இளைஞர்களே, பள்ளியில் நற்பயனளிக்கக்கூடிய விதத்தில் சாட்சி கொடுங்கள்
1. நீங்கள் இளைஞராயும் மற்றும் அவருடைய வாக்குறுதிகளின் பேரில் முழு மதித்துணர்வுடையவராயும் இருக்கும்போது யெகோவாவை சேவிப்பது ஒரு மகத்தான காரியம். (பிர. 12:1) இளைஞர்களாகிய நீங்கள் பள்ளித் தோழருடனும் ஆசிரியர்களுடனும் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான விசேஷ வாய்ப்பைக் கொண்டிருக்கிறீர்கள், பொதுவாக அது பெரியவர்கள் நுழைய முடியாத ஒரு பிராந்தியம். பள்ளியில் சந்தர்ப்ப சாட்சிகொடுப்பதற்கான பல வழிகளுக்கு நீங்கள் விழிப்புணர்வோடிருக்கிறீர்களா?
2. பள்ளியில் மற்றவர்களுடன் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்வது ஏன் சிலருக்கு கடினமானதாக இருக்கிறது? கடவுளைப் பற்றி பேசினால் தங்கள் பள்ளி தோழர்கள் தங்களைக் குறித்து என்ன நினைத்துவிடுவார்களோ என்ற பயமாக அது இருக்கக்கூடுமா? (மாற்கு 8:38-ஐ ஒத்துப் பாருங்கள்.) நற்செய்தி சொல்வதற்காக வீடுவீடாக போக ஆரம்பித்த சமயத்திலும்கூட ஒருவேளை இவ்வகையான பயம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். என்றபோதிலும், மற்ற இளைஞருக்கும் சத்தியம் தேவைப்படுகிறது என்பதையும் அதோடு ஒரு சுவிசேஷகனாக உங்களுக்கும் உங்களுடைய சொந்த உத்தமத்தன்மையையும் நீங்கள் மதித்துணர்ந்தால் மற்றவர்களோடு ராஜ்ய செய்தியை பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகளை நீங்கள் நாடித்தேடுவீர்கள். (மத். 9:36-38; லூக்கா 12:8, 9) பள்ளியிலிருப்பவர்களுக்கு நற்பயன் தரும் விதத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு உங்கள் பங்கில் முன்தயாரிப்பும் திட்டமிடுதலும் தேவைப்படுகிறது.
இதை எப்படி செய்வது?
3. ஓர் இளம் பெண், பள்ளியில் ஒவ்வொரு நாளும் இடைவெளி நேரத்தில் 15 நிமிடங்கள் தன்னுடைய பைபிள் கதை புத்தகத்தைப் படிப்பாள். இந்த புத்தகத்தைக் குறித்து ஓர் உடன் மாணவி கேட்டப்போது, ஒரு கதையை சேர்ந்து படிப்பதற்கு தன்னுடன் வந்து உட்காரும்படி அவளுக்கு அழைப்பு கொடுத்தால். அதன் பின் படிப்பதற்காக அழைப்புக் கொடுக்கும்படி அவள் காத்திருக்கவில்லை. ஆனால் அடுத்த கதையை கற்றுக்கொண்டாளோ அதை அவள் தன் தாயோடு பகிர்ந்துகொண்டாள். இதன் விளைவாக அந்தத் தாய் பைபிளை படிக்கவும் தன் மகளோடு கூட்டங்களுக்கு வரவும் ஆரம்பித்தாள்.
4. பைபிள் கதை புத்தகத்தைக் குறித்து மற்றவர்களிடம் பேசுவதற்கு ஏன் நீங்கள் முதற்படியை எடுக்கக்கூடாது? உதாரணமாக, நீங்கள் பின்வருமாறு சொல்லலாம்: “இந்தப் புத்தகம் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை கடவுள் எப்படி பாதுகாக்கக்கூடும் என்பதைப் பற்றிச் சொல்லுகிறது. [கதை 79-க்குத் திருப்பவும்.] யெகோவா தானியேலை சிங்கங்களின் கெபியிலிருந்து பாதுகாத்தார். எதிர்காலத்தில் கடவுள் தீமைகளை ஒழித்து தம்முடைய மக்களை பாதுகாப்பார். நீ நினைக்கிறாயா?” பதில் சொல்வதற்கு அனுமதித்தப் பின்பு, யெகோவா துன்மார்க்கத்தை ஒழித்து தமது மக்களை பாதுகாப்பார் என்பதை காட்டுவதற்கு கதை 114-க்குத் திருப்பலாம்.
5. நீங்கள் உங்கள் படைப்பு புத்தகத்தை மேசையின் மீது வைக்கலாம். அப்பொழுது மற்றவர்கள் அதைக் காண்பார்கள் அல்லது வாய்ப்பு கிடைக்குமானால் பக்கம் 83-ல் உள்ள படத்திற்கு திருப்பி உடன் மாணவனையோ அல்லது ஆசிரியரையோ பார்த்து நீங்கள் பின்வருமாறு கேட்கலாம்: “நம்முடைய முன்னோர்கள் இப்படித்தான் இருந்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” பதில் கிடைத்தப் பிறகு பக்கம் 89 பாரா 19, 20-ல் உள்ள தகவலை நீங்கள் கலந்து பேசலாம். மற்ற சிலருக்கு பக்கம் 5-ல் காணப்படும் அதிகாரங்களின் தலைப்புகளை காண்பிக்கும்போது ஆர்வம் தூண்டப்படுகிறது. அவர்களுடைய பிரதிபலிப்பைப் பொருத்து படைப்பு புத்தகத்தின் மற்ற பாகங்களிலிருக்கும் கூடுதலான தகவலை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது இந்தப் புத்தகத்தை எப்படி படிக்கலாம் என்பதை பாராக்களை வாசிப்பதன் மூலமும் அதே பக்கத்தில் கீழேயுள்ள கேள்விகளைக் கேட்பதன் மூலமும் அதே பக்கத்தில் கீழேயுள்ள கேள்விகளைக் கேட்பதன் மூலமும் நடித்துக் காட்டலாம்.
6. ஒரு பருவப் பெண், உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றப் பின்பு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஓர் இலக்கை வைத்தாள். அவளுடைய வகுப்புத் தோழி ஒருத்திக்கு அவளுடைய பெற்றோருடன் பிரச்சனை இருந்தது. அவள் அதைக் குறித்து இந்தச் சாட்சி பெண்ணிடம் பேசினாள். இந்த இளம் பிரஸ்தாபி விழித்தெழு!-வில் வெளிவரும் பொருத்தமான ‘இளைஞர் கேட்கின்றனர்’ கட்டுரை ஒன்றை அவளுக்குக் காண்பித்தாள். இந்தத் தகவலை கண்ட பள்ளித் தோழி மனங்கவரப்பட்டு அதிகமான கேள்விகளைக் கேட்டாள். இளம் பிரஸ்தாபி என்றும் வாழலாம் புத்தகத்தை அவளுக்கு அளித்தாள். இது அவளுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவும் என்று சொல்லி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்துவிட்டாள்.
7. யெகோவாவின் சாட்சியாக இருப்பதற்கு நாம் அவரைப் பற்றி பேசவேண்டும். (ஏசா. 43:10-12) உங்கள் பள்ளியில் பள்ளித் தோழருடன் ஆசிரியர்களுடனும் சத்தியத்தைக் குறித்துப் பேசுவதற்கு நீங்கள் மனமார்ந்த முயற்சி எடுத்திருக்கிறீர்களா? அவர்களுடன் பேசுவதற்கு அக்கறையைத் தூண்டக்கூடிய தகவல்களை தயார் செய்யுங்கள் முயற்சியை எடுங்கள். உங்கள் பெற்றோரையோ அல்லது மற்றவரையோ உங்களுக்கு உதவும்படி கேளுங்கள். பள்ளியில் நற்பயனளிக்கக்கூடியவிதத்தில் யெகோவாவுக்காக சாட்சி கொடுக்கக்கூடிய மற்ற இளைஞரை யெகோவா எவ்வாறு ஆசீர்வதிக்கிறாரோ அவ்வாறே உங்கள் முயற்சியையும் ஆசீர்வதிக்க யெகோவாவிடம் ஜெபியுங்கள்.—கொலோ. 1:9, 10.