முழுநேர ஊழியத்தை உங்கள் வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்ளுங்கள்
1 நம்முடைய ஒப்புக்கொடுத்தலை நிறைவேற்றுவதன் பேரிலும் நித்திய ஜீவனை அடைவதன் பேரிலும் நேரடி தொடர்புள்ள ஒரு வேலையானது கிறிஸ்தவ ஊழியமே. (ரோ. 10:10; 1 தீமோ. 4:16) தம்மை பின்பற்றும்படி இயேசு மற்றவர்களை அழைத்தபோது, இதில் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கிப்பது உட்பட்டிருக்கிறது என்பதை அவர் தெளிவுப்படுத்தினார். (லூக்கா 9:57-62) இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதானது ஒருவேளை நம்முடைய தொழிலை மாற்றிக்கொள்வதை கேட்காதபோதிலும், முதலிடம் கொடுக்கும் விஷயத்தில் மாற்றம் செய்ய வேண்டியதை இது நிச்சயமாகவே கேட்கிறது. ஒரு மிக முக்கியமான வேலையானது யெகோவாவின் “மகத்துவங்களை அறிவிப்பதாகும்.” இது சீஷராக்குவதையும் உட்படுத்துகிறது. (1 பேதுரு 2:9; மத். 24:14; மத். 28:19, 20) ஆகையால் யெகோவாவுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்திருக்கும் அனைவரும் ஊழியத்தை மையமாக கொண்டே தங்கள் வாழ்க்கையை அமைக்க வேண்டும். தங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலை அனுமதிக்கக்கூடிய அநேகர் முழுநேர ஊழியத்தை தங்கள் வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது.—2 கொரி 4:1, 7.
பலன் மிகுந்த ஒரு வாழ்க்கைமுறை
2 ஒரு பயனியர் தனது 54 ஆண்டுகால முழுநேர ஊழியத்தை பின்னோக்கிப் பார்க்கையில் பின்வருமாறு எழுதும்படி தூண்டப்பட்டார்: “யெகோவா தந்திருக்கும் அந்த மகிழ்ச்சி இந்த உபத்திரவங்களைக் காட்டிலும் வெகுவாய் உயர்ந்துவிடுகிறது. என்னுடைய வாழ்க்கையை திரும்பவும் வாழ்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுமானால் மகா கடவுளாகிய யெகோவாவைத் துதிப்பதில் என்னுடைய எல்லா நேரத்தையும் செலவழிக்க நான் மனமுள்ளவனாயிருப்பேன்.” இப்படிப்பட்ட ஒரு செயலிலிருந்து கிடைக்கும் அந்த வகையான எல்லையற்ற உள்ளார்ந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் எந்த ஓர் உலகப்பிரகாரமான தொழில் அல்லது வேலையிலிருந்து பெறமுடியாது. முழுநேர சேவைக்குரிய ஒரு வாழ்க்கைப் போக்கை நாடிசெல்வது தெய்வபக்தியின் வெளிக்காட்டாக இருக்கிறது. இது விலையிடமுடியாத மதிப்புள்ள பலன்களை இக்காலத்திலும் வரவிருக்கும் நிச்சயமான ஆசீர்வாதங்களை எதிர்காலத்திலும் உடையதாக இருக்கிறது.—1 தீமோ. 4:8.
3 முழுநேர ஊழியத்தின் ஒரு வாழ்க்கைப்பணி மிகுதியான மகிழ்ச்சியைக் கொண்டுவரக்கூடும். ஏனெனில் மிகுதியாக கொடுத்தல் அதில் உட்பட்டிருக்கிறது. (அப். 20:35) யெகோவா தேவனோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் அதிக மதிப்பு வாய்ந்த நட்புறவு பேணி வளர்க்கப்படுகிறது. மேலும் ராஜ்ய அக்கறைகளில் அதிக முழுமையாய் ஈடுபடுவதன் மூலம் அது பலப்படுத்தப்படுகிறது. (லூக். 169; 1 கொரி. 15:58) உங்களுடைய சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கேற்ப முழு ஆத்துமாவோடுகூடிய முறையில் நீங்கள் செயல்படுவதன் காரணமாக மனநிறைவையும் குற்றமற்ற மனச்சாட்சியையும் அனுபவிக்க முடிகிறது. உங்களுடைய அதிக கட்டுப்பாடு மிகுந்த வாழ்க்கை முறையானது “ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதலாவது தேடுங்கள்” என்ற கிறிஸ்துவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தவர்களாய் நீங்கள் அதிகத்தை நிறைவேற்றுவதற்கு உதவுகிறது.—மத். 6:33.
உங்களுடைய ஊழியத்தில் படிப்படியாய் முன்னேறுங்கள்
4 ஏதோ ஒரு துறையிலோ அல்லது பெருமுயற்சியிலோ படிப்படியான சாதனைகளைக் கொண்ட ஒரு போக்கை பின்தொடருவதே ஒரு வாழ்க்கைப் பணியில் உட்பட்டிருக்கிறது. ஒரு பயனியராக நீடித்து நிலைத்திருப்பதற்கும் மகிழ்ச்சியையும் வைராக்கியத்தையும் தொடர்ந்து காத்துக்கொள்வதற்கும் படிப்படியான சாதனைகள் மிகவும் முக்கியம். தம்முடைய அமைப்பின் மூலமாக யெகோவா ஆவிக்குரிய கல்வியை சபைக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளின் மூலம் கொடுக்கிறார். அதோடுகூட டிசம்பர் மாதத்தில் மூப்பர்கள் நடத்தும் கூட்டங்களும் மற்றும் வட்டார கண்காணி சந்திப்பின்போது கூட்டங்களும் இருக்கின்றன. வட்டார மாநாட்டு வாரங்களில் பயனியர்களுக்காக ஒரு விசேஷித்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட கூட்டங்களில் கொடுக்கப்படும் சிறந்த ஆலோசனைகளின்பேரில் குறிப்புகள் எடுத்து, அவற்றை உள்ளான அக்கறையுடன் உங்கள் வாழ்க்கையில் பொருத்துகிறீர்களா?
5 நீங்கள் முன்னேறக்கூடிய ஒரு வேதப்படிப்பை நடத்தவில்லையென்றால் நீங்கள் இதை ஓர் இலக்காக கொண்டிருக்கிறீர்களா? வீட்டுக்கு வீடு வேலையில் உங்களுடைய முன்னுரைகளில் அல்லது உங்கள் பிராந்தியத்தில் பொதுவாக சந்திக்கும் எதிர்ப்புகளை கையாளும் முறைகளில் நீங்கள் முன்னேற்றம் செய்யக்கூடுமா? நியமிக்கப்படாத பிராந்தியங்களுக்குச் சென்று ஊழியம் செய்வதை அல்லது உதவி தேவைப்படும் சபைகளுக்குத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சென்று உதவி செய்வதை சிலாக்கியமாக கருதியிருக்கிறீர்களா? இவைகளிலும் இன்னும் பல வழிகளிலும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கைப் பணியில் முன்னேற்றம் செய்யலாம். கடவுளுடைய வேலையை நிறைவேற்றுவதில் உங்களுடைய திறமைகளை மேம்பட்டதாக்கலாம்.
6 இந்த இலையுதிர் பருவத்தில் பயனியர் சேவை செய்யவிருக்கும் அநேகரோடு நீங்களும் சேர்ந்துகொள்ள உண்மையிலேயே சிந்தித்துக் கொண்டிருப்பீர்களேயாகில் இந்தக் காரியத்தைக் குறித்து யெகோவாவிடம் விடாப்பிடியாக ஜெபத்தில் தரித்திருங்கள். (மத். 7:7, 8) முதலில் துணைப்பயனியர்களாக சேவை செய்வதன் மூலம் அநேகர் யெகோவாவின் பேரிலுள்ள தங்கள் நம்பிக்கையை பலப்படுத்தியிருக்கின்றனர்.
7 ஒருவர் பயனியர் செய்வதற்கு உதவக்கூடிய அந்தக் காரியம் ஏதோ வழக்கத்துக்கு மாறான ஒரு திறமையோ அல்லது வரமோ அல்ல. யெகோவாவின் பேரிலும் அயலகத்தார் பேரிலுமுள்ள உண்மையான அன்பும் அதோடு தனிப்பட்ட தியாகங்களைச் செய்வதற்கு மனமுள்ளவர்களாக இருப்பதுமே தேவைப்படுகிறது. (மத். 22:37-39; பிலி. 4:13) அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கக்கூடியவர்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டிய பண்புகளை விருத்தி செய்வதற்கு இந்தக் கிறிஸ்தவ ஊழியம் உங்களுக்கு உதவிசெய்யும். முழுநேரமாக அதைத் தொடருவது உங்களுடைய அன்பையும் விசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் விரிவுப்படுத்தும். (கலா. 5:22, 23) ஆகவே பயனியர் ஊழியத்தை நெஞ்சார நேசித்திடும் வாழ்க்கைப் பணியாக ஆக்கிக்கொள்ள முயன்று, அதை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள்!