்கு வீட்டிற்கு மாற்றிச்சென்று, டாமின் தாய் மாடிக்கு வருவதைக் கட்டுப்படுத்தும்வரை அந்தப் பிரச்னை தீரவில்லை.

என்றபோதிலும், அநேக குடும்பங்களில், மூன்றாவது தலைமுறை வரும்போதுதானே பிரச்னை அதிகரிக்கிறது.

பிள்ளைகளைக் கையாளுதல்

இப்பொழுதெல்லாம், இளம் தாய்மார்கள் பிள்ளைகளைக் கவனிப்பது சம்பந்தமாக ஆலோசனைக்குப் பல்வேறு புத்தகங்களைப் பார்ப்பது பொதுவில் செய்யப்பட்டுவரும் காரியம். மறுபட்சத்தில், பிள்ளைப் பயிற்றுவிப்பில் பல்லாண்டு அனுபவத்தைப் பெற்றிருப்பதால், பாட்டி ஆலோசனைக் கொடுப்பதற்கான தகுதி தனக்குத்தான் இருப்பதாக உணரக்கூடும். என்றபோதிலும், அந்த ஆலோசனை அநேக சமயங்களில் குறைவுள்ளதாய் நோக்கப்படுவதால் பிணக்குகள் ஏற்படுகின்றன.

டக்காக்கோ தன்னுடைய இளைய மகனைச் சிட்சித்தபோது இந்தப் பிரச்னையைக் கையாளவேண்டியிருந்தது. அவளுடைய கணவரின் தாயும் பாட்டியுமானவள் அவள் தண்டிப்பதை நிறுத்துவதற்காகப் பிள்ளையின் அழுகையைவிட அதிக சத்தத்துடன் அவளுடைய அறைக்குள் விரைந்தாள். தான் மிரட்டப்பட்டதாக உணர்ந்து, டக்காக்கோ தன் மகனைத் தண்டிப்பதை நிறுத்திவிட்டாள். சிட்சை கொடுக்க வேண்டிய அவசியத்தைப் பின்னர் உணரவந்தபோது, அப்படிப்பட்ட பயிற்றுவிப்பை மீண்டும் தொடர தீர்மானித்தாள்.—நீதிமொழிகள் 23:13; எபிரெயர் 12:11.

யொக்கோஹமாவில் வாழும் ஒரு தாயுங்கூட பிள்ளைகள் பிறந்ததைத் தொடர்ந்து தன் மாமியாரிடம் ஒரே போரட்டந்தான். சாப்பாட்டு வேளைகளுக்கு இடையில் பாட்டி பேரப்பிள்ளைகளுக்கு மேல்தீனி கொடுத்ததால், அவர்கள் தங்களுடைய சாப்பாட்டைச் சாப்பிடுவதில்லை என்று தாய் எரிச்சலடைந்தாள்.

இந்தப் பிரச்னையின்பேரில் குறிப்பிடுகிறவராய், டாக்டர் சேய்ட்டோ கூறுகிறார்: “[தாத்தா, பாட்டி] அவர்கள் தங்களுடைய பேரப்பிள்ளைகளுக்கு மிட்டாய்களும் செல்லமும் கொடுக்கின்றனர். அவர்கள் இளம்பிள்ளைகளின் தன்னல ஆசைகளை திருப்திசெய்கிறார்கள். சுருக்கமாகச் சொல்லப்போனால், அவர்கள் தங்களுடைய பேரப்பிள்ளைகளை நிரந்தரமாகக் கெடுத்துவிடுகின்றனர்.” பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் அவர்கள் எந்தவித சலுகைகளும் காட்டக்கூடாது என்பதை தெளிவாக்கிட வேண்டும் என்று அவர் இளம் தாய்மார்களுக்கு ஆலோசனைக் கூறுகிறார்.

பாசத்துக்கான ஏக்கம்

இந்த மாமியார்-மருமகள் போரட்டத்தில், நியாயமற்ற ஏதோ ஒரு காரியம் செயல்படுகிறது. “மனோ ரீதியில் சொல்லப்போனால்,” என்கிறார் டாக்டர் சேய்ட்டோ, “தன்னுடைய மருமகள் தன் மகனைத் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாய்ப் பறித்துக்கொண்டதாகத் தாய் உணருகிறாள். அவள் அதை வாய்விட்டுச் சொல்வதில்லை என்பது உண்மைதான், ஏனென்றால் அப்படிச் சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கும். ஆனால், தன்னுடைய மகனின் பாசத்தை அவள் கொள்ளைக்கொண்டுவிட்ட எண்ணம் அவளுக்குள் ஆழமாக மறைந்திருக்கிறது.” இதன் விளைவுதான், இருவருக்கும் இடையே நேரடியான எதிர்ப்பாக இல்லாவிட்டாலும் நிலைதிரிந்த ஓர் உறவாகும்.

குடும்பங்களின் அளவு குறைகையில் இந்த மனச்சாய்வும் வலுவடைவதாகத் தெரிகிறது. கவனிப்பதற்குக் குறைந்த பிள்ளைகள் இருக்க, தாயானவள் தன்னுடைய மகனிடமான பாசம் நெருங்க இருப்பதாக உணருகிறாள். தன்னுடைய மகனுடன் பல வருடங்களாக வாழ்ந்துவந்திருப்பதால், அவனுடைய விருப்பு வெறுப்புகளை நன்கு அறிந்தவளாகவே இருக்கிறாள். அவனுடைய புதிய மனைவி அவனைப் பிரியப்படுத்துவதற்காக முயலுகிற போதிலும், அவனை மிக நெருக்கமாகத் தெரியவரும் சாத்தியமற்றவளாய் இருக்கிறாள், ஆரம்பக் காலங்களிலாவது அப்படி இருக்கிறது. எனவே, தாயும் மருமகளும் அந்த ஒருவனின் பாசத்திற்கு ஏங்கி நிற்க, ஒரு போட்டி ஆவி வளரக்கூடும்.

கவலைக்கிடமான ஒரு மாற்றம்

பழைய காலங்களில் ஜப்பான் தேசத்திலே கன்ஃபூசிய தத்துவத்தின்படி, அப்படிப்பட்ட குடும்ப பிணக்குகள் ஏற்படுமாயின், மருமகள் அனுப்பிவிடப்பட்டாள்—விவாகரத்து செய்யப்பட்டாள். அதோடு காரியம் முடிந்துவிடுகிறது. என்றபோதிலும் இன்று நிலைமை வித்தியாசமாயிருக்கிறது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் காலமுதல், குடும்ப வரவுப் பணப்பை இளம் சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வயோதிபரின் தலைமுறை அவர்களுடைய செல்வாக்கையும் அதிகாரத்தையும் இழந்துவருகின்றனர். மெதுமெதுவாக, நிலைமை மாறிவிட்டது. இன்று வயதான பெற்றோர் மருத்துவமனைகளிலும் முதியோர் இல்லங்களிலும் கைவிடப்படுகின்றனர். முதியோரை மதித்து நடக்கும் ஒரு சமுதாயத்தில் அவர்களை இந்நிலையில் காண்பது எவ்வளவு கவலைக்கிடமானதாயிருக்கிறது!

முதியோரை இப்படியாக ஓரிடத்தில் தள்ளிவிடும் இந்த மனச்சாய்வை எப்படி மாற்றலாம்? ஒரே கூரையின்கீழ் இரண்டு பெண்கள் சமாதானமாக சேர்ந்து வாழ்வதற்கு ஏதாவது வழி உண்டா? (g90 2/22)

[பக்கம் 7-ன் படம்]

யார் தீர்மானங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு நியாயமான முடிவுக்கு வரவேண்டும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்