உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 12/8 பக். 26-27
  • ஹூலா—ஹவாயின் நடனம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஹூலா—ஹவாயின் நடனம்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மிஷனரிகளின் செல்வாக்கு
  • ஹூலாவின் மறுமலர்ச்சி
  • இன்றைய ஹூலா
  • உங்களுக்கு ஒருவேளை தெரிந்திருக்கமுடியாத யோர்தான்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • ஹூலா பள்ளத்தாக்கின் சரணாலயத்திலிருந்து எர்மோன் மலையின் காட்சி
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • நான் நவீன பாணியைப் பின்பற்ற வேண்டுமா?
    விழித்தெழு!—1987
  • பிறக்கும் தீவுகள்
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 12/8 பக். 26-27

ஹூலா—ஹவாயின் நடனம்

ஹவாயிலிருந்து விழித்தெழு! நிருபர்

ஹவாய் என்று சொன்னதும், அடிக்கடி ஹூலா மனதிற்கு வருகிறது. ஹூலா என்பது தனிச்சிறப்புடையதாய் ஹவாயுடன் தொடர்புடையதாக இருந்தாலும், அநேக நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதன் தோற்றங்கள் தென் பசிபிக்கில் காணப்படுகின்றன.

பண்டைய காலங்களில் ஹவாயைச் சேர்ந்தவர்களுக்கு, எழுதும் மொழி இருக்கவில்லை; ஆகவே பாடல்களும் பண்ணிசைகளும் அவர்களுடைய வரலாற்றையும் பழக்கவழக்கங்களையும் எடுத்துரைக்க பயன்படுத்தப்பட்டன. இந்தப் பண்ணிசைகள் மற்றும் பாடல்களோடு, முகபாவனைகள் மற்றும் இடுப்புகள், கைகள், பாதங்கள் ஆகியவற்றின் அசைவுகளுடன் ஹூலா சேர்ந்துகொண்டது.

1778-ல் காப்டன் குக்கும் அவருடைய ஆட்களும் வருவதற்குமுன் ஹூலாவுடன் தொடர்புடையதாக இருந்த எதையும் நிரூபிக்க எவ்வழியுமில்லை. இன்று அறியப்பட்டிருப்பவை, 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த பழக்கங்கள், பாடல்கள், பண்ணிசைகள் ஆகியவற்றை பெருமளவில் சார்ந்தவையே.

முதல் ஹூலாக்கள் புனித சடங்குகளாக இருந்திருக்கக்கூடும். இருந்தாலும் எல்லா ஹூலாக்களும் வணக்கச் செயல்களாகவோ ஒரு மத ஆசாரத்தின் பாகமாகவோ கருதப்படுவதில்லை.

மிஷனரிகளின் செல்வாக்கு

18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் விஜயம் செய்யும் கப்பல்களிலுள்ள ஆய்வுப்பயணிகளுக்காகவும் கடலோடிகளுக்காகவும் ஹூலா ஆடப்பட்டு வந்தது. ஹூலாக்கள் பால்சம்பந்தமாக வெளிப்படையாக இருக்கும்படி பணம்கொடுக்கும் இந்த வாடிக்கையாளர்கள் விரும்பியிருந்திருக்கலாம்.

1820-ல் மிஷனரிகள் வந்தபோது, அவர்கள் ஹூலாவைக் கண்டனம் செய்வதற்கு பலமான காரணம் இருந்தது. அங்குள்ள தலைவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டபின், மிஷனரிகள் ஹூலாவை புறமதம் சார்ந்தது மற்றும் இழிவானது—பிசாசின் கிரியை என்றும் கூறி தாக்கினார்கள். இதற்கு முன்னதாகவே, 1819-ல், அரசராகிய முதலாம் காமேஹாமேஹாவின் விதவையாகிய ஆளுநர் அரசி காஹூமானூவால் பண்டைய மதப் பழக்கங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. சிலைகளை அகற்றிப்போடுவதையும் சிக்கலான சடங்குகளை நீக்கிப்போடுவதையும் இது உட்படுத்தியது. எண்ணற்ற நடனங்களும் பண்ணிசைகளும் என்றென்றைக்குமாக இழக்கப்பட்டன.

காஹூமானூ 1825-ல் சர்ச்சுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டார். 1830-ல் ஹூலாவை பொதுவிடங்களில் நடத்துவதைத் தடைசெய்யும் ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். 1832-ல் அவருடைய மரணத்துக்குப்பின் சில தலைவர்கள் அந்த ஆணையை அசட்டைசெய்தனர். இரண்டு வருடங்கள், இளவரசர் மூன்றாம் காமேஹாமேஹாவாலும் அவருடைய கூட்டாளிகளாலும் ஒழுக்க கட்டுப்பாடுகள் வெளிப்படையாக இகழப்பட்டபோது, ஹூலா கொஞ்சகாலத்திற்கு மீண்டும் பிரபலமானது. ஆனால் 1835-ல், அரசர் தன்னுடைய வழிகள் தவறானவை என்று ஒத்துக்கொண்டார்; கால்வினின் இறைமையியல் கொள்கையினரின் அதிகாரத்திற்கு ஆட்சி திரும்பியது.

ஹூலாவின் மறுமலர்ச்சி

அரசராகிய காலாகாயுயாவின் ஆட்சியின்போது (1874-91), ஹூலாவை பொது நிகழ்ச்சிகளில் முழுமையாக மீண்டும் ஏற்றுக்கொள்வதன்மூலம் ஒரு புத்துயிர்ப்பு ஏற்பட்டது. 1883-ல் அவருடைய முடிசூட்டுதலின்போது, மாதக்கணக்கான பயிற்சியும் கிளர்ச்சியும், பல பண்ணிசைகள் மற்றும் ஹூலாக்களின் பொது நிகழ்ச்சியில் நிறைவடைந்தது; அவற்றில் சில விசேஷமாக அந்த நிகழ்ச்சிக்கென்றே எழுதப்பட்டவை. 1891-ல் அவருடைய மரணத்திற்குள், காலிடும் பாங்கிலும் அங்க அசைவுகளிலும் ஹூலா பல மாற்றங்களை அடைந்திருக்கிறது; நான்கு நரம்பு யாழ் வகை, கிட்டார், வயலின் போன்ற கருவிகளின் பக்கவாத்திய இசையும் அதோடு சேர்க்கப்பட்டுள்ளன.

1893-ல் முடியாட்சி முடிவடைந்த பிறகு, ஹூலா மீண்டும் வீழ்ச்சி அடைந்தது. 20-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில் அது செழித்தோங்கியது. இன்னும் பல்வகைப்பட்ட பார்வையாளர்களுக்கு கவர்ச்சிகரமாக்குவதற்காக, ஏராளமான புதுமைகள் புகுத்தப்பட்டன. ஹவாயைச் சேர்ந்தவர்களின் மொழியை பலர் புரிந்துகொள்ள முடியாது என்பதால், ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. நவீன ஹூலா அந்த நடனத்திற்குத்தானே—கைகள் மற்றும் பாதங்களின் அசைவுகளுக்கும், இடுப்புகளின் நளினமான சாய்வுகளுக்கும், முகபாவனைகளுக்கும்—அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.

அந்தத் தீவுகளை விஜயம் செய்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, ஹூலாவும் அதிகமதிகமாக பிரபலமானது. வட அமெரிக்காவிலிருந்து வரும் பயணிகள் தாங்கள் கற்ற அந்த நடனங்களைத் தங்களுடன் கொண்டுசென்று, ஹாலிவுட் திரைப்படங்களில் ஹவாயைச் சேர்ந்தவர்களாக இல்லாத நாட்டியக்காரரை வைத்து அந்த நடனங்களைக் காட்சியாக்கத் தொடங்கினர். 1935-ல் மின்னி மௌஸ்கூட, தன் ஸ்டீல் கிட்டாரை வாசித்த மிக்கிக்காக ஹூலாவை ஆடியது.

இன்றைய ஹூலா

1970-களில் நடந்த “ஹவாயின் மறுமலர்ச்சி”யுடன், ஒருசில பண்ணிசை பாடகர்கள், நடனக்காரர்கள், கலையில் தேர்ந்த ஆசிரியர்கள் ஆகியோரின் அறிவு பண்டைய ஹூலா வகைகளை மீண்டும் உயிரூட்டுவதற்கு அடிப்படையாக ஆனது. பழைய நடனங்களை மீண்டும் செய்துகாட்டவும், புதியவற்றை உருவாக்கவும் வல்ல ஹூலா கலைஞர்கள் இன்று இருக்கின்றனர். இரு நிலைகளிலும், அவர்களுடைய முயற்சிகள் ஆடம்பரமான, கண்கவர் வெளிக்காட்டுதல்களில் விளைவடைந்திருக்கின்றன.

ஹவாயின் அநேக கடவுட்களுடனுள்ள ஒரு ஆவிக்குரிய பற்று, நவீன காலங்களுக்குள் வரையாக ஓரளவுக்கு தொடர்ந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஹவாயின் ஹிலோவில் நடத்தப்பட்ட மெரீ மோனார்க் பண்டிகை தொடங்குவதற்கு முன்னர், ஹூலா குழுவினர் பேலே தேவதையின் நெருப்புக் குழிக்கு அல்லது சமீபத்தில் எரிமலைக் குழம்பு வெளியேறியிருக்கும் இடங்களுக்குப் புனித யாத்திரையை மேற்கொள்கின்றனர். போட்டிக்கான அவர்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி அந்த தேவதையிடம் கேட்டு, அவர்கள் பண்ணிசைத்து, நடனமாடி, பூக்களையும், பெரி பழங்களையும், ஜின்னையும் அளிக்கிறார்கள். உலகெங்குமுள்ள தொகுதிகள், ஹூலாவின் ஒலிம்பிக்ஸ் என்பதாகக் கருதப்பட்ட மூன்று இரவுகள் நிகழும் போட்டியில் போட்டியிடுகிறார்கள்.

ஹூலா, ஹவாயின் பண்பாட்டு மறுபிறப்பில் பெரும் பாகமாகியிருக்கிறது. தேவ தேவதைகளுக்கு பக்தியைக் காட்டும் பண்ணிசைகளுடன் கூடிய கிளர்ச்சியற்ற நடனங்களிலிருந்து எந்த மத முக்கியத்துவமுமே இல்லாத அந்தத் தீவுகளின் அன்றாட வாழ்க்கை பற்றிய எளிய வெளிக்காட்டுதல்கள் வரையாக அதில் உட்பட்டிருக்கின்றன.

குறிப்பிட்ட ஹூலா நடனங்களை ஆடுவதில் அல்லது அவற்றைக் காண்பதில் கிறிஸ்தவர்கள் மிகவும் தேர்ந்தெடுப்பவர்களாக இருக்க வேண்டும். தாங்கள் அறியாமலேயே ஒரு தேவனுக்கோ தேவதைக்கோ மரியாதை செலுத்தாமல் இருப்பதை அவர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ளவேண்டும். பாட்டுகளை அல்லது பண்ணிசைகளைக் கேட்கும்போதும் அவற்றைப் பாடும்போதும் கவனமாக இருப்பதும் அவசியம். மறைந்திருக்கும் அல்லது இரட்டை அர்த்தங்களை உடைய வார்த்தைகள் இவற்றில் பலவற்றில் இருக்கின்றன. இதை மனதில் வைத்துக்கொண்டால், பார்வையாளர் அல்லது பங்கெடுப்பவர் ஒரு ஆரோக்கிய வகையான பொழுதுபோக்கை அனுபவித்துக் களிக்கலாம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்