உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 10/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • தற்சிந்தனை நோய்—வினோதமான கோளாறின் சவால்களை எதிர்ப்படுவது
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 10/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

உரையாடல் “உரையாடல் ஒரு கலை” (ஏப்ரல் 8, 1995) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. நாணமடையும் தன்மையால் நான் வெகு காலமாகப் போராடிக்கொண்டிருந்தேன். ஆனால் இப்போது, இந்தத் தொந்தரவை உடையவள் நான் ஒருத்தி மட்டுமே அல்ல என்று உணருகிறேன். உங்கள் ஆலோசனைகளை நான் நன்றாய்ப் பயன்படுத்தப் போகிறேன்.

ஏ. எல்., ஐக்கிய மாகாணங்கள்

காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலுள்ள கட்டுரைகளை வாசிக்கும்படியான உங்கள் ஆலோசனை உண்மையில் பயன்தருகிறது. அவ்வாறு செய்தால், பேசுவதற்கு எவ்வளவு இருக்கிறதென்று ஆச்சரியப்படுவீர்கள்!

வி. எம். ஜே., ஐக்கிய மாகாணங்கள்

சித்திரவதை முகாம் “என் வெறுப்பு அன்பாக மாறியது” (ஜனவரி 8, 1995) என்ற கட்டுரையை, எனக்கு அறிமுகமான ஒருவர் வாசித்தார். அந்தக் கட்டுரை சொன்னதற்கு மாறாக “அர்பைட் மாக்ட் ஃபிரை” (வேலை விடுதலையாக்கும்) என்ற அறிவிப்புக் குறி புக்கென்வால்ட் சித்திரவதை முகாமில் இல்லை என்று வாதாடுகிறார்.

ஹெச். ஜே. ஸெட்., ஜெர்மனி

இந்தப் பிழையைத் தயவுசெய்து மன்னிக்கவும். புக்கென்வால்டுக்குள் நுழையும் வாசலிலிருந்த அந்த அறிவிப்புக் குறி இந்நாள்வரை அங்கே காணக்கூடியதாயிருக்கிறது. அது “யேடெம் டாஸ் ஸைன்” (ஒவ்வொருவனுக்கும் அவனவனுடைய தகுதிகளின்படி) என்று உண்மையில் வாசிக்கிறது. ஆஸ்க்விட்ஸ் மற்றும் புக்கென்வால்ட் முகாம்களே “அர்பைட் மாக்ட் ஃபிரை” என்ற அறிவிப்புக் குறியைக் கொண்டிருந்தன.—ED.

தற்சிந்தனை நோய் “தற்சிந்தனை நோய்—வினோதமான கோளாறின் சவால்களை எதிர்ப்படுவது” (பிப்ரவரி 8, 1995) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு மிகவும் நன்றி. கடைசியாக, என் மகளை வேதனைப்படுத்துகிற இந்த நோயை நான் புரிந்துகொள்ளவும், அது அவளை வளர்க்கையில் நான் செய்த ஏதோவொன்றின் விளைவல்லவென்று அறிந்துகொள்ளவும் முடிகிறது. யெகோவாவுக்குச் செய்யும் என் சேவை அவளுடைய நிலைமையைக் கையாள எனக்குப் பலத்தைக் கொடுக்கிறது.

எம். ஹெச்., சுவிட்ஸர்லாந்து

தற்சிந்தனை நோய்க்கு, முன்னோரின் சாபம் அல்லது சென்றகால செயல்களுக்குப் பழிவாங்குதல் போன்ற மூடநம்பிக்கை சம்பந்தப்பட்ட மிகுதியான காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. நீங்கள் எழுதியிருப்பது, இந்தக் கோளாறைப்பற்றி நல்ல முறையில் புரிந்துகொள்வதற்கு உதவிசெய்யும். இத்தகைய அறிவு தருகிற கட்டுரைகளுக்காக உங்களுக்கு நன்றி.

எம். ஏ., நைஜீரியா

ஆர்க்கிடு மலர்கள் நான் ஆர்க்கிடு மலர் பிரியன்! உண்மையில், என் தோட்டத்தில் ஆர்க்கிடுகளைக் கொண்டுள்ளேன் மற்றும் அவற்றின் பட சேகரிப்பையும் வைத்திருக்கிறேன். “ஐரோப்பாவில் ஆர்க்கிடு மலர்களைத் தேடி” (ஜனவரி 22, 1995) என்ற கட்டுரையைப் பிரசுரித்ததற்காக உங்களுக்கு நன்றி. அதுவே இந்தப் பொருளின்பேரில் நீங்கள் பிரசுரிக்கும் கடைசி கட்டுரையாக இராதென்று நம்புகிறேன்.

ஆர். எம்., பிலிப்பைன்ஸ்

பத்திரமாக ஓட்டுதல் நான் 40-க்கு மேற்பட்ட வயதில் இருக்கிறேன், வலிப்பு நோயின் காரணமாக ஊர்தி ஓட்டுவதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. மூளை அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு, ஊர்தி ஓட்டும் உரிமத்திற்காக மனு செய்யும்படி என் நரம்புநோய் வல்லுநர் அனுமதி தந்தார்! “நீங்கள் பத்திரமாக ஓட்டுபவரா?” (பிப்ரவரி 8, 1995) என்ற கட்டுரை ஊர்தி ஓட்டும்போது சரியான மனநிலையைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை மதித்துணர எனக்கு உதவிசெய்தது. இது என் ஓட்டும் உரிமத்தைப் பெற்ற பின்பு உடனடியாக வந்தது!

ஜி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்

மன்னிக்கமுடியாத பாவம் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் மன்னிக்கமுடியாத பாவத்தை செய்துவிட்டேனா?” (நவம்பர் 8, 1994) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. அதை வாசிக்கும்போது என் கண்களில் கண்ணீர் நிரம்பிவிட்டது. ஏனெனில் நானும் கூட இந்த அசுத்த தற்புணர்ச்சி பழக்கத்துடன் போராடுகிறேன். அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட மார்க்கோவின் மற்றும் அல்பெர்ட்டோவின் முன்மாதிரியைப் பின்பற்றினேன், இவர்கள் ஒவ்வொருவரும் மூப்பர் ஒருவரிடம் பேச தைரியம் கொண்டனர். இது எனக்கு மிகவும் உதவிசெய்தது.

ஏ. எம். சி., பிரேஸில்

தற்புணர்ச்சி பழக்கம் ஓர் இளம் கிறிஸ்தவனுக்கு இருக்கக்கூடிய மிகக் கடும் போராட்டங்களில் ஒன்றாயுள்ளது. நான் பல தடவைகள் கடும் துயரத்தையும் இருதய வாட்டத்தையும் உணர்ந்திருக்கிறேன். என் போரை வெல்லுவதற்குத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும்படி இந்தக் கட்டுரை என்னை ஊக்குவித்தது.

எஃப். ஜி. எம்., மெக்ஸிகோ

நான் மணம் செய்யும்படி நம்பிக்கொண்டிருந்த இளைஞனுடன் வேசித்தனத்தில் உட்பட்டுவிட்டேன்; இது எங்கள் உறவை அழித்துவிட்டது. நான் கடும் மனச்சோர்வடைந்து இரவும் பகலுமாகப் பல நாட்கள் கண்ணீர் விட்டேன். எனக்கு மன்னிப்பு இராதென்று உண்மையில் நினைத்தேன். இந்தக் கட்டுரைகளை வாசித்தது, யெகோவாவிலும் மன்னித்து மறந்துவிடும் அவருடைய திறமையிலும் என் விசுவாசத்தைத் திரும்ப நிலைநாட்டினது.

எல். சி., ஆஸ்திரேலியா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்