கடவுளைச் சேவிக்கும் இளைஞர்கள்
நேர்த்தியான இளைஞர்கள் எந்தச் சம்பளமுமின்றி கடவுளைப் பற்றி பேசுவதற்காக உங்கள் கதவண்டை வருவதற்குத் தங்கள் நேரத்தைக் கொடுப்பதை அசாதாரணமாக நீங்கள் காண்கிறீர்களா? அதிகரித்துவரும் அவநம்பிக்கையின் சகாப்தத்தில், மகிழ்ச்சியான ஓர் எதிர்காலத்தைப் பற்றிய மகத்தான பைபிள் வாக்குறுதிகளைக் குறித்து மற்றவர்களுடன் பேசுவதில் தங்கள் பெற்றோரைப் பிள்ளைகள் சேர்ந்துகொள்வது ஆச்சரியமாகத் தோன்றுகிறதா?a
பூமி முழுவதிலுமுள்ள 60,000-க்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் பெரும்பாலானவற்றில், நீங்கள் அநேக இளைஞர்களைக் காண்பீர்கள். அவர்கள் வாராந்தர ஞாயிறு பள்ளிக்கோ அல்லது கத்தோலிக்க மத போதனை வகுப்புக்கோ செல்வதில்லை. மாறாக, இந்த இளைஞர்கள் சபைக் கூட்டங்களிலிருந்து நன்மையடைகிறார்கள், பங்கும் கொள்கிறார்கள். சிறுப் பிள்ளைகள் எளிய குறிப்புகளைச் சொல்லக்கூடும். இன்னும் பருவ வயதடையாதவர்கள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்து கொள்கிறார்கள். அநேக பருவ வயதினர் பள்ளி விடுமுறையை கடவுளைப் பற்றியும் எதிர்காலத்துக்காக அவருடைய மகத்தான வாக்குறுதிகளைப் பற்றியும் கற்றறிய அயலகத்தாருக்கு உதவி செய்வதில் கழிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட இளைஞரின் நடவடிக்கையைக் குறித்ததில் உண்மையில் புதுமை எதுவுமில்லை. கடவுளை சேவிப்பதில் குறிப்பிடத்தக்க முன்மாதிரிகளை வைத்த உண்மையுள்ள ஆண்களையும், பெண்களையும், இளைஞரையும், சிறு பிள்ளைகளையும் பற்றி பைபிள் சொல்லுகிறது.
பைபிள் புத்தகமாகிய சங்கீதம், தெய்வீக சேவையில் “பனித்துளிகள்” போன்று அத்தனை புத்துயிரளிக்கும் மற்றும் எண்ணற்ற “யெளவன ஜனத்தைப்” பற்றி முன்னறிவித்தது. அது தேவனுடைய நாமத்தைத் துதிக்கும் “வாலிபரையும்,” “கன்னிகைகளையும்”கூட முன்னறிவித்தது. (சங்கீதம் 110:3; 148:12, 13) பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவின் போது விசுவாசிகள் மீது கடவுளுடைய பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டச் சமயத்தில் அங்கிருந்தவர்கள் மத்தியில் ஒருசில இளைஞர்கள் இருந்திருக்க வேண்டும். அந்த நாளில் சுமார் 3,000 பேர் வசனத்தை ஏற்றுக்கொண்டு முழுக்காட்டப்பட்டார்கள். வியப்பூட்டும் இந்தச் சம்பவம், யோவேல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருந்தது என்பதாக அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னான்: “உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்.”—அப்போஸ்தலர் 2:4–8, 16, 17, 41.
தங்கள் இளமைப் பருவத்தில் யெகோவா தேவனை சேவித்த மற்ற பைபிள் உதாரணங்களில் சாமுவேல், நீதியுள்ள அரசனாகிய தாவீது, நன்கு அறியப்பட்ட பைபிள் தீர்க்கதரிசிகளாகிய எரேமியா மற்றும் தானியேல் மற்றும் உண்மையுள்ள தீமோத்தேயு அடங்குவர். இந்தப் பைபிள் உதாரணங்களில் சிலரைப் பற்றிய மூன்று கட்டுரைகளை இந்த இதழ் கொண்டிருக்கிறது. கட்டுரைகளிலிருந்து, ஏன் இளைஞர்களும் வயதானவர்களும் கடவுளைச் சேவிப்பதை முக்கியமானதாக கருதுகிறார்கள் என்பதையும் தங்கள் அயலாரும் அதையேச் செய்வதற்கு உதவி செய்வதில் ஏன் அவ்வளவு நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதையும் நீங்கள் காண்பீர்கள். (w90 8/1)
[அடிக்குறிப்புகள்]
a 1946 முதல் பிறந்த அமெரிக்கரில் 12 சதவீதத்தினர் மட்டுமே தங்களுடைய 16 வயதில் “அதிகளவான விசுவாசம்” இருந்ததாகக் கூறினதாய் 1985 கேலப் சுற்றாய்வு ஒன்று கண்டது.