உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g03 12/8 பக். 15
  • சோப்பு ஒரு “சுய தடுப்பூசி”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சோப்பு ஒரு “சுய தடுப்பூசி”
  • விழித்தெழு!—2003
  • இதே தகவல்
  • சுத்தம் என்ற சவாலைச் சந்தித்தல்
    விழித்தெழு!—1989
  • சுத்தம் ஏன் முக்கியம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • துடைக்க வேண்டும் கைகளை! விரட்டவேண்டும் நோய்களை!
    விழித்தெழு!—1998
  • 6 வழிகள் ஆரோக்கியத்தை பாதுகாக்க!
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—2003
g03 12/8 பக். 15

சோப்பு—ஒரு “சுய தடுப்பூசி”

“பிள்ளைகளை காவுகொள்ளும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய கொலையாளி எது தெரியுமா? அது மலேரியாவும் அல்ல, ‘டிபி’யும் அல்ல, எய்ட்ஸும் அல்ல. அது . . . வயிற்றுப்போக்கு” என தி இகானமிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது. ஆனாலும், அந்தப் பிள்ளைகளோ அவர்கள் குடும்பத்தாரோ தவறாமல் சோப்பு போட்டு கைகளை கழுவியிருந்தால் அவர்களில் அநேகர் இன்று உயிரோடு இருந்திருப்பார்கள்.

“சரியான முறையில் கை கழுவினால் வயிற்றுப்போக்கு சம்பந்தப்பட்ட நோய்கள் 43 சதவீதம் குறையும்” என சுகாதாரம் மற்றும் வெப்ப மண்டல மருத்துவத்திற்கான லண்டன் பள்ளியின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருப்பதாக தி இகானமிஸ்ட் கூறுகிறது. “பிள்ளைகளை பலிவாங்கும் கொலையாளிகளில் நம்பர் ஒன்-ஆக இருக்கும் சுவாச மண்டல நோய்களையும்கூட இதன் மூலம் பெருமளவு குறைக்கலாம். படைவீரர்கள் ஒருநாளில் ஐந்து முறை கைகளை கழுவியபோது ஜலதோஷமும் இருமலும் 45% குறைந்ததென்று அமெரிக்க இராணுவத்தினருக்காக பெரியளவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது” எனவும் அது கூறுகிறது. வளரும் நாடுகளில்கூட பெரும்பாலான குடும்பங்களுக்கு சோப்பு வாங்குவதொன்றும் அவ்வளவு பெரிய விஷயமல்ல. ஆகவேதான், இது ஒரு “சுய தடுப்பு ஊசி” என மிகப் பொருத்தமாகவே விவரிக்கப்படுகிறது. முக்கியமாக, இது வலியில்லாத ஊசியாயிற்றே!

சுத்தமாக இருப்பதை பைபிளும் ஊக்குவிக்கிறது. “நம் சரீரத்தையும், ஆத்துமாவையும் அசுத்தப்படுத்தும் எதனிடமிருந்தும் முழுக்க முழுக்க விலகி நம்மை நாமே தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்” என 2 கொரிந்தியர் 7:1 (புதிய ஏற்பாடு, ஈஸி டூ ரீட் வர்ஷன்) கூறுகிறது. ஆன்மீக சுத்தத்தை கடவுள் மிக முக்கியமாக கருதினாலும் சரீர சுத்தமும் அவருக்கு முக்கியமானதே. (லேவியராகமம் 12-15 அதிகாரங்கள்) அதற்காக, அளவுக்கு மீறி சுத்தம் பார்க்கிறவர்களாக நாம் இருக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறதில்லை. இருந்தாலும், கழிவறைக்கு சென்று வந்த பின்போ, குழந்தையின் கால்களை கழுவிய பிறகோ, அதன் ஈரத்துணியை மாற்றிய பிறகோ, உணவை சமைப்பதற்கு முன்போ, சாப்பிட உட்காருவதற்கு முன்போ கை கழுவுவதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அல்லது வைரஸ்கள் நம்மிடமிருந்து மற்றவர்களிடம் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருப்பதாக தோன்றும் எந்த சூழலிலும் கைகளை கழுவ வேண்டும். நம் கைகளை தவறாமல் கழுவுவதன் மூலம் நம் குடும்பத்தாரிடமும், நாம் அன்றாடம் பழகுபவர்களிடமும் கிறிஸ்தவ அன்பை காட்டுகிறவர்களாக இருப்போம்.​—⁠மாற்கு 12:⁠31. (g03 11/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்